Monday, February 6, 2017

रामचरित मानस --துளசிதாஸ் -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தொன்று


रामचरित मानस --
துளசிதாஸ் -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தொன்று

சீதையின் தாயார் ஸ்ரீ ராமரை வாத்சல்யத்துடன்(தாய்ப்பாசத்துடன் }
பார்த்துவிட்டு,
அன்புடன் அழுதுகொண்டே
 தோழிகளை அருகில் அழைத்து
சொன்னாள்---
அவர்கள் நமக்கு நன்மைக்காகத்தான் என்று
சொல்கிறார்கள்.
சொல்பவர்களும்  வேடிக்கைதான்  பார்க்கிறார்கள்.
ராமர் பாலகர்.
 ராவணன் போன்ற உலகை வென்றவர்களாலும்
 இந்த வில்லை தொட்டு அசைக்கக் கூட முடியவில்லை.
 அவ்வாறிருக்க ராமரை மேன்மையானவரை
வில் உடைக்க அனுப்பவேண்டாம் என்று
ஒருவரும்
விஷ்வாமித்திரரிடம் சொல்லவில்லை.
புரியவைக்கவும் இல்லை.

ராவணன் மற்றும் பானாசூர்,
 அந்த வில்லை தொடக்கூட இல்லை.
எல்லா அகங்கார அரசர்களும் தோற்றுவிட்டனர்.
அதே வில்லை இந்த பாலகன் கையில் கொடுத்துள்ளனர்.
அன்னத்தின் குஞ்சு
மந்திராச்சல மலையைத்
தூக்கமுடியுமா ?
அரசராவது ரிஷியிடம்
இந்த வில்லின் தன்மையைச் சொல்லவேண்டும்.
பகவானின் திருவிளையாடல்
ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது ஒரு தோழி ராணிக்கு
ஆறுதல் சொன்னாள்---
"அதிக புத்திசாலிகள் வீரமுள்ளவர்கள் ஆகியோர்
சிறியோராய்  உருவத்தில் வயதில் இருந்தாலும்,
அவர்களின் ஆற்றலை
குறைவாக மதிக்கக் கூடாது.
அகஸ்த்தியர் பானையிலிருந்து தோன்றியவர்.
கடல் மிகப்பெரியது. ஆனால்
அகஸ்த்தியர்  கடலை வற்றச் செய்துவிட்டார்.
அவர் செய்த செயலின் புகழ்
 வையகம்முழுவதும்
பரவி உள்ளது.
சூரியமண்டலம் பார்க்க மிகவும் சிறியது. ஆனால்
 அது உதயமானதும் மூவுலகத்தின்  இருளையும் போக்குகிறது.
எல்லா தெய்வங்களையும் ,
சிவன் ,விஷ்ணு ,பிரம்மா  ஆகியோரை
வசத்தில் கொண்டுவர
நாம்  சொல்லும்  மந்திரமும் சிறியது தான்.
மிகப்பெரிய மதம் பிடித்த  யானையை
சிறிய அங்குசம் தான்  வயப்படுத்துகிறது.
காமதேவன் மென்மையான பூக்களை
வில் அம்பாக்கி உலகையே  ஆட்டிப் படைக்கிறான்.
இப்பொழுது சிந்தியுங்கள்!
ராமர்  கட்டாயம் வில்லை உடைப்பார்.
தோழியின் சொல்  கேட்டு ,
 ராணிக்கு நம்பிக்கை வந்துவிட்டது.
அவருடைய வருத்தம் போய்விட்டது.
ராமரின் பொருட்டு அவர் அன்பு அதிகரித்துவிட்டது .
அப்பொழுது சீதை பயந்து தேவர்களிடம்
தேவதைகளிடம் பிரார்த்தனை
செய்து கொண்டிருந்தாள் .
தேவி  பவானி!
 என்னுடைய சேவைக்கு மகிழ்ந்து
என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
என் மேல் இரக்கப்பட்டு வில்லின்
சுமையை குறைத்துவிடுங்கள்.
சீதையின் கண்களில் இருந்து
ஆனந்தக்கண்ணீர் வந்து கொண்டிருந்தது,
மெய்  சிலிர்த்துக்கொண்டிருந்தது.
ஸ்ரீ ராமரைப்பார்த்து  சீதைக்குத் தைரியம் வந்தது.
சீதைக்கு அப்பாவின்  பிரதிக்ஞையை
 நினைத்து கோபம் கோபமாக வந்தது.
ஐயோ! அப்பாவின் பிடிவாதம்  மிகவும் கடினமானது.
அவர்கள் லாபம்-நஷ்டம் எதுவும்
அறியாமல் இருக்கிறார்.
அங்கு அமைச்சர்கள்,பண்டிதர்கள்  அனைவரும்
எல்லோருமே  இந்த மென்மையான உடலுடைய பாலகன்
வஜ்ரத்தை விட மிக கடினமான வில்லை எப்படி உடைக்கப்போகிறார்கள்  என்று
அஞ்சிக்கொண்டிருந்தனர்.
சீதை  மனதில் மிக வேதனை அடைந்தாள்.
பகவானே!நான் எப்படி தைரியமாக இருப்பேன்.
பூவின் காம்பால் வைரத்தை துளைக்க முடியுமா ?
இங்குள்ள சபையில் உள்ளவர்களுக்கு அறிவு பயித்தியமாகிவிட்டது.
ஆகையால்  சிவதனுஷே!
நீதான் எனக்கு உதவி செய்யவேண்டும்.
நீ ராமரைப் பார்த்து மிக மென்மையாகிவிடு.
ஸ்ரீ ராமரைப்பார்த்து,
 பூமியைப் பார்த்த  சீதையின் கண்கள்
சந்திரமண்டலக் குழுவில் இரண்டு மீன்கள் விளையாடிக்கொண்டிருந்ததுபோல் இருந்தன.
சீதையின் குரல்  என்ற  வண்டை,
 வாய்  என்ற தாமரை
தடுத்து பேசாமல் இருக்க வைத்துவிட்டது.
வெட்கம் என்ற இரவைப்பார்த்து
அது வெளிப்படவில்லை.
கண்களின் கண்ணீர்
 கஞ்சனின் தங்கம் போல்
 மூலையில் பதிந்து கிடந்தது.
மிகவும் பதிந்துள்ள கண்ணீர் ,
கவலை  அனைத்தையும் மறந்து
  சீதை தைரியத்தை வரவழைத்து  ,
என்னுடைய பிரதிக்ஞை உண்மை என்றால்,
ராமரின் சரணகமலங்களில்
என்மனது உண்மையிலேயே
பற்று இருந்தால்,
உடல்.மனம் ,சொல் மூன்றுமே
ராமரையே நினைப்பது
உண்மையானால் ,
எல்லோருடைய இதயத்தில்
வசிக்கின்ற பகவான் ரகுநாதருக்கு
  என்னை ராமருக்கு மனைவி ஆக்கிவிடும்.

உண்மையான அன்பு  இருந்தால்
 அது நிச்சயம் கிடைத்துவிடும்.
இதில் சிறிதளவும் ஐயம் இல்லை.
இறுதில் சீதை ராமரைப்பார்த்து ,
இந்த உடல் ராமருக்காக இருக்கும்.
இல்லையென்றால்
இருக்காது என்று உறுதி மொழி எடுத்தாள்.
கிருபையின் நிதியான ராமர் அனைத்தும் அறிந்துகொண்டார்.

ராமர் சீதையைப்பார்த்துவிட்டு ,
வில்லைப் பார்த்தபார்வை
 பாம்பைப் பார்த்த கருட பார்வை.
ராமரின் வில்லை நோக்கிய பார்வையை ,
லக்ஷ்மணன்  பார்த்ததுமே,
அவர் ஆமை,சேஷன்,வராஹர் ஆகிய அனைத்துக்கும்
ராமர் வில்லைப் பார்த்துவிட்டார்.
முறிக்கப்போகிறார்.
பூமியை அசையாமல் பார்த்துக்கொள்ளுங்கள்  என்று
எச்சரிக்கைவிடுத்தார்.

ராமர் வில்லுக்கு அருகில் சென்றதுமே ,
ஆண்கள்,பெண்கள், அனைவரும் தேவர்களையும்,
புண்ணிய ஆத்மாக்களையும் வேண்டினர்.
அனைவரும் சந்தேகங்கள்,
அறியாமை, தாழ்ந்த அரசர்களின் ஆணவம் ,
 பரசுராமரின் கர்வத்தின் மேன்மை,
தேவர்கள் மேலும் மகான் ரிஷிகளுடைய பயம் ,
சீதையின் கவலை,
ஜனகரின் வருத்தம்,
ராணிகளின் துன்பம் என்ற காட்டுத்தீ,
இவை எல்லாமே,
சிவனின் வில் என்ற கப்பலைப்பெற்று
கூட்டாமாக அதில் ஏறினர்.
ராமரின் புஜ பலத்தைக்கொண்டு
 கடக்க விரும்புகின்றனர்.
ஆனால் கப்பலோட்டி யாரும் இல்லை.

Post a Comment