Sunday, March 26, 2017

ராமசரிதமானஸ் -- அயோத்யா காண்டம் --பகுதி -1

ராமசரிதமானஸ் -- அயோத்யா காண்டம் --பக்கம் -1

ஹிமாச்சலனின் மகள் பார்வதியை மடியிலும்
தலையில் கங்கையும் ,
நெற்றியில் இரண்டாம் பிறை சந்திரனும் , 
 கழுத்தில் ஆலகால விஷமும் ,
மார்பில் நாகராஜன் சேஷனும் வீற்றிருக்கும்
   சிவபெருமான்
அழகாக இருக்கிறார் .
அவர்  விபூதி பூசி தேவர்களுக்கெல்லாம்
மேன்மையானவர்.
சர்வேஸ்வரர், தீயவர்களை நாசம் செய்பவர்,
 பக்தர்களின்
பாவங்களைப் போக்குபவர்.
எங்கும் வியாபித்திருப்பவர்,
நிலவைப்போன்று  வெண்மையானவர்.
அந்த சங்கரர் என்னைக் காக்கட்டும்.
 
ரகுகுலத்திற்கு ஆனந்தம் அளிப்பவரும் ,
திருமண நிலையில்
 சலனமும் மகிழ்ச்சியும்
வனவாச நிலையில்
  வருத்தமும் இல்லாதவருமான
சுகதுக்கங்களில்
சமமான பாவம் உடையவர்
எனக்கு எப்பொழுதும்
மங்களங்கள் அளிப்பவர்.
ஸ்ரீ ராமச்சந்திரர்.      ௧.

நீலத்தாமரை போன்ற  கருப்பும்
மென்மையான அங்கமும்
சீதையை   இடது பாகத்தில் 
வைத்திருப்பவரும்
கைகளில்கு றிதப்பாத அம்பும்  வில்லும்
ஏந்தியவருமான  
ஸ்ரீ ராமச்சந்திரரை
வணங்குகிறேன்.

அறம்,பொருள் ,இன்பம், வீடு நான்கும்
 கொடுக்கின்ற
ஸ்ரீ ராமச்சந்திரரின் புகழை

ஸ்ரீ குருவின்  சரணகமலங்களின் 
தூசியால் என் மனம் என்ற கண்ணாடியை
சுத்தம் செய்து,   வர்ணிக்கிறேன்.

No comments: