Friday, December 9, 2016

பாலகாண்டம் --7 ராமசரிதமானஸ் -துளசிதாஸ் .

                             பாலகாண்டம் --7 ராமசரிதமானஸ் -துளசிதாஸ் .
------------------------------------------------------------------------------------------------------------------------

          ரத்தினங்கள், மாணிக்கங்கள் ,
          முத்துக்களின்  அழகு
        பாம்பு , மலை, யானைக்கு
       அழகு  கொடுக்காது,
      அவைகள்  அரசனின்  மகுடம்
                  அல்லது
           இளம் பெண்ணின்
     அணிகலன்களில்  சேர்ந்தால் தான்
     அதிகம் ஜொலித்து  அழகு  கூடும்.

       இவ்வாறே    சிறந்த  கவியின்  படைப்புகள்
       அவைகளுடைய  எண்ணம் , பிரச்சாரம்,
       அதில்  சொல்லப்பட்ட  ஆதர்சமான  கருத்துக்கள்
        ஏற்கப் படுவதாலும் , பின்பற்றப் படுவதாலும் , தான்

       கவிதையோ  காவியமோ  அழகு பெறுகிறது.

       எங்கோ எழுதப்பட்ட  கவிதை ,
      எங்கோ  புகழ்  பெறுகிறது.

        கவிஞன்  நினைத்ததுமே
      அவனின் பக்தியின்  காரணமாக
     பிரம்ம  லோகத்தை விட்டு விட்டு
    ஓடி  வந்துவிடுகிறாள் .

       சரஸ்வதி தேவி  ஓடி வந்த களைப்பு
      ராமச்சந்திரன் என்ற குளத்தில்
     அவரைக்  குளிப்பாட்டாமல்  
     பலகோடி  உபாயங்கள்  செய்தாலும் போகாது.

        கவிஞர்களும்  பண்டிதர்களும்  தன்  மனதில்
        இப்படி  நினைத்துத் தான்  கலியுகத்தின்
        பாபங்களை போக்கும்
      ஸ்ரீஹரியின் புகழைப் பாடுகிறார்கள்.
   
      உலகில்  உள்ள  மாந்தர்களைப் புகழ்வதால்
      சரஸ்வதிதேவி  மிகவும்  வருத்தப்படுவாள்.
     அறிவுள்ளவர்கள் இதயத்தை  சமுத்திரமாகவும் ,
    அறிவை   சிப்பியாகவும்   சரஸ்வதி  தேவியை
     சுவாதி நக்ஷத்திரம்      போன்றும் கருதுவார்கள்.
     இதில் மேன்மையான  எண்ணங்களின்
    மழை  பெய்தால்
   முத்து போன்று  அழகான  கவிதை உண்டாகிறது.
   அந்த கவிதை  என்ற  முத்துக்களில் ,  மிக  யுக்தியுடன் ,
   ராமரின்  குணங்கள்  என்ற நூலில் தொடுத்து ,
 தன்  களங்கமற்ற  இதயத்தில் தரித்துக் கொள்கிறார்கள்.
  அதனால்  அனுராகம் என்ற  அழகு உண்டாகிறது.

 அவர்கள்  அதிக அன்பைப்  பெறுகின்றனர்.

  இந்த  பயங்கர  கலியுகத்தில்  பிறந்தவர்கள் ,
 அவர்கள்  செயல்  காகம் போன்றது. ஆனால் அன்னத்தின்
  வேடம் போட்டிருப்பார்கள். அவர்கள் வேதமார்க்கத்தை
 விட்டுவிட்டு, தீய வழியில் செல்கிறார்கள்.
  அவர்கள் கபடத்தின் உருவமாகவும் ,
  கலியுகப் பாபங்களின்
 கிடங்காகவும்  உள்ளனர்.

அவர்கள்  ராமரின் பக்தன் என்று சொல்லப்படுவார்கள்.
அவர்கள்  மக்ககளை  வஞ்சிப்பார்கள்.
அவர்கள் செல்வம் ,கோபம்,காமத்தின்  அடிமைகள்.
அவர்கள்  குறும்புத்தனம்  செய்வார்கள்.
அறம் என்ற பொய்யான கொடி ஏற்றுவார்கள்,
கபடத்  தொழில் என்ற  சுமை  சுமப்பவர்கள்.
உலகின்  இப்படிப்பட்ட மக்களில் எல்லோருக்கும்
முதலில்  என்  பெயர்தான்  உள்ளது.
நான்  என்  கெட்ட  குணங்களைச் சொன்னால்
கதை மிகவும் அதிகரித்துவிடும்.
 என்னால்  வையகக் கடலை   கடக்கமுடியாது.
என்னுடைய கெட்ட  குணங்களில்
 மிகவும்  குறைந்ததைத்  தான்
வர்ணித்திருக்கிறேன்.
அறிவுள்ளவர்கள்  சுருக்கமாகச்
சொன்னாலே  புரிந்துகொள்வார்கள்.
என்னுடைய  பலவித வேண்டுதலைக் கேட்டு
யாரும் இந்தக் கதையைக்கேட்டு
குறை சொல்லமாட்டார்கள்.
இதைப் படித்து  சந்தேகப்படுபவர்கள்
 என்னைவிட மிகவும் முட்டாள்கள்
அறிவில் மிகவும்  வறியவர்கள்.

நான் கவிஞன் கிடையாது.
கெட்டிக்  காரன் என்று யாராலும்
 சொல்லப்படவில்லை.
என்  அறிவுக்குத் தெரிந்த அளவில்
 ஸ்ரீ ராமனின் புகழ் பாடுகிறேன்.
ராமரின் குணம்  அளவுகடந்தது.
என்   அறிவோ உலகப்பற்றுடன் இருக்கிறது.

சுமேரு மலையையே  பறக்கவைக்கும்

வேகமான காற்றுக்கு முன்னால்,பஞ்சு என்ன  ஆகும்.
ஸ்ரீராமரின்  எல்லையில்லா மகத்துவம் அறிந்து என்
மனம்  மிகவும்  தயங்குகிறது.
 சரஸ்வதி  தேவி, சிவன், பிரம்மா, வேதங்கள் ,புராணங்கள்,
இவை எல்லாமே எப்பொழுதும் அவரின் புகழை வர்ணிக்கின்றன.

ராமரின்  மஹிமை  வர்ணிக்கமுடியாது,
 என்பதை  அறிந்தும்  வர்ணிக்காமல் இருக்க முடியாது.
பஜனையின் மகிமை   பல விதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது,
இறைவனின்  புகழ்  விசித்திரமானது. அவரின்  புகழை

பலவிதங்களில் சாஸ்த்திரங்களில்   வர்ணிக்கப்படுகிறது.
 இறைவனின்  பஜனையை மனிதன் இயற்கையாக சிறிதளவு
சொன்னாலும் வையகக்  கடலை  கடக்க முடியும்.

 பரமேஷ்வர்  ஒருவரே. அவருக்கு என
எவ்வித  விருப்பமும்  இல்லை. உருவமும் இல்லை.
அவருக்குப் பிறவியும்  இல்லை.
அவர் சச்சிதானந்தர்.எல்லா இடத்திலும்
எல்லோருக்குள்ளும்  வியாபித்திருக்கிறார்.

அந்த பகவன் தெய்வீகப் பிறவி  எடுத்து
பலவித  சேவைகள் செய்திருக்கிறார்.
அந்த  லீலை பக்தர்களின் நன்மைக்காகவே.
அவர்  மிகவும் கிருபை காட்டுபவர் .
சரணடைந்தவர்களை மிகவும்  விரும்புபவர்.
அவருக்கு பக்த்தர்கள்  மீது  மிகுந்த  அன்பு  வைப்பவர்.
ஒருமுறை  அவர்  ஒருவர்  மீது  கிருபை காட்டினால்
பிறகு எப்போதும்  அவர்  கோபிக்கமாட்டார்.
பிரபு  ராமச்சந்திர  மூர்த்தி ஏழை பங்காளன்,
இழந்த பொருளை பெறும் சக்தி படைத்தவர்,
எளிய குணம்  உள்ளவர்.
எல்லோருக்கும் ஈசன்.

இதை அறிந்த புத்திசாலிகள் , ஞானிகள்
ஸ்ரீ  ஹரியின் புகழை வர்ணனை  செய்து
பரிசுத்தமான உத்தமமான பலன்  பெற
தியானிக்கின்றனர்.

அதேபோன்று   முனிகளின்  மார்க்கத்தைப்  பின்பற்றி
 பலம்  பெறும் ஸ்ரீ ராமச்சந்திரரின்
 சரணங்களில் தலைவணங்கி
ஸ்ரீ ரகுநாதன் அவர்களின் புகழ் கதையை சொல்லுவேன்.
முனிகளின்   மார்க்கம் , அவர்கள் பாடிய கீர்த்திப்பாடல்கள்
  ( வா ல்மீகி ,வியாசர்)  எனாக்காக எளிதாகும்.

 மிகப்பெரிய  நதிகள் ,அதைக்கடக்க
  அரசர்கள் பாலம்  கட்டுகின்றனர் .
அதைக்கடக்க எறும்பும் சிரமமின்றி செல்லும்.
 அவ்வாறே முனிவர்களின் ராம
காவியங்கள்  எனக்கு எளிதாகும்.
இவ்வாறு மனவலிமையுடன்  ராமகதை எழுதுவேன்.
வியாஸ் போன்ற ஸ்ரேஷ்ட  கவிகள்
மிகவும் மரியாதையுடன் ஸ்ரீ ஹரி
புகழை வர்ணித்துள்ளனர்.

நான் அந்த ஷ்ரேஷ்டகவிகளின்
சரண கமலங்களை  வணங்குகிறேன்.
அவர்கள் எனது மனவிருப்பத்தை பூர்த்திசெய்யட்டும்.
கலியுகத்தில்  அவர் புகழ் பாடிய
கவிஞர்களையும் வணங்குகிறேன்.

இயற்கையிலேயே ஞானம்  பெற்ற  கவிகள் ,
ஹரியின் புகழைப் பாடி இருக்கிறார்கள்,
நிகழ்காலத்திலும் கவிகள் இருக்கின்றனர்.
எதிர்காலத்திலும் பலர் தோன்றுவார்கள்
அந்த எல்லோருக்கும் எனது கபடம் வஞ்சனை எல்லாம்
விட்டுவிட்டு வணங்குகிறேன்.
அவர்கள்  எல்லோரும் எனக்கு  வரமளிக்கட்டும்.
சாதுக்கள் கூட்டத்தில் எனது  கவிதைக்கு
கௌரவம்  கிடைக்கட்டும்.
அறிவுள்ளவர்கள் கவிதைக்கு
 மரியாதை அளிக்கவில்லை
என்றால்  முட்டாள்  கவிஞர்கள் தான்
 வீணாக உழைக்கிறார்கள்  என்றே பொருள்.

புனித  கங்கா நதியினைப்போல்
எல்லோருக்கும்  நன்மை செய்பவர்கள்  தான்
புகழ், கவிதை, சொத்து  பெற  உத்தமர்கள்.
ஸ்ரீ  ராமரின்  புகழ்  உத்தம  மானது.
அழகானது. எல்லோருக்கும் நன்மை அளிக்கக் கூடியது.
எனது  கவலை என் கவிதை சிறந்ததல்ல என்பதே.
எனது மொழி ஓலையில் பட்டு தையல் போட்டதுபோலாகும்.
இருப்பினும் அழகாகத்தான் இருக்கும்.
 எளிமையான பொருள் நிறைந்த
  கவிதைகளைத்தான்
கெட்டிக்காரர்கள் புகழ்வார்கள்.
களங்கமற்ற  குணங்களின்
வர்ணனைகளை விரோதிகள்  கேட்டால்
விரோதத்தை  மறந்து   புகழைத் தொடங்குவார்கள்.

தூய மனமின்றி இப்படிப்பட்ட  கவிதை இயற்ற முடியாது.
எனது அறிவுத்திறன் மிகவும் வலிமையானதல்ல.
கவிஞர்களே!நீங்கள் அருள் புரியுங்கள்!
ஹரியின் புகழை நான் வர்ணிக்கும்  திறனளிக்க
உங்களிடம் வேண்டுகிறேன்.

கவிஞர்களே!பண்டிதர்களே!
நீங்கள் ராமச்சந்திரனின் புகழ்  என்ற மானசரோவரில்
நீந்தும்    அழகான  அன்னப்பறவைகள் . நீங்கள்
எனது  வேண்டுகோளைக்  கேட்டு
என் விருப்பத்தை நிறைவேற்ற
 கிருபைகாட்டுங்கள்.

 ராமாயணம்  இயற்றிய  வால்மீகி  முனிவரை வணங்குகிறேன்.
அவர் கரன் போன்ற    அரக்கர்களுடன்  இருந்தாலும்
 கரனுக்குஎதிரான   மென்மையான அழகான
 குணமுடையவர்..
குறைநிறைந்தவர்களுடன் இருந்தாலும்
குறையற்ற குணமுடையவர்.

உலகம் என்ற பெருங்கடலைக் கடக்க உதவும்
கப்பல்கள் போன்ற  நான்கு வேதங்களை
வணங்குகிறேன்.
அவைகளுக்கு ராமர் புகழ்பாட
கனவிலும் களைப்பு  ஏற்படாது.

  நான்  அந்த  பிரம்மாவை  வணங்குகிறேன்.
 அவர் வையகம் என்ற கடலை படைத்திருக்கிறார்.
அதில் ஒரு பக்கம் அமிர்தம் , அனைத்தும் வழங்கும் காமதேனு
போன்ற  உலக நல்லியல்புகளும்
மற்றொருபக்கம் தீயவர்கள்,  விஷம், மது போன்ற

மயக்கும் பொருள்களும்
  உருவாக்கி  இருக்கிறார்.

தேவர்கள், அந்தணர்கள், பண்டிதர்கள், கிரகங்கள்
ஆகிய  அனைத்தையும்  வணங்குகிறேன்.
அவர்கள் மகிழ்ந்து என் அனைத்து
  மனவிருப்புங்களையும்
முழுமையாக்கட்டும்.
 ,

       
Post a Comment