Friday, January 6, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம்-முப்பத்தொன்று

ராமசரித மானஸ்--பாலகாண்டம்-முப்பத்தொன்று

       அந்த காலத்தில்  தரகாசூரன் என்ற அசுரன் இருந்தான்.
அவனின் புஜபலம்,பிரதாபம், சக்தி மிக அதிகம்.
அவன் அனைத்து உலகங்களையும் ,
உலகத்தின் பாதுகாவலர்களையும்
வென்றுவிட்டான்.    
அனைத்து தேவர்களும் சுகத்தையும் சொத்து சுகங்களையும்
இழந்துவிட்டனர்.
அவன் அழியாத வெல்லமுடியாத  வரம் பெற்றிருந்தான்.
தேவர்கள் அவனுடன் பலவித போர்கள் புரிந்து தோற்றுவிட்டனர்.
அப்பொழுது அவர்கள் பிரம்மாவிடம் சென்று அழைத்தனர்,
பிரம்மா அனைத்து தேவர்களும் துன்பப் படுவதைப்பார்த்தார்.
அப்பொழுது பிரம்மா சொன்னார்--
சிவனுக்கு  புத்திரன் பிறந்து  ,
இந்த அசுரனுடன் போர்புரிந்து
வென்றால் தான் இவன் மரணம் சம்பவிக்கும்.
என் வார்த்தையைக் கேட்டு ஏதாவதொரு உபாயம் செய்யுங்கள்.
கடவுள் உதவி செய்தால் இந்த வேலை சுலபமாகிவிடும்.
சதியானவள் தக்ஷனின் வேள்வியில் உயிர் விட்டார்.
அவர் ஹிமவானின் வீட்டில் பிறந்திருக்கிறார்.
அவர் சிவனை கணவனாக்குவதற்காக  தவம் செய்திருக்கிறார்.
இங்கே சிவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ,
சமாதியில் அமர்ந்திருக்கிறார். இது மிகவும் சங்கடமான நிலைமை.
இருந்தாலும் என் விஷயத்தை கேளுங்கள்.

நீங்கள் காமதேவனை சிவபகவனிடம்  அனுப்புங்கள்.
அவருக்கு கோபம் வரட்டும். அவர் தவம் கலையட்டும்.
அப்பொழுது சிவனின்  சரணங்களில் தலை வணங்கி
 கட்டாயத் திருமணம் செய்துவிடுவோம்.
இவ்வாறு தேவர்களுக்கு கட்டாயம் நன்மை உண்டாகும்.
எல்லோரும் பிரம்மாவின் ஆலோசனை ஏற்றனர்.
அனைத்து  தேவர்களும் அன்புடன் காமதேவனை ஸ்துதி செய்தனர்.
ஐந்து  பானங்களுடன் மீன் சின்னக் கொடியுடன் ,
காமதேவன் வெளிப்பட்டார்.
தேவர்கள்  காமதேவனிடம் ,
 தன் எல்லா கஷ்டங்களையும் கூறினார்கள் .
காமதேவன் சிரித்துவிட்டு  சிவனை  விரோதிப்பதால்
எனக்கு நலன் இல்லை.
இருந்தாலும் தங்களுக்காக இந்த வேலையை செய்கிறேன்.
வேதங்கள் மற்றவர்களுக்கு  உதவுவதுதான்
உயர்ந்த தர்மம் என்கிறது.
மற்றவர்களின் நன்மைக்காக உயிர்த் தியாகம் செய்வதை
சாதுக்கள் மஹான்கள் எப்பொழுதும் புகழ்வார்கள்.
  இவ்வாறு சொல்லிவிட்டு  எல்லோரையும் வணங்கி ,
புஷ்பவில் பாணங்களுடன்    தன்  உதவியாளர்களுடன்
புறப்பட்டார்.
போகும்பொழுதே காமதேவன்  சிவனை
விரோதித்தால்  என் மரணம் நிச்சயம்  என்று எண்ணினார்.

   அவர் அனைத்து உலகத்தையும் தன் வயப்படுத்தினார்.
மீன் கொடியுள்ள , காமதேவன் கோபப்பட்டதுமே
உலகம் முழுவதிலும் வேதங்களின் மரியாதை போய்விட்டது.

பிரமச்சரியம், நியமம்,பலவித புலனடக்கம்,தைரியம் , தர்மம், ஞானம் ,
விக்ஞானம் , நல்லொழுக்கம் , ஜபம் , யோகம் , வைராக்கியம் ,
முதலிய எல்லா படைகளும் பயந்து ஓடி விட்டது.
 விவேகம்( அறிவு ) தன் உதவியாளர்களுடன்
பயந்தோடி விட்டது.
அதனுடைய போர்வீரர்கள் போர்க்களத்தில்
 இருந்து  புறமுதுகிட்டு ஓடினர்.
அந்த சமயத்தில்  எல்லா நற்குணங்களும்
 அறிவு நல் நூல்கள் என்ற குகையில்  ஒழிந்து கொண்டன.
அதாவது நல்ல அறிவுரை நூல்களைப் படிப்பவர்கள் இல்லை.
நல்ல நடத்தைகள் இல்லை.
அவனி முழுவதும் குழப்பங்கள் உண்டாகின.
எல்லோரும் எங்களை யார் காப்பற்றுவார்கள்?
இப்பொழுது என்ன நடக்கப்போகிறது ?
எங்களை யார் காப்பற்றுவார்கள்?
காமதேவன்  கோபப்பட்டு  புஷ்ப- பாணம்   ஏந்தியுள்ளார்?
அந்த இரு தலை உள்ளவன் யார் ?
உலகில் உள்ள ஆண் -பெண் என்ற அனைத்து
 அசையும் அசையா அனைத்து பிராணிகளும்
தன்  மரியாதவிடுத்து காமவசப்பட்டன.
 எல்லோரின் மனதிலும் காமம் அதிகரித்தது.
கொடிகளைப்பார்த்து மரக்கிளைகள் தாழ்ந்தன.
நதிகள் பொங்கி சமுத்திரத்தை நோக்கி ஓடின.
குளம் -குட்டைகளும்  தங்களுக்குள்  சேர்ந்தன.
ஜடப்பொருள் களுக்கே இந்நிலை  என்றால்,
உயிரினங்களின்  நிலை எப்படி சொல்லமுடியும்?
ஆகாயம்,பூமி,தண்ணீர்,போன்றவர்களில்
வாழும் ஜீவராசிகள், பறவைகள், மிருகங்கள்,
தங்கள் நேரம்-காலம் தெரியாமல்
 காமக்களியாட்டங்களில்
ஈடுபட்டன.
முனிவர்கள்,தேவர்கள், அரக்கர்கள்,கின்னரர்கள்,பாம்புகள்,
பிரேத-பிசாசுகள்,பூதங்கள், வேதாளங்கள் , சக்கரவாகப் பறவைகள்
அனைத்தும்  காமக் குருடர்களாகி  நேரம் காலம் நினைக்காமல்
களியாட்டம் புரிந்தன .
முனிவர்கள் ,சித்தர்கள் , யோகிகள் , மகா முனிவர்கள் அனைவரும்
காமத்திற்கு அடிமைகளாகினர் . இந்நிலையில் சாதாரண மனிதர்களைப்
பற்றி சொல்லவும் வேண்டுமா ?
இறைவனாகப்பார்த்த  உலகத்தை அனைவரும்
போகப்  பெண்களாகவே பார்த்தனர்.
இரண்டு மணிநேரங்கள் , பிரம்மாண்டம் முழுவதும்
இந்த வேடிக்கை நடந்துகொண்டிருந்தது.

காமதேவன் அனைவரின் மனதையும் மயக்கி விட்டான்.
ராமரால் காக்கப்பட்டவர்கள் மட்டும் நல்லமுறையில் இருந்தனர்.

இப்படிப்பட்ட   நிலையில் காமதேவன்  சிவனிடம் சென்றார்.
சிவனைப் பார்த்ததும் காமதேவன்  பயந்துவிட்டான்.
அப்பொழுது வையகம் அசையாமல் இருந்தது .

போதையில் உள்ளவர்கள் போதை தெளிந்தது போன்று
எல்லா ஜீவன்களும்  இன்பமடைந்தன. மகா பயங்கரமான இறைவனை,
சிவனைப் பார்த்து காமதேவன் பயந்து நடுங்கினான்.
 திரும்புவதற்கு நாணி மரணத்தை  உறுதி செய்து கொண்டு
ஒரு உபாயத்தை தேர்ந்தெடுத்தான்.
அழகான பருவகால அரசன் வசந்தகாலம் தோன்றியது.
பூத்துக்குலுங்கும் மரங்களின்   வரிசைகள்  உண்டாகின.
அழகான இயற்கை மிகவும் மகிழ வைத்தது.

வனங்கள், நந்தவனங்கள், கிணறுகள்-குளங்கள் அனைத்தும் சோபித்தன.

அன்புள்ளஜீவராசிகளின் மனதில் காமதேவன் அமர்ந்தான்.
இறந்தவர்களின்  மனதிலும்  காமதேவன் விழிப்படைந்தான்.

வனத்தின்  அழகை  வர்ணிக்கமுடியாது.
 காமத்தீயின் உண்மையான நண்பன்  தென்றல் காற்று சுகந்தம்  வீசியது.
குளங்களில்  தாமரைகள்  மலர்ந்தன. அவைகளில் வண்டுகள் ரீங்காரமிட்டன.
அன்னப் பறவைகள் , குயில் , கிளி , இனிமையாக பேசின.
அழகிகள்  அப்சரஸ்கள் பாடி  ஆடத்  தொடங்கினர்.
காமதேவன் தன் படைகளுடன் பல உபாயங்கள் செய்து தோற்றுவிட்டான்.
சிவபகவானின்  அசையா சமாதிநிலை  களையவில்லை.
அப்பொழுது காமதேவனுக்கு கோபம் உண்டாகியது.

மனதில் கோபமுடன் மாமரத்தின் அழகான கிளையில் ஏறி
தன் மன்மத பாணத்தை மிக வேகமாக
 சிவனின் நெஞ்சில் செலுத்தினான்.
அவர் கூர்மையான ஐந்து  புஷ்பா பாணங்களை ஏவினான்.
அவர் சமாதி கலைந்தது. அவர்  மிகுந்த கோபத்துடன்
எல்லா  பக்கங்களையும் பார்த்தார்.
மா இலைகளில் மறைத்திருந்த காமதேவனைப் பார்த்தார்.
சிவன் காமதேவனைப் பார்த்த பார்வையால்
மூவுலகமும் நடுங்கியது.
சிவன் தன்  மூன்றாவது கண்களைத் திறந்ததுமே ,
காமதேவன் எரிந்து பஸ்ம மாகிவிட்டான்.
உலகில் பயம்  தோன்றியது. தேவர்கள் பயந்துவிட்டனர்.
அரக்கர்கள் மகிழ்ந்தனர். போகிகள் கவலைப்பட்டனர்.
சாதகர்கள் ,  யோகிகள் போன்றோரின் இடையூ று நீங்கியது.
கணவனின் நிலை அறிந்த ரதி மயக்கமடைந்தாள்.
அழுது-புலம்பிக்கொண்டே சிவனிடம் வந்தாள்.
மிகவும் அன்புடன் கைகூப்பி சிவனின் முன் நின்றாள்.
சீக்கிரமாக மகிழக்கூடிய சிவன் ,
அபலையைப் பார்த்து சொன்னார்--
ரதியே! இப்பொழுதிலிருந்து உன் கணவன் உருவமற்றவனாவான்.
உடலின்றியே அனைவரிடத்திலும் நிறைந்து இருப்பான்.
உன் கணவனை சந்திப்பது பற்றி கேள்.
மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்ற யதுகுலத்தில் கிருஷ்ணர் பிறப்பார்.
அப்பொழுது உன் கணவர் அவர் மகனாகப்  பிறப்பார்.
சிவனின் சொல் கேட்டு ரதி சென்றுவிட்டாள்.
இப்பொழுது வேறுகதை சொல்கிறேன் . 
Post a Comment