Tuesday, January 24, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தேழு

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -ஐம்பத்தேழு

        ராமரின் நீலத்தாமரை போன்ற
        நீர் நிறைந்த மேகம் போன்ற கருப்பு நிற உடலில்
      கோடிக்கணக்கான  காமதேவர்களின் அழகு .
.    சிவந்த தாமரை பாதங்களின் நகங்களின் ஒளியானது
    செந்தாமரை இலைகளின் மேல்
    முத்துக்களைப்  போல்  இருந்தன.

   பாதங்களில்  வஜ்ரம், கொடி ,அங்குசம் ஆகியற்றின்
   சின்னங்கள் இருந்தன.
 சலங்கை ஒலி  கேட்டு முனிவர்களின்
  மனமும் மோகம் கொண்டன.
  இடுப்பில் கச்சை, வயிற்றின் மேல் மூன்று கோடுகள் இருந்தன.
  நாபியின் சிறப்பை பார்த்தவர்கள் தான் அறிவார்கள்.

    பல ஆபரணங்கள் அணிந்த பெரிய புஜங்கள்,
   இதயத்தில் புலி நகத்தின் மிகவும் விசித்திர அழகு,

     மார்பில் ரத்தினங்கள்  பதித்த  மணி மாலை ,
   பிருகு முனிவரின் பாதம் பதிந்த தழும்பு
  ஆகியவைகள்   மனம்
  கவர்வதாக இருந்தன.

       கழுத்து  சங்குபோன்று ஏற்றம் இறக்கத்துடன்
       மூன்று கோடுகளுடன் இருந்தது.
    தாடை மிகவும் அழகாக இருந்தது.
   இரண்டு அழகான பல் வரிசைகள்,
  சிவப்பு உதடுகள் இருந்தன .
 மூக்கையும் திலகத்தின் அழகையும் வர்ணிக்க இயலாது.
 அழகான காதுகள் மிகவும் அழகான கன்னங்கள்
 அதிக அழகாகத் தோன்றின.
 மழலையின் மழலைப் பேச்சுக்கள்
மிகவும் இனிமையாக இருந்தன.
பிறந்ததில் இருந்தே வளர்ந்த மென்மையான
சுருட்டை முடிகள்,தாயாரால் சீவிமுடித்து
 சிங்காரித்து நேர்த்தியாக காட்சிதந்தன.

உடலில் மஞ்சள் பட்டாடை அணியப்பட்டிருந்தது.
அவர் தவழ்ந்து செல்வது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
அவரின் உருவ அழகை வேதங்களும் ஆதிசேஷனாலும்
வர்ணிக்க இயலாது.
 சுகத்தின் மூலம்,மோகத்தைக் கடந்தவர்,வானியலும் புலன்களாலும்  தென்படாத இறைவன் இன்று அன்பின் வசப்பட்டு
 பவித்திரமான பாலலீலைகள் புரிகிறார்.

   இவ்வாறு உலகத்தின் தாய் -தந்தை போன்ற
 ராமர் அவதிநகர மக்களுக்கு     சுகம் அளிக்கிறார்.
 ராமரின் மேல் பக்தியை இணைத்தவர்களுடைய பாக்கியம் ,
 பகவான் இன்று பாலலீலைகள் புரிந்து அவர்களை
 ஆனந்தப் படுத்துகிறார்.
ஸ்ரீ  ராமரை வணங்காமல் மனிதன் கோடி
 உபாயங்கள் செய்தாலும் ,
உலக பந்தங்களைத் துறக்க முடியாது.
உலகத்தையே வசப்படுத்தி ஆட்டிவைக்கும்
மாயையும் பகவானைக்கண்டு பயப்படும்.
பகவான் மாயையைத் தன் புருவ அசைவால் ஆட்டிவைப்பார்.
இப்படிப்பட்ட இறைவனை விடுத்து வேறு யாரை வணங்க முடியும். ?

மனம், செயல்,வாக்கு என்ற திறமையை எல்லாம் விட்டு விட்டு
பகவானை ஜபித்ததுமே  ரகுநாதரின் கிருபை கிட்டும்.

ராமர்  தன்  பால  லீலைகளால் அனைவரையும் மகிழ்வித்தார்.
கௌசல்யா அவரை மடியில் வைத்துகொஞ்சுவாள்.
ஊஞ்சலில் அமரவைத்து ஆட்டி மகிழ்வாள்.
குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவதில் கௌசல்யா இரவு-பகல்  கழிவதை மறந்துவிடுவாள்.மகனின் மேல் இருந்த அன்பால்
 அவருடைய மழலை குணங்களை  பாடுவது வழக்கம்.

No comments: