Sunday, April 16, 2017

ராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம் -பக்கம் பதினைந்து.

ராமசரித மானஸ்--அயோத்தியா காண்டம்
 -பக்கம் பதினைந்து.

சூரிய குல சூரியன்,
ஆனந்தத்தின் இருப்பிடம்
ஸ்ரீ  ராமச்சந்திரர்   மனதில் புன்னகையுடன் ,
எந்தவித      தூஷணைகளின்றி
 சொல்லின் அணிகலன்
போல் மென்மையாகப் பேசினார்.
 அன்னையே! பெற்றோருக்கு  கீழ்படிந்து
நடக்கும் புத்திரன் மிகவும்
அதிர்ஷ்டசாலி.  
 கீழ்படிந்து  தன் பெற்றோரை
 திருப்திப் படுத்தும் மகன்  உலகில்    கிடைப்பதரிது.
 நான் வனவாசம்    சென்றால் முனிவர்களை சந்திப்பேன். எனக்கு    பல  வகையிலும்      நல்லதே  நடக்கும் .
அப்பாவின் கட்டளை நான் நிறைவேற்றுவேன்.
 உன்னுடைய   சம்மதமே  போதும்.
என்னுடைய் உயிரைவிட அன்பான
பரதன் ஆட்சி செய்வான்.
 இன்றைய சூழல் எனக்கு கடவுள்
 அனுகூலமாக இருப்பதையே காட்டுகிறது.
 இப்படிப்பட்ட
வேலைக்காக  நான்  காட்டிற்குச்  செல்லவில்லை
 எனில்
நான் முட்டாளின்  கூட்டத்தில் ஒருவனாக எண்ணப் படுவேன்.
 கற்பகமரம் இருக்க  ஆமணக்கு  மரத்திற்கு
யாராவது   பணிவிடை  செய்வார்களா ?
அமிர்தத்தை  விட்டுவிட்டு விஷத்தைப் பருகுவார்களா ?
நீ மனதில் எண்ணிப்பார்.
இந்த  வித சந்தர்பத்தை  முட்டாள் கூட விடமாட்டான்.
 எனக்கு    என் தந்தையின் நிலை கண்டுதான்
 வருத்தமாக  இருக்கிறது.
 எனக்கு தந்தையின் நிலை கண்டு
 நம்பிக்கை வரவில்லை.
மஹாராஜா  மிகவும்  பெரிய   தீரர் .
 குணங்களின் ஆழ்டல் .
எதோ நான் மிகப்பெரிய  குற்றம்  புரிந்து விட்டேன்.
அதனாலேயே அரசர் என்னிடம்  பேசவில்லை.
அம்மா! என் மேல் ஆணை .
 நீ உண்மையைச்    சொல் .
ஸ்ரீ ராமரின் நல்ல நேர்மையான
குணத்தைக் கைகேயி
தவறாகவே நினைக்கிறாள்.
தண்ணீர்    ஒரே மாதிரி   இருந்தாலும்   அட்டை கோணலாகத்தான் செல்லும்.
ராணி ராமரின்  ஏற்புடைமை  கண்டு மகிழ்ந்து      கபடத்துடன் பேசினாள்--
உன்மேல்  ஆணை.
பரதன்     மேல்   ஆணை.
எனக்கு அரசனின்   துன்பத்திற்கு  
 வேறு  எந்த  காரணமும்   தெரியவில்லை.  
மகனே !   உன்னால்   எவ்வித தவறும்  நிகழாது.
  நீ  உன்     பெற்றோர்களுக்கு சகோதரர்களுக்கும்
  நன்மையே  செய்பவன்.
 நீ சொல்வதெல்லாம் உண்மையே .
நீ தந்தையின் கட்டளை நிறைவேற்ற தயாராக இரு.
நீ உன் தந்தையின் புகழுக்கு இழுக்கு
 ஏற்படா  வண்ணம் நடந்துகொள்.
அவரை தெளிவுபடுத்து.
கடவுளின் புண்ணியத்தால் தான்
 அவருக்கு  உன் போன்ற  உத்தமன்
புத்திரனாக உள்ளாய்.
கடவுளை அவமானப்படுத்தாதே.
அன்னை கைகேயியின் வார்த்தைகள் அவருக்கு
கங்கையில் நல்லது கெட்டது   கலந்து ,
புனிதமாக அழகாக ஓடுவது  போல்  இருந்தது.
இதற்குள்  அரசனின் மயக்கம்  தெளிந்தது. அவர் ராமரை நினைத்து  "ராமா, ராமா " என்று புலம்பினார்.
புரண்டு படுத்தார். அதுதான் சமயம் என்று மந்திரி ராமர் வந்ததைச் சொன்னார்.
தசரதர்   ராமர் வந்தததைக் கேட்டு ,
தைரியத்தை வரவழைத்து
கண் களைத் திறந்தார். அமைச்சர் அவரை சரியாக உட்காரவைத்தார்.
அரசர்   தன்னை ராமர்   வணங்குவதைப்
பார்த்தார். அன்பின் மிகுதியால்  ராமரைக்
கட்டித்  தழுவினார். அரசர் ராமரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
துன்பத்தின் மிகுதியால் அரசரால் பேச  முடியவில்லை.
அவர் அடிக்கடி ராமரைத் தழுவினார்.
மனதில் பிரம்மாவிடம் ராமர் காட்டுக்குப்
போகக் கூடாது என்று வேண்டினார்.
பிறகு மகாதேவனை
வேண்டினார்.  ஹே சதாசிவா !  நீங்கள் என் வேண்டுகோளைக் கேளுங்கள். நீங்கள் விரைவில்
மகிழ்ச்சி அடைபவர். கேட்கும் வரம் அளிப்பவர்.
என்னை எளிய சேவகனாக ஏற்று , என் துன்பத்தைப்
போகுங்கள்.  நீங்கள் ஒரு தூண்டு கோலாக
அனைவரின் இதயத்தில் இருக்கிறீர்கள்.
ராமருக்கு ஒழுக்கம்-அன்பு வாக்கு எல்லாம் விட்டுவிடும் அறிவைத்  தாருங்கள். அவன் எதையும் கேட்காமல்
வீட்டிலேயே இருக்கும்படி  செய்யுங்கள்.
உலகில் எனது புகழ் இகழ்ச்சியாக மாறினாலும் சரி,
எனக்கு அவப்பெயர் வந்தாலும்  சரியே.
எனக்கு நரகம் கிடைத்தாலும் சரியே. பூர்வ ஜன்ம புண்ணியத்தால்  ஸ்வர்கம் கிடைத்தாலும்
சரியே. நான் அனைத்து இன்னல்களையும் சகித்துக்கொள்கிறேன்.என் ராமன் என் கண்ணை விட்டு மறைத்து காட்டுக்குச் சென்று விடக் கூடாது.
அரசன் எதுவும் பேசாமல்
மனதிலேயே அனைத்தையும் அசை போட்டுக்கொண்டிருந்தார்.
   அவர்  தைரியத்தை  
Post a Comment