Sunday, November 6, 2016

ராமசரித மானஸ்---துளசிதாஸ் --சுந்தரகாண்டம் -பக்கம் இருபத்திமூன்று

           வானரர்கள்    ராவண  தூதர்களை

            ஈவு இரக்கமின்றி  அடித்தனர்.
   அவர்களுடைய    இரக்கமான  நிலை
  குரல்  கேட்டும் அவர்களை  விடவில்லை.
 இறுதியில்  தூதர்கள்
கோசலநாட்டு  மன்னன்
 ஸ்ரீ  ராமர்  மீது  ஆணை ,
எங்கள் மூக்கு காது  துண்டித்தால்  என்று  அலறினர்.

  இதைக்கேட்டு  லக்ஷ்மணன்  அவர்களை
 அருகில்  அழைத்தான்.
அவனுக்கு  அவர்கள்   மேல்  இரக்கம்ஏற்பட்டது.
 இதனால்  சிரித்து  அவர்களை  விடுவித்தான்.
  அவர்களுக்கு  ஒரு  செய்தி  அனுப்பினான்.
  தூதர்களிடம்  ,
ராவணனிடம்  சொல்.
குலநாசகன்  அவன்.
அவனிடம் இந்த கடிதத்தைக்  கொடு.
  மேலும் நான்  சொன்னதாகச் சொல்.
 சீதையை  ஒப்படைத்து
 ராமனை சந்திக்கவும்.
இல்லையென்றால்
  உனது  காலன்  வந்துவிட்டான்  என்று.

 இலக்குமணனின்  காலில்  வணங்கி ,
ஸ்ரீ  ராமரின்  குணங்களைப் புகழ்ந்து  வர்ணித்துக்
 கொண்டே  சென்றனர்.
 அவர்கள்  ராவணனை
 சிரம்  தாழ்த்தி  வணங்கினர்.
 தசமுக  ராவணன்  சிரித்துக்கொண்டே
 அந்த விபீஷணனின் செய்தி சொல்.
 மரணம் அவனை நெருங்கிவிட்டது.

 முட்டாள்.  தன்  ஸ்ரீலங்கா  ஆட்சியை
 விட்டுவிட்டு  சென்றுவிட்டான்.
 அவன் துரதிஷ்ட சாலியான
      புழு  ஆகிவிட்டான்.
 வானரர்களுடன்  சேர்ந்து அவனும்  கொல்லப்படுவான்.
 அந்த  கரடி வானரப்படைகள் எப்படி  உள்ளது ?
என்று  கேட்டான்.
 அவைகள்  எமனின்  தூண்டுதலால்
 உயிரைவிட  இங்கு  வந்துவிட்டன.
 மென்மையான  மனம்  கொண்ட
  கடல்  நடுவில்  வந்துவிட்டது.
  இல்லைஎன்றால்
 அவர்கள் உயிர் போயிருக்கும்.
என்னிடம்  பயம்  கொண்ட
அந்த தபசிகளின்  நிலை  என்ன ?


   அவர்களை  சந்தித்தீர்களா?
  என் புகழ் கேட்டு  திரும்பிவிட்டனரா ?

  விரோதிகளின்  வீரத்தையும்  பலத்தையும்  பற்றி ஏன்  எதுவும்   சொல்லவில்லை.

 நீங்கள்  ஏன் இப்படி பிரமித்து  நிற்கிறீர்கள்.

 அப்பொழுது  தூதன் ,
" உங்கள்  தம்பி  அங்கே  சென்றதுமே
ஸ்ரீராமர்  அவருக்கு முடிசூட்டிவிட்டான்.
 நீங்கள்  கோபத்தை விட்டுவிட்டு
எங்களை  நம்புங்கள்.
 நாங்கள்  சொல்வது உண்மை. "என்றான்.

      நாங்கள்  ராவணனின்  தூதன்    என்று  அறிந்ததுமே
  எங்களைக்  கட்டி  மிகவும்  துன்புறுத்தினர்.
 எங்கள்  காது -மூக்குகளை
அறுக்க  ஆரம்பித்தனர்.
 ராமரின் மேல் சபதம்  இட்டதும்
எங்களை  விட்டுவிட்டனர்.

 நீங்கள் ராமரின் படைகளைப்
பற்றி  கேட்டீர்கள்.
அதை வர்ணிக்க  வார்த்தைகளும்  போதாது.
 பலகோடி வாய்களும்  போதாது.

  பயங்கரத் தோற்றத்துடனான
முகங்களையும் மிகப்பெரிய  உருவங்களையும்  கொண்ட
 பல வண்ணக்  கரடிகளும்
  வானரங்களும் உள்ளன.
 உங்கள் மகன்  அக்ஷயக்குமாரனைக்  கொன்று
இலங்கையை    எரித்தவனைக்  காட்டிலும்
 பலம்  வாய்ந்தவர்கள்.
எண்ணமுடியாத  பெயர் கொண்ட
கடுமையான  பயங்கர  போர் வீரர்கள்.
அவர்களில்  பலருக்கு  யானையின்  பலம்.
மிகப்பெரிய உடல்.
பலத்தின்  நிதியாக  திவித்,  மயந்து, நீல்,நல, அங்கத்,கத்,
விகடஷ்ய,ததிமுக், கேசரி, நிசட், சட்,
 ஜாம்பவான்
  முதலியவர்கள்  உள்ளனர்.
  இந்த  எல்லா வானரர் களுமே
 சுக்ரீவனுக்கு சமமானவர்கள்.
இவர்களைப்போல்  கோடிக்கணக்கில் உள்ளனர்.
அவர்களை  எண்ண  முடியாது.
 ராமனின் கிருபையால்  இணையற்ற  சக்திசாலிகள்.
 அவர்கள்   மூவுலகையும் தூசியாக எண்ணுகிறார்கள்.
 பதினெட்டு  பதுமர்கள்  தனியாக
 வானர  சேனாபதிகள்.
நீங்கள்  வெல்லும்படி அங்கு  யாரும்  இல்லை.
  அனைவரும்  மிகக் கோபத்துடன்    கைகளை
பிசைந்து  கொண்டுள்ளனர்.
 ஆனால்  ஸ்ரீராமர்  இன்னும்
 அவர்களுக்கு  கட்டளை பிறப்பிக்கவில்லை.
 எல்லாவானரர்களும்  மீன்களையும் பாம்புகளையும்
ஒன்றுசேர்த்து  கடலை வற்றச்  செய்துவிடுவோம்.
 இல்லை  எனில் பெரும்
மலைகளால்  நிரப்பிவிடுவோம் .
ராவணனை  நசுக்கி மண்ணோடு மண்  ஆக்கிவிடுவோம்
 என்றே  வானரர்கள்  வீராவேசமாக பேசிக்கொண்டுள்ளனர்.   இலங்கையையே விழுங்கி  விடுவோம்  என்று  கர்ஜிக்கின்றனர்.

   எல்லா  வானரர்களும்  கரடிகளும் இயற்கையிலேயே  வீரர்கள். அவர்களுக்குத்  தலைவராக ராமர்  உள்ளார்.
 ராவணா! அவர்களால் யுத்தத்தில்
 கோடி எமன்களையும்  கொல்ல  முடியும்.


   ஸ்ரீ ராமரின்  சாமார்த்தியத்தையும்
 பலத்தையும் ஆய்வையும்  வர்ணிக்கமுயலாது.
அவர்  நினைத்தால்  ஒரே  பாணத்தில்
  சமுத்திரத்தை  வற்றவைக்க  முடியும்.

நீதிமானாக  இருப்பதால்  அப்படி  செய்யவில்லை.
 உங்கள்  தம்பியிடம்

வழி  கேட்டுக் கொண்டிருக்கிறார்.



No comments: