Thursday, May 4, 2017

ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம் இருபத்தெட்டு


ராமசரிதமானஸ் --அயோத்யகாண்டம் -பக்கம்  இருபத்தெட்டு

இரக்கக் கடலானா ஸ்ரீ ராமர் மிகவும் மென்மையான
பணிவான சொற்களைக் கேட்டு ,
அன்பினால்   அச்சமுடன் இருப்பதை  அறிந்து  ,
அவரை நெஞ்சுடன் தழுவி   சொன்னார் --
"சகோதரா! சீக்கிரம் அம்மாவிடம் விடைபெற்று ,
கானகம் செல்ல ஏற்பாடு   செய் .
இந்த ரகுகுலத்தில் மேன்மையான
தன் சகோதரரின்  கூற்றைக் கேட்டு ,
லக்ஷ்மணன்   ஆனந்தமடைந்தார்.
மிகப்பெரிய தீங்கு விலகிவிட்டது.
மிகப்பெரிய  பயன் ஏற்பட்டுவிட்டது.

மிகவும் மகிழ்ச்சியுடன்  , குருடனுக்கு மீண்டும்
கண் கிடைத்த       பேரானந்தத்துடன்
அன்னை சுமித்திராவிடம் ஆசி பெறச் சென்றான்.
ஆனால் மனம் முழுவதும்   ரகுகுலத்துக்கு ஆனந்தம்   தரும்
ஸ்ரீ  ராமர்      மற்றும் ஜானகி  யே   நிறைந்து இருந்தனர்.

அங்கு அன்னையின் வருத்தமான  நிலை  கண்டு ,
லக்ஷ்மணன்       அனைத்து   விவரத்தையும்  சொன்னார்.
இந்த கடின செய்தி கேட்டு நான்கு பக்கமும்    தீ
சூழ்ந்து இருந்து பயப்படும் பெண்  மான்  போன்று
அன்னை சுமித்திரா பயந்துவிட்டார்.

அன்னையின் அச்சம் கண்டு  லக்ஷ்மணன்   நினைத்தான் ---
"இன்று அனர்த்தம் ஏற்பட்டுவிடுமோ ?
அன்பின் காரணமாக கானகம் செல்ல    தடை  ஏற்படுமோ" ?
அம்மா !செல்ல  அனுமதிப்பாளோ இல்லையோ
  எனத் தயங்கினான்.
 சுமித்திரை  ஸ்ரீ ராமர் மற்றும்  சீதையின் அழகு  கண்டு ,
அவர்கள் மேல்  தசரதனின் அளவற்ற  அன்பையும்  நினைத்து ,
தலையில் அடித்துக்கொண்டு ,
"பாவி கைகேயி மிகவும்  துரோகம்  செய்துவிட்டாள்
என்று  சொன்னாள்.

மீண்டும் ராமர் இருக்கும் இடமே  அயோத்தியா .
எங்கு சூரிய  ஒளி  உள்ளதோ அங்குதான்  பகல்.
சீதையும்  ராமனும் காட்டிற்குச்  செல்கிறார்கள்  என்றால்
உனக்கு   அயோத்தியாவில்  வேலை  இல்லை.
 குரு, அன்னை, தந்தை சகோதரர்கள் , எஜமானர்
 ஆகிய  அனைவருக்கும்  சேவை  செய்ய  வேண்டும்.

ஸ்ரீ ராமர் நமக்கு உயிரைவிட மேலானவர். அன்பானவர்.
அவர் அனைவருக்கும்  சுயநலமற்ற தோழர்.
உலகில் மிகவும் வணங்கத்தக்க பிரியமானவர்கள்
அனைவருமே  ராமரின் உறவினர்கள்.
இதை அறிந்து   அவர்களுடன்     கானகம்  செல்.
உலகில் வாழும்  பயனைப் பெறவும்.
நீ மிகவும் சௌபாக்ய சாலி.
உன்னுடைய மனம் ராமரின் சரணங்களில் இடம்   பெற்றுவிட்டது. நானும் அதிர்ஷ்டசாலிதான்.
நானும் தியாகம் செய்கிறேன்.

No comments: