Thursday, March 30, 2017

ராமசரித மானஸ்- அயோத்தியா காண்டம் -பக்கம் --3

ராமசரித மானஸ்-   அயோத்தியா காண்டம் -பக்கம் --3

   எல்லோருக்கும்  முதலில் அந்தப்புரத்தில் தகவல் தெரிவித்தோருக்கு அவர்கள் மிக ஆபரணங்களையும்
ஆடைகளையும் அன்பளிப்பாக அளித்தனர்.
 ராணிகள் மிகவும்   ஆனந்தமடைந்தனர்.
மனம் அன்பில் அப்படியே மூழ்கிவிட்டது.
அவர்கள் அனைவரும் மங்கள கலசம் அலங்கரிக்கத் தொடங்கினர். சுமித்திரை ரத்தினங்களால் பலவித மிகவும் அழகான  முற்றம் தயார் செய்தாள்.
 ராமரின் அன்னையான கௌசல்யா அந்தணர்களை அழைத்து அதிக தானங்கள் அளித்தார்.
அவர்கள் கிராம தேவதைகள், தேவிகள் , மற்றும் நாகதேவதைகள்  அனைவருக்கும்  பூஜை செய்தனர்.
பிறகு பலியும் அன்பளிப்பும் கொடுக்கச் சொன்னார்.
காரியம்  வெற்றி பெற்றபிறகு  பூஜை செய்யவும் வேண்டிக்கொண்டனர்.  ராமருக்கு நல்லது நடக்கும் வரமே அவர்களது வேண்டுகோள்.

 குயிலைப் போன்று இனிமையான  குரல் உள்ள  ,நிலவைப்போன்று அழகான முகமுள்ள, மான்குட்டியின் விழிகள் போன்று அழகான விழிகள் உள்ள  பெண்கள் மங்கலப் பாட்டுகள் பாடினர்.
ராமரின் பட்டாபிஷேகச் செய்திகள் கேட்டு ஆண்களும்
பெண்களும் மனதில் மிக  மகிழ்ச்சி அடைந்தனர்.
கடவுளின் அனுகூலத்தை  அறிந்து  எல்லா அழகான
மங்கள  அலங்காரம்  செய்தனர்.
  தசரதர்  வசிஷ்டரை அழைத்து ராமருக்கு தகுந்த அறிவுரைகளும்  உபதேசமும் செய்ய அனுப்பினார்.
குரு வந்த செய்தி அறிந்ததும்  ராமர்  நுழைவாயிலுக்கே
சென்று  பாதங்களில் வணங்கி  வரவேற்றார்.

          மரியாதையுடன் அர்க்க்யம் சமர்ப்பித்து ,
பதினாறுவகை உபசாரங்களால்  பூஜை செய்து குருவை
கௌரவித்தார். பிறகு சீதையுடன் நமஸ்காரம் செய்தார்.
  பிறகு தன் தாமரை  போன்ற கரங்களைக் கூப்பி ,
"சேவகனின் வீட்டிற்கு  சுவாமி எழுந்தருளுதல் மங்களங்களுக்கு மூலம் அமங்கலங்களுக்கு அழிவு.
இருந்தபோதிலும்   குருநாதா!  தாசனையே  அன்புடன்
செயல் புரிய  அழைக்க வேண்டும். இதுதான் நீதி.
ஆனால் நீங்கள்  இங்கே எழுந்தருளி அன்பு காட்டியதால்
இன்று இந்த வீடு பவித்திரமாகிவிட்டது.
இப்பொழுது ஆணையிடுங்கள். என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்கிறேன்.  உங்களுக்கு தொண்டு செய்வதால்
சேவகனுக்கே  லாபம் தான்.
இந்த பணிவான அன்பும் மரியாதையும் செய்யும் ராமரின் நடத்தையால்  குரு வசிஷ்டர் மிகவும் மகிழ்ந்தார். ராமரைப் புகழ்ந்து  சொன்னார் --நீங்கள் சூரிய குல பூஷணம்.
பிறகு சொன்னார் --அரசர் உங்களுக்கு பட்டாபிஷேகம்
செய்ய விரும்புகிறார். அவர் பட்டாபிஷேகத்திற்கு  ஏற்பாடு செய்திருக்கிறார். உங்களுக்கு யுவராஜ் பதவி கொடுக்க விரும்புகிறார்.

    ராமரே!  நீங்கள்  புலனடக்கத்துடன்   இருங்கள். கடவுள் இந்த விழாவை  வெற்றி அடையும்படி செய்யட்டும்.
குருஜி அறிவுரை வழங்கி  விட்டு   அரண்மனைக்குத் திரும்பினார்.  
ஸ்ரீ ராமருக்கு திடீர் என  இந்த விஷயத்தால் மன வருத்தம் ஏற்பட்டது.  
 நான்கு சகோதரர்களும் ஒன்றாகவே பிறந்தோம். வளர்ந்தோம்.  காதுகுத்துதல், உபநயனம் , விவாகம்
முதலியவை அனைத்தும் ஒன்றாகவே நடந்தன.
 
 இந்த  புனிதமான வம்சத்தில்  பெரியமகனுக்குத்தான் பட்டாபிஷேகம்  என்பது   சரியானதல்ல.
துளசி சொல்கிறார் ---ஸ்ரீ ராமச்சந்திரரின்  இந்த அழகுநிறைந்த   அன்புநிறைந்த வருத்தத்தால்  பக்தர்களுடைய மனதிலுள்ள சுயநலமும் தீய எண்ணமும் போகவேண்டும்.

      அதே  சமயம்   அன்பும் ஆனந்தமும் நிறைந்த  லக்ஷ்மணன்
வந்தார்.  ரகுகுலம் என்ற அல்லியை  மலரச் செய்கின்ற  ஸ்ரீ ராமச்சந்திரர்  அன்புடன்  லக்ஷ்மணனுக்கு மரியாதை செய்தார்.
  பலவித வாத்தியங்கள் இசைத்துக்கொண்டிருந்தனர்.
 நகரத்தின்  அதிசய  ஆனந்தத்தை வர்ணிக்க முடியாது.
எல்லோரும் பரதனின் வருகையைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அவரும் சீக்கிரம் வந்து பட்டாபிஷேக உற்சவத்தைக் கண்டு களிக்கட்டும்.  
   கடைத்தெரு , வழி, வீடு, தெரு, மேடைகள் அனைத்து இடங்களிலும் நாளை ராஜ்யாபிஷேகம் நேரம் எப்பொழுது வரும்?  கடவுள் நம் ஆசையை எப்பொழுது நிறைவேற்றுவார்.

சீதையுடன் ராமர் ஸ்வர்ண சிம்மாசனத்தில்  எழுந்தருளுவார் .நமது மன விருப்பம் பூர்த்தி அடையும்.
இங்கு எல்லோரும் நல்லதை நினைக்க , வேறொரு பக்கம் துர்தேவதைகள் ராஜ்யாபிஷேகத்தில் தடை ஏற்படுத்தும்
நிகழ்வைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அயோத்தியாவின் விழா பிடிக்கவில்லை.
திருடனுக்கு நிலவு வெளிச்சம் பிடிக்காததைப் போல.

சரஸ்வதியை அழைத்து  வேண்டினர்--எங்களுடைய பெரும் ஆபத்தை அறிந்து  ராமர் வனவாசம் செய்ய அருளுங்கள்.
அப்பொழுதுதான் தேவர்களுடைய எல்லா செயலும் வெற்றி அடையும்.

    தேவர்களின் வேண்டுகோள் கேட்டு சரஸ்வதி தேவி வருந்தினார். நான் தாமரைக்கண்  ராமருக்கு பனிக்கால இரவு ஆகிவிட்டேன். தேவியின் வருத்தம் அறிந்த தேவர்கள்
மீண்டும் வேண்டினர் --இதில் தங்களுக்கு எதுவும் தோஷமில்லை.
ரகுநாதருக்கு துன்பமும் இல்லை வருத்தமும் இல்லை.
நீங்கள் ஸ்ரீ ராமரின் எல்லா மஹிமையையும் அறிந்தவர்.
ஜீவன்  தன் வினையின் காரணமாக  சுகத்திற்கோ துன்பத்திற்கோ  பங்காளி ஆகிறான். ஆகையால் தேவர்களின் நன்மைக்காக நீங்கள் அயோத்தியா செல்லுங்கள்.  
அடிக்கடி    கால்களைப்பிடித்து  தேவர்கள் சரஸ்வதியை தயக்கமடையச் செய்துவிட்டார்கள்.  தேவி தேவர்களின் அறிவு  அறிவு மட்டமானது என்று நினைத்தாள்.
தேவர்கள் இருக்குமிடம் உயர்ந்தது. ஆனால் செயல்  தாழ்ந்தது.   இவர்களால் மற்றவர்களின்   ஐஸ்வரியங்களைப்
பார்க்க  பொறாமைப் படும் இயல்பினர்.
    ஆனால்   ராமர் வனவாசம்  செல்வதால்  அரக்கர்கள் அழிக்கப்படுவார்கள். வையகம் சுகமடையும்.   சிறந்த கவிஞர்கள்   காட்டுவாசிகளின் குணநலன்களை வர்ணிக்க
என்னை விரும்புவார்கள். இவ்வாறு நினைத்து சகிக்க முடியா துன்பம் தருகின்ற ஒரு  கிரஹநிலை   தசரதரின் நகருக்குள்
வந்தது போன்றே  சரஸ்வதி இதயத்தில் மகிழ்ச்சியுடன்
அயோத்தியாவில் நுழைந்தார்.
 மந்தரை கைகேயியின்  தாசி. அவள் மந்த புத்தியுள்ளவள்.
அவளின் புத்தியை மாற்றி இகழ்ச்சிக்கு பாத்திரமாக்கி
சரஸ்வதி தேவி சென்றுவிட்டாள். 
Post a Comment