Saturday, July 29, 2017

రామచారితమాస --ராமசரிதமானஸ் -அயோத்யாகாண்டம் -முப்பத்தைந்து

    சீலமும் அன்பும் விடமுடியாது.
ராமரும் சங்கடப்பட்டார்.
துன்பமும் கடின  நடையும் அனைவரையும்
ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தின.
சில தேவர்களின்   மாயையாலும்
அவர்களின் அறிவு கவரப்பட்டது.
இரவு இரண்டாம்    ஜாமத்தில்  ராமர்  எழுந்தார்.
மந்திரியை அழைத்து தேரைப்பூட்டச் சொன்னார்.
தேர் செல்லும்   தடயம்  தெரியாமல் தேரை ஓட்டச் சொன்னார்.   மக்கள் அறியாமல் சென்றால் பின்தொடர மாட்டார்கள் .
சங்கரரை வணங்கி   மூவரும் தேரில் அமர்ந்தனர்.
விடிந்ததும் தேரையும் ,ராமர் லக்ஷமணனையும்  காணாமல்
மக்கள் "ராமா,"  ராமா !" என்று அழைத்துக்கொண்டே
தேட ஆரம்பித்தனர்.
 கப்பல் கவிழ்ந்து வாணிகம் நஷ்டம் ஏற்பட்டதுபோல்
தோன்றியது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொன்னார்கள்.
நமக்கு வருத்தம் ஏற்படும் என்று  நம்மை விட்டுவிட்டு .
ன்று விட்டார்    என பேசிக்கொண்டனர்.
அவர்கள் தன்னையே  நிந்தித்துக்கொண்டு,
மீன்களைப் புகழ்ந்தனர்.
மீன்கள் தங்களுக்குப் பிரியமான தண்ணீரை விட்டு வெளிவந்தால்  இறந்துவிடுகின்றன.
மனிதர்களுக்கு    அன்பானவர்களைப்  பிரிந்தால்
சாவு வருவதில்லை. மனிதப்பிறவி கேவலமானது ,.
இவ்வாறு புலம்பிக்கொண்டே வேதனையுடன்
அயோத்தியா திரும்பினர். அவர்களின் துயரம் வர்ணனைக்கு
அப்பாற்பட்டது.  பதினான்கு ஆண்டுகள் கழித்து   
தி ரும்புவார்  என்ற  நம்பிக்கையால் உயிரை விடவில்லை.
ஆண்களும் பெண்களும் ராமர் தரிசனத்திற்காக
விரதம்   இருந்தனர். தாமரை மலரும் , சகவா சக்வி பறவைகளும்  சூரியனின்றி கலை இழந்ததுபோல்
அயோத்யா மக்கள் கலை இழந்து காணப் பட்டனர்.

இங்கு   ராமர், லக்ஷ்மணன் ,சீதை  மூவரும் சிருங்க
பேர்பூரை  அடைந்தனர். அங்கு    கங்கை  நதிக் கரையில் இறங்கி  மூவரும்  வணங்கினர். கங்கை நதி அனைத்து
ஆனந்த   மங்கலத்திற்கு    மூலம்  . அது அனைவரின்
துன்பங்களைப் போக்கி  ஆனந்தம் கொடுக்கக் கூடிய நதி.

பல   துணைக்கதைகளை  சொல்லிக்கொண்டே  ராமர் கங்கையின் அலைகளை  பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவர் அமைச்சருக்கும் , லக்ஷ்மனனுக்கும் சீதைக்கும்
கங்கையின் மகிமையை சொன்னார்.
இதற்கிடையில் அனைவரும் கங்கையில் குளித்தனர்.
அவர்களது களைப்பு  போய்விட்டது.
கங்கையின் புனித    நீர்  அருந்தியதுமே
மனம் மகிழ்ச்சி அடைந்தது.
ராமநாமத்தை ஜெபித்தாலே பிறப்பு புனர் ஜன்மம் என்ற பந்தங்களிடமிருந்து  விடுபடலாம்.
இங்கு   அவர்   மனித ரூபத்தில் வந்ததால் அவருக்கு
சிரமமும் சிரமம்வதும் என்பது அவர் லீலை யாகும்.

ராமர்    சச்சிதானந்த       ஸ்வரூபியான  சூர்யகுலத்துதித்த
பகவான்  ராமர்  மனித அவதாரம் எடுத்து
சம்சாரக் கடலை கடந்து செல்ல இவ்வாறு
கஷ்டங்களை சகிக்கிறார்  சகிப்பதுபோல் நடிக்கிறார்.

இப்பொழுது நிஷாத   நாட்டு  மன்னன் குகன் ராமர் வருகை
புரிந்த செய்தி அறிந்து பே ருவகை  அடைந்தான்.
அவன் தன் உற்றார்  உறவினர்களுடன்
பழங்கள் - கிழங்குகள் படகில் ஏற்றிஅமரை தர்சிக்க வந்தான். அவன்  எல்லை இல்லா   மகிழ்ச்சி  அடைந்தான்.
ராமரை  வணங்கி  அன்பளிப்புகளை  முன்னாள் வைத்தான்.
அவனுடைய இயற்கையான அன்பைக்கண்டு ராமர் அவனை
அருகில் அமரவைத்து நலம் விசாரித்தார்.
குகன்   உங்கள்      கமல   பாத  தரிசனம்   கண்டு
நலமாக  இருக்கிறேன் என்றான்.
இன்று  நான்  மிகவும் அதிர்ஷ்ட சாலி ஆகிவிட்டேன் .
இந்த பூமி , செல்வம் , வீடு எல்லாமே  உங்களுடையது தான்.
நான் என் குடும்பத்துடன்   உங்களுக்கு  சேவை  செய்ய தயாராக  இருக்கிறேன்.
நீங்கள் தயவு செய்து ஸ்ருங்கபெர்பூருக்கு  வாருங்கள்.
நீங்கள் வந்து    இந்த     அடிமையின்  கௌரவத்தை
அதிகரித்தால்  அனைவரும் என் அதிர்ஷ்டத்தைப் புகழ்வார்கள்.  இதைக்கேட்டு ராமர் சொன்னார்:--
நீ  சொன்னதெல்லாம் சத்தியம். ஆனால்   எனது  அப்பா  வேறு வேலை கொடுத்துள்ளார்.
அவர்    கட்டளைப்படி   நான் பதிநான்கு  ஆண்டுகள்  வரை
முனிகள்  போல்  விரதமிருந்து  ஆடை    அணிந்து
அவர்கள்  போல்  உணவு உண்டு  காட்டில்  இருக்க வேண்டும்.
கிராமத்தில் இருப்பது  சரி  அல்ல.   இதைக்  கேட்டு
குஹனுக்கு மிகவும்  வருத்தம் ஏற்பட்டது.

கிராமத்தின்  ஆண்களும்  பெண்களும்   ராமர் , லக்ஷ்மணன் மற்றும்   சீதையின் அழகு    கண்டு  தங்களுக்குள்
பலவி தமாகப்  பெசிக்கொண்டிருந்தனர்.
இந்த அழகான குழந்தைகளை  காட்டுக்கு   அனுப்பிய
பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?
ஒருவன் சொன்னான்---அரசன்   செய்தது   சரியே.
இதனால்  இந்த சாக்கில் நமக்கு தரிசனம் செய்யும் வாய்ப்பு
நல்கியிருக்கிறார்.  அவர்கள்  தங்குவது  அசோக மரத்தின்  கீழ் அழகான இடம் என்று குகன்  நினைத்தான்.
ஸ்ரீ ராமருக்கு    அந்த    இடத்தைக்  காட்டினான்.
ஸ்ரீ ராமர்   அந்த இடம் மிகவும் அழகான  இடம் என்று கூறினார். நகரத்தவர்கள் அவர்களை வணங்கிவிட்டுச்  சென்றனர்.  ராமர்     சந்தியா  வந்தனம்  செய்ய புறப்பட்டார்.
 இதற்கிடையில் குகன்   தர்பையாலும் ,மென்மையான அழகான விரிப்பை அலங்கரித்தான். அதை மிகவும் மென்மையாகவும் ,புனிதமாகவும்    இருப்பதைப் பார்த்து ,
தொன்னையில்  பழங்களும் தண்ணீரும்  எடுத்து  வைத்தாள்.

ramacharitmaanas -அயோத்யா காண்டம் - முப்பத்தி நான்கு .


 ராமர்  போனதுமே அயோத்யா மக்கள்  அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அனைவருமே தங்களை அனாதைகள் போல் பாவித்து துன்பக்கடலில் மூழ்கினர்.
ராமர் அவர்களுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லி திரும்பிச் செல்லும் படி வேண்டினார் அவர்கள் திரும்பினாலும்  அன்பின் காரணமாக மீண்டும் பின் சென்றனர்.
அயோத்தியாவே மிகவும்   பயமுறுத்துவது போல்    காட்சி அளித்தது. இருள் சூழ்ந்து இருபதுபோல மக்கள் உணர்ந்து பயந்தனர். மக்களே ஒருவர் மற்றவரைப் பார்த்து பயந்தனர்.

வீடு சுடுகாடுபோலும் , குடும்ப உறுப்பினர்கள் பூத    பிரேதம்  போலவும்  நலம் விரும்பிகள் நண்பர்கள் அனைவரும்    யமதூதர்கள் போல் இருந்தனர். தோட்டங்களில் மரம் செடிகள்   கொடிகள் வாடிக்கொண்டிருந்தன. நதிகளும்
குளங்களும்  பயம் அளிப்பவையாகத் தோன்றின.
  ராமர் இல்லா அயோத்தியில்  வளர்ப்பு  பறவைகளும் ,
மிருகங்களும் கவலைப்     பட்டன.   நகரமே பயங்கர காடுபோல்  காட்சி அளித்தது.

 கைகேயியை வேட்டைக்காரியாக  மாற்றி காட்டுத்தீ வைத்தவள் போல்  கடவுள் மாற்றிவிட்டார்.   அனைவருமே
ராமர் , லக்ஷ்மணன் சீதை இல்லா அயோத்யாவில் சுகம்கிடையாது   என்றே  உணர்ந்தனர்.
அனைவரும் தொடர்ந்தாலும் ராமர் தன் எண்ணத்தில் உறுதியாக இருந்தார். முதல் நாள்  தமஸா  நதிக்கரையில்

தங்கினர். ராமர் கருணை நிறைந்தவர். இரக்கமுள்ளவர்.
அடுத்தவர்கள்  துயரத்தைப் போக்குபவர். மற்றவர் துன்பம் கண்டு துயரடைபவர்.
 அவர் அன்புடன் மற்றவர்களுக்கு மென்மையாக   அன்புடன்
கூடிய  அறநெறியுடன்அறிவுரைகளை வழங்கினார்.
ஆனால் மக்கள் அன்பு   மிகுதியால்  திரும்ப வில்லை. 

रामचरित मानस -- ராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம் --முப்பத்திமூன்று


     தசரதரின்  மனம்  மிகவும் வேதனையால்

  இதைவிட அதிக   துன்பம்  எதுவுமே  இல்லை.

இந்த துன்பத்தால் உயிர் போய் விடும்.  பிறகு அரசர்

ராமர் , லக்ஷ்மணர் , சீதை மூவரையும் தேரில் அழைத்துச்சென்று  காட்டை நன்கு காட்டிவிட்டு நான்கு
நாட்களுக்குப் பிறகு வரவும் என்று  அமைச்சரிடம் கூறினார்.

முடிந்த அளவு அறிவுரை கூறி மீண்டும் அழைத்து வரவும் .

மறுத்தால் சீதையை யாவது அழைத்துவரவும் என்றார்.

சீதை காட்டில் பயந்தால் மாமனார் -மாமியார்  உன்னை நகருக்கு  திரும்ப வேண்டும்  என்ற செய்தி அனுப்பினர் என்று சொல்லவும்.  உன்  விருப்பப்[படி அப்பாவின்    வீட்டிலோ
மானார் வீட்டிலோ இருக்கலாம் என்றும் சொல்.
சீதை திரும்பினால் என் உயிருக்கு சற்றே ஆறுதல் கிடைக்கும்  என்று சொல்.  இல்லை என்றால் நான் இறந்துவிடுவேன் என்றும் சொல். கடவுளே எதிராக இருந்தால் எதுவும்
நடக்காது.   ராமர் ,லக்ஷ்மணர் சீதை மூவரையும் என் முன் அழைத்து வா . என்று அரசர்  மயக்கமடைந்தார்.
 அமைச்சர் அரசரிடம் கட்டளை பெற்று  தேரைப்பூட்டி
நகருக்கு வெளியில் ராமர், சீதை ,லக்ஷ்மணர் இருக்கும் இடத்திற்கு வந்தார். அரசரின்  செய்தியை மூவரிடமும் கூறினார். மூவரும் அயோத்தியாவை வணங்கி தேரில் அமர்ந்தனர். 

Friday, July 28, 2017

रामचरित मानस --அயோத்யகாண்டம் --௩௨ முப்பத்திரண்டு

வனவாசத்திற்கு தேவையான  பொருட்களை
எடுத்துக்கொண்டு , தன் மனைவி  சீதையையும் ,சகோதரன்
லக்ஷ்மணனையும் அழைத்துக்கொண்டு  ராமர் குருவை வணங்கி விட்டு  காட்டை நோக்கி புறப்பட்டார்.
துக்க   மிகுதியால்   அனைவரும்  மயக்கமடைந்தனர்.
  ராமர் வசிஷ்டரின் வீட்டிற்கு சென்றார். அங்கு   ராமரின்  வனவாசப்  பிரிவால் அனைவரும்     துன்புறுவது கண்டு
அனைவருக்கும் ஆறுதல் சொன்னார். பிறகு அந்தணர்களை
அழைத்து அவர்களுக்கு ஓராண்டிற்கு  வேண்டிய உணவுப் பொருட்களை அளித்தார். யாசகர்களுக்கு தானம்  அளித்தார்.
அனைவரின் அன்பையும் பெற்று தன் அன்பினால்  அனைவரையும்  மகிழ்வித்தார்.
பிறகு    பணியாட்களையும்   குருவிடம் ஒப்படைத்து  அவர்களை  பெற்றோர்கள் போல் கவனிக்க வேண்டும்  என்றார்.
மன்னரை  மகிழ்ச்சியாக வைத்திருப்போர் தான் என் நலம் விரும்பும் நண்பர்கள்  என்றார்.
 பிறகு  நகர மக்களிடம்  என் பிரிவால்  யாரும் துன்பப் படும்படி  நடந்துகொள்ளாதீர்கள் என்றார்.
 மீண்டும்    குருவையும்  கணபதி, பார்வதி, சிவன்  ஆகியோரை  வணங்கி ஆசிகள் பெற்று ராமர் புறப்பட்டார்.


ராமர் புறப்பட்டதும் நகரமே துன்பக்கடலில் மூழ்கியது.
ஸ்ரீ லங்காவில் கேட்ட சகுனங்கள் தோன்றின. தேவலோகம்
மகிழ்ச்சியால்   திளைத்தது. ராமர்  கானகம் செல்வதால்  வருத்தமும் , ராக்ஷசர்கள் அழிவார்கள் என்ற  மகிழ்ச்சியும்
தேவலோகத்தில்    காணப் பட்டன.

  தசரதர் மயக்கம் தெளிந்ததும்   அமைச்சர்களிடம் ,,    ராமர் கானகம்    விட்டார் , உயிர் போகவில்லையே  என்று  புலம்பினார். எந்த    சுகத்திற்காக  இந்த  உயிர் உள்ளதுரூ தெரியவில்லையே  என்று புலம்பத் தொடங்கினார்.

Thursday, July 27, 2017

இளைஞர்களே! சிந்தியுங்கள்

காலை வணக்கம். 
கடவுள் அருளட்டும்.
நல்ல எண்ணங்கள் , நல்ல செயல்கள் , ஒழுக்கம் , கடமை ,
கட்டுப்பாடு , நேர்மை , தியாகம் , உழைப்பு 
என்ற தெய்வீக எண்ணங்கள் வளர இறைவன் உதவட்டும் . 
மனிதநேயம் வளர அசுர சக்திகள் ஒழிய
இறைவன் மனம் இறங்கட்டும்.
மாமிச பக்ஷினி , சாகபக்ஷ்ணி என்று கொடிய
சாந்த மிருகங்களைப் படைத்த இறைவன்
மனிதர்களையும் அவ்வாறே கொடிய நேர்மையான
சாதுவான என்றே படைக்கிறான்.
ஆனால் அறிவு பகுத்தறிவு என்று கொடுத்து
கொடிய விலங்குகளை அழித்துவிட வகை செய்தான்.
இந்த கொடியவைகளை, எண்ணங்களை , ஹிம்சையை ஒழிக்க தர்ம ஆசாரங்களை கற்றுக்கொடுக்க மகான்களைப் படைத்தான்.
இஸ்லாமியர்கள் மோதிக்கொண்டு அவர்களை அவர்களாகவே கொடூரமாகத் தாக்கிக் கொண்டு
அமைதியற்ற வாழ்க்கை வாழ்ந்த போது
முஹம்மது நபிகள் மூலம் இன்சானியத் அதவாது
மனிதநேயத்தை வளர்க்க குரானைப் படைத்தான்.
கொடிய விலங்குகள், கடல்வாழ் அசைவ உணவு சாப்பிடும் ஜப்பானுக்கு புத்தரின் மதத்தை அளித்தான்.
ஏசுவை அன்பு ,சேவை , உதவி என்று ப்ரசார்சம் செய்ய புவிக்கு அனுப்பினான்.
நமது ஹிந்தி சாஸ்த்திரங்கள், சீக்கிய,ஜைன சமண மதங்களும் சத்தியம் , அஹிம்சை, தான தர்ம பரோபகாரம் என்ற மனித ஞானத்தை போதித்து
நிலையற்ற உலகில் பாவங்கள் அசத்தியங்கள் ஒழுக்கமின்மை ஆகியவைகளை
நினைத்தாலே பாவம் ,பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது தண்டனைதான்
இதை சட்டப்படி உணராமல் சமுதாயத்தைப்
பார்த்து ஒவ்வொரு குடும்ப அரசியலின் அவலங்கள்
பலகோடிகள் இருந்தாலும் கேடிகள் என்றே சகித்து வாழும் தன்மையை அளித்துள்ளான்.
ஆக மதங்கள் அனைத்துமே அன்பையும்
பண்பையும் ஒற்றுமையையுமே
வழிக்காட்டி நல்வழிப்படுத்துகின்றன.
இதை புரிந்து மத ஜாதி இன சண்டைகள் இல்லாமல்
வாழ்ந்தால் வையகம் வாழ்க, வையகம் ஒரு குடும்பம் , சர்வே ஜனா சுகினோ பவந்து -அனைத்து மக்களும் சுகமாக வாழவேண்டும் என்ற
குணம் வளரும்.
இதற்கு ஆண்டவனின் நல்ல ஞானம் வையகத்தில்
அதிகமாக இருப்பதால் கொடியவர்கள்
அதிக இரக்கமற்ற செயல்களைச் செய்யமுடியாமல்
தண்டனைக்கும் , அவமானத்திற்கும் ,கடவுள் அளிக்கும் தண்டனைக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. சத்தியம்.
மதங்கள், ஜாதி இன பெயரால் சண்டைகளை உருவாக்கும் மாயை , சைத்தான் சாத்தானிடம் இருந்து வையகம் காக்கும் ஞானம் வளரட்டும்.
இளைஞர்களே ! சிந்திப்பீர்.
விநாயகப்பெருமானை அவமதிக்காதீர்கள்.
வாழ்க வையகம் ! வளர்க நற்பண்பு. இதற்காக
இறைவனை பிரார்த்திப்போம்.

Monday, July 24, 2017

அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ் .

அன்பு என்றும்   இரண்டுபேருக்கே  என்பதல்ல.
காதல் என்பது இருவருக்கும்  இடையில் .
 மீரா - கிருஷ்ணன் ,
ஆண்டாள் - ஆண்டவன்    காதல்.

பக்தி  -சிரத்தை ஆட்களைக் கூட்டுகிறது.
காதல் ஒருவழிப் பாதைபோல்
மூன்றாவது ஆளுக்கு  இடம் விடுவதில்லை.
இப்படிப்பட்ட அன்பில் திளைத்தவர்களில்
பிரதானமானவர்கள்  பக்ததியாகராஜர்  ,
ரமண மஹரிஷி, யோகிராஜ் சரத் குமார் , சீரடி சாய்.
இந்த நேரடி அன்பில் ஆண்டவன் அருள்
அன்பால் ஈர்க்கப்பட்டு , காதலால் மலர்ந்து ,
பக்தியால் பூத்து-காய்த்து, பழுத்து ,
பார் முழுவதற்கும் நல்வழி காட்டி
சாந்தி, மகிழ்ச்சி , திருப்தி அளித்து,
அகிலத்தை பொறாமை ,கோபம் ஆணவம் ,பெண் ஆசை
முதலிய தீய குணங்களை விரட்டி அடித்து,
வையகம் வாழ வழி   வகுக்கிறது.
     ஓம்  கணேசாய நமஹ.
  ஓம்  கார்த்திகேயாய நமஹ
  ஓம்  நமஹ சிவாய.
  ஓம் துர்காயை  நமஹ.

 இறைவன் நாமம் பிராணாயாமம்
பகவான் அருள் பெறலாம்.
 பகவானால் இரட்சிக்கப்படும்
ஒருவனை யாராலும்
அடிக்க முடியாது.
வையகமே எதிர்த்து ,
 தனி ஒருவனாக நின்றாலும்
மயிரைக்கூட பிடுங்க முடியாது.
 (---படிக்காத பக்தர்  கபீர்தாஸ்  

அன்பே ஆண்டவன்

அன்புக்கு  ஆண்டவன் அன்பே ஆண்டவன்
அன்பிலேயே  ஆண்டவன்  அன்புக்காகவே ஆண்டவன்
அருள்தரும் ஆண்டவன்  அவனியில் ஆண்டவன்
அகிலாண்டம் ஆதிசிவன் விஸ்வநாதன் .
அன்பே   சிவம் . உலகம் எதில் அடங்குமோ
மயங்குமோ மூழ்குமோ கலையுமோ  அங்கே
மங்கை   ஓர்  பாகன்  அர்த்தநாரீஸ்வரன்
அவன் மன்மதனை எரித்தாலும்
மங்கையர் பாகன்.

Sunday, July 23, 2017

உள்ளத்தூய்மையே இறை அருள்

ஆன்மீக உணர்வு தெய்வீக ஈர்ப்பு
உள்ளுணர்வு இதில் சஞ்சலம்
அதையும் மீறி தன து அமானுஷ்ய
ஆற்றலைக் காட்டும் மகான்கள்
என் நடை முறை வாழ்க்கையில் 
காட்டி தங்கள் வாழ்ந்த வளாகத்துக்கு
வரவழைத்து அதிர்வலைகள் காட்டுகின்றனர்.
வடலூர் வள்ளலார் ,பூண்டி மகான் ,
பாம்பன் சாமிகள் .சித்தானந்தம். சத்யா சாய் சீரடி
இப்பொழுது படே சாயபு
புதுச்சேரி என்னே ஈர்ப்பு
எளிய ஆடம்பரமற்ற சூழல்
சிவன் கோயில்
முஸ்லிமாக இருந்தாலும்
அவர் வணங்கிய விநாயகர்
தெய்வீக சக்த்திக்கு தூய மனம்
மந்திரங்கள் இரண்டாம் நிலை ..
ஞான மார்க்கம் வெளி ஆடம்பரமற்ற
தியானம் இறை அருள் .உண்மையில்மகான்கள்
உள்ளத் தூய்மை யே இறை அருள்
இறை தரிசனம் .
ரமணர் காட்டியதும் அதே

प्रार्थना

சனிக்கிழமை
சனிப்ப்ரீத்தி
சங்கடங்கள்
தீர பிரார்த்திக்கிறோம் .
பூர்வ ஜன்ம பாவங்கள்
இந்த ஜன்ம அறிந்தோ
சேர்க்கை தோஷத்தாலோ
சமுதாய நடை முறையாலோ
தன் நலத்தாலோ
தன் உறவு நட்பாலோ
செய்த கர்மங்கள்
அறிவிருந்தும் தெளியா அறிவு
அனைத்தையும் மன்னித்து
அகிலத்தில் வாழ மன நிறைவு
மன அமைதி .மன மகிழ்ச்சி
மன ஒருமைப்பாடு ஆழமான
தியானம் செய்ய உன் கருணை
உலகில் வேண்டும்
அருள்வாயாக.
அனைவருக்கும் உன் அன்பு பார்வை
வேண்டும்.
--------_--------
நண்பர்களுக்கு காலை வணக்கம் .