Tuesday, March 13, 2018

இன்றைய இறை சிந்தனைகள்.


    நாம்  இறைவனை எப்படி  பிரார்த்திக்கிறோம்

என்பதை சிந்திக்க வேண்டும்.
எவ்வித மன சஞ்சலமின்றி  வணங்குகிறோமா 
என்பதே கேள்வி.
கட்சிகள்  மாறுவதுபோல்  நாம்

  இறைவனை மாற்றுகிறோம்.

இது சரியா ?


பரிகாரங்கள் என்பது லௌகீகமா ?

அலௌகீகமா ?

யாகங்கள்  வேள்விகள்   செய்பவர்கள்  அனைவரும்

இன்னலின்றி வாழ்ந்தார்கள்  என்ற 

சான்று  இல்லை .

முற்றிலும் சரணடைதல் என்பதை 

முழுமையாக  நம்புபவர்கள்

இறைவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஹஜ்    யாத்திரை  சென்றாலும் ,காசி யாத்திரை சென்றாலும்

மனத்தூய்மை இன்றி இறைவன் அருள் பெறுவது
என்பது  இயலாத ஒன்று.

ராவணன் பலவித  ஆற்றல் பெற்றாலும்

ஆணவமும்  பெண்ணாசையும்   பிறந்தவர் துரோகமும்
அவனை   களங்கப்படுத்தின.
பரதனுக்கு  இருந்த பாசம்  விபீஷணனுக்கு இல்லை.

அண்ணன் தவறு  செய்கிறான்  என்று  ராமனிடம்  சரணடைந்தான்.

மகா   பாரதத்தில்   கர்ணன்   துரியோதனனின் செயல் தவறாக  இருந்தாலும் , பாண்டவர்கள் தன்  சகோதரர்கள் என்றாலும்   தன் நன்றி மறந்து பாண்டவர்களிடம்   செல்லவில்லை.

 கர்ணன்  போன்று நாம் இறைவனிடம்  பக்தி செலுத்தவேண்டும்.


No comments: