Friday, December 16, 2016

ராமசரிதமானஸ் --பாலகாண்டம் -௮ எட்டு

ராமசரிதமானஸ்  --பாலகாண்டம் -௮  எட்டு


                                                     ராமசரிதமானஸ் -பாலகாண்டம் --A---துளசிதாஸ் .


         
       பவித்திரமான   குணமுள்ள
       சரஸ்வதி  தேவியையும்
      கங்கா தேவியையும்
       வணங்குகிறேன்.
     கங்கையில்  குளிப்பதால் ,
      அதன்  நீரைப் பருகுவதால்
      பாபங்கள்  போகின்றன.
      சரஸ்வதி  தேவியின்
      குணம்  கேட்பதால்
     சொல்வதால்  
    அறிஞாமை  அகல்கிறது .


        நான் மகேஷ்வரரையும் ,
       பார்வதி தேவியையும்
       வணங்குகிறேன் .
       அவர்கள்  எனக்கு  குருவும் ,
     பெற்றோரும் ஆவர்.
      அவர்கள்   ஏழை பங்காளர்கள்,
      தினம் தோறும் தானம் அளிப்பவர்கள்.
     அவர்கள்  சீதையின்  கணவர்
     ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவின்
      சுவாமி,சேவகர்  மற்றும்  தோழர்.
    துளசிதாசராகிய  எனக்கு
   எல்லாவிதத்திலும் நன்மை
    அளிப்பவர்.
    உதவுபவர்.
   சிவ -பார்வதி இருவரும் ,
   கலியுகத்தைப் பார்த்து ,
 உலக  நன்மைக்காக ,
சாபர் மந்திரத்தை  எழுதினர்.
 அதன்  மந்திர எழுத்துக்கள்
ஒன்றுக்கொன்று  பொருந்தாது.
 பொருளும்  இருக்காது.
அவை ஜபிக்கப் படுவதும்  இல்லை.
 இருந்தாலும்
அதன் பிரபாவம்
(அதாவது  ஆற்றல் )
வெளிப்படையானது.

அந்த  உமாபதி
என்மேல்  மகிழ்ந்து ,
அருள்புரிந்து
இந்த  ஸ்ரீ ராமரின்  கதையை
ஆனந்தமுள்ளதாகவும்
மங்களங்களைக் கொடுக்கும்
மூலமாக  ஆக்கிவிடுவார்.

  பார்வதி -சிவபெருமான்
 இருவரையும்  துத்திது,
 அவர்களின் பிரசாதம்
 பெற்று மிகவிருப்பத்துடன்
முழு  மனதுடன்
 ஸ்ரீ ராமச்சந்திரரின்
 புகழை  வர்ணிக்கிறேன்.
சிவபகவானின்
  கிருபையால்  என்  கவிதை
நக்ஷத்திரங்களுடன்  கூடிய
 முழு  நிலவுகொண்ட இரவு
போல்  மிகவும் அழகாக இருக்கும்.
இந்தக் கதையை
அன்புடனும்  மிகவும்
எச்சரிக்கையுடனும்
சொல்பவர்களுக்கும்
கேட்பவர்களுக்கும்
கலியுகத்தின்
பாவங்களிலிருந்து
முக்தி  பெற்று
ஸ்ரீ ராமச்சந்திரரின்
அன்பும் அருளும்
 ஆசிகளும்  கிடைக்கும்.
   ஸ்ரீ  சிவபகவானும் ,பார்வதியும்
  கனவில் உண்மையில் மகிழ்ந்தாலும்
 என்னுடைய  இந்த மக்கள் மொழி கவிதை
 மிகவும்  மகிமை பெறும்.
அது மெய்யாகிவிடும்.
   நான் அதிகம்  புனிதமான
 அயோத்யாபுரி மற்றும்
கலியுகங்களின்
பாவங்கள்  போக்கும்
 ஸ்ரீ சர்யு நதியை  வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமச்சந்திரரின்
   அதிக  அன்புக்குப்
பாத்திரமான அவதபுரியின்
மக்களையும்  வணங்குகிறேன்.
அவர்கள்  சீதையை நிந்தித்த
 பாவக் கூட்டங்களை அழித்து
அவரை துன்பமின்றி  செய்து
  தன் உலகத்தில் குடியமர்த்திக் கொண்டார்.
நான்  கௌசல்யா வடிவமான
 கிழக்கு திசையையும்
வணங்குகிறேன்.
அவரின்  புகழ் உலகம்
முழுவதும் வியாபித்திருக்கிறது.


கிழக்கு திசையிலிருந்து
 உலகத்தினருக்காக  சுகமளிக்கவும்
துஷ்டர்களாகிய  தாமரைக்காக
 பனிபோல் ஸ்ரீ ராமச்சந்திரரின்
அழகான நிலவு  தோன்றியது.
   நான் வாக்காலும்
மனதாலும் செயலாலும்
புண்ணியமும் நல்லதை
உலகுக்கு செய்யும்
  மூர்த்தியாகக்   கருதி
அனைத்து ராணிகளுடன் சேர்த்து
 ராஜா  தசரதரை  வணங்குகிறேன்.
அவர் என்னை அவர்
 மகனின் சேவகன்  என்பதறிந்து
 அவரைப்படைத்த
பிரம்மாவும் பெருமை பெற்றதை
 அறிந்து என்னை
அருளட்டும்.
ராமரின்  பெற்றோர் என்பதால்
மகிமை எல்லைக்குள் அடங்காது.
  அவதநாட்டு மன்னன்
 தசரதரை  வணங்குகிறேன்.
மன்னருக்கு தன் மகன்
 ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மேல்
உண்மையான  அன்பு  இருந்தது.
அவர் ராமரைப் பிரிந்ததுமே
தன் அன்பு உடலை
மிகத் துச்சமாகக் கருதி  துறந்தார்.
 நான்  என் குடும்பத்துடன்
 ராஜா ஜனகரை வணங்குகிறேன் .
அவருக்கு ஸ்ரீ ராமர் மேல்
அதிக அன்பு இருந்தது.
அதை தன் யோகத்தினாலும்
போகத்தினாலும் மறைத்துவைத்திருந்தார்.
ஆனால் ஸ்ரீ ராமரைக் கண்டதுமே
வெளிப்பட்டுவிட்டது.
  ஸ்ரீ ராமரின்  நான்கு  சகோதர்களில்
முதலில்  பரதனை வணங்குகிறேன்.
அவருடைய நியமங்கள் விரதங்களின்
மகிமையை வர்ணிப்பது அரிது.
பரதனின்  மனமாகிய  வண்டு எப்பொழுதும்
ராமரின்  பாத கமலங்கலையே சுற்றிசுற்றிவரும்.
ஒருபொழுதும்  அதைவிட்டு  அகலாது.
 குளிர்ச்சியும் ,அழகும் ,பக்தர்களுக்கு
 சுகமும் தருகின்ற
லக்ஷ்மணனின் பாத கமலங்களை
வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமச்சந்திரரின்   புகழ்க்கொடி
 பறக்க ஸ்ரீ லக்ஷ்மணன்
கொடிக்கம்பம் போல் விளங்கினார்.
  ஆயிரம்  தலைகொண்ட  பூமியைத்
 தாங்கக் கூடிய
சேஷ்பகவனின்  அவதாரமாக
 லக்ஷ்மணன்  பூலோகத்தின்
பயம்  போக்க  அவதரித்தார்.
.
அவர் குணச்சுரங்கம்,
கிருபைக்கடல் .
 நல்ல நண்பர்களுக்கு
ஆனந்தம்  வழங்கக் கூடியவர்,
எப்பொழுதும்  என்  மேல்
 மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
   மிகப்பெரிய  வீரரும் ,
நல்லொழுக்க சீலரும் ,
ஸ்ரீ பரதரைப் பின்
பற்றுவருமான
சத்துருக்னணன்
 பாத கமலங்களையும்
வணங்குகிறேன்.
ஸ்ரீ ராமச்சந்திரரே புகழ்ந்து   வர்ணித்த
ஸ்ரீ ஹனுமானை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஹனுமான்  துஷ்டர்கள்  என்ற
வனத்தை எரிக்கும் தீ.
ஆழ்ந்த  அறிவு  மிக்கவர்.
அவரின்  இதயம்  என்ற  கட்டிடத்தில்
வில்  அம்பு ஏந்திய ,
ஸ்ரீராமர்  அமர்ந்திருக்கிறார்.

தங்கள்   தாழ்ந்த பிறவியிலும்
 ஸ்ரீராமரின்  அருள்பெற்ற
 சுக்ரீவர்,கரடிகளின்  அரசர்  ஜாம்பவான் ,ராக்ஷசர்களின்   அரசன் விபீஷணன், அங்கதன் ,
மற்றும்  வானர சமுதாயம்,
அனைத்து
அழகான சரணங்களையும்
வணங்குகிறேன்.

ராமரின்  உபாசகர்களான
 மிருகங்கள், பறவைகள், தேவர்கள், அசுரர்கள்
 அனைவரையும்  வணங்குகிறேன் .
ஸ்ரீராமருடைய  பலன் எதிர்பாரா
சேவகர்கள் அனைவரையும்
 வணங்குகிறேன்.
  நாரதர் , சுக பிரம்மம் , சனகர் போன்ற
முனீஸ்வரர் களையும்  வணங்குகிறேன்.
  உங்கள்  எல்லோரும்
என்னை தாசானுதாசனாக
ஏற்று  வணங்குகிறேன்.
கிருபைகாட்டுங்கள்.
   களங்கமற்ற  தூய  அறிவு
 தருவதற்காக   ராஜா  ஜனகரின் புதல்வி

ஸ்ரீ  ராமச்சந்திரரின்   பிரியமானவள் ,
ஜானகி அவர்களின்
இரண்டு  தாமரைப் பாதங்களையும்
வணங்குகிறேன்.
  பிறகு நான்  மனதாலும்,
வாக்காலும் ,
செயலாலும்
 கமலக் கண்ணன் ,
வில்-அம்பு தாரி ,
பக்தர்களின் ஆபத்து -கஷ்டங்களைப்
போக்குகின்ற ,
பக்தர்களுக்கு நலமும்  சுகமும்  தருகின்ற ,
 ஸ்ரீ ராமரை ,
   எல்லா சாமார்த்தியமும்
வல்லமையும் கொண்டவரை ,
ராமச்சந்திரரை ,
அவரின் சரணகமலங்களை
 வணங்குகிறேன்.
 ஏழை  -துன்பப்பட்டவர்களின்  மீது
மிகவும்  அன்பான  ,
 சொல்.பொருள், வேறுபட்டாலும்
 தண்ணீர் மேலும்  தண்ணீரின்  அலைகள்  போன்று பிரிக்கமுடியாதவர். ஒன்றானவர்.

  ராம  நாமம்  பிரம்மா ,
விஷ்ணு,சிவன்  மூன்றும்
சேர்ந்தவடிவம் .
தீ, சூரியன் ,நிலவு   மூன்றும்
 சேர்ந்ததே  ராமநாமம்.
 ர.ஆ,ம  என்ற மூன்றேழுத்து   பீஜம். (மூலம்).
அந்த   நாமம்    வேதங்களுக்கு   உயிர்.
 நிற்குணம், ஒப்புமை இல்லாதது,
குணங்களின்   கிடங்கு.

 ராமநாமத்தின்  இந்த  மகாமந்திரத்தை
  சிவன் அவர்கள்  ஜபிக்கிறார்.
அதன்மூலமாக  ,
அதை  உபதேசித்ததின்  காரணமாக,
காசி  முக்திக்கு  காரணமாகும்.
அந்த ராம  நாம  மஹிமையை
கணேசர்  அறிவார்.
அதன்  மஹிமையால்  தான்
 எல்லா  இறைவனின் பூஜைக்கு  முன்னால்
    முதல்  தெய்வமாக  விநாயகர்
   பூஜிக்கப்படுகிறார்.

  ராம நாம  மகிமையை
 அறிந்த  ஆதி  கவி  வால்மீகி ,
 ராமநாமத்தின்  பிரதாபத்தை
அறிந்தவர்.
 அவர் ராமநாமத்தை " "மரா " என்று
 மாற்றி  ஜபித்தே
 பரிசுத்தமாகிவிட்டார்.

சிவா பகவான்
  ராம  நாமம்
  ஆயிரம்  பெயருக்கு  சமம்  என்கிறார்.
பார்வதி  எப்பொழுதும்
 தன் கணவரின்  நாம  ஜபத்துடன்
ராம நாம ஜபமும் செய்வது  வழக்கம்.
  பார்வதி தேவியின் நாம ஜப  ஈடுபாட்டால் ,
 ராம நாமத்தின்  அன்பால்  ,
அவரை பெண்களில் மிக  உயர்வாகக்  கருதி ,
தன் மனைவியாக்கிக் கொண்டார்.
ராமநாமத்தின்  மகிமையை சிவபெருமான்
அறிந்ததால்  தான்  ,
 விஷத்தை  அருந்திய  பின்னும்
அமிர்தத்தின்  பலனை அடைந்தார்.

ஸ்ரீ  ராமரின்  பக்தி
 மழைகாலம் போன்றது.
 உத்தமமான  சேவகர்கள்
  நெல் ,ராமநாமத்தின்
  ஈரெழுத்து க்கள்  ஆவணி-புரட்டாசி
என்ற  இரு  மாதங்கள்.
இரண்டு  எழுத்துக்களும் இனிமையானது .
அழகானது.
எழுத்துவரிசைகளில்
இரண்டு கண்கள்  போன்றது.
பக்தர்களுக்கு வாழ்க்கை போன்றது.
தியானம்  செய்ய  எல்லோருக்கும்  எளிதானது.
 சுகமளிக்கக்கூடியது.
  இந்த உலகத்தில்  லாபத்தையும்
பரலோகத்தில் நிர்வகிக்கவும்  வழிகாட்டுவது.
இறைவனின் தெய்வீக
இருப்பிடத்தில் ,
தெய்வீக  உடலுடன்
எப்பொழுதும்  இறைவனின்
 சேவையில்  நியமிக்க வல்லது.

 இந்தராம    நாமம்  சொல்லவும் ,
 கேட்கவும் ,
தியானிக்கவும் மிகவும்
அழகானது.
மிகவும்  இனிமையானது.
 ராமநாமமும்,
 ராமரும் ,
லக்ஷ்மணரும்
 துளசிதாசருக்குச்
  சமமான  அன்பானவர்கள்.
   இந்த இரண்டு  எழுத்துக்களுமே
 எப்பொழுதும் ஒரே  உருவமானது.
ஒரே  ரசமானது.
இந்த  இரண்டு  எழுத்துகளுமே
 நரனும்  நாராயணனும்
போன்று  அழகான  சகோதரர்கள்.
இவர்கள்  உலகத்தை  காக்கிறவர்கள் .
பக்த  ரக்ஷகர்கள்.
 பக்தி  உருவமான  அழகான
 பெண்களின் அழகான   காதணிகள்.
 உலக நன்மைக்கான
சூரியனும் சந்திரனுமாவார்கள்.
   இவர்கள்  மோக்ஷம்  வடிவமான
  அமிர்தத்தின்  ருசியும் ,
திருப்தியும் போன்றவர்கள்.
ஆமை,  ஆதி சேஷன்  போன்று
பூமியைத் தாங்கக்  கூடியவர்கள்.
பக்தர்களின்  மனமென்ற
அழகான  தாமரையில்
ரீங்காரமிடும்  வண்டுகள் போன்றவர்கள்.
நாக்கு  என்ற  யசோதைக்கு
ஸ்ரீ  கிருஷ்ணர்  பலராமன்  போன்று
   மிக பிரிய மானவைகள்.
"ராம"  என்ற ஈரெழுத் துக்கள்
ஒன்று  வெண்கொற்றக் குடை .
மற்றொன்று மணிமகுடம்.

   பெயரும் , பெயர் பெற்றவரும்
  ஒன்றானவர்கள்.
  இருவருக்குள்  , பரஸ்பரமான
   சுவாமி, சேவகன்  போன்ற அன்பு உண்டு.
 ராமநாமமும் , உருவமும் இரண்டுமே பட்டயங்கள்.
 இரண்டுமே  வர்ணிக்க இயலாதவை.
 முடிவற்றவை. மிகப் பழமையானவை.
  தூய அறிவால்தான்
இவைகளின் வடிவத்தை   அறிய முடியும்.
  பெயர்,வடிவம் இரண்டில் ஒன்றை
 பெரிது  ,ஒன்றை  சிறிது  என்பது  குற்றமாகும்.
வடிவம் பெயரின் ஆதிக்கத்தில் உள்ளது.
பெயரின்றி வடிவத்தின்  ஞானம் உண்டாகமுடியாது.
எந்த    சிறப்பு  வடிவமும்  அதன்  பெயரின்றி
உள்ளங்கையில்  வைத்தாலும் உணரமுடியாது.
உருவமின்றி  நாமத்தை  மட்டும்  ஜபித்தாலும்
 மிக விசேஷமான அன்புடன்
அந்த வடிவம்
இதயத்தில் வந்து விடும்.
 உருவம் பெயர் இரண்டின்
சிறப்பின்  கதை  சொல்லமுடியாது.
அதைப்புரிதல் ,அறிதல் ,தெளிதல்
சுகானுபவம் . சுகம் அளிக்கக் கூடியது.
ஆனால்  அதை  வர்ணிக்க  இயலாது.
உருவமற்ற உருவமுள்ள  இரண்டுக்கும்
இடையில்  சாக்ஷியாக  இருப்பது பெயரே.
இரண்டிற்கும் யதார்த்தமான ஞானத்தைக்
கொடுக்கக் கூடிய மிக கெட்டிக்கார
மொழிபெயர்ப்பாளர்.
    ராமநாமம்  மணிவிளக்கு போன்றது.
 நீ  உள்ளும் புறமும்
  வெளிச்சமான ஞானத்தை
அறிய விரும்பினால்,
 நாக்கில் "ராமநாமம்"  என்ற மணிவிளக்கை
ஏற்றிவிடு. அதாவது  ராமநாமம் நமக்கு
அக-புற அழுக்களில் இருந்து  நம்மைக்
காக்கும்  ஆற்றல்  பெற்றது.
பிரம்மாவினால்  படைக்கப்பட்ட
இந்த பிரபஞ்சத்தில்
நன்கு  விடுப்பட்ட  வைராக்கியர்களும்
சந்நியாசிகளும்
இந்த ராமநாம  ஜபத்தை
சொல்லிக்கொண்டே  எழுகிறார்கள்.
பெயரும் வடிவமும் இல்லாத
இணையற்ற  இறைவனை ,
உவமை இல்லாத  இறைவனை
வர்ணிக்க இயலாத
பெயரற்ற பிரம்மானந்தத்தை
அனுபவிக்கிறார்கள்.
  இறைவனின்  மறைந்த  ரஹசியத்தை
அறிய  விரும்புபவர்களும்
நாம  ஜபம்  செய்து  அறிந்து கொள்கிறார்கள்.
லௌகீக  சுகத்தை  விரும்புகின்ற சாதகர்களும்
நாம ஒளிதீபம்  ஏற்றி ஜபம் செய்து எண்வகை
சித்திகளைப்  பெறுகிறார்கள்.


அணிமா, கரீமா,மஹிமாபோன்ற
எண்வகை சித்திகளைப்  பெறுகிறார்கள்.

   துன்புற்ற ,தன சங்கடங்களால்  பயந்த
பக்தர்களும்  நாம ஜபம் செய்கிறார்கள்.
அதன் பலனாக  அவர்களது தீரா  கஷ்டங்களும்
பிணிகளும்  சூரியனைக் கண்ட
 பனிபோல்  விலகுகின்றன.
அவர்கள் சுகமுள்ளவர்களாக
ஆனந்தமடைகின்றனர்.
வையகத்தில்  நான்குவித
ராம  பக்தர்கள்  இருக்கிறார்கள்.
        ௧. செல்வம் லௌகீக சுகங்கள்  விரும்பும்  ராம பக்தர்கள்.
        ௨.  தன் சங்கடங்களைப் போக்க விரும்பும்  பக்தர்கள்,
        ௩. இறைவனை  அறியும்
             ஆசையால் விருப்பத்தால் உள்ள பக்தர்கள்
         ௪. இறை தத்துவம் உணர்ந்து  இயற்கையாக வே
              இறைவன் பால்   ஈடுபாடு  கொண்ட      பக்தர்கள்.

                    இந்த   நால்வருமே  புண்ணியாத்துமாக்கள்.
                    பாவமில்லாதவர்கள். 
Post a Comment