Wednesday, March 22, 2017

रामचरित मानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -தொண்ணூற்று ஒன்று

रामचरित मानस --ராமசரித மானஸ்--பாலகாண்டம் -                       தொண்ணூற்று ஒன்று

     ராஜா ஜனகரின்    அன்பு ,பண்பு , விருந்தோம்பல்,
ஒழுக்கம், செயல் ஐஸ்வரியம் அனைத்தையும்
 தசரதர்  புகழ்ந்தார்.
ஒவ்வொருநாளும்  தசரதர் அயோத்தியா
  செல்ல  அனுமதி கேட்டார்.
ஆனால் ஜனகர் அவர்களை அன்புடன் தங்கவைத்தார். ஒவ்வொருநாளும் புதிய விதத்தில் மரியாதை அதிகரித்துக்கொண்டே இருந்தது.
ஆயிரம் விதமாக  விருந்தோம்பல் நடந்துகொண்டிருந்தது. நகரத்தில் தினந்தோறும் புதிய உற்சாகம் ஆனந்தம் .
 தசரதர்  செல்வதை யாரும் விரும்பவில்லை.
இவ்வாறு பல நாட்கள் கழிந்துவிட்டன.
மணமகன் வீட்டார்கள் அன்புக் கயிற்றால்    கட்டுண்டனர் .
அப்பொழுது விஷ்வாமித்திரரும் சதானந்தரும்
 ஜனகருக்கு விளக்கினர் -"நீங்கள் அன்பின் வயப்பட்டு அவரை அனுப்பவில்லை.
இப்பொழுது  தசரதருக்கு  செல்ல  அனுமதி அளியுங்கள்".

உடனே  மிகவும் நன்று  என்று சொல்லி ,
 ஜனகர் மந்திரிகளை அழைத்தார்,
அவர்கள் வந்ததும்      அயோத்தியா அரசர்  நாடு
 செல்ல விரும்புகிறார்  என்று  ஜனகர் சொன்னார். இதைக்கேட்டு  அமைச்சர் , அந்தணர்கள்,,சபை உறுப்பினர்கள், அரசர் ஜனகர் அன்பில் கட்டுண்டனர் .
நகர மக்கள்  தசரதர் செல்வதை அறிந்து வருத்தப்பட்டனர்.
அவர்கள் முகம் மாலைநேரத்தில் வாடும்
 தாமரைபோன்று வாடியது.
 மணமகன் வீட்டார் திரும்பும் போது
 எங்கெல்லாம்  தங்குவார்களோ
அங்கெல்லாம் உணவுப் பொருட்கள் அனுப்பப் பட்டன. பலவித  உலர்  பழங்கள் ,  பலகாரங்கள்,
உணவுப்பொருட்கள்  அவைகளை வர்ணிக்க முடியாது.
எண்ணிக்கையில்லா    காளைமாடுகளில் ,
பல்லாக்குகளில்  பொருட்கள் ஏற்றி அனுப்பப் பட்டன. அழாகான படுக்கைகளையும்  கட்டில்களையும்
  ஜனகர்   அனுப்பினார்.
ஒரு லக்ஷம் குதிரைகள் ,
 நன்கு அலங்கரிக்கப்பட்டவை ,
 ஐம்பதாயிரம் தேர்கள் அனைத்தும்( நகத்தில் இருந்து தலைவரை)  கீழிருந்து  மேல் பகுதி வரை அலங்கரிக்கப்பட்டவை.
பத்தாயிரம் அலங்கரிக்கப்பட்ட யானைகள்,
வண்டிகளில் நிரப்பப் பட்ட தங்கம்,
ஆடைகள்,ரத்தினங்கள்  , பசுமாடுகள் , எருமைமாடுகள்  மற்றும் பலவித பொருட்கள் அனுப்பினார்.
மீண்டும் அளவிட முடியாத   பொருட்கள் சீதனமாக அனுப்பினார்.
ராணிகள் மணமகன் வீட்டார் செல்வதறிந்து வருந்தி
தண்ணீர் குறைந்ததும் மீன்கள் துடிப்பது போன்று துடித்தனர்.
அவர்கள் சீதையை அடிக்கடி கொஞ்சினர்.
ஆசிகள் வழங்கினர்.
அவளுக்கு உபதேசம் செய்தனர்--" எப்பொழுதும் கணவனின் அன்புக்கு பாத்திரமாக இரு "என்றனர்.
 தீர்க்க சுமங்கலியாக இருக்க ஆசிகள் வழங்கினர்.
"மாமியார் ,மாமனார் ,குரு போன்றோருக்கு பணிவிடை செய்யவேண்டும்"
 என்றனர்.
கணவரின் மனமறிந்து
கீ ழ்படிந்து இருக்கவேண்டும் என்றனர்,
தோழிகளும்  பெண்களின் தர்மத்தைப்பற்றிக் கூறினர்.
மிகவும் அறிவுரைகள் கூறி அடிக்கடி ஆரத் தழுவினர் .
பெண்கள்  ஆண்டவன்  பெண் இனத்தை   படைத்தது   ஏன் என வருந்தினர்.
 ஜனகர்   சூரியகுலக் கொடியான ராமரையும்
மற்ற சகோதரர்களுக்கும் விடை கொடுக்க
அரண்மனைக்குச் சென்றார்.

   அனைவரும் நான்கு சகோதரர்களையும்
பார்க்க ஓடி வந்தனர்.
அனைவரும் தசரத புத்திரர்கள் வருகையால்
தங்களுக்கு புண்ணியமும் கிடைத்ததாகக் கருதினர்.
  இறப்பவனுக்கு அமிர்தம் கிடைத்தது போலவும் ,
பிறப்பிலேயே பசியாக இருந்தவனுக்கு
 கற்பக விருக்ஷம் கிடைத்தது போலவும் ,
நரகத்தில் இருப்பவனுக்கு  பகவானின் பரம பதம்
 கிடைத்தது போலவும்
 ராமரின்  தரிசனம் இருந்தது.
ராமரும் அவர் சகோதரர்களும்
 அனைவருக்கும் தர்சிக்கும் சுகம்
அளித்து அரண்மனைக்குள் சென்றனர்.
அழகின் சமுத்திரமாக இருக்கும்
நான்கு சகோதரர்களையும் பார்த்து அந்தப்புரத்தில் இருந்தவர்கள் மிகவும் மகிழ்ந்தனர்.
மாமியார்கள் மகிழ்ந்து ஆரத்தி எடுத்தனர்.
அழகின் சமுத்திரமாக விளங்கும் நான்கு சகோதரர்களையும்
பார்த்து  அந்தப்புரத்தில் உள்ள அனைவரும் மிக மகிழ்ச்சியுற்றனர்.
மாமியார்கள் மனதில் மகிழ்ச்சியுடன் ஆரத்தி எடுத்தனர்.
ஸ்ரீ ராமச்சந்திரரின் அழகைக் கண்டு
 அவர்கள் அன்பில் மூழ்கினர்.
மனதில் அன்பு அதிகரித்ததால்
 வெட்கம் ஓடிவிட்டது.
 அவர்களின் இயல்பான
அன்பை வர்ணிக்க இயலாது.

No comments: