Saturday, January 14, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் - நாற்பத்தி மூன்று

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் - நாற்பத்தி மூன்று

     மலை, நதி, காட்டின் அழகான காட்சிகள் கண்டு
நாரத முனிவருக்கு
லக்ஷ்மிகாந்தனின் பகவானின்
காலடிகளில் அன்பு உண்டாகியது.
பகவானின் ஸ்மரணையில் தக்ஷ பிரஜாபதி கொடுத்த
சாபத்தின் வேகமும் பலமும்  குறைந்துவிட்டது.
மனம் இயற்கையிலேயே பவித்திரமானதால்
அவர் சமாதி நிலையில்   அமர்ந்தார்.

    நாரதரின் இந்த சமாதி நிலைகண்டு
   தேவராஜ் இந்திரன் பயந்துவிட்டான்.
  அவர் நாரதரின் சமாதி நிலை களைய ,
காமதேவனை அழைத்து மரியாதைகள் செய்து ,
எனக்காக  நீ உன் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு
நாரதர் முனி சமாதி நிலையில் இருக்கும்  இடத்திற்கு செல்.
அவரின் தவத்தைக் கலைத்து விடு.

  இதைக்கேட்டு மீனக்கொடியோன் காமதேவன் மிக மகிழ்ந்தான்.

இந்திரனுக்கு  நாரதர் இந்திரபவிக்காக ,
தவம் செய்கிறாரோ  என்ற பயம் வந்துவிட்டது.
உலகில் ஆசைகள் உள்ளவர்களும் பேராசக்காரர்களும்
கபட கொடிய எண்ணம் கொண்டோரும்
காக்கைகள் போன்று அனைவரிடத்திலும் பயப்படுவார்கள்.

முட்டாள் நாய் எலும்புத்துண்டை எடுத்துக்கொண்டு ,
சிங்கம்  அதை பிடுங்கிவிடுமோ என்று பயந்து ஓடுவதுபோல்
இந்திரன் தன்  ராஜ்யத்த்தை   நாரதர் எடுத்துக்கொள்வாரோ
என்று   நினைக்க வெட்கப்படவில்லை.

   காமதேவன் நாரதர் தவம் இருந்த ஆஷ்ரமம் சென்றதுமே,
அங்கு வசந்தகாலத்தை தோற்றுவித்தான்.
வித விதமான மரங்களில் வண்ண வண்ண பூக்கள்
மலர்ந்தன. குயில்கள் கூவின. வண்டுகள் ரீங்காரமிட்டன.
காமத்தீயை கொழுந்துவிட்டு எரியச் செய்யும் குளிர்ந்த , மந்தமான சுகந்தக்காற்று  வீசியது.
ரம்பா போன்ற நவயுவதிகள் எல்லோருமே காமக்கலையில் நிபுணர்கள்.
அவர்கள் பலவித இனிய அலைகளுடன் பாடத்தொடங்கினார்.
கையில் பந்து எடுத்துக்கொண்டு பலவித விளையாட்டுக்கள்
விளையாடத் தொடங்கினர்.
காமதேவன் தன் இந்த உதவியாலர்களைக்கண்டு மிகவும்
மகிழ்ந்தான்.
பிறகு பல வித மாயா ஜாலங்கள் செய்தான்.
ஆனால் காமனின் எந்தக்  கலை யும்  நாரதரை எதுவும் செய்ய முடியவில்லை.   அப்பொழுது அவனுக்கு பயம் வந்துவிட்டது.
லக்ஷ்மிபதியின் பாதுகாப்பும் அருளும் பெற்றவனை
யார்  என்ன செய்ய  முடியும் ?
அவர்களுடைய மரியாதையைக் கெடுக்க முடியுமா ?

 அஞ்சிய காமன் தன உதவியாளர்களுடன் சென்று ,
முனிவரின்   சரணங்களில் தஞ்சம் அடைந்தான்.
அவர்தம் பணித்து வேண்டினான்.
நாரதருக்கு  அவன் மேல் எள்ளளவும்
கோபம் உண்டாகவில்லை.
அவர் அன்பான   சொற்களால்
 காமதேவனை சமாதானம் செய்தார் .

காமன் முனிவரின் சரணங்களை வணங்கி
அவருடைய அனுமதியும் ஆணையையும் பெற்று
தன்  உதவியாளர்களுடன் திரும்பிவிட்டான்.
காமன் இந்திர சபைக்குச் சென்று  அந்த முனிவரின்
நல்லொழுக்கம் பற்றியும் தன செயல்களின் விளைவுகள்
பற்றியும் சொன்னான்.
 அதைக்கேட்டு இந்திரன் ஆச்சரியம் அடைந்தான்.
அவன் முனிவரைப் புகழ்ந்து  ஸ்ரீ ஹரியை வணங்கினான்.

 நாரதர் மனதில் காமதேவனை வென்ற
அகங்காரம் குடிகொண்டுவிட்டது.
அந்த அகங்காரத்துடன்  நாரதர் சிவபெருமானிடம் சென்று
நடந்த விவரங்களைக் கூறினான்.
காமதேவனின் நன்னடைத்தை பற்றியும் சிவனிடம் கூறினான்.
நாரதரை தன்  பிரியமானவர் என்று நினைத்து
உபதேசம் அளித்தார் -- "முனிவரே!இந்த காமனுக்கும் உங்களுக்கும்
நடந்த நிகழ்வை ஸ்ரீ  ஹரியிடம்  சொல்லவேண்டாம்.

இதைப்பற்றிய  சர்ச்சை வந்தாலும்  வேண்டாம்.  மறைத்துவிடவும். "

    சிவன் அளித்த இந்த ஹிதோபதேசம் (பயன் அளிக்கும் அறிவுரை )
நாரதருக்குப் பிடிக்கவில்லை.  அப்பொழுது அவர் அங்கிருந்து
பிரம்மா லோகத்திற்குச்  சென்றார்.
  ஒருமுறை பாடல் கலையில் வல்லுனரான நாரதர்,
 கையில் அழகான வீணை  எடுத்துக்கொண்டு
லக்ஷ்மிநிவாசன்    பகவான் நாராயணன் இருப்பிடமான
பாற்கடலுக்குச்  சென்றார்.
 ரமாநிவசனான  பகவான்  எழுந்து
 மிக மகிழ்ச்சியுடன் முனிவரின் அருகில்
ஆசனத்தில் அமர்ந்தார்.

சிரித்து , முனிவரே!நீண்ட நாட்களுக்குப் பிறகு
தயை புரிந்துள்ளீர்கள்  என்றார்.
 சிவனின் அறிவுரை கேட்டும்   எச்சரித்தும்  மீறி
நாரதர்  காமதேவனுக்கும்
தனக்கும் நடந்த நிகழ்வு மற்றும் காமனின் நடத்தை
 பற்றியும்  சொன்னார்.

ரகுநாதனின் மாயை மிகவும் பலமுள்ளது.
அவனால்   கவரப்படாத ஜீவ ராசிகள் வையகத்தில் பிறக்கவில்லை.

பகவானின் முகம் மாறியது. அனால் மென்மையாக ,
"முனிவரே!மற்றவர்களின்  மோகம் , காமம் , ஆணவம் . கர்வம்
எல்லாமே உங்களை நினைத்தாலே போய்விடும்.
முனிவரே! ஞானம் -வைராக்கியம் இல்லாதவர்களுக்குத்தான்
மனதில் மோகமும் காமமும் ஏற்படும்.
நீங்கள் பிரம்மச்சர்ய விரதத்தில் ஈடுபட்டவர்.மிகவும் தீரர் . ஞானமிக்கவர்.
உங்களை எப்படி காமதேவர் கவர முடியும். துன்புறுத்த முடியும்.
நாரதர் மிகவும் ஆணவத்துடன் ,"இதெல்லால் உங்கள் கிருபையே "என்றார் .

 நாரதர் மனதில் கர்வம் ஆணவம் என்ற  மகா விருக்ஷத்தின்
விதை முளைவிட ஆரம்பித்திருக்கிறது என்பதை
பகவான் புரிந்து கொண்டார்.
  நாரதர் பகவானின் கமலா பாதங்களை வணங்கிவிட்டுச் சென்றார்.

அப்பொழுது லக்ஷ்மிபதி தன மாயையை செயல் படுத்தினார்.
அவர் நானூறு  மைல்  தொலைவில்  ஒரு நகரத்தை அமைத்தார்.
அந்த  நகரம் லக்ஷ்மிபதி நாராயணின் நகரத்தைவிட  மிக
(வைகுண்டத்தை விட ) மிக மிக அழகாக அமைக்கப்பட்டது.
அந்த நகரத்தில்  மிக  அழகான ஆண்களும் பெண்களும்
காமதேவனும் ரதியும்சி மானுடர்களாக  மாறியது  போல்
வாழ்ந்து வந்தனர்.
அந்த நகரத்து அரசன் ஷீல்நிதி .
அவனிடத்தில் குதிரைப்படை , யானைப் படை
மற்றும்  சேனைகள் இருந்தன.
அவனுடைய  வைபவங்களும் ஆடம்பரங்களும் ,
கேளிக்கை விளையாட்டுகளும்  நூறு இந்திரர்களுக்கு
சமமாக இருந்தன.

   அது  அழகிலும் , உருவத்திலும் , ஞானத்திலும் ,
வலிமையிலும் நீதியிலும் இணையற்ற  நகரமாக விளங்கியது.
அவருக்கு விஸ்வமோகினி என்ற ஒரு அழகான மகள் இருந்தாள்.
அவள் அழகு  லக்ஷிமி தேவியே மோகித்துக்கொள்ளும்
அளவிற்கு இருந்தது. அவள் பகவானின் மாயை.
அனைத்து குணங்களின் சுரங்கம்.
அவளின் அழகை வர்ணிப்பது மிகக் கடினம்.
அந்த ராஜகுமாரி  சுய வரத்திற்கு எண்ணிக்கையில்
அடங்கா  ராஜகுமாரர்கள் வந்திருந்தனர்.

Post a Comment