Wednesday, December 13, 2017

ஞான கர்ம சந்நியாச யோகம்-௬


       அபான வாயுவில் பிராணவாயுவையும் ,
பிராணவாயுவில்  அபானனையும்
ஆகுதி செய்து இவ்வாயுக்களின் போக்கைத்தடுத்து பிராணாயாமத்தில்  ஈடுபடவேண்டும்.

பிராணாயமம் செய்தால் சுவாசம் சீரடைகிறது.



  இந்த மூச்சுவிடுவதில்  நம் உள்ளத்தின் உண்டாகும் மனோபாவங்கள் வெளிப்படும்.  சாதாரண    உடற் பயிற்சி
ஓட்டத்தில் வரும்  மூச்சுக்காற்று  ஒருவிதமாக இருக்கும்.
பயத்தில் ஓடும்போது ஒருவிதம், காமத்தில் ஒருவிதம்,
கோபத்தில் ஒருவிதம் , அன்பில் ஒருவிதம், நோயில் ஒருவிதம்
என மன நிலைக்கேற்ற  மூச்சு. இதைக்கட்டுக்குள்
கொண்டுவர பிராணாயமம் தேவைப்படுகிறது.

நமது  சுவாசம் மூக்கு வழியாகவே   இருக்கவேண்டும்.

மூக்கில்   உள்  செல்லும் வாயு  அபானன் . இதை பூரகம் என்பர்.

.வெளிப்படுத்தும் வாயு   பிராணன்.  இதை ரேசகம் என்பர்.
பிராணவாயுவை உள்ளே வெளியே அடக்குதல் கும்பகம்.
 இந்த  பிராணாயாமப்  பயிற்சி முறைப்படி செய்யவேண்டும்.

  இப்படியே   வேள்விகளும்  முறைப்படி  செய்தால் பாபத்தைப்  போக்கலாம்.  முனிவர்கள் இப்படியே  வேள்வியால்    பாவத்தைப் போக்கியுளனர்.
வேள்வி செய்யாதவர்களுக்கு  இவ்வுலகமும் இல்லை.
அவ்வுலகமும்  இல்லை. வேதத்தில் பலவித வேள்விகள்
விளக்கப்பட்டுள்ளது. 
  இந்த  வேள்விகளில் பொருட்களைக்கொண்டு  செய்யும் வேள்வியை   விட ஞானத்தால்  செய்யப்படும் வேள்வியே மிக  உயர்ந்தது.  உலகியல்     கர்மம்  ஞானத்தில்  முற்றுப்பெறுகிறது.

ஞான வேள்வியை பணிந்தும் ,கேட்டும், பணிவிடைய செய்தும்  அறிந்து செய்யவேண்டும்.

அந்த ஞானம்  பெற்றால்  உலகியல் மயக்கம் ஏற்படாது.
அனைத்தையும்  ஒன்றாக  ஒரு  பரம்பொருளாகக் காண்பது
ஞானம்.   மிகப்பெரிய பாவிகளும்  ஞானம் பெற்றால் பாபா விமோசனம்  பெறுவார்கள்.  ஞானக்கனல் நமது தீய நல்ல 
கர்மங்களையெல்லாம்  எரித்துவிடும். விறகுகள் தீயில் எரிந்து சாம்பலாவது போல.
இவ்வுலகில்  ஞானத்திற்கு    இணையானது எதுவுமே இல்லை.
 ஞானம்  பெறுபவன்   மிகச் சிரத்தையுடவன். ஐம்புலன்களை  அடக்கியவன்,  பரத்தைச் சார்ந்திருப்பவன்.   அவன்  ஞானத்தால் சாந்தி அடைகிறான்.

     அறிவில்லாதவன் , சிரத்தை இல்லாதவன் ,
சந்தேகப் படுபவன் , இவ்வுலகிலும் அமைதி பெறாதவன் . அவ்வுலகிலும்   அமைதிபெறமுடியாதவன்.
அவனுக்கு எங்கும் சுகம் இல்லை. 

யோகத்தால் கர்மத்தை விட்டுவிடவேண்டும். 
ஞானத்தால் சந்தேகத்தை விட்டுவிடவேண்டும்.
ஆத்ம சொரூபத்தில் திளைத்திருந்தால் கர்மங்கள்
மீண்டும்  செய்யத் தூண்டப் படுவதில்லை.

அஞ்ஞானத்தை  விட்டு  ஆத்மாவின் ஐயத்தைப் போக்கி
 ஞானம் பெற வேண்டும்.

   ஞான கர்ம சந்நியாச யோகம்.

No comments: