Thursday, January 19, 2017

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --ஐம்பது

  ராமசரிதமானஸ் --பாலகாண்டம் --ஐம்பது

     கபடமுனி ,    ராஜா  பிரதாப் பானுவின் மனம் மாற
    மென்மையான குரலில்
பல  கதைகளை சொல்ல ஆரம்பித்தான்.

கர்மம், தர்மம், மற்றும் பலவித வரலாற்றை சொல்லி
 ஞானம் மற்றும் வைராக்கியத்தை
 நிரூபிக்க ஆரம்பித்தான்.
 படைப்பின்   உற்பத்தி ,
வளர்ப்பு,சம்ஹாரம் பற்றிய அளவில்லா
ஆச்சரியப்படுத்தும்
கதைகளைச் சொன்னான்.

  அரசன்   முனிவர் சொல்  கேட்டதும்
 அந்த கபட தவசியின்  பேச்சில் வசமானான்.
 முற்றிலும் அரசன்  தன் வசமானதும்  அவன்
தன் பெயரைச்சொன்னான்.
அரசே! நான் உங்களை  அறிவேன்.
நீ கபடம்  செய்தாய். எனக்கு  அது   பிடித்திருந்தது.
 அரசே!  அரச நீதிப்படி அவர்கள் எல்லா இடங்களிலும்
தன்  பெயரை சொல்லமாட்டார்கள்.
உன்னுடைய கெட்டிக்காரத்தனத்தால்
நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.

 உன்னுடைய பெயர் பிரதாப்பானு.
மகாராஜ் சத்யகேது  உன்னுடைய அப்பா.
அரசனே! குருவின் கிருபையால்  அனைத்தும் அறிவேன்.
ஆனால் எனக்கு தீங்கு வந்துவிடும்  என்று
 யாரிடமும்  சொல்வதில்லை .
 உன்னுடைய  இயற்கையான எளிமை ,
அன்பு  , நம்பிக்கை , நீதி நிபுணத்துவம்  கண்டு எனக்கு
உன்மேல் அன்பு அதிகரித்து விட்டது.
அதனால் நீ கேட்டுக்கொண்டதால்  என் கதையைச் சொல்கிறேன்.

  இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
 சந்தேகப்பட வேண்டாம்.

   உனக்கு பிடித்ததைக்  கேள்.
  கபட தவசியின்அ ன்பான வார்த்தைகள்  கேட்டு
  அரசன்  மகிழ்ச்சி அடைந்தான்.
 முனிவரின் கால்களைப் பிடித்து பல விதமாக
  வேண்டினான்.

    அரசன்  முனிவரிடம் ,"முனிவரே! உங்கள் தரிசனம் கிடைத்ததும்
 நான்கும் (அதாவது தர்மம் , அர்த்தம், காமம் , மோக்ஷம்  ஆகியவை)
என் பிடியில் வந்துவிட்டது. நீங்கள்  தயை கடல்.
 உங்களின்  மகிழ்ச்சி கண்டு  ஒரு துர்லப மான  வரம்  கேட்டு ,
 சோகமில்லாமல் இருப்பேன்.

  எனக்கு மூப்பு, மரணம் மற்றும் துன்பமில்லா வாழ்க்கை கிட்டட்டும்.
என்னை  போரில் யாரும் வெல்லமுடியா நிலை வேண்டும்.
பூமியில்  நூறு கல்பம் வரை என்னுடைய  ஒரே  குடையின்  கீழ்
இடையூரில்லா  ஆட்சி   இருக்க வேண்டும்.
   தவசி  சொன்னான் , "அப்படியே  ஆகட்டும் .
 ஒருகடினமான விஷயம் உள்ளது . அதையும் கேட்டுக்கொள்."

  பூபதியே ! அந்தணர் குலம்  தவிர காலனும் உன் பாதம் பணிவான்.

தவ  வலிமையால் அந்தணர்கள் எப்பொழுதும் பலசாலியாக  இருப்பார்கள்.

அவர்கள் கோபத்தில்  இருந்து காப்பவர்கள் ஒருவரும் இல்லை.
நீ அந்தணர்களை  வசப்படுத்தினால்  பிரம்மா, விஷ்ணு , மகேஸ்வரர் முதலியவர்களும்  உனது ஆதிக்கத்தில் வந்து விடுவார்கள்.

  அந்தணர் குலத்தில்   சக்தியோ,
 கட்டயப்படுத்தலோ  எதுவும் நடக்காது.
நான் எனது இரண்டு புஜங்களையும் உயர்த்தி
சத்தியத்தை  சொல்கிறேன்.
அந்தணர்கள்  சாப மின்றி உனக்கு
 எந்த காலத்திலும்
அழிவு  வராது.

   அரசன் அவர் பேச்சைக்  கேட்டு மிக மகிழ்ந்தான்.
  சுவாமி !என்னுடைய  அழிவு இப்பொழுது ஏற்படாது.
  உங்கள் கருணையால் எனக்கு
  எப்பொழுதும் நல்லவைகளே  நடக்கும்.

  இப்படியே நடக்கட்டும்.  என்று கபட முனிவர்  சொல்லி விட்டு ,

எச்சரித்தான்--"என்னுடைய  சந்திப்பு , வழி மறந்ததை  யாரிடமும்
சொல்லக் கூடாது. சொன்னால்
 நடக்கும் விளைவுகளுக்கு
என்  மீது குறை சொல்லக் கூடாது.
நான்  குற்றவாளி அல்ல".

   நீ  இந்த நிகழ்ச்சி பற்றி சொன்னால் ,
  உனக்கு மிகப்பெரிய  தீங்கு ஏற்படும். ஆகையால்  உன்னைத்
 தடுக்கிறேன். இந்த நிகழ்வு அடுத்தவர் காதில் விழுந்ததுமே ,
 உனக்கு  அழிவு  ஏற்படும் . இதை  சத்தியம் என்று  அறியவும்.

  பிரதாப் பானு ," இந்த நிகழ்வை வெளிப்படுத்தினாலும்
    அந்தணர்களின்  சாபத்தாலும்  உனக்கு அழிவு ஏற்படும்.
  பிரம்மாவும் , சங்கரரும் கோபப்பட்டாலும் உனக்கு மரணம் ஏற்படாது.

அரசன்  முனிவரின் கால்களைப்பிடித்து   சொன்னான்-
-"சுவாமி! சத்தியம் தான்.
 அந்தணர் மற்றும் குருவின்  கோபத்திலிருந்து , யார்  காப்பாற்ற முடியும்?  பிரம்மா கோபித்தால் குரு காப்பாற்றுவார்.
 குருவை  பகைத்தால்
உலகில் யார் காப்பாற்றுவார்கள்".

  நீங்கள் சொன்னபடி நான் செய்யவில்லை என்றால்
  எனக்கு அழிவு ஏற்படட்டும்.
  எனக்கு இதைப்பற்றிய கவலை இல்லை.
 எனக்கு  ஒரே பயம் தான் .
அந்தணர்கள் கோபமும் சாபமும்
பயங்கரமானது.
 அவர்களை எப்படி  வசப்படுத்துவது?
என்பதை மற்றும் சொல்லுங்கள்.
உங்களைத்தவிர  வேறு யாரையும் எனது
நலம் விரும்பியதாக நினைக்கவில்லை.

 அரசே ! உலகில் உபாயங்கள் அதிகமாக உள்ளது .
ஆனால் அவை கஷ்ட சாத்தியமானது.
அதிலும் வெற்றி கிட்டுமா கிட்டாதா என்பது உறுதியானதல்ல.
ஒரே ஒரு வழி உள்ளது.ஆனால் அது  ஒரு கடினமானது .
அரசே !அந்த யுக்தி என் கையில்  உள்ளது.
ஆனால் நான் உன் நகரத்திற்கு செல்லமுடியாது.

நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை யாருடைய வீட்டிற்கோ  அல்லது
கிராமத்திற்கோ  சென்றதில்லை.
ஆனால் இப்பொழுது செல்லவில்லை என்றால்  
 உன்னுடைய வேலை கெட்டுவிடும்.
 இன்று நான் மிகப்பெரிய
இரண்டுங்கெட்டான்  நிலையில் உள்ளேன்.

இதைக்கேட்டதும்  அரசன் பணிவாக சொன்னான்--
"சுவாமி! வேதங்களின் நீதிப்படி  பெரியவர்கள் சிறியவர்களை நேசிக்கிறார்கள்.
மலை தன்த லையில் புல்-பூண்டுகளுக்கு  இடமளிக்கிறது.
ஆழமான சமுத்திரம் தலையில் கடல் நுரைக்கு இடமளிக்கிறது.
மேலும் பூமி எப்பொழுதும் தூசியை தன்  மேல் போட்டுக்கொள்கிறது.
என் மேல் கிருபை  காட்டுங்கள் .
 நீங்கள் சாது . எளியவர்கள் மேல்
இர க்கம்   காட்டுபவர். பிரபு! எனக்காக இதைச் செய்யுங்கள்."

  அரசன் முற்றிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது  அறிந்து

கபடத்தில் நிபுணனான முனிவன்  ,
"அரசே ! இந்த உலகத்தில் என்னால்
செய்ய முடியாத துர்லப மான செயல் எதுவுமே கிடையாது.
நான் உன் பணியை கட்டாயம் செய்வேன்.
நீ சொல்லாலும் செயலாலும் உடலாலும் என் பக்தன் .அனால்
யோகம், யுக்தி , தவம் , மந்திர சக்தி போன்றவைகள்
மறைந்து செய்தால்  தான்  பலன்  கிடைக்கிறது" .
"
"அரசே! நான் சமைத்து நீ அதை பரிமாறினால் ,
என்னை யாரும் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
சாப்பிடுபவன் எல்லாம் உனக்கு கீழ்படிந்து நடப்பான்.
 நீ பரிமாறிய உணவை சாப்பிட்டவனின் குடும்ப உறுப்பினர்களும்
உன் ஆதிக்கத்தில் வந்துவிடுவார்கள்.
அரசே! வருடம் முழுவதும் உணவு பரிமாறும் சங்கல்பம் எடுக்க ஒரு உபாயத்தைச் செய் .
தினந்தோறும் ஒரு லக்ஷம்  அந்தணர்களை குடும்பத்துடன்
போஜனம் செய்ய அழைக்கவும். நான் சங்கல்பம் முடியும் வரை
உணவு சமைத்துத் தருகிறேன்.
அரசே!இவ்வாறு  அதிக உழைப்பின்றி எல்லா அந்தணர்களும்
உன்னுடைய வசத்திற்கு வந்து விடுவார்கள்.
அந்தணர்கள்  வேள்வி , யாகம் , சேவை , பூஜை செய்வார்கள்.
அந்த நிகழ்வால் தேவர்களும் சஹஜமாக உன் வசத்தில்  வந்து விடுவார்கள்."

"நான் இந்த வடிவத்தில் உன்னுடன் வரமாட்டேன்.
 நான் என் மாயையால் உன்னுடைய புரோஹிதனை கடத்தி   வருவேன்.
தவ வலிமையால் அவனை என்னைப்போல ஆக்கி ஒருவருடம் வைத்திருப்பேன். நான் அவனுடைய  வடிவெடுத்து எல்லாவிதத்திலும்
உன்னுடைய பணியை வெற்றி பெறச் செய்வேன் .
அரசே! இரவாகிவிட்டது. இப்பொழுது தூங்கு. இன்றிலிருந்து
மூன்றாவது நாள் நான்  உன்னை சந்திப்பேன். தவ வலிமையால் தூங்கும்போதே  உன்னை குதிரையுடன் வீட்டில் விட்டுவிடுவேன்,
நான் அதே புரோஹிதர் வேடத்தில்  வருவேன்.
நான் தனிமையில் அழைத்து எல்லா நிகழ்வுகளையும் சொல்லுவேன் .
அப்பொழுது நீ என்னை அறிந்துகொள்."
   அரசன் முனிவனின் ஆணை பெற்று படுத்துக்கொண்டான்.
  கபட முனி ஆசனத்தில் அமர்ந்தான்.
 அரசன் களைத்திருந்ததால் ஆழ்ந்து  தூங்கி விட்டான்.
 ஆனால்  வஞ்சிப்ப்வனுக்கு , கபட வேடம் போட்டவனுக்கு
 எப்படி தூக்கம் வரும்?
அவனுக்கு அதிகம் கவலை வந்துவிட்டது.

அப்பொழுது அங்கே காலகேது என்ற ராக்ஷசன் வந்தான்.
அவன் தான் பன்றி வேடத்தில் அரசனை  வெகு தொலைவு
அழைத்து வந்து வழி தெரியாமல் செய்தவன்.
அவன் முனிவனுக்கு நெருங்கிய நண்பன்.
 வஞ்சிப்பதில் திறமை  வாய்ந்தவன்.
அவனுக்கு நூறு புதல்வர்கள். பத்து சகோதரர்கள்.
அவர்கள் மிகவும் கொடியவர்கள். அவர்களை யாரும் வெல்லமுடியாது.
தேவர்களுக்கு துன்பம் அளிப்பவர்கள்.
அரசன் முன்பே  அந்தணர்கள் , தேவர்கள், சாதுக்கள்  போன்றவர்கள்
இன்னலுருவதைக் கண்டு அவர்கள் எல்லோரையும் முன்பே கொன்றுவிட்டான்.

அந்த துஷ்டன் முன் விரோதம் காரணமாக
பழி வாங்க இந்த கபட முனியுடன் சேர்ந்து கொண்டான்.
 அவனுன் சேர்ந்து சூழ்ச்சி வலை பின்னத் தொடங்கினான்.
அவனுக்கு எப்படியாவது அரசனை பழி வாங்கவேண்டும்.
அரசன் உணர்வு வசப்பட்டதால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.
  பலம் வாய்ந்த விரோதி தனியாய் இருந்தாலும்
 அவனை எதுவும் செய்ய முடியாது.
     அவனை சிறியவனாக கருதக்கூடாது.
தலைமட்டும் உயிருடன் இருக்கும் ராஹு
  இன்றுவரை
சூரியனுக்கும் நிலவிற்கும் துன்பம்
கொடுத்துக்கொண்டு இருக்கிறான்.

  
    
Post a Comment