Wednesday, January 11, 2017

ராம சரித மானஸ்--பாலகாண்டம்-முப்பத்தெட்டு

ராம சரித மானஸ்--பாலகாண்டம்-முப்பத்தெட்டு

   
      பகவானை  அறியாமல்
 பொய்யும் உண்மை போல் தோன்றும்.
கயிறும் பாம்பு போல் தோன்றும்.
பகவானை அறிந்த  பின்  உலகம் அப்படியே
மறைகிறது , எப்படி விழித்தபின்
கனவின் பிரமை போய்விடுகிறது.
 நான் ராமனின் பாலவடிவத்தை  வணங்குகிறேன்.
அவனுடைய பெயரை ஜெபித்தாலே
எல்லா வெற்றிகளும் இயற்கையாகக் கிடைக்கிறது.

     மங்களங்களின்  இருப்பிடம் , அமங்களங்களைப்போக்குகின்ற
தசரதனின் முற்றத்தில் விளையாடுகிற பாலகன் வடிவத்தில்
இருக்கிற ராமர்  என் மேல் கிருபை காட்டட்டும்.

      திரிபுராசுரனை வதம் செய்த சிவன் , ராமரை வணங்கி
அமிர்தம் போன்ற சொற்களால்  பேசினார் ---
மலைமகள் பார்வதிதேவியே !நீ பிறவிப்பயன் அடைந்துவிட்டாய்.
உன்னைப்போன்று  உபகாரி  யாரும்  இல்லை.

   நீ கேட்ட  ராமரின்  கதை, அனைத்து உலகத்தையும்
பரிசுத்தம் செய்கின்ற கங்கையைப்போன்றது.
நீ உலகத்திற்கு நன்மை செய்யவே கேள்வி கேட்டுள்ளாய் .
நீ ராமனின் சரணங்களை நேசிப்பவள்.

   பார்வதி தேவி!என்னுடைய எண்ணத்தில்
ராமரின் கிருபையால் உன்மீது
கனவிலும்  சோகம்,மோகம்,சந்தேகம் ,பிரமை கிடையாது.

   நீ   சந்தேகப்பட்டு   கேட்ட ராமரின் கதையை  சொல்வதாலும் ,

கேட்பதாலும் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்.
பகவானின்  கதையை யார் கேட்கவில்லையோ ,
அவர்கள் காதுகளின் துளைகள்  பாம்பு புற்று போன்றன.

    சாதுக்களைப் பார்க்காத கண்கள் ,
மயில் இறகுகளில் தென்படுகின்ற
பொய்க்  கண்கள் போன்றவை.
குருவையும் ராமரையும் வணங்காத தலை  கசப்பான
சுரக்காய் குடிக்கையின் தலைபோன்றது.
 பகவானின் பக்திக்கு  தன் மனதில் இடமளிக்காதவர்கள்
உயிர்வாழ்ந்தும்  பிணத்திற்குச் சமமானவர்கள்.
ஸ்ரீ ராமரின்  புகழைப் பாடாத நாக்கு , தவளையின் நாக்கு போன்றது.

பகவானின் புகழ் கேட்டு மகிழாதவர்களின்  இதயங்கள் இடிபோன்று கடுமையானது , கொடூரமானது.
  ராமச்சந்திரரின்  லீலைகளைக் கேள்.
அவை தேவர்களுக்கு நன்மை பயப்பவை.
அரக்கர்களை சிறப்பாக மோகிக்கக்  கூடியன.

 ராமரின்  கதை  காமதேனு போன்று சேவை செய்வதால் ,
எல்லா சுகங்களையும் கொடுக்கக் கூடியவை.
நல்ல சத்புருஷர்களுடைய சமுதாயம் தான் ,
தேவர்களின் லோகம்.
ஆகையால் இக்கதை எல்லோரும் கேட்பார்கள்.

 ஸ்ரீ ராமரின் கதை , ஐயம் என்ற பறவைகளை பறக்கச்செய்யும்
யானையின் கைதட்டல் போன்றது. அவரின் கதை கலியுகம் என்ற மரத்தை வெட்டும்  கொடாளி ஆகும்.
மலைமகளே! இதை நீ மரியாதையுடன் கேள்.

ராமரின் கதைகள் முடிவில்லாதவை. அவரின் பெயர்,குணம் ,பாத்திரம்,
பிறவி ,செயல்,எல்லாமே  எண்ணிக்கையில் அடங்காதவை.
அவரின் புகழ் ,குணம், கதை அனைத்துமே முடிவில்லாதவை.

 நான் உன்னுடைய அதிக அன்பு  அறிந்து ,
 நான் கேட்ட கதையை அப்படியே சொல்கிறேன்.
பார்வதி !உன் கேள்வி இயற்கையாகவே ,
அழகானது. சுகம் தரக்கூடியது. சாதுக்களால் விரும்பக்கூடியது.
எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
 நீ ஆசைப்பட்டு சொன்னதுதான் எனக்குப் பிடிக்கவில்லை.
இந்த ராமர் வேறையா ?
 வேதங்களும் புராணங்களும் புகழ் பாடும் ராமர் வேறையா
 என்று  கேட்கிறாய் .
   மோகம்  என்ற பிசாசினால் பீடிக்கப்பட்டவர்கள் ,
போலிகள், இறைவனை விரும்பாதவர்கள் ,
உண்மை போய் அறியாதவர்கள் , தாழ்ந்த மனிதர்கள்  தான்
இப்படி சொல்வார்கள்  ,கேட்பார்கள்.
 அஞ்ஞானிகள் , முட்டாள்கள், குருடர்கள், அதிர்ஷ்டமில்லாதவர்கள் ,
மற்றும் மனம் என்ற கண்ணாடியில் ஆசைகள் என்ற அகழி உள்ளவர்கள் ,
விபச்சாரிகள், ஏமாற்றுக்காரர்கள், மிகவும் கொடூரமானவர்கள்
 கனவிலும் சாதுக்களை தரிசிக்க முடியாது.

  தன்னுடைய லாப-நஷ்டம் அறியாதவர்கள் தான் இப்படிப்பட்ட
வேதங்களுக்கு எதிரான பேச்சுக்களைப் பேசுவார்கள்.
இதயம் என்ற கண்ணாடி அழுக்காக இருப்பவர்களும் ,
குருடர்களும் அப்பாவி ராமரின் வடிவத்தை எப்படி பார்ப்பார்கள்?
உருவமற்ற-உருவமுள்ள இறைவனின் வேறுபாட்டை அறியும் ஞானமில்லாதவர்கள் , பல கற்பனைகளை உளறுபவர்கள்,
மாயை வயப்பட்டு சுற்றுபவர்கள் , அவர்கள் எதையும் சொல்வார்கள்.
    வாயு ரோகமுள்ளவர்கள், பூதத்தின் வசப்பட்டவர்கள், போதையில் மூழ்கியவர்கள் , சிந்தித்துப் பேசமாட்டார்கள்.
அதிகமோகம் என்ற போதையில் மூழ்கி இருப்பவர்கள், சொல்வதைக் கேட்கக்கூடாது.
   உன் மனதில் இதை எல்லாம் எண்ணி மோகத்தை விட்டுவிடு.
ஸ்ரீ ராமரை பஜனை செய்.  பார்வதி! பிரமை என்ற இருளைப்போக்க
சூரியக்கதிர் போன்ற என் சொற்களைக்  கேள்.

 உருவமற்ற வழிபாடு -உருவவழிபாடு
  இரண்டிலும் எவ்வித வேறுபாடும் இல்லை.
முனிவர்கள்,புராணங்கள்,பண்டிதர்கள், வேதங்கள்
எல்லாமே இப்படித்தான் சொல்கின்றன.
உருவமற்றவர்கள், வெளிப்படாதவர்கள், பிறவியில்லாதவர்கள்
அவர்கள்தான் பக்தர்களின் அன்பு வயப்பட்டு உருவ
வழிபாட்டில்  ஈடுபடுகின்றனர்.

உருவமற்றவை உருவமுள்ளவையாக எப்படி மாறுகின்றனர். ?
பனிக்கும் தண்ணீருக்கும் வேறுபாடில்லை.
இரண்டுமே தண்ணீர் தான்.
இவ்வாறே உருவ  மற்ற  வழிபாடும் ,
உருவமுள்ள வழிபாடும் ஒன்றே.

அவனுடைய பெயர் பிரமை  என்ற  இருளைப்  போக்கும்   சூரியன்.
அதற்கு மோகத்தின் கதை என்று எப்படி சொல்லமுடியும்.

 ஸ்ரீ ராமர் சச்சிதானந்த வடிவத்தில் சூரியன்.
அங்கு மோகம் என்ற இரவு சிறிதளவும் இருக்காது.
அவை இயற்கையிலேயே  ஒளிவடிவமான  இறைவன்.
அங்கு அறிவியல் என்ற காலை உதயமாகாது.
அறியாமை என்ற  இரவு ஏற்பட்டால் தானே ,
விஞ்ஞானம்  என்ற காலை உண்டாகும்.
இறைவன் ஞானஸ்வரூபம்.

மகிழ்ச்சி, சோகம்,ஞானம், ஆணவம், கர்வம் ஆகியவை
எல்லா ஜீவன்களின் தர்மம் ஆகும்.
ஸ்ரீ ராமர் எங்கும் வியாபித்திருக்கும் பகவான்,
பரமானந்த ஸ்வரூபமமான  பராத்பர பிரபு,
புராண புருஷர்.   இந்த விஷயத்தை
 உலகம் முழுவதும் உள்ளவர்கள்
அறிவார்கள்.
 புராணங்களில் புகழ் பெற்றவர்,
 ஒளியின் களஞ்சியம்,
எல்லாவடிவங்களிலும்     காட்சி அளிப்பவர்.
ஜீவன் ,மாயை, மற்றும் உலகத்திற்கே இறைவன் .
அவர் ரகுகுல மணி ராமச்சந்திரர்.
அவர்தான் எனக்கு பகவான்.
என்று சிவன் கூறி வணங்கினார்.
  அஞ்ஞானிகள்  தன் பிரமையினால் ,
அறிவதில்லை . அந்த முட்டாள்கள் ராமர் மீது
குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகாயத்தில் மேகம் சூழ்ந்து சூரியனை மறைத்தால் ,
அஞ்ஞானிகள் மேகங்கள் சூரியனை  மறைத்துவிட்டது என்பர்.

மனிதன் கண்களில் விரலை வைத்து
 பார்த்தால்  இரண்டு நிலவுகள் வெளிப்படும்.
ஸ்ரீ ராமரின் விஷயத்தில் இவ்வாறு மோகத்தில்
கற்பனை செய்வது ஆகாயத்தில் இருளையும்,
புகையையும் ,தூசியும் தென்படுவது போன்றது.
ஆகாயம் நிர்மலமானது, எவ்வித பூச்சும் இல்லாதது.

   விஷயவாசனை, புலன்கள், புலன்களின் தேவதைகள்,
ஜீவாத்மா ஆகியவை ஒன்றுக்கொன்று  தொடர்புடையவை.

புலன்களால் விஷயவாசனையும் ,
புலன்களை புலன்களின் தேவதைகளாலும்
புலன்களின் உணர்வுகள் ஜீவாத்மாவில்  இருந்தும்
ஒளிபெறுகிறது .

இந்த எல்லாவற்றிற்கும் மேலான ஒளிவேளியிடுபவர்  , ஒளி வழங்குபவர் அநாதிபிரம்மம் அயோத்தியாவின் அரசர்  ஸ்ரீ ராமச்சந்திரர்.
 இந்த உலகம் ஒளி  தருவது. இந்த ராமச்சந்திரர்ஒளிதருபவர்.
அவர் மாயையின் கடவுள். ஞானம் மற்றும் குணம் பொருந்தியவர்.

அவருடைய  ஆட்சியில்   மோகத்தின் உதவி  பெற்று
 ஜடமாயை கூட உண்மைபோல் தோன்றுகிறது.
சிப்பியில் வெள்ளி  கானல் நீர் சூரிய கதிர்களில் ,
ஒரு பொய்யான தோற்றமே.
 இருந்தாலும் இந்த பிரம்மையை
போக்க முடியாது.

 இவ்வாறு இந்த  உலகம் பகவானின் அடைக்கலத்தில் இருக்கிறது.
இது அசத்தியமானது. இருந்தாலும் வருத்தம் அளிக்கிறது.
கனவில் யாராவது தலையை வெட்டினால்  எழுந்திருக்கும் வரை துன்பம் விலகாது.
இந்தமாதிரி  பிரமை போக்கக் கூடியவர் கிருபை காட்டும் ரகுநாதர் தான்.
அவருடைய ஆரம்பம் -முடிவை யாரும் அறியவில்லை.
வேதங்களில்  ஒரு யூ கத்தின் அடிப்படையில் பாடப்பட்டிருக்கின்றன.

No comments: