Wednesday, February 8, 2017

रामचरित मानस --बालखांड-ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்திநான்கு

  रामचरित मानस --बालखांड-
ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்திநான்கு
                                      
ராமரின் சொல்லைக்கேட்டு  
பரசுராமர் கோபத்துடன்
     சொன்னார் ---
"அரசே! சிவதனுஷை உடைத்தவன்
உங்கள் தாசனே ஆவான்.
என்னிடம் ஏன் சொல்லவில்லை.
சேவை செய்பவன் தான் சேவகன்.
எதிரியின் வேலையைச்
செய்தால்,
சண்டைதான் போடவேண்டும்.
இந்த சிவதனுஷை முறித்தவன் ,
சஹஸ்ரபாஹுவைப் போன்று என் விரோதிதான்.
அவன் இந்த சமுதாயத்தை விட்டுவிட்டு
 தனியாக இருக்கவேண்டும்.
இல்லை எனில் அனைத்து அரசர்களும்
கொல்லப்படுவார்கள்.
முனி இவ்வாறு சொல்வதைக் கேட்டு ,
லக்ஷ்மணன் புன்முறுவல் பூத்து ,
பரசுராமரை அவமத்தித்துச் சொன்னான்--
" கோசாயீ!குழந்தைப்பருவத்திலேயே
நாங்கள் பல  விளையாட்டு வில்லுகளை உடைத்துவிட்டோம்.
ஆனால் நீங்கள் இவ்வாறு கோபிக்கவில்லை. 
இந்த வில்லின் மேல் இவ்வளவு அன்பு ஏன்?
இதைக் கேட்டு  பரசுராமர்  சொன்னார் ---
அடே !அரசகுமாரா!
நீ எமனின் வசத்தில் இருப்பதால் ,
நீ சுய அறிவின்றி பேசுகிறாய்.
உலகப்  புகழ்பெற்ற  சிவனின் இந்த வில்
விளையாட்டு வில் போன்றதா ?

லக்ஷ்மணன் சிரித்துவிட்டு சொன்னார்--தேவே!
நாங்கள் அறிந்தமட்டும் எல்லா வில்லும் ஒன்றே!
பழைய வில்லை உடைப்பதால் ,
என்ன  லாபம் ?ஸ்ரீ ராமர் இதை நவீனமான வில் என்றே பார்த்தார் . ஆனால் இது ராமர்
 தொட்டதுமே உடைந்துவிட்டது.
இதில்  ராமரின் தவறு  எதுவும் இல்லை.
முனிவரே! நீங்கள் காரணமின்றி ஏன்
கோபமடைகிறீர்கள் ?
பரசுராமர் தன்  கையிலுள்ள
 கோடரியைப்  பார்த்துவிட்டு ,
அடே! துஷ்டா!உனக்கு என் குணம் தெரியாதா ?
நான் உன்னை பாலகன் என்றறிந்து,
கொல்லாமல் இருக்கிறேன். அடே முட்டாளே!
நீ என்னை ஒன்றுமறியாத முனிவர் என்றா நினைத்தாய் ?
நான் பாலபிரம்மச்சாரி !
மிகவும்  கோபமுள்ளவன் .
நான் க்ஷத்திரிய குல விரோதி என்று
உலகப் புகழ் பெற்றவன்.
என் புஜ பலத்தால்  புவியில்
அரசர்களே இல்லாமல் செய்துவிட்டேன்.
அந்த ராஜ்யங்களை பிராமணர்களுக்கு
 கொடுத்துவிட்டேன்.
அரசகுமாரா!சஹஸ்ரபாஹுவின்  புஜங்களை
வெட்டுகின்ற இந்த கோடரியைப் பார்.
அடே!ராஜகுமாரா!என்னுடைய
இந்த கோடரி  பயங்கரமானது.
இது  கர்பத்தில் உள்ள சிசுவையும்
கொல்லும்  சக்திவாய்ந்தது.
லக்ஷ்மணன் சிரித்து மென்மையான
குரலில் சொன்னார் ---
"நீங்கள் உங்களை பெரிய போர்வீரர்
 என நினைக்கிறீர்கள்.
அடிக்கடி கோடரியைக் காட்டுகிறீர்கள்.
வாயில் ஊதி மலையை
பறக்கவைக்க  நினைக்கிறீர்கள்.
இங்கு யாரும் பூசணிக்காய் கிடையாது.
ஆள்காட்டி விரல் காட்டியதும் ,
இறந்துவிடுகிறது.
கோடரியும் அம்பும்வில்லும் பார்த்து
நான் சற்று அபிமானத்துடன் சொன்னேன்.
 நீங்கள் பிருகு முனிவர் வம்சத்தைச் சேர்ந்தவர் ,
மற்றும் பூணூல் அணிந்துள்ளீர்கள்.
இதை எல்லாம் நான் பார்த்து என் கோபத்தை
அடக்கிக்கொண்டு பொறுத்துக்கொள்கிறேன்.
எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் ,
தேவதைகள், பிராமணர்கள் ,பகவானின் பக்தர்கள்,
பசுமாடுகள் ஆகியவர்களிடம் தன்
வீரத்தைக் காட்டமாட்டார்கள்.
ஏனென்றால் இவர்களைக் கொல்லுவதால்,
பாவம் ஏற்படுகிறது.
இவர்களிடம் தோற்றால்  இழுக்கு ஏற்படுகிறது.
ஆகையால் நீங்கள் அடித்தாலும்
உங்கள் காலில் விழவேண்டும் .
உங்களின் ஒவ்வொரு சொல்லும் கோடி இடிக்கு சமம்.
வில்லும் அம்பும் நீங்கள் வைத்திருப்பது வீண்தான்.
உங்கள் கையில் கோடரியும்
அம்பு-வில்லும் பார்த்து
ஏதாவது தவறாகச் சொல்லிருந்தால் ,
என்னை மன்னித்துவிடுங்கள்.

இதைக்கேட்டதும்  பிருகு முனியின்
வம்சத்தைச் சேர்ந்த பரசுராமர் கோபத்துடன்
கம்பீரமான குரலில்  சொன்னார் ---
"விஸ்வாமித்திரரே  கேளுங்கள் ! இந்தபாலகன்
கெடுமதி உடையவன் . கபடன்.
காலத்தின் வசத்தால் , இவன் தன்
 குலத்தின்  துரோகி. இவன் சூரிய வம்சம் என்ற
முழுநிலவின்  களங்கம் . இவன் முற்றிலும் முட்டாள்,
அச்சமற்றவன். அடங்காதவன் .
இப்பொழுது ஒரே நொடியில் எமனுக்கு
 கவளமாகிவிடுவான்.
நான் உங்களை அழைத்துச் சொல்கிறேன் .
என் மேல் குறை சொல்லாதீர்கள்.
 இவனைக் காப்பாற்ற   விரும்பினால் ,
என்னுடைய பெருமை ,பலம் ,கோபம் ஆகியவற்றை
சொல்லி தடுத்துவிடுங்கள்.
 உடனே ,லக்ஷ்மணன் ,
முனிவரே!உங்கள் நற்புகழை
உங்களைத்தவிர , மற்றவர்கள் எப்படி ,
யார்  வர்ணிக்க  முடியும்?
நீங்கள் உங்கள் செயல்களை ,
தங்கள் வாயாலேயே பலமுறை பலவிதமாக
வர்ணனை செய்திருக்கிறீர்கள் .
உங்களுக்கு திருப்தி  இல்லை  என்றால் ,
மீண்டும் ஏதாவது சொல்லுங்கள்.
நீங்கள் வீரத்தின் விரதம் செய்பவர்.
தைரியவான்.அமைதியானவர்.
 திட்டுவது அழகாகாது.
சூரவீரரர்கள் போர்க்களத்தில்
போர் புரிவார்கள்.
தன் புகழைப் புகழ்ந்து கொண்டு
இருக்கமாட்டார்கள்.
விரோதியை போர்க்களத்தில்  பார்த்து
கோழைகள் தான் தன் பெருமையை
தற்புகழ்ச்சி செய்து கொண்டிருப்பார்கள் .
நீங்கள் காலனை  உரக்க எனக்காக அழைக்கிறீர்கள்.
லக்ஷ்மணனின் சொற்களைக் கேட்டதுமே,
பரசுராமர், தன் பயங்கரமான கோடரியை கையில் எடுத்துக்கொண்டார்.
பிறகு சொன்னார் --
"நீங்கள் என்னை குறை சொல்லாதீர்கள்.
இந்த கசப்பான வார்த்தைகள் பேசும்
பாலகன் கொல்லத்தகுதியானவன்.
இவனை பாலகன் என்று
 நினைத்து மிகவும் காப்பாற்றினேன்.
ஆனால் இவன் உண்மையிலேயே
சாவதற்கு வந்துவிட்டான்.
அப்பொழுது விஷ்வாமித்திரர் சொன்னார்---
குற்றத்தை மன்னித்துவிடுங்கள்.
பாலகனின் குற்றத்தை குணத்தை ,
சாதுக்கள் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
பரசுராமர்  சொன்னார் --இந்த கூர்மையான
கோடரி ,நான் இரக்கமற்றவன்.
கோபக்காரன். இவன் குரு துரோகி.
எனக்கு முன் இவன் குற்றவாளி .
எனக்கு பதில் பேசுகிறான்.
விஸ்வாமித்திரரே!
உங்களுக்காக இவனை உயிருடன் விடுகிறேன்.
உங்களின் மேல் உள்ள என் அன்பு தடுத்துக்கொண்டிருக்கிறது.
இல்லை என்றால் இவனை கோடரியால் வெட்டி ,
என் குருவின் கடனிலிருந்து விடுபட்டுவிடுவேன்.

விஸ்வாமித்திரர் மனதில் நினைத்தார் --
இவர் எல்லா இடத்திலும் வெற்றி  பெற்றதால்
ஸ்ரீ ராமரையும் லக்ஷ்மணனையும்
சாதாரண க்ஷத்ரியனாக நினைக்கிறார்.
ஆனால் இவர்கள் இரும்பினால்  செய்த
வாள் போன்றவர்கள்.
கரும்புத் துண்டு கிடையாது.
பரசுராமர் இன்னும்
 புரியாதவராக இருக்கிறார்.
இவர்களின் மகிமையை
அறியாதவராக இருக்கிறார்.

லக்ஷ்மணன் மீண்டும் சொல்கிறார் :--
ரிஷி அவர்களே !உங்கள் ஒழுக்கத்தைப்
பற்றி தெரியாதவர்கள்  உண்டா ?
நீங்கள் உலகப் புகழ் பெற்றவர்.
நீங்கள் பெற்றோர்களின் கடனை
 நன்றாக முடித்துள்ளீர்கள்.
இப்பொழுது குருவின் கடன் உள்ளது.
மனதில் மிகவும் கவலையாக உள்ளது. அந்தகடன் தீர்ப்பது எங்கள் தலையில் சுமத்தியுள்ளார்
நீண்ட நாட்கள் முடிந்துவிட்டன.
அதனால் வட்டியும் அதிகரித்திருக்கும்.
இப்பொழுது கணக்கரை
அழைத்தால் உடனே பையிலிருந்து எடுத்துக் கொடுத்துவிடுவேன்.
லக்ஷ்மணனின் கசப்பான வார்த்தைகளைக்கேட்டு
பரசுராமர் தன கோடரியை எடுத்தார்.
சபையில் உள்ளோர் அபயக்குரல் எழுப்பினர்.
லக்ஷ்மணன் சொன்னான் --நீங்கள்
அந்தணர் என்பதால் பேசாமல் இருக்கிறேன்.
உங்களுக்கு இன்றுவரை போரின்
 மஹாவீரர்கள் கிடைக்கவில்லை.
பிராமண தேவரீர்!
நீங்கள் வீட்டில் தான் பெரியவர்.
இதைக்கேட்டு அனைவரும்
இப்படி சொல்வது சரியில்லை என்று
 எல்லோரும் சொன்னார்கள்.
அப்பொழுது ஸ்ரீ ராமர் தம்பியைத் தடுத்தார்.
அவர் சொன்னார்--தலைவரே!
பாலகன் மேல் தயை காட்டுங்கள்.
இந்த எளிய பால்முகம் மாறா
 இந்த சிறுவனின்  கோபப்படாதீர்கள்.
இவன் உங்களுடைய மகிமையை அறியாதவன்.
இவன் எப்படி உங்களுக்கு சமமானவன் ஆவான்?.
பாலகன் சஞ்சலமானவனாக  இருந்தால்,
குரு,பெற்றோர்கள் மனதில் ஆனந்தப்படுவார்கள்.
அதனால் இவனை சின்ன குழந்தைஎன்றும்
தங்கள் சேவகன்  என்றும் கிருபை காட்டுங்கள்.
நீங்கள் எல்லோரையும் சமமாகக் கருதுபவர்.
நல்லொழுக்கம்  உடையவர், ஞானி. முனிவர்.
ராமரின் பேச்சால் பரசுராமர் கோபம் தணிந்தது.
மனம் குளிர்ந்தது. இதற்குள்
லக்ஷ்மணன் சிரித்துவிட்டான்.
சிரித்ததுமே உச்சிமுதல் பாதம் வரை
கோபம் கொப்பளித்தது.
ராமா! உன்னுடைய தம்பி ,பெரிய பாவி.
இவன் உடல் வெள்ளை. ஆனால் மனம் கருப்பு.
இவன் விஷ முகம் உடையவன்.
பால்முகம் கிடையாது.
குணம் சரிகிடையாது.
உங்களை பின்பற்றுவதில்லை .
இவன் மிகவும் நீசன்,என்னை
 எமன்போன்று பார்க்கவில்லை.
லக்ஷ்மணன் சிரித்துவிட்டு சொன்னான்---
முனிவரே!கோபம்  பாவத்திற்கு ஆணிவேர்!
கோபத்தின் காரணமாக தகுதி அற்ற
செயல்  செய்துவிடுகிறார்கள்.
உலகம் முழுவதற்கும்
தீமையைச் செய்துவிடுகிறார்கள்.
முனிவரே! நான் உங்களுக்கு அடிமை.
இப்பொழுது கோபத்தை விட்டுவிட்டு ,
இரக்கம் காட்டுங்கள்.
உடைந்த வில் கோபத்தால்
ஒட்டாது. நின்றுகொண்டிருந்தால்
கால் வலிக்கும். அமருங்கள்.
இந்த வில் மிகவும் உங்களுக்குப்
பிரியமானால், ஒரு நல்ல தொழிலாளியை அழைத்து
சரிசெய்யுங்கள்.
லக்ஷ்மணன் பேசுவதைக்கேட்டு ,
ஜனகர் பயந்து , பேசாமல் இரு என்றார்.
இப்படி முறையற்றுப் பேசாதீர்கள்.
ஜனகபுரியில் உள்ள
 ஆண்களும் பெண்களும் நடுங்கினர்.
மனதில் இந்த சின்ன ராஜகுமாரன்
சரியில்லை என்றனர்.
லக்ஷ்மணனின் அச்சமற்ற வார்த்தைகளால்,
பரசுராமருக்கு, கோபம் அதிகரித்தது.ஆனால்
அவரின் பலம் குறைந்து கொண்டிருந்தது,

ராமரிடம் நன்றியுணர்வுடன்  பரசுராமர் சொன்னார் --
"உங்கள் தம்பி என்பதால் இவன் உயிருடன் இருக்கிறான்.
இவன் உடலழகன்.ஆனால் மனம் அழுக்கானது.
இவன் விஷம்  நிறைந்த தங்கக் குடம்.
இதைக்கேட்டதும் லக்ஷ்மணன் மீண்டும் சிரித்தார்.
அப்பொழுது ஸ்ரீ ராமர் ஓரக்கண்ணால்
அவனைப் பார்த்தார்.
லக்ஷ்மணன் எதிர்த்துப் பேசாமல்
குருவிடம் சென்றுவிட்டான்.
ஸ்ரீ ராமர் இருகரம் கூப்பி மிகவும் பணிவுடன்
மென்மையான  ,சாந்தமான சொற்களைப்  பயன்படுத்தினார்.
தலைவரே!நீங்கள் குணத்தால் நல்லவர்.
நீங்கள் பாலகனின் பேச்சை
 கேட்காததுபோல் இருங்கள்.
உயர்ந்த குரலில் பேசுவது
 பாலகனின்  இயற்கை குணம்.
நல்லவர்கள் குறை ஒன்றும்
 சொல்லமாட்டார்கள்.
லக்ஷ்மணன் எதுவும் தவறு செய்யவில்லை.
தவறு செய்தது நான் தான்.
ஆகையால் கோபம் ,வதம் கட்டுதல் எதிருந்தாலும்
எனக்குக் கொடுங்கள். உங்கள் கோபம் எதனால்
 விரைவில்  தணியுமோ ,
அதை என்னிடம் தணித்துக்கொள்ளுங்கள் .

Post a Comment