Monday, January 16, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்தாறு

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --நாற்பத்தாறு

 ஒவ்வொரு  பிறவியிலும்  இறைவன் அவதாரம் எடுக்கிறார்.
பலவித அழகான லீலைகள் புரிகிறார்.
இறைவனின் அநேகவிதமான  அழகு, சுகம் தரக்கூடியது,
அலௌகீக  பிறப்பு, செயல்.

  முநீஸ்வரர்கள்  மிகவும் பவித்திரமான , காவியங்களைப் படைத்து,
புகழ்ந்திருக்கிறார்கள்.  விதவிதமான  அபூர்வ மான கதைகளை வர்ணித்திருக்கிறார்கள். இதைக்கேட்டு அறிவுள்ளவர்கள் ஆச்சரியப்படுவதில்லை.

 ஸ்ரீ ஹரி முடிவற்றவர். அவர்  பற்றிய கதைகளும் முடிவற்றது.
எல்லா சாதுக்களும் -ரிஷிகளும் பலவிதங்களில் சொல்கிறார்கள்.
கேட்கிறார்கள்.  ஸ்ரீ ராமரின் அழகான சரித்திரத்தை கோடி வேதங்களிலும் பாட முடியாது.

பார்வதி! ஞானி முனிகளும் இறைவனின் மாயையில் மோகித்துவிடுகிறார்கள்.  பிரபு லீலைகள் புரிபவர்.
அவரை சரணடைந்தவர்களுக்கு நல்லது செய்பவர்.
அவருக்கு சுலபமாக நன்மை செய்பவர்.
எல்லா துன்பங்களையும் போக்குபவர்.

தேவர்கள், மனிதர்கள், முனிவர்களில்
 இறைவனின் மஹா மாயையில்
மோகிக்காதவர்கள் யாருமே  இல்லை.
மனதில் இதை எண்ணி, அந்த மகாமாயையை தூண்டுகின்ற
ஸ்ரீ பகவானை பஜனை செய்ய வேண்டும்.

மலைமகளே! இப்பொழுது ஹரியின்
அவதாரத்தின் மற்றொரு
காரணத்தையும் சொல்கிறேன்.
பிறவியற்ற ,உருவமற்ற, பிரம்மா ஏன் அயோத்தியாவிற்கு
அரசன் ஆனார்? என்ற கதையையும் விஸ்தாரமாகக் கூறுகிறேன்.

  நீ ராமரையும் லக்ஷ்மணனையும்  முனிவர் வேடத்தில் காட்டில் பார்த்தாய்.
அவரைப்பார்த்து சாதியின் உடலில் நீ பைத்தியமாகிவிட்டாய்.
இப்பிறவியிலும் அந்த மோஹம் உன்னை விடவில்லை.
அந்த பிரமை என்ற ரோகத்தை  போக்குகின்ற கதையைக்கேள் .

   அந்த அவதாரத்தில் , இறைவன் செய்த லீலைகளை,
என் அறிவுக்கு ஏற்ற படி சொல்கிறேன்.

யாக்யவல்கியர்  பாரத்வாஜரிடம் சொன்னார் --
சங்கரர் கூறியதைக்  கேட்டு, பார்வதி நாணத்துடன்
புன்சிரிப்பு சிரித்தார். பகவான் சிவன் பார்வதியிடம் ராமர் கதையைக்
கூறத்தொடங்கினார்.
பாரத்வாஜ முனிவரே கேளுங்கள் --
நான் உங்களிடம் எல்லாவற்றையும் கூறுகிறேன்.
மனம் ஈடுபட்டு கேளுங்கள்.
ஸ்ரீ ராமரின் கதை கலியுகத்தில் பாவங்களைப் போக்க கூடியது.
நன்மை செய்யக் கூடியது.
மிகவும் சுந்தரமானது.(அழகானது ).
ஸ்வாயம்புவ மனு, அவரின் மனைவி  சத்ரூபா மூலம்
மனிதர்களின் இணையற்ற உவமை இல்லா படைப்புகள் உண்டாகின.
இந்த தம்பதிகளின் நடத்தை  மிகவும் உயர்ந்தது.
இன்றும் வேதங்கள் இவர்களின் மரியாதையை புகழ்கின்றன.

ராஜா உத்தானபாதர்  அவருடைய புத்திரர்.  அவருடைய மகன் ஹரி பக்தரான  துருவன்.  அவருடைய இளைய மகன் , பிரியவிரதனை இன்றும் வேதங்கள் புகழ்கின்றன. அவருடைய மகள் தேவஹூதி. அவர் கர்தப் முனிவரின் அன்பு மனைவி. அவர்களுக்குப் பிறந்தவன் கபிலமுனி.
அவர் மிகவும் இரக்கமுள்ளவர். கிருபைகாட்டுபவர். சமர்த்தர்.
தத்துவங்களை   சிந்திப்பதில் வல்லவரான கபிலர் ,
புள்ளியியலை வர்ணித்தார். மனுவின் ஆட்சி நீண்டகாலம்  நடந்தது.
அவர் எல்லா விதத்திலும் இறைவனின் கட்டளையை கடைப் பிடித்தார் .
மனுவிற்கு முதுமையிலும் கேளிக்கை ஆசைகளில் வைராக்கியம் வரவில்லை.
ஹரியின் மேல் பக்தியின்றி இப்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வருந்தினார்.

மனு  தன்  மகனிடம் கட்டாயப்படுத்தி  ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு
மனைவியுடன்  மிகவும் புனிதமான சாதகர்களுக்கு சித்தி தரக்கூடிய
நைமிஷாரண்யத்திற்குச் சென்றார்.
அங்கு முனிவர்களும் சித்தர்களும் வசிக்கிறார்கள்.
அவர்கள் இருவரும் ஞானமும் பக்தியும்  அவதரித்ததுபோல்
ராஜமார்கத்தில்  செல்லும் போது  மிகவும் அழகாகக் காட்சி அளித்தனர்.

அவர்கள் இருவரும் கோமதி நதியின் கரையை அடைந்தனர்.
மகிழ்ச்சியுடன் புனித நதியில் குளித்தனர். அவர்களை  அறநெறியில் சிறந்த
ராஜரிஷி என அறிந்து முனிவர்களும் ரிஷிகளும் சந்திக்க வந்தனர்.

   வனத்தில் எங்கெல்லாம் அழகிய தீர்த்தங்கள் இருந்தனவோ ,
அங்கெல்லாம் அவர்களை அழைத்துச் சென்றனர். அவர் முனிவர்களைப்போன்று  மரவுரி  அணிந்துகொண்டார்.
சாதுக்களின் சமுதாயத்தில் தினந்தோறும் புராணங்களைக் கேட்டுவந்தார்.

   ஓம் நமோ பகவதே வாசுதேவாய  என்ற
பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தை
ஜபித்துக் கொண்டிருந்தார்கள்.
ராஜா-ராணி  இருவருமே  இறைவனின் மீது மனம் ஈடுபட்டிருந்தது.

அவர்கள் பச்சைக்காய்கறிகள், பழங்கள், கிழங்குகளை ஆகாரமாக சாப்பிட்டனர்.  அவர்கள் ஹரியை சந்திக்க தபம் செய்தனர்.
சச்சிதானந்த பிரம்மாவை ஜபித்தனர்.
பின்னர் பழங்கள்  சாப்பிடுவதையும் விட்டு விட்டு தண்ணீரையே ஆகாரமாக சாப்பிட்டனர்.

 ராஜா -ராணி இருவருக்கும் இடைவிடா ஒரே ஆசை ராமச்சந்திர பிரபுவை நேரடியாக  பார்க்கவேண்டும் என்பதே.
பரமார்த்த வாதிகள் ,பிரம்ம ஞானிகள், தத்துவ ஞானிகள்  அந்த ஆதியும் அந்தமும் இல்லா இறைவனைப்பார்ப்பதே தங்கள் ஒரே குறிக்கோளாக
வாழவார்கள்.
வேதங்கள் இதுவும் இல்லை , இதுவும் இல்லை என்றே நிரூபிக்கின்றன.
அவர் ஆனந்த ஸ்வரூபர்,பட்டயமும் பட்டமும் இல்லாதவர். உவமை இல்லாதவர்.  அவரின் அம்ஷமாகத்தான் சிவன் ,விஷ்ணு, பிரம்மா வெளிப்படுகிறார்கள்.
 இப்படிப்பட்ட பகவான் சேவகர்களின் வசத்தில் இருப்பார். பக்தர்களுக்காக லீலை வினோதங்கள் புரிகிறார். வேதங்களில் சொல்லப்பட்டது  உண்மையானால், நம்முடைய ஆசைகள் கட்டாயம் நிறைவேறும்.
இவ்வாறு மனுவிற்கும் அவர் மனைவிக்கும் தண்ணீரே ஆகாரமாக தவம் செய்து  ஆறாயிரம் ஆண்டுகள் கழிந்துவிட்டன. பிறகு  ஏழாயிரம் ஆண்டுகள் அவர்கள் காற்றையே சுவாசித்து வாழ்ந்தனர்.
பத்தாயிரம் ஆண்டுகள் வாயுவை சுவாசிப்பதையும் விட்டுவிட்டனர்.
பிறகு ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தனர். அவர்களுடைய
கடும் தவம் கண்டு மூன்று தேவர்களும் மனுவிடம் வந்தனர்.
அவர்கள் மனுவிற்கு பலவித ஆசைகள் பேராசைகள் காட்டி வரம் கேட்கச் சொன்னார்கள்.

    ஆனால் கணவன் -மனைவி இருவருமே உறுதியாக இருந்தனர்.
அவர்களுடைய உடல் எலும்புச்சட்டமாகைவிட்டது.
ஆனால் அவர்கள் மனதில் வருத்தமே இல்லை.

சகலமும் அறிந்த கடவும் அவர்களை தன தாசனாக உணர்ந்தார்.

அப்பொழுது ஒரு அசரீரி கேட்டது--"வரம் கேள்."

   சவத்தையும் உயிர்ப்பிக்கும் அந்த இனிய குரல் கேட்டு ,
அரசனும் அரசியும் அழகான பழைய தோற்றத்தைப் பெற்றனர்.
இப்பொழுதுதான் அரண்மனையில் இருந்து வந்தது போன்ற தோற்றப்பொலிவு.

காதுகளில் அமிர்தமான குரல் கேட்டு ஆனந்தமடைந்தனர்.
அன்பு இருதயத்தில் அடங்காது.
இறைவனே!நீங்கள் தொண்டர்களுக்கு கற்பகவிருக்ஷம் , காமதேனு போன்றவர்.
உங்களுடைய பாத துகள்களை முப்பெரும் தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு, சிவன் மூவரும்  வணங்குகின்றனர்.
நீங்கள் சரணடைந்தவர்களை காப்பவர். அசைவன-அசையாதன அனைத்திற்கும்  பகவான்.
  நீங்கள் அனாதைகளுக்கு நன்மை அளிப்பவர்.
உங்களுக்கு எங்கள் மேல் அன்பிருந்தால் ,
சிவனின் மனதில் உள்ள உங்கள் வடிவம்  என்ன என்றறியும் வரம் கொடுங்கள். யாரை அடைய முனிவர்கள் முயற்சி எடுக்கிறார்கள். ?
தாங்கள் காகபுசுண்டியின் மனம் என்ற மானசரோவரில் நீந்தும் அன்னப்பறவை. தங்கை உருவமற்றவர்-உருவமில்லாதவர் என்று வேதங்கள் புகழ்கின்றன.தாங்கள் அந்த உருவத்தை எங்களுக்கு காட்டுங்கள்.
   நாங்கள் கண்குளிர உங்களை தரிசிக்கவேண்டும்.
ராஜா-ராணியின் மென்மையான, பணிவான,அன்பு நிறைந்த சொற்களில் மகிழ்ந்து   இறைவன் அவர்களுக்கு முன் தோன்றினார்.
Post a Comment