Tuesday, February 14, 2017

ராமசரித மானஸ் --பாலகாண்டம் -பகுதி எழுபத்தேழு

 ராமசரித மானஸ் --பாலகாண்டம் -பகுதி  எழுபத்தேழு

               ஜனகரின் தூதர்கள் ஸ்ரீ ராமச்சந்திரரின் பவித்திர நகரமான   அயோத்தியாவை அடைந்தனர். அழகான நகரைப் பார்த்து மகிழ்ந்தனர். அரண்மனை நுழைவாயில் சென்று தாங்கள் வந்த செய்தியை அனுப்பினர், அரசர் கேட்டு உடனே அவரை அழைத்துவரச் சொன்னார்.
          தூதர்கள் வணங்கி கடிதத்தைக்  கொடுத்தனர்.
மகிழ்ச்சி அடைந்து அரசர் கடிதத்தைத் தாமே வாங்கினார்.
கடிதத்தைப் பிரிக்கும் போதே அவர்களில் அன்பும் ஆனந்தக்கண்ணீரும் பெருக்கெடுத்தன.
உடல் மகிழ்ந்தது.
 உள்ளம் மகிழ்ச்சியால் குதுகூலம் அடைந்தது.
இதயத்தில் ராமர் -லக்ஷ்மணர் இருவரும் .
கையில் அழகான கடிதம் ,  இனிப்பு -புளிப்பாக எதுவும் சொல்லமுடியவில்லை. பிறகு தைரியத்தை வரவழைத்து
தைரியமாக கடிதத்தைப் படித்தார். அந்த செய்தி கேட்டு அரசவையில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர்.
கடிதம் மூலம் வந்த செய்தி அறிந்து  பரதனும். சத்துருக்கனனும்  மகிழ்ந்தனர்,
 விளையாடிக்கொண்டிருந்த பரதனும் லக்ஷ்மணரும்  அங்கே வந்தனர்.
 அப்பாவிடம் , "கடிதம் எங்கிருந்துவந்துள்ளது?இரண்டு சகோதரர்களும் நலமா ?எந்த நாட்டில் உள்ளனர்?
 இந்த அன்புநிறைந்த வினாக்களைக் கேட்டு
தசரதர் மீண்டும் ஒருமுறை கடிதத்தைப் படித்தார்.
   இதைக்கேட்டு பரதனின் அளவில்லா மகிழ்ச்சியால்

சபையே மிக ஆனந்தமடைந்தது .

  அரசர் ராஜதூதர்களை அருகில் அமரவைத்து ,
" சொல்லுங்கள் ! இரண்டு குழந்தைகளும் நலமா ?
நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்த்தீர்களா ?
அவர்களில் ஒருவர் கருப்பு , மற்றவர் சிவப்பு.
தனுஷும் வில்லும் கையில் வைத்திருப்பார்கள்.
அம்பராத்தூண் முதகில் இருக்கும்.
முனி விஷ்வாமித்தரருடன் சென்றனர்.
நீங்கள் அவர்களை அறிந்திருந்தால் சொல்லுங்கள்.
அவர்கள் சென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு
இன்றுதான்  நல்ல செய்தி கொண்டுவந்திருக்கிறீர்கள்.
மகாராஜா ஜனகருக்கு  அவர்களுடைய அறிமுகம் எப்படி ?
யாரால் நடந்தது. ?
ஜனகர் அவர்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்?

ஜனகரின் இந்த அன்பான விசாரணையால் ,
தூதர்கள் மகிழ்ந்து    , அரசர்களின்   மகுடமணியே! உங்களுடைய புத்திரர்கள் இருவரும் உலகின் ஆபூஷன்கள்.
ராம-லக்ஷ்மணனைப்போல  புத்திரர்களைப் பெற்றதால்,
நீங்கள் பாக்யவான் . உங்களுடைய பையன்கள் ஆண் சிங்கங்கள். மூவுலகிலும் பிரகாஷிப்பவர்கள்.
அவர்களின் புகழுக்கு முன் நிலவி
மங்கிகாணப் படுகிறது.
அவர்களின் திறமை ,மகிமைக்கு முன்னாள் சூரியன் குளிர்ந்து    தோன்றுகிறது .
அரசே !அவர்களை எப்படி அறிந்தீர்கள் ?
என்று வினவுகிறீர்கள்.
சூரியனை விளக்குவைத்தா பார்ப்பார்கள் ?
சீதையின்  சுயம் வரத்திற்கு அநேக அரசர்களும் ,
ஒருவரைவிட ஒருவர்  சிறந்த வீரர்களும் வந்திருந்தனர்.

ஆனால் யாராலும் சிவதனுஷை
நகற்றக்கூடமுடியவில்லை.
அதிக பலமுள்ள வீரர்களும் தோற்றுவிட்டனர்.
மூவுலகத்திலும் , வீரத்திற்குப் புகழ்பெற்ற அகங்காரிகளும் ,
சிவதனுஷின் சக்திக்கு முன் தோற்றுவிட்டனர்.

     சுமேரு மலையையே தூக்கும் சக்திகொண்ட ,
பானாசூரனும் தோற்று வில்லை சுற்றிவந்தான்.
விளையாட்டாக கைலாசத்தையே தூக்கிய ,
ராவணனும் தொல்வியடைந்துவிட்டான்.

ஆனால் மகாராஜா! தங்கள் ரகுவம்ச சிரோமணி ராமச்சந்திரன்  முயற்சியே இன்றி  ,
யானை தாமரைதண்டை முறிப்பதுபோல்
சிவனின் வில்லை
 முறித்தே விட்டான்.
வில்லை முறித்த செய்தி கேட்டு
பரசுராமர் அதிக கோபத்துடன் வந்தார்.
பல விதத்தில்  தன்  கோபத்தை வெளியிட்டார்.
இறுதியில் ராமரின் வலிமை அறிந்து தன்
வில்லையே ராமருக்கு அளித்துவிட்டார்.
 உங்கள் இரண்டு பாலகர்களையும்  பார்த்த பிறகு ,
பார்த்தவர்கள் கண்களை  இமைக்கவில்லை.

அன்பும் ,பெருமையும் வீரமும் உள்ள புதல்வர்களின்
 ஆற்றலைக்கேட்டு  எல்லோருக்கும்
 மிகவும்  மகிழ்ச்சியாக இருந்தது.
தூதர்களை அனுப்பும்  மரியாதைகண்டு
தூதர்கள்  இது நீதிக்குப் புறம்பானது.
என்ற தர்மமான பேச்சைக் கேட்டு
எல்லோரும் மகிழ்ந்தனர்.
 பின்னர் அரசர் வசிஷ்டரைப் பார்த்து
அந்த கடிதத்தைக் கொடுத்தார்.
மரியாதையுடன்  சொன்னார்
 எல்லா செய்தியும்  சொன்னார்.
எல்லா கதையையும் கேட்டு குரு சொன்னார் --"புண்ணியாத்மாக்களுக்கு
 பூமி சுகம் நிறைந்து காணப்படுகிறது.
நதிகள் சமுத்திரத்தை நோக்கி ஓடுகிறது.
ஆனால்  சமுத்திரத்திற்கு , நதியின் மேல் எந்த ஆசையும் இல்லை.
 அப்படியே   தர்மாத்மாக்களுக்கு  புகழும் செல்வமும்   இயற்கையாகத்  தானாகவே வந்துவிடும் .
 நீ எப்படி குரு , அந்தணர்கள், பசுக்கள் மற்றும் தேவதைகளுக்குச் சேவை  செய்கிறாயோ ,
அப்படியே கௌசல்யா தேவியும்   சேவை செய்கிறார்.

உன்னைப்போன்ற   புண்ணிய  ஆத்மாக்கள் இருந்ததில்லை ;
இப்பொழுது இல்லை , எதிர்காலத்திலும்  இருக்கமாட்டார்கள்.  ராமனைப் போன்ற மகனைப்பெற்ற புண்ணிய ஆத்மா தங்களைத்தவிர வேறு யார் இருக்கிறார்கள் ?
உங்களுடைய  நான்கு பாலகர்களும் வீரர்கள் ,
குண முள்ளவர்கள், பணிவானவர்கள் , தர்மத்தை விரதமாகக்
கொண்டவர்கள்,குணக்கடல். உனக்கு எல்லா காலங்களிலும்
நன்மை அளிப்பவர்கள். அதனால் இப்பொழுது மாப்பிள்ளை ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய். சீக்கிரமாகச் செல்.
 குருவின் வார்தகளைக்கேட்டு  வணங்கி அப்படியே ஆகட்டும் என்றார்.
  அந்தப்புரம் சென்று ராணிகளுக்கு ஜனகரின்  கடிதச்செய்தியை அரசர் சொன்னார் .
ராணி கள்   மயில்கள்  கருமேகம் கண்டு  ,
மேக கர்ஜனை  கேட்டு மகிழ்வதுபோல்  மகிழ்ந்தனர்.
வயனா பெண்கள் ஆசிகள் வழங்கினர்.
 
Post a Comment