Friday, January 13, 2017

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -நாற்பது .

ராமசரிதமானஸ் -பாலகாண்டம் -நாற்பது .

     பார்வதி!  ராம் மந்திரத்தின்  சக்தியைக் கொடுத்து ,
காசியில் இறக்கின்ற பிராணிகளுக்கு  முக்தி கொடுக்கிறேன்.
     என் பிரபு  ரகுகுலத்தில் மேன்மை பொருந்திய
 தசரத குமாரன்
பக்தர்களுக்கு நன்மை அளிப்பவன் ,
அயோத்திய அரசன் ராமன் தான் .

விருப்பமின்றி அவருடைய பெயரைச் சொன்னாலும் ,
மனிதனின் பல ஜன்ம பாபங்கள் எரிந்துவிடுகின்றன.
    பக்தன்மரியாதையுடன் சொன்னால்
உலகம் என்ற பெருங்கடலை
பசுமாட்டின் கால் குளம்பு பள்ளம் கடப்பது  போல்
 மிக எளிதாக கடந்துவிடுவான்.
.
ஹே பார்வதி!அதே பரமாத்மா ஸ்ரீ ராமச்சந்திரர்.
அவரிடத்தில் ஒரு பிரமை பார்க்கக் கிடைக்கிறது .
நேஈ இப்படி கூறுவது மிகவும் சரி யல்ல.
இவ்வாறு சந்தேகம் வந்தாலே மனிதனுடைய ஞானம் , வைராக்கியம்
போன்ற நல்ல குணங்கள் போய்விடுகின்றன.

 சிவனின் பிரமையைப் போக்கும் சொற்களைக்  கேட்டு
பார்வதியின் மனதில் எழுந்த தவறான தர்க்கங்கள் போய்விட்டன.
ஸ்ரீ ராமர் மீது அன்பும் நம்பிக்கையும் அதிகரித்தது.
பொய்யான கற்பனை  அசம்பாவித கற்பனை போய்விட்டது.
மீண்டும் மீண்டும் சிவபகவானின் காலில் விழுந்து தாமரை போன்ற மென்மையான கரங்களால் வணங்கி , அன்பு ரசம் பொங்க,
அழகான சொற்களால் பேசினாள்:--
       நாதா!  உங்கள் கிருபையால் என் துன்பம் போய் விட்டது.
உங்கள் சரணங்களின்  அனுக்ரகத்தால்  சுகமாக இருக்கிறேன்.
உங்களுடைய நிலவின் கதிர்கள் போன்ற குளிர்ந்த சொற்களால் ,
என்னுடைய அறியாமை என்ற சரத்ருதுவின் வெயிலின் வெப்பம் போய்விட்டது.
நீங்கள் என் சந்தேகத்தைப் போக்கிவிட்டீர்கள். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்
யதார்த்த ஸ்வரூபம் அறிதுகொண்டேன். அது உங்கள் கிருபையே.
நான் பெண்ணாக இருப்பதால் என் குணமே முட்டாள்தனமானது.
அக்ன்ஞானமானது. இருந்தாலும் நீங்கள் என்னை உங்களது தாசியாக ஏற்று
நான் கேட்டதற்கு பதில் சொல்லுங்கள். ராமர் பிரம்மா . ஞானஸ்வரூபர். அவினாசி, எல்லோரிடத்திலும் இல்லாமல் எல்லோரின் ஹிருதயம் என்ற நகரித்தில் வாழ்கிறார்.

 நாதா !அவர் மனிதனாக ஏன்  அவதரித்தார்?
தர்மத்தின் கொடி  பிடித்திருக்கும்  பிரபுவே!
எனக்கு ராமரின் கதையை சொல்லுங்கள்.

பார்வதியின் மிகவும் பணிவான வேண்டுதலையும் ,
ராமர் மீது தேவியின்  பவித்திர அன்பையும் கண்டு
காமதேவனின் எதிரி, இயற்கையிலேயே நல்லவரான
கிருபையின் இருப்பிடமான சிவன் மிகவும் மகிழ்ந்தார்.
பிறகு பலவிதமாக பார்வதியின் பெருமையைக்கூறி
சொன்னார் :--பார்வதி! ஸ்ரீ ராமச்சந்திரரின்
 மங்களம் நிறைந்த கதையைக் கேள்.
இதை  காகபுசுண்டி விரிவாகக் கூறினார்.
பறவைகளின் ராஜா கருடர் கேட்டார்.
அந்த உயர்ந்த உரையாடல் எப்படி நடந்தது என்பதையும் சொல்கிறேன்.
ராமரின் அவதாரம் மிகவும் அழகானது .
பவித்திரமானது. பாவங்களைப் போக்கக் கூடியது. 

No comments: