Sunday, January 8, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -முப்பத்திநான்கு.

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -முப்பத்திநான்கு.

 சிவபகவானின் வெறுப்பான வெளித்தோற்றம்,
  சிவகணங்கள்,
மணமகனுடன் வந்த ஊர்வலம் கண்டு
 மிக்கவேதனைகொண்ட  தன்

தாயிடம்   மலைமகள் ,
 "அம்மா ,பிரம்மாவின் எழுத்தை யாரும் மாற்றமுடியாது.
இதை நினைத்து வருந்தக்கூடாது.
என் பாக்யத்தில்  பித்தன் தான் கணவன் என்று
எழுதி இருந்தால்  அது  யார்  தவறு ?
அம்மா! பிரம்மா உனக்கு கொடுத்த அங்கத்தை மாற்ற முடியுமா ?
வீணாக கவலைப்படாதே .
அம்மா !கலங்காதே ! அழாதே !
இந்த சமயம் வேதனைப்படும் நேரம் அல்ல.

என்  தலை எழுத்தில்  எழுதப்பட்ட சுக துக்கங்களை எங்கு
சென்றாலும்  அனுபவிப்பேன். மென்மையான பார்வதி தேவியின்
பேச்சைக்கேட்டு அங்குள்ள பெண்கள் எல்லாம்  கவலைப்பட்டு
பிரம்மாவைத்  வித விதமாக திட்டினர்.  அழுதனர்.

இந்த செய்திகேட்டு  ஹிமாச்சல் நாரதர் மற்றும் சப்தரிஷிகளுடன்
அங்கு வந்தார்.
நாரதர் பார்வதி தேவியின் முற்பிறவியின் கதையைக் கூறி,
உன்னுடைய இந்தப்பெண் உண்மையிலேயே
ஜகத் ஜனனி   பவானி. இதுதான் உண்மை.
இவர் பிறவி இல்லாதவர். ஆதியந்தம் இல்லாதவர்.
அழியாத  மகா சக்தி கொண்டவர்.

எப்பொழுதும் இவள் சிவனின் அங்கத்தில் பாதியாக இருப்பவள்.
இவள் உலகைப் படைப்பவள்.காப்பவள். அழிப்பவள்.
அவள் விரும்பியே திருவிளையாடளுக்காக இந்த அவதாரம்  எடுத்துள்ளார்.

முதலில் இவள் தக்ஷனின் வீட்டில் பிறந்தாள்.
 அப்பொழுது இவள் பெயர் சதி.
மிக அழகி.  அப்பிறவியிலும்சங்கரரைத்தான் மணந்தாள்.
இக்கதை அவனி  முழுவதிலும்  புகழ் பெற்றது.

  ஒருமுறை இவள் சிவனுடன் செல்லும் போது ,
 ரகு குல ராமச்சந்திரமூர்த்தி என்ற
 தாமரைச் சூரியனைப் பார்த்தாள்.
அவர் மீது இவளுக்கு ஆசை வந்து விட்டது.
இவர் சிவன் சொன்னதைக் கேட்காமல்
சீதைவடிவம் எடுத்தாள்.
சதி சீதைவடிவம் கொண்டதால், சிவன் இவளைத் துறந்துவிட்டார்.
சிவனைப்பிரிந்த வருத்தத்தால் அப்பா வளர்த்த ஹோம  அக்னி குண்டத்தில்
விழுந்து உயிர்த் தியாகம்  செய்தாள்.
இப்பொழுது உன் வீட்டில் பிறந்து தவம் செய்தாள்.
இதை அறிந்ததால் நீ கவலைப்படாதே. சந்தேகப்படாதே.
பார்வதி எப்பொழுதுமே சிவனின் மனைவி.
சிவன் அங்கத்தில் பாதி. அர்த்தாக்னி .

நாரதரின் சொல் கேட்டு எல்லோரும் மகிழ்ந்தனர்.

ஒரு நொடியில் இச்செய்தி அந்த நகரம் முழுவதும் பரவியது.

No comments: