Monday, February 13, 2017

राचारित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தாறு

राचारित मानस -ராமசரித மானஸ்-பாலகாண்டம் -எழுபத்தாறு

  நகரங்களை அலங்கரிக்க  நீலமணியை எடுத்து அழகான மா இலைகள் செய்யப்பட்டன. தங்கத்திலேயே மாம்பூக்கள்,

பட்டுக்கயிற்றினால் கட்டப்பட்ட
விலைஉயர்ந்த கற்களால் செய்யப்பட்ட
பழக்கொத்துக்கள்,அழகான தோரணங்கள் ,
காமதேவனின் வலைகள் அலங்கரிக்கப்பட்டது   போல் இருந்தது. அநேக மங்கள கலசங்கள், அழகான கொடிகள்,
பதாகைகள், திரைச்சீலைகள், சாமரங்கள் இவை எல்லாமே
மிக கலை நுணுக்கத்துடன் செய்யப்பட்டன,
  மணி விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட  மண்டபம் மிக
அதிசயமாக இருந்தது. அந்த மண்டபத்தில் மணமகள் சீதை .
வர்ணிக்கின்ற அளவிற்கு ஞானம் கவிஞர்களுக்கு இல்லை.
அதே மண்டபத்தில் குணக் கடலான ஸ்ரீ ராமச்சன்திரர் மணமகன் . அப்படிப்பட்ட மண்டபம் மூவுலகங்களிலும்
புகழ்  பெற்றதாகத்தான் இருக்கவேண்டும்.
ஜனகரின் அரண்மனைக்கு இணையாக அழாகாக ஒவ்வொருவீடும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ஜனகபுரியின் அழகுக்கு  ஈடாக   பதினான்கு லோகங்களிலும்
எந்த   நகரமும்  இல்லை.  அந்த அழகில்  இந்திரனும் மயங்கிவிடுவான்.
 சாக்ஷாத் லக்ஷ்மி தேவியே பெண்ணாக உருவெடுத்து ,
வசிக்கும் நகரத்தின் அழகைசரஸ்வதி தேவியாலும் சேஷனாலும்  கூட   வர்ணிக்க முடியாது.




No comments: