Sunday, May 7, 2017

ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -முப்பத்தொன்று

ராமசரித மானஸ்-அயோத்யகாண்டம் -முப்பத்தொன்று

ராமரின் அன்பான வேண்டுகோளைக் கேட்டு
அரசர் ராமரின் தோள்களைப் பற்றி
அருகில் அமரவைத்துச்   சொன்னார் --
"மகனே! ஸ்ரீராமர் அசைவன     அசையாதன    என்ற
அனைத்திற்கும்  எஜமானர்  என்று
முனிவர்கள் பகர்கிறார்கள்.
நல்ல தீய செயல்களுக்கு ஏற்ற பலனை
 கடவுள்   நமக்கு   அளிக்கிறார்.
செயலாற்றுபவன்  தான்  பலனை பெற்று
பலனை அனுபவிக்கிறான்.
எல்லோரும்  இது வேதத்தின் நீதி   என்று
சொல்கிறார்கள். ஆனால் இன்றைய சூழலில்
குற்றம் செய்வது ஒருவன் .
பலன் பெறுவது    ஒருவனாக    இருக்கிறான்.
பகவானின் லீலை    மிகவும்     விசித்திரமானது.
அதை அறியும்    தகுதி  பெற்றவன்
உலகில் யாருமே  கிடையாது.
இவ்வாறு   ராமருக்கு  வஞ்சனை தவிர  அனைத்து
வழிகளையும்  சொன்னார். அவர்   தர்மத்தின்   அச்சான
ராமரின் தீரத்தையும் புத்திசாலித்தனத்தையும்
அறிந்து கொண்டார்.
அரசர்  சீதையை   ஆலிங்கனம் செய்து அன்புடன்
உபதேசம்  செய்தார். காட்டின் சகிக்க    முடியாத
துன்பங்களை விளக்கினார்.
மாமனார், மாமியார், தந்தையுடன்  இருக்கும்
சுகங்களையும் எடுத்துரைத்தார்.
அமைச்சர்  சுமித்திரனின்  மனைவியும் ,
குரு  வசிஷ்டரின்  மனைவியும் ,
மற்ற  குலப் பெண்களும்   மிகவும் அன்புடன்
வனவாசம்  செல்லவேண்டாம், உனக்கு வனவாசம் கொடுக்கவில்லை  என்றனர். மாமானார், குரு, மாமியார்
போன்றோர் சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு  அதையே செய் என்றனர்.
இந்த குளிர்ச்சியான,இனிமையான ,  நன்மை தரக்  கூடிய,
அறிவுரை  சீதைக்கு பிடிக்கவில்லை.
சீதையின் மனம் ராமரை    விரும்பியதால்
வீடு பிடிக்கவில்லை.  கானகச்சூழல்  பயங்கரமாகத்
தெரியவில்லை.
ஆனால்   அனைவருமே   காட்டின் பயங்கரத்தை விளக்கினர்.
ஆனால்  சீதைக்கு குளிர்கால பௌர்ணமி நிலவில் சாகவி என்ற ஒருவகை  பறவை  கலக்கமடைவதுபோல்   சீதை
கலக்கமடைந்தாள்.
சீதை  வெட்கத்தின் காரணமாக பதில் எதுவும் கூறவில்லை.
இவர்கள் சொல்லுவதை எல்லாம்  கேட்டு ,
கைகேயி வேகமாக  எழுந்து
முனிகளின் வஸ்த்திரங்கள், நகைகள், கமண்டலம்
போன்றவற்றை ராமரின் முன்னாள்    வைத்துவிட்டு
மென்மையான  குரலில்சொன்னாள்--

ரகுவீரா!  அரசருக்கு   உன்  மேல் தன்   உயிரைவிட  அன்பு அதிகம் . அன்பினால்  கோழை யான  அரசர் ஒழுக்கத்தையும்
அன்பையும் விட மாட்டார்.
புண்ணியம் , அழகு, புகழ் , பரலோகம்
அனைத்தையும் விட்டுவிடவும் தயாராக இருப்பார்.
உன்னை  கானகம் செல்ல    அனுமதிக்க  மாட்டார்.
இதை எண்ணி உன் விருப்பப்படி  செய்.
அன்னையின்  இந்த  சொற்களால்  ராமருக்கு   மகிழ்ச்சி
உண்டாகியது.
ஆனால்   அரசருக்கு       அம்புகள் தைத்ததுபோல்  இருந்தன.
அவர்    இன்னும்  என்    உயிர்  போகவில்லையே
நான் துரதிர்ஷ்ட சாலியாக உள்ளேனே  என்று
நினைத்தார்.
அரசர்   மயக்கமுற்றார். மக்கள் கலக்கமடைந்தனர்.
என்ன செய்வதென்று  தெரியாமல்   திகைத்தனர்.

ராமர்     உடனே   முனிவர்   வேடமிட்டு   தாய்-தந்தையை  வணங்கி  சென்று    விட்டார். 

No comments: