Thursday, July 27, 2017

இளைஞர்களே! சிந்தியுங்கள்

காலை வணக்கம். 
கடவுள் அருளட்டும்.
நல்ல எண்ணங்கள் , நல்ல செயல்கள் , ஒழுக்கம் , கடமை ,
கட்டுப்பாடு , நேர்மை , தியாகம் , உழைப்பு 
என்ற தெய்வீக எண்ணங்கள் வளர இறைவன் உதவட்டும் . 
மனிதநேயம் வளர அசுர சக்திகள் ஒழிய
இறைவன் மனம் இறங்கட்டும்.
மாமிச பக்ஷினி , சாகபக்ஷ்ணி என்று கொடிய
சாந்த மிருகங்களைப் படைத்த இறைவன்
மனிதர்களையும் அவ்வாறே கொடிய நேர்மையான
சாதுவான என்றே படைக்கிறான்.
ஆனால் அறிவு பகுத்தறிவு என்று கொடுத்து
கொடிய விலங்குகளை அழித்துவிட வகை செய்தான்.
இந்த கொடியவைகளை, எண்ணங்களை , ஹிம்சையை ஒழிக்க தர்ம ஆசாரங்களை கற்றுக்கொடுக்க மகான்களைப் படைத்தான்.
இஸ்லாமியர்கள் மோதிக்கொண்டு அவர்களை அவர்களாகவே கொடூரமாகத் தாக்கிக் கொண்டு
அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த போது
முஹம்மது நபிகள் மூலம் இன்சானியத் அதவாது
மனிதநேயத்தை வளர்க்க குரானைப் படைத்தான்.
கொடிய விலங்குகள், கடல்வாழ் அசைவ உணவு சாப்பிடும் ஜப்பானுக்கு புத்தரின் மதத்தை அளித்தான்.
ஏசுவை அன்பு ,சேவை , உதவி என்று ப்ரசார்சம் செய்ய புவிக்கு அனுப்பினான்.
நமது ஹிந்தி சாஸ்த்திரங்கள், சீக்கிய,ஜைன சமண மதங்களும் சத்தியம் , அஹிம்சை, தான தர்ம பரோபகாரம் என்ற மனித ஞானத்தை போதித்து
நிலையற்ற உலகில் பாவங்கள் அசத்தியங்கள் ஒழுக்கமின்மை ஆகியவைகளை
நினைத்தாலே பாவம் ,பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது தண்டனைதான்
இதை சட்டப்படி உணராமல் சமுதாயத்தைப்
பார்த்து ஒவ்வொரு குடும்ப அரசியலின் அவலங்கள்
பலகோடிகள் இருந்தாலும் கேடிகள் என்றே சகித்து வாழும் தன்மையை அளித்துள்ளான்.
ஆக மதங்கள் அனைத்துமே அன்பையும்
பண்பையும் ஒற்றுமையையுமே
வழிக்காட்டி நல்வழிப்படுத்துகின்றன.
இதை புரிந்து மத ஜாதி இன சண்டைகள் இல்லாமல்
வாழ்ந்தால் வையகம் வாழ்க, வையகம் ஒரு குடும்பம் , சர்வே ஜனா சுகினோ பவந்து -அனைத்து மக்களும் சுகமாக வாழவேண்டும் என்ற
குணம் வளரும்.
இதற்கு ஆண்டவனின் நல்ல ஞானம் வையகத்தில்
அதிகமாக இருப்பதால் கொடியவர்கள்
அதிக இரக்கமற்ற செயல்களைச் செய்யமுடியாமல்
தண்டனைக்கும் , அவமானத்திற்கும் ,கடவுள் அளிக்கும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. சத்தியம்.
மதங்கள், ஜாதி இன பெயரால் சண்டைகளை உருவாக்கும் மாயை , சைத்தான் சாத்தானிடம் இருந்து வையகம் காக்கும் ஞானம் வளரட்டும்.
இளைஞர்களே ! சிந்திப்பீர்.
விநாயகப்பெருமானை அவமதிக்காதீர்கள்.
வாழ்க வையகம் ! வளர்க நற்பண்பு. இதற்காக
இறைவனை பிரார்த்திப்போம்.

No comments: