Tuesday, January 17, 2017

ராமசரித மானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தேழு

ராமசரித மானஸ்--பாலகாண்டம் -நாற்பத்தேழு

    பகவானின் நீலத்தாமரை,  நீலமணி ,நீலமேகம் போன்ற  கருப்புநிறம் ,

உடல் அழகு கண்டு  கோடிக்கணக்கான  காமதேவர்களும்
வெட்கப்படுவார்கள். |
அவர்   முகம்  நிலவு போன்று  அழகின்  எல்லை .
கன்னமும் , தாடையும்  மிக அழகு.
கழுத்து சங்கு போன்றது. சிவந்த உதடு,
பற்கள்,மூக்கு அனைத்துமே அழகு.
சிரிப்பு நிலவின் கதிர்களை தாழ்த்திவிடும்.
கண்களின் அழகு மலர்ந்த தாமரை போன்று அழகாக இருந்தது.
வளைந்த புருவங்கள் காமதேவனின்  வில் போன்று அழகாய் இருந்தன.
நெற்றியில் ஒளிபொருந்திய திலகம். காதுகளில் மகர குண்டலங்கள் ,
தலையில் மகுடம் அழகாக இருந்தது.  கரு  வண்டுகள் போன்ற அடர்ந்த
கருங்கூந்தல். இதயத்தில்   ஸ்ரீ வத்ச,
அழகான மாலை, ரத்னமாலை,அழகாக இருந்தன.
சிங்கம் போன்ற கழுத்து, அழகான பூணூல்,
யானை துதிக்கை  போன்று புஜங்கள் .
இடுப்பில் மரவுரி , கையில் வில் -அம்பு.
அனைத்துமே மிகவும் அழகாக இருந்தன.

பீதாம்பரம் பொன்னிறமாக  மின்னலையே  நாணச்செய்வது.
வயிற்றில் அழகான மூன்று  கோடுகள் ,
 அழகான நாபி,யமுனையின் சுழலை  ஈர்ப்பது போன்று.

பகவான்   சரண கமலங்கள்  வர்ணிக்க முடியாத அழகு.
இறைவனின் இடது பாகத்தில் ,
எப்பொழுதும்  அனுகூலமாக இருக்கின்ற அழகின் நிதி ,
வையகத்தின் அடிப்படை காரணமான ஆதி சக்தி ஸ்ரீ ஜானகி
. அந்த அம்சத்தில்  இருந்து தான்  லக்ஷ்மி, பார்வதி ,சரஸ்வதி போன்ற எண்ணிக்கையில்லா
மூன்று தேவியின் சக்திகள் தோன்றுகின்றன,

அவரின் புருவ அசைவில்  தான்
உலகத்தின் படைப்புகள் நடக்கின்றன.
அதே சீதை ராமரின் இடதுபக்கம் இருக்கிறார்.

   அழகின் சமுத்திரமான ஸ்ரீ ஹரியின்
 அழகைப் பார்த்து மனுவும் -சத்ரூபாவும்  
 கண்இமை கொட்டாமல் ,பார்த்துக்கொண்டிருந்தனர்.
அந்த இணையற்ற அழகை , அவர்கள் மரியாதையுடன்  பார்த்துக்கொண்டிருந்தனர்.
அதிக ஆனந்தத்தில் மெய்மறந்து இருந்தனர்.
அவர்கள் இறைவனின் சரணங்களைப் பிடித்து
நேரடியாக தண்டமிட்டு வணங்கினர்.
அவர்களை கிருபாசாகரமான  இறைவன்
தலையில் கைவைத்து ஆசிவழங்கி  தூக்கினார்.
பிறகு சொன்னார் --
"நான் மிக மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து ,
மிகப்பெரிய கொடைவள்ளலாக ஏற்று
 மனம் விரும்பும் வரம் கேளுங்கள். "
பிரபுவின் சொல்லைக்கேட்டு  ,
 இருவரும் கைகூப்பி உங்கள் சரண கமலங்களைப்
  பார்த்ததுமே எங்கள் மன விருப்பங்கள் பூர்த்தி அடைந்து விட்டன  என்றனர்.

பிறகும் மனதில் ஒரு ஆசை.
அது பூர்த்தி ஆவது சுலபம். அதே சமயம் கடினம்.
அதனால் சொல்ல முடியவில்லை.
பகவானே! அது உங்களுக்கு மிக  எளிது.
ஆனால் என்னுடைய இயலாமையால்
 எனக்கு கடினமாகப்படுகிறது.
 ஒரு தரித்திரன் கற்பக விருக்ஷத்தைக் கண்டும்
 அதிக செல்வம் கேட்கத் தயங்குவான்.
ஏனென்றால் அவன் அதன் மகிமையை அறியமாட்டான்.
அவ்வாறே என் மனதில் சந்தேகமும் நாணமும் தோன்றுகிறது.
நீங்கள் அந்தர்யாமி.  நீங்கள் அதை அறிவீர்கள்.
என்னுடைய மன விருப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
பகவான்  அவரிடம் நாணத்தை விட்டு என்னிடம் கேளுங்கள்.
உனக்கு கொடுக்கமுடியாதது என்பது எதுவும் என்னிடம் இல்லை.

அரசன் சொன்னான்--வள்ளல்களில் உயர்ந்தவரே! கிருபையின் இருப்பிடமே!
நாதா!எனக்கு உங்களைப்போன்றே ஒரு  மகன்  வேண்டும்.
இதுதான் என் மனதின் உண்மையான விருப்பம். எனது மனோபாவம்.
உங்களிடம் மறைக்க என்னிடம் என்ன இருக்கிறது.
சகலமும் தாங்கள் அறிந்ததே.

 " ராஜன்  அப்படியே ஆகட்டும்
.நான் என்னைப்போல  ஒருவனை
 எங்கே தேடுவேன்? நானே உங்களுக்கு
மகனாக பிறக்கிறேன் "  என்று பகவான் பகர்ந்தார்.
சதரூபா கை கூப்பி நிற்பதைப்பார்த்து ,அவளிடம்
உனக்கு என்ன வரம்  வேண்டும் ? என்று கேட்டார்.
எனது கணவர் கெட்டிக்காரர். அவர்
அரசன் கேட்ட வரமே எனக்குவேண்டும் என்றாள் சதரூபா.
ஆனால் தீர்க்கமுடியாதாதாகிவிட்டது .
இருந்தாலும் தாங்கள் பக்தர்களுக்கு நல்லது செய்பவர்.
அந்த தீக்கமுடியாத எங்கள் விருப்பமும் உங்களுக்கு
நல்லதாகவே தோன்றும்.

  நீங்கள் பிரம்மாவுக்கே  தந்தை.
ஜகந்நாதர்.எல்லோரின் மனதில் இருப்பதை
 அறியும் பிரம்மா.
இப்படி சிந்திக்கும்போது  மனதில்  சந்தேகம் வருகிறது.
ஆனால் தாங்கள் கூற்று சாத்தியமானது.
உங்களுடைய சொந்தங்கள் எந்த அலௌகீக ஆனந்தம்
அடைகிறார்களோ, எந்த சுகமும் பரம கதியும் அடைகிறார்களோ ,
அதையே எங்களுக்கும் தாருங்கள்.
ராணியின் மென்மையான , மந்தணம் நிறைந்த , அழகான
வாக்கிய அமைப்பைக் கேட்டு , கிருபைக் கடலான  பகவான்
மென்மையான சொற்களால் சொன்னார்--
"உன்னுடைய மனதில் இருக்கும் விருப்பமே நிறைவேறும்.
ஐயப்படவேண்டாம்".
    அம்மா! என்னுடைய கிருபையால் உன்னுடைய அலௌகீக ஞானம்
ஒருபோதும் நஷ்டமடையாது. அப்பொழுது மனு மீண்டும் பகவனை வணங்கி வேண்டினார் -"எனக்கு மற்றொரு விருப்பமும் உள்ளது. என்மனதில் ஒரு மகன் தன தந்தையின் மேலுள்ள பிரியமும் பாசமும் தான் எனக்கு உங்கள் மேல் உள்ளது. நீங்கள் என்னை முட்டாள் என்று அறிந்துகொண்டாலும் கவலையில்லை.
 எப்படி மணி இன்றி பாம்பும் , நீரின்றி மீனும் உயிர்வாழ முடியாதோ ,
அப்படியே  என்னுடைய வாழ்க்கை நீங்கள் இன்றி இருக்க முடியாது.

இப்படி வரம் கேட்டு ராஜா இறைவனின் பாதங்களை உறுதியாக கட்டிக்கொண்டார்.
பகவான்  சொன்னார் , உன் விருப்பம் நிறைவேறும் .
நீ என் ஆக்ஞை ஏற்று இந்திரசபாவில் போய் இரு.
அங்கு சுவர்க்கத்தை அனுபவித்த பின் நீ அயோத்தியவிற்கு அரசனாவாய்.
அப்பொழுது நான் உனக்கு புத்திரனாவேன்.

இச்சையால் நிர்மித்த மனிதனாகி, நான் உன்னுடைய கிரஹத்தில் தோன்றுவேன்.
நான் என் அம்ஷங்களுடன் மனித அவதாரம் எடுப்பேன். பக்தர்களுக்கு
சுகம் அளிக்கும் பாத்திரமாவேன்.
எனது பாத்திரத்தின் மதிப்பை உணர்ந்து , கேட்டு , மரியாதையுடன் வணங்கி
அன்பு , ஆணவத்தைத்  துறந்து  பவசாகரத்தை கடப்பார்கள்.

  ஆதி சக்தியான என் மாயையும் அவதாரம் எடுப்பாள்.
இவ்வாறு நான் உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன்.
இவ்வாறு சொல்லி இறைவன் மறைந்தார்.

அந்த திவ்ய தம்பதிகள் சில காலம் அந்த ஆஷ்ரமத்தில் இருந்தனர்.
பிறகு தக்க தருணத்தில் உடலை விட்டு விட்டு இந்திரனின் அமராவதி
நகரத்திற்கு சென்று வசித்தனர்.
யாக்யவல்க்கியர் பாரத்வாஜரிடம்  கூறினார் --
"இந்த மிகவும் புனிதமான  கதையை  சிவபகவான்  பார்வதியிடம் கூறினார்.
இப்பொழுது ராமாவதரத்தின் மற்றொரு காரணத்தையும் கேள்.

Post a Comment