Friday, January 13, 2017

रामचरित मानस ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -நாற்பத்தொன்று -துளசிதாஸ்

रामचरित मानस  ---பாலகாண்டம் -ராமசரிதமானஸ் -
                                நாற்பத்தொன்று -துளசிதாஸ்

    பார்வதி!ஸ்ரீ ஹரியின் குணம், பண்பு, பெயர் , நன்னடத்தைகள் பற்றி

அதிகமான   கதைகள் ,எல்லையற்ற வர்ணனைகள் , எண்ணிக்கையில் அடங்கா  புகழ் பாடல்கள்  இருக்கின்றன. இருப்பினும் என்னுடைய அறிவுத்திறனுக்கு ஏற்ப கதைகள் சொல்கிறேன் கேள்.

வேதங்களில் ஸ்ரீ ஹரியின் அழகான விஸ்தாரமான,களங்கமற்ற புகழ்க் கதைகள்  உள்ளன.
ஸ்ரீ ஹரியின் அவதார நோக்கங்கள்  இவைதான் , இதுதான்  என்று
சொல்லமுடியாது. பலகாரணங்கள் இருக்கலாம். அவைகளை யாரும் அறிய முடியாது.
அறிவு,மனம்,சொற்களால் ,ஸ்ரீ ராமரின் அவதாரம் பற்றி
விவாதம் செய்ய முடியாது.
இருந்தாலும் சாதுக்கள், முனிவர்கள்,வேதங்கள்,புராணங்கள் தன்  -தன்
ஞானத்திகேற்ப  ஏதோ சிறிதளவு சொல்கிறார்கள்.

  எனக்கு  புரிந்த மட்டும்  தர்மம் அழியும் போது,வீழ்ச்சி அடையும்போது ,
மட்டமான கர்வமுள்ள ராக்ஷசர்கள் அதிகரிக்கும்போது,
வர்ணிக்க முடியாத அளவிற்கு அநியாயங்கள் அதிகரிக்கும்போது,
அந்தணர்கள், பசுக்கள், தேவர்கள் ,பூமி   அனைவரும்மிகவும்   துன்புறும்போது    கிருபையின் இருப்பிடமாக ,
கருணைக்கடலான    பிரபு  வித விதமான  அவதாரத்தில் தோன்றி ,
சத் ஜனங்களின்  துன்பங்களைப் போக்குகிறார்.

அவர் அசுரர்களைக் கொன்று தேவர்களை ஸ்தாபிக்கிறார்.
தன் வேதங்களின்  மரியாதையைக் காப்பாற்றுகிறார்.
அவனியில் அவரின் பரிசுத்தமான புகழைப் பரப்புகிறார்.
ஸ்ரீ ராமரின் அவதார காரணம் இதுதான்.

அவனின் புகழ் பாடி , பக்தர்கள், வையகக் கடலைக் கடக்கிறார்கள்.
கிருபைக்கடலான  இறைவன் பக்தர்களின் நன்மைக்காக,
அவதரிக்கிறார்.
ராமாவதாரத்திற்கு அநேக காரணங்கள். ஒன்றைவிட ஒன்று விசித்திரமானது.
அழகும் அறிவும் கொண்ட பவானியே!அவரின் ஓரிரண்டு பிறவிகளின் காரணத்தை  விரிவாகக் கூறுகிறேன் .  கவனமாகக்கேள்.

 ஸ்ரீ ஹரிக்கு ஜய,விஜய் என்ற  இரு துவாரபாலகர்கள். அவரை அனைவரும் அறிவார்கள்.
அந்த இருவரும் சனகர் போன்ற அந்தணர்களின் சாபத்தால் ,
தாமச குண அசுரர்களாக  புவியில் பிறந்தனர்.
அவர்களில் ஒருவன் ஹிரண்ய கஷ்யப். மற்றவன் ஹிரண்யாக்ஷன்.
இவர்கள் தேவராஜனின் கர்வத்தைபோக்கினார்கள்  என்பதை
வையகம் அறியும். அதனால் அவர்கள் புகழ் பெற்றனர்.

  அவர்கள் போரில் வெல்லும் புகழ் பெற்ற வீரர்களாகத் திகழ்ந்தனர்.
இதில் ஒருவனான  ஹிரன்யாக்ஷணனை ஸ்ரீ ஹரி வராஹ் அவதாரம் எடுத்து
வதம் செய்தார். மற்ற ஹிரன்யகஷ்யபுவை நரசிம்மாவதாரம்  எடுத்து
வதம் செய்தார். தன் பக்தன் பிரஹ்லாதனின் புகழை
அவனியில் பரப்பினார்.
 அவர்கள் இருவருமே  தேவர்களை வெல்கின்ற,பெரும் இணையற்ற வீரர்கள்.
அவர்கள் தான்  பலசாலியான,மகாவீரர்களான  ராக்ஷசர்கள் என்பதை
அவனி அறியும்.

ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரன்யகஷ்யப் இருவரும் வதம் செய்யப்பட்ட
போதும் அந்தணர்கள் சாபத்தின் பிரபாவம் மூன்று ஜென்மத்திற்கு இருக்கும்.  ஆகையால் ஸ்ரீ ஹரி  மீண்டும் அவதாரம் எடுத்தார். இந்த அவதாரத்தில் ,
கஷ்யப், அதிதி அவர்களுக்கு பெற்றோரானார்கள்.
அவர்கள்  தசரதர்கௌசல்யா   என்ற பெயரில் புகழ்பெற்றனர்.
ஒரு யுகத்தில் இவ்வாறு அவதரித்து உலகத்தில் புனித லீலைகளைச் செய்தார்.

No comments: