Friday, January 27, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --ஐம்பத்தொன்பது .

ராமசரித மானஸ்--பாலகாண்டம் --ஐம்பத்தொன்பது .

      நகர மக்கள்  மகிழ்ச்சியாக  இருக்க ஸ்ரீ ராமர் பல பாலலீலைகள்  செய்வார்.
அவர் மிகவும் மன ஈடுபாட்டுடன் வேத புராணங்கள்
கேட்பார். பிறகு தன்  தம்பிகளுக்கு விளக்குவார்.

   ஸ்ரீ  ராமர்  அதி காலையில் எழுந்து அம்மா, அப்பா மற்றும்
   
குருவை வணங்குவார்.
அப்பாவின்   ஆணை பெற்று வேலை செய்வார்.
மிகவும் கீழ்படிந்து  நடப்பார்.
ராமரின் நன்னடத்தை கண்டு  ராஜா
மனதில் மிகவும் மகிழ்ந்தார்.

சகல லோகங்களிலும் வியாபித்திருக்கின்ற , எவ்வித ஆசைகளும் அற்ற , பிறவியில்லாத, உருவமற்றவர்.
அவருக்கு எந்த பெயரும் கிடையாது. அதே பகவான் பக்தர்களுக்காக  பல விதமான தெய்வீக நடிப்பு நடிக்கிறார்.

   இந்த எல்லா நிகழ்ச்சிகளையும்
    வர்ணித்து சொன்னேன்.
  இனிமேல் இருக்கும் கதையையும்
   மனம்  ஈடுபட்டு   கேள்.
     ஞானி  மகாமுனி  விஷ்வாமித்திரர்  வனத்தில்
   ஆஷ்ரமம் அமைத்து வசித்துவந்தார்.
 அங்கு முனிவர்கள் ஜபம் ,யாகம் ,யோகத்தில்
  ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்கள்
   ராக்ஷசர்களான
  மாரீசன் ,சுபாஹுவிடம்  அதிகம் பயந்துவந்தனர்.
 யாகப்புகை வந்தால்
  அரக்கர்கள் ஓடிவருவார்கள்.
 மிகவும் தொந்திரவு செய்வார்கள்.
 முனிவர்கள் மிகவும் துன்பப்பட்டனர்.

  இந்த பாவி அரக்கர்கள்
 இறைவன்  வதம் செய்யாமல்
 சாகமாட்டார்கள்  என்று காதியின் மகன்
  விஷ்வாமித்திரர்
 மனதில் மிகவும் கவலைப்பட்டான்.

ஆனால்  ஞானியான முனிவர் ,
பகவான் பூமியின் இன்னல் தீர்க்க
 அவதாரம் எடுத்துள்ளார்
என்பதை  அறிந்திருந்தார்.
இந்த அரக்கர்களின் உபத்திரவத்தை சாக்காக வைத்து
ஞானம் ,வைராக்கியம் மற்றும் எல்லா குணங்களின் இருப்பிடமாக  உள்ள  பகவானை கண்குளிரப்பார்ப்பேன்.
அவர்களிடம்  வேண்டி அந்த இரண்டு சகோதரர்களையும்
அழைத்துவருவேன்  என்று விஷ்வாமித்திரர் எண்ணியதும்
புறப்பட்டார்.
சரயு நதியில் ஸ்நானம் செய்துவிட்டு அரசரவையை அடைந்தார்.
 முனிவரின் வருகையை  அடைந்ததுமே  அரசன் அந்தணர்களை  அழைத்துக்கொண்டு முனிவரை
சந்தித்து சகல மரியாதையுடன்  வரவேற்று
ஆசனத்தில் அமரவைத்தார்.
 பாதங்களை கழுவி பூஜை செய்தார்.
என்னைப்போன்ற இன்று மற்றொருவர் யாரும் கிடையாது.
என்றார்.
பலவித உணவுகளைப் பரிமாறி  போஜனம் செய்வித்தார்.
முனி ஸ்ரேஷ்டரான   விஷ்வாமித்திரர்  மிகவும் சந்தோசப்பட்டார்.

பிறகு அரசர் தன் நான்கு புத்திரர்களையும் அழைத்து
நமஸ்காரம் செய்வித்தார்.
ஸ்ரீ ராமரைப் பார்த்ததும்  முனிவர் தன் மெய்மறந்தார்.
சக்ரவாகு பறவை முழு நிலவைக்கண்டு  மகிழ்வதுபோல
ஸ்ரீ  ராமரின் முக அழகுகண்டு முனிவர் மகிழ்ந்தார்.

      முனி   ஸ்ரேஷ்டரே ! இவ்வளவு கிருபையும் அனுக்கிரஹமும்  இதற்கு முன்  நீங்கள் காட்டியதில்லை.
உங்கள் நல்வருகையின்  காரணம் என்ன ? அதை உடனே நிறைவேற்றுகிறேன்   என்று  அரசன் சொன்னார்.
 அரசே! அரக்கர்களின் தொல்லைகள் அதிகமாகிவிட்டன.
அதனால் உன்னிடம்  ஸ்ரீ ராமரையும் ,அவனது தம்பியையும் என்னுடன் அனுப்பவேண்டும் என்று கேட்கவே  வந்துள்ளேன்.
அரக்கர்கள் வதம் செய்யப்பட்டால்
எனக்கு பாதுகாப்பு கிடைத்துவிடும்.
அரசே! மகிழ்ச்சியுடன் இவர்களை அனுப்பு.
அறியாமையையும் மோகத்தையும் விட்டு விடு.
இதனால் உனக்கு நற்புகழ் கிடைக்கும் .
அதிக நல்லவைகள் நடக்கும்.
 இந்த தனக்குப்பிடிக்காத கோரிக்கை கேட்டு அரசனின் மனம்  நடுங்கியது. அவரின் முகம் வெளிறியது.
அரசர் சொன்னார்--"நான் எனது இறுதி வயதில் இந்த நான்கு குழந்தைகளைப்  பெற்றுள்ளேன்.  நீங்கள் பூமி,
பசுக்கள்,செல்வம் ,நாட்டின்  கருவூலம் அனைத்தும் மகிழ்ச்சியுடன்  ஒப்படைத்துவிடுவேன். உயிரைவிட அன்பானது எதுவுமே இல்லை. அதையும் ஒரு நொடியில்
ஒப்படைத்துவிடுவேன்.
  எனக்கு எனது புத்திரர்கள் அனைவருமே மிக பிரியமானவர்கள். அவர்களிலும்  ராமரை என்னால் அனுப்ப முடியாது.
  அரக்கர்கள் அஞ்சத்தக்கவர்கள்.கொடுமையானவர்கள்.
என்னுடைய மகன் இப்பொழுதுதான் சிறிய பாலகன். மிகவும் மென்மையானவன். என்று அரசர் வேண்டினார்.
  அரசனின் அன்பு ரசம் நிறைந்த வார்த்தைகளைக்கேட்டு
முனிவர் மிகவும் மகிழ்ந்தார்.
அப்பொழுது வசிஷ்டர் அரசருக்கு பலவித அறிவுரைகளைக்கூறினார். அரசரின் மன ஐயங்களைப் போக்கினார்.
 அரசன் மிக அன்புடனும் மரியாதையுடனும் தன் இரண்டு புத்திரர்களையும்  அழைத்தார்.  அவர்களைத் தழுவி அறிவுரைகள்  வழங்கினார்.  இறைவா!இந்த இருவருமே என்னுடைய உயிர் போன்றவர்கள்.
முனிவரிடம் கூறினார் ---"நீங்கள் தான் இவர்களுக்கு தந்தை.
அரசன் மகன்களுக்கு பலவித  ஆசிகள்  வழங்கி  ரிஷியிடம் ஒப்படைத்தார்.
பிறகு ராமர் அம்மாவின் மாளிகை சென்று வணங்கி விடைபெற்றார்.
ஆண் சிங்கங்கள் போன்ற இருவரும்
முனியின் பயம் போக்க  மகிழ்ச்சியுடன் சென்றனர்.
   ராமர் கிருபாசாகரம் . தீரர்,சகல உலகங்களுக்கும் காரணமானவர்.
இறைவனின்  சிவந்த  கண்கள், அகன்ற மார்பு, மிகப்பெரிய புஜங்கள், நீலத்தாமரை யும் இலவங்கமரம் போன்ற   கருநீல சரீரம் ,, இடுப்பில் பீதாம்பரம் , அழகான அம்பறாத்தூணி ,
கையில் வில்லும் பாணமும் மிக அழகாக சோபித்தன.
விஷ்வாமித்திரருக்கு பெரும் பொக்கிஷம் கிடைத்ததுபோல் இருந்தது. அவர் நினைத்தார் --பிரபு!பிராமண பக்தர்.
எனக்காக பகவான் தன் தந்தையையும் விட்டுவிட்டார். 

No comments: