Saturday, July 29, 2017

रामचरित मानस -- ராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம் --முப்பத்திமூன்று


     தசரதரின்  மனம்  மிகவும் வேதனையால்

  இதைவிட அதிக   துன்பம்  எதுவுமே  இல்லை.

இந்த துன்பத்தால் உயிர் போய் விடும்.  பிறகு அரசர்

ராமர் , லக்ஷ்மணர் , சீதை மூவரையும் தேரில் அழைத்துச்சென்று  காட்டை நன்கு காட்டிவிட்டு நான்கு
நாட்களுக்குப் பிறகு வரவும் என்று  அமைச்சரிடம் கூறினார்.

முடிந்த அளவு அறிவுரை கூறி மீண்டும் அழைத்து வரவும் .

மறுத்தால் சீதையை யாவது அழைத்துவரவும் என்றார்.

சீதை காட்டில் பயந்தால் மாமனார் -மாமியார்  உன்னை நகருக்கு  திரும்ப வேண்டும்  என்ற செய்தி அனுப்பினர் என்று சொல்லவும்.  உன்  விருப்பப்[படி அப்பாவின்    வீட்டிலோ
மானார் வீட்டிலோ இருக்கலாம் என்றும் சொல்.
சீதை திரும்பினால் என் உயிருக்கு சற்றே ஆறுதல் கிடைக்கும்  என்று சொல்.  இல்லை என்றால் நான் இறந்துவிடுவேன் என்றும் சொல். கடவுளே எதிராக இருந்தால் எதுவும்
நடக்காது.   ராமர் ,லக்ஷ்மணர் சீதை மூவரையும் என் முன் அழைத்து வா . என்று அரசர்  மயக்கமடைந்தார்.
 அமைச்சர் அரசரிடம் கட்டளை பெற்று  தேரைப்பூட்டி
நகருக்கு வெளியில் ராமர், சீதை ,லக்ஷ்மணர் இருக்கும் இடத்திற்கு வந்தார். அரசரின்  செய்தியை மூவரிடமும் கூறினார். மூவரும் அயோத்தியாவை வணங்கி தேரில் அமர்ந்தனர். 

No comments: