Sunday, November 6, 2016

तमिल कविता कवयित्री कलैमकल हिदया रिस्वी

விருப்பமான கவிதைகளை தெரிவு செய்யுங்கள்
08 வரமாய்த் தர வேண்டும்
..................................................
அன்புள்ள மனம் கொண்ட மங்கை
அழகான குணம் கொண்ட தங்கை
பண்புடனே வாழுகின்ற பாவை
படிந்த வளாயிருக்கின்ற பூவை
என்றனுக்கு மருமகளாய் வேண்டும்
இறைவனதை வரமாய்த் தர வேண்டும்
கணவனுக்குத்  தொண்டு செய்யும் முள்ளம்
காரிகைக்கு இருந்திடலும் நல்லம்
குணவதியாய் குடும்பத்து விளக்காய்
கோதை யவள் விளங்கிட வேண்டும்
அனைவரையும் கவர்ந்து விடும் நல்ல
அன்பு மிகு மருமகள் வரவேண்டும்!
நாலு குணம் கொண்டிருக்க வேண்டும்
நாகரீகம் தெரிந்திருக்க வேண்டும்
வாழுகின்ற போதினிலே குடும்பம்
வழி நடத்தத் தெரிந்திருக்க வேண்டும்
சீல குணம் கொண்டிருக்க வேண்டும்
சிறப்பான மருமகள் வர வேண்டும்.
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
09 கல்வி ஒழுக்கம
शिक्षा -अनुशासन
பாடல்
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
दौलत शिक्षा ही स्थाई ,
साथ का अनुशासन अति ऊँचा।
आइए,बढेंगे हम।
आशा. के बल बढेंगे हम।
कई  प्रकार के फल पाएँगे।
जो भी हो, चरित्र बल  नाम देगा।
अनुशासन देगा देश को शांति।
फूल खिले उद्यान में ,
अति तडके उठेंगे हम।
प्यार सब पर दिखाएँगे।
दूर संचार साधन बनेगा
  दुनिया का सत्ताधारी।
प्रगति  क़ा कार्य करेगा ही।
रंगमंच की दुनिया होगी हमारी।
परिश्रम का फल कल्याण होगा।
शिक्षा अनुशासन  पालन करके,
सीखकर जिंदगी में आगे चल।
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
வாருங்கள் உயர்வோம் வாழ்க்கையிலே
வலம் புல பெறுவோம் நம்பி க்கையிலே
யாருக்கும் ஒழுக்கம் புகழ் கொடுக்கும்
நாட்டுக்கும் அமைதி நலம் படைக்கும்
(கல்வி ஒழுக்கம் )
பூத்திடும் மலர்கள் சோலையிலே
புலர்ந்திடும் விடியில் காலையிலே
ஆரத் தெழுவோம் நலம் செர்த்திடுமே
அன்பினை உலகெங்கும் ஊ ட்டிடவே
(கல்வி ஒழுக்கம் )
ஊ டக் மென்பது உலகாளும்
உந் நத மான செயலாகு
நாடக உலகம் நமதாகும்
நன்மைகள் உழைப்பில் விளைவாகும்
கல்வி ஒழுக்கம் வெளிப்பாடு
கற்று நல வாழ்வினில் நடைபோடு
செல்வம் நிலைத்திடும் அறிவாகும்
சேர்ந்திடும் ஒழுக்கும் உயர்வாகும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
10- தாய் தமிழே வாழி !
..................मातृभाषा की जय हो।
वळ्ळुवन,इलंगो, कंबन,
अमर कवियों के मार्ग पर
बन गये करोडों कवि।
सुंदर कवियों के जल प्रपात पर
हम नहाता, पीके,स्वाद करके,
यात्नाएँ,पीडाएँ  विस्मरण करनेवाली
सुंदर तमिल  की  जय हो।
भारतीय, उमरु,  नल्ल इलंदै, भारतीदासन,
कविताओं के हार  पहनाकर
असीम आनंद पाये हैं।
गरीबी  को जमा करके
दुखों को भोगकर
जिंदगी को बिखेरकर
बिना थकावट महसूस कर,
माँ तमिल! तेरे यशोगान में
सुख का अनुभव किया था।
जिन्होंने जिंदगी त्यागा,
साधु संत संन्यासी भी
तेरे सुंदर  रूप को नहीं भूला।
अग जग के लोगों की प्रशंसा में
अति पुरातन है तू।
जुग जुग जीना तू।
अमर  है तू।
जाओ वीर- गंभीर चाल से।
जय हो तमिल माँ , तेरी जय हो।
*********************""**"


வள்ளுவன்  இளங்கோ  கம்பன் ,
வழி  தனில் புலவர்  கோடி !
தெள்ளிய  கவிதை  பாடி
தென்னச்  சுவைக்க !நாமும் !
அள்ளியே ! பருகி  இன்ப !
அருவியில்  குளித்து  நித்தம்
தொல்லைகள்  மறக்க  வைக்கும்
சுந்த்தரத்  தமிழே வாழி !
பாரதி உமறு ! நல்ல
இலந்தை  பாரதி தாசன் ,போன்ோ
ஆரமாய்ச்  சூடி  யுன்னை 
அழவிலா  இன்பங் கண்டார்
சேர்ந்திடும்  வறுமைத்  துன்பம் !
சிதைவுறு வாழ்க்கை கண்டும்
சோர்ந்திடாது  துன்னைப்  பாடி
சுகம்  பல  கண்டாள் அம்மா !
வாழ்வினைத்  துறந்தோர் கூட
வடிவுனைத்  துறந்தா ரில்லை
தாழ்விலா  நிலையி  லிந்தத்
தரரணியோர் புகழ்ந்து  போற்றும்
நீள் பழம்  பெருமை  யோடு
நித்தமும்  வாழு மெங்கள் !
வீழ்வுறா  மொழியே !என்றும்
வீறுடன்  வாழ்க நீடே !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்________________________________________________


     ११.  हम  ही   शक्ति


-----------------
अति   सुन्दर  लोकमाता

युवा शक्ति  ही हदय  तेरा.

पेशों  के  आयुध  से

अति  क्रूर , अति अन्धकार

 गरीबी  को
भगाना  होगा.
युवकों! आइये,

एक साथ  मिलकर ,

खुशी  से  आइये ,

मेहनत  करने.

स्कूल  में  पढ़ा  हमने .

उन्नत  उपाधियाँ  पायीं.
सिद्धांत में  सुदृढ़  बनकर ,

भूमि  की  रक्षा  करेंगे
बुद्धि  बल  से  अति श्रद्धा  से
  मेहनत  करके ,
ऊंचे पहाड़ -सा
नाम  पाने  आइये.
जंगलों  को  मिटाकर
उपजाऊँ  खेत  बनायेंगे.
अच्छे अनाज  उत्पन्न  करके,
दुखी चेहरों  में
वसंत  की  खुशियाँ  लाने,
मिलकर  करेंगे  परिश्रम.
खेती  करेंगे ,
अच्छे  यंत्र  बनायेंगे
नींद छोड़कर  मेहनत करेंगे  हम

नवीनता  लायेंगे,
वर्षा  के  पानी  ठहराकर

दुनिया  की  मदद के  लिए ,

पानी सींचकर खेती  करेंगे.
जग  को उपजाऊ  बनायेंगे.

चाय   ,रबड़,नारियल  
और  भी  कई  पेड़  पैदा  करेंगे.
षड रूचि के  फल- अनाज
पैदा  करेंगे.
जमीन  को  करेंगे  उर्वरा.
फल उगायेंगे, काटेंगे.
गरीबी  रेखा मिटायेंगे .

बनायेंगे  देश को  अति  उपजाऊ.

प्रगति  देश  की.
  युवकों  के  हाथ में,
जब  होगी  एकता.
 देश के  कई प्रकार  के  कल्याण होंगे.
भूमि  को  हरा -भरा बनायेंगे.

जागो   युवकों! हम    ही है  शक्ति .

11 -நாமே !சக்தி
................................
எழிலுரு  உலக மாதா
இதயமாம்  இளைஞர்  சக்தி !
தொழிலெனும்  கருவி கொண்டு
துரத்துதல்  ஆகும் ! பொல்லா ,
இழி விருள்  வறுமை  தன்னை
இரவியை மிளிரும் தூய
இளைஞரே  ஒன்று கூடி
இன்பமாய்  உழைக்க  வாரீர் !
பள்ளியில்  படித்தோம் !மேன்மை
பட்டங்கள் பலவும் பெற்றோம்
கொள்கையில் உறுதி  பூண்டு
குவலயம்  தன்னை  மீட்க
தெள்ளிய உணர்வி  னோடு
திறம்பட  உழைத்து  மண்ணை
வெள்ளிடை  மலையாய்  என்றும்
விளங்கிட வைக்க வாரீர் !
காடுகள்  மாய்த்து  நல்ல
கழனிகள்  உண்டு பண்ணி
மேடுகள்  வலம் படுத்தி
மேன்மை சேர் பயிர் வளர்த்து
வாடிய முகங்கள் யாவும்
வசந்தமே !கண்டு பாடி
கூடியே  மகிழ்ந்து  வாழ
கூடியே  உழைக்க வாரீர் !
ஏர்பிடித்  துழுவோம் !நல்ல
எந்திரம்  துணையாய்க் கொள்வோ!
போர்வைகள்  தம்மை  நீக்கி !
புதுமைகள்  உழைப்பில்  செய்வோம்
கார் மழை  தன்னைத்  தேக்கி
காசினிக்  குதவும்  வண்ணம்
சீர்மையாய்ப்  பயிருக்குப்  பாய்ச்சி !
செகமது  செழிக்கச்  செய்வோம் !
தேயிலை  இறப்பர்  தெங்கு
சிரித்திடும்  வயலின் நெல்லு !
ஆயநற்  கனிகள் நூறும்
அறு  சுவைக்  குதவும்  யாவும்
நேயமாய்  வளர்ப்ப   தாலே !
நிலத்திடை  வளங்கள் கூடும்
சாயந்  திடும் கதிர் வளத்தால்
தலையை  நாம் நிமிர்த்த  லாமே !
இளைஞர்  கை  இணைந்தா லிங்கு
எங்கிலை  அபிவி  ருத்தி ..?
வளை கரம்   வாளை  ஏந்தி
வயற்  கதிர் அறுக்கும் போதும் !
களைதனைப்  பிடுங்கி வீசி
காரிய  மாற்றும்  போதும்
களைந்து  போகும்  வறுமைக்  கோடு
காணுமே !வளத்தை நாடு !
உயர்வுக்கு  இளைஞ்ர் சக்தி ,
ஒன்று பட்டினையு  மானால் !
நயம் பல வந்து கூடும்
நலிவுகள்  மறைந்து  ஓடும்
புயங்களை  உயர்த்தி  யிந்தப்
பூமியை  பசுமை  யாக்க
செயற்பட  எழுமின் !எங்கள்
இளைஞரே ! நாமே !சக்தி !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்

********************************************************************************
12 -இலங்கையின் குழிந்த மலைகள் சிவப்பேறும் ..!

    श्री  लंका  के    ठंडे  पहाड़  होंगे  लाल.
.....................................................................................

ग्रामीण मेहनती   मुत्तु ,करुप्पन, मूक्काई --
मुनियन,करुप्पन मुरुकांडी              ( तमिल मेहनती  वर्ग  के  नाम)
अति  मेहनत  करके .
पहाड़  को तोड़-मरोड़कर
टोकरियाँ    ढोकर -
चींटी  जैसे  अथक मेहनत  करके  रोज़
यंत्र  जैसे     परिश्रम कर
ईख,केले ,फल के  पेड़
उगाकर , तरकारियाँ   उत्पन्न  किये हैं.

नर-नारी  मिलकर  बिना  भेद -भाव  के ,
कठोर  मेहनत   से  हरे- भरे  किये  हैं.

संसार  के  भूख  मिटाने ,
खूब -मेहनत करके ,
दुबले -पतले  हो गए.
मूसलधार  वर्षा,
बर्फीली  सर्दी,
कठोर धूप  ,
इन सबकी  बिना  परवाह  के
बिना  आराम  के मेहनत  किया  था.
जंगलों  को  खेत  बनाकर,
चाय  के  बाग़  में  अपने  खून को
बनाया था खाद.
वे बगैर  आराम के मेहनत से
थककर   छेदों  वाली झोंपड़ी  में
जोंकों  के  रक्त चूसने  पर भी
मीठी  नींद  सोये  थे.
मधुर   चाय  भी उनकी
विशेषता बोल ,
बनी  लाल.

बैलों  जैसे  मेहनत करके ,
श्री लंका  के  राजा थक गए.
चोर-डाकू-आलसी - कीर्ति  पाकर बड़े बने.
इस अत्याचार  को अग्नी  न  सहेगी.
ठंडे  पहाड़  भी  एक दिन
ज्वालामुखी -बन फटकर  बिखरेंगे.
 हीन  चोरों के  जीवन को नाश कर  देंगे.


முத்து ,கருப்பன்,மூக்காயி - எங்கள்
முனியன்,வேலு,முருகாண்டி
கொத்திப் பிளந்தனர் மலையினையே - நல்ல
கூடை சுமந்தனர் முதுகினிலே
எறும்பு போலச் சோம்பாது நிதம்

எந்திரம் போல உழைத்தனராம்
கரும்பு கதலி கனி மரங்கள் - நல்ல
காய் கறி யாவும் விளைத்தனராம்  
ஆணும் பெண்ணும் சமமாக - அங்கு
ஐக்கியமாக உழைத்தனராம்
பாணும் பருப்பும் பசிக்குண்ண  - அவர்
பறந்து உழைத்து மெலிந்தனராம்
கொட்டும் மழையும் கொடும் பனியும்  - நன்கு
கொளுத்தும் கொடிய வெயிலினிலும்
அட்டைகளிரத்தம் குடிக்கையிலும் - அவர்
அனுதின மோயா நுழைத்தனராம்
ஓட்டை "லயத்தில்" உறங்கிடினும் - நிதம்
ஓயா துழைப்பில் இறங்கினராம்
காட்டை அளித்து கழனிகளாய் - அவர்
கடின உழைப்பால் மாற்றினராம்
உதிரம் தன்னை தேயிலைக்கே - நல்ல
உரமாய் இட்டு வளர்த்தனராம்
மதுரமான தேனீரும் - அந்த
மான்பினைக்  கூறிச் சிவந்ததுவாம்
மாடாய் உழைத்து ஓடாகி - இலங்கை
மன்னர்களெல்லாம் தேய்ந்தனராம்
கேடாய் உழைப்பைத் திருடியவர்  - நன்கு
கீர்த்தி பெற்று உயர்ந்தனராம்
இந்த -
கொடுமை நெருப்பைத் தாங்காது  - அந்த
குளிர்ந்த மலைகள் சிவப்பேறி
திடமாய் வெடித்துத் தான் சிதறும் - ஈனத்
திருடர் வாழ்வை குடித்து வைக்கும்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
चोर-डाकू-आलसी - कीर्ति  पाकर बड़े बने.
इस अत्याचार  को अग्नी  न  सहेगी.
ठंडे  पहाड़  भी  एक दिन
ज्वालामुखी -बन फटकर  बिखरेंगे.
 हीन  चोरों के  जीवन को नाश कर  देंगे.


13-விட்டுச் சென்ற தாய்க்கு தொட்டுச் செல்லும் வரிகள்

   स्वर्गीय  माँ की    यादें 
..................................................................................................

दस  महीने  गर्भ  में  ढोकर
प्यार -दुलार  से  माँ  ने
किया  लालन-पालन.

इस  पृथ्वी  पर  इनका त्याग की  महीमा
आसमान  छुयेगी.
आँखों  के तारा मान
दुलारती   रोज़.
हरे ! मेरे  प्यारे हीरे,
प्यारे फूल,
जैसे मीठी  बोली में
कितना स्नेह  दिखाती
मक्खी-चींटी भी  बैठने पर
न  सहेगी  माँ.
प्यार की रोशनी में
मुझे  बड़ा  बनाया था.
पाठशाला  के  पाठ सिखाकर
अति  प्यार से  स्कूल भेजती.
प्रकाश  के  तड़के  के आसमान -सा
हमें   जीवन  की रोशनी दी  है.
उपाधियाँ -स्नातक  पाकर
जिन्दगी  में  आगे  बढ़ाने  की  सहायिका .
 स्पर्ष   उसका  कितना  प्यारा.
रक्त को  दूध के  रूप  में  पिलाकर ,
प्यार से   पाला है  माँ .
ह्रदय  के  पूरे  मनोवेग
कैसे  भूलूँ  इसे?
माँ! मेरी  स्नेहमयी  है.

*********************************************************************************


பத்து  மாதம்  சுமந்தே என்னைப்
பரிவுடன்  வளர்த்தவள்  உம்மா !
இத்  தரை  தன்னில் இவளருந்  தியாகம்
எழுந்தே  தொட்டிடும்   விண்ணை .!
கண்ணே !என்று  இமையைப்  போலே !
காத்திருப்பாள்  இவள் நிதமே !
பொன்னே என்றும்  பூவே என்றும்
பொலியும்  அன்போர்  விதமே !
ஈ யோடெறும்பு  எதுவும்  அணுகா (து )
இனிதாய் வளர்த்த  உள்ளம் !
ஒளிரும்(தோயும் )அன்புச் சுடரால்  என்னைத்
துலங்க  வைத்தால் !உய்வோ,ம் !!
பள்ளிப் பாடம்  சொல்லித்  தந்தே !
பண்பாய்  அனுப்பி  விடுவாள் !
வெள்ளி பூத்தே விடியும்  வானாய்
விளங்க  அனைத்தும்   இடுவாய் !
பட்டம் பெற்றே  பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க   வைத்தாள் !
தொட்டுப் பேசித்  துணையாய்  நிற்கும்
தூய  உள்ளம்   உம்மா !
உதிரம் தன்னைப்  பாலாய்  உதிர்த்து
ஊ ட்டி  வளர்த்தவள்  உம்மா
உள்ளத்  துணர்வில்  வாழும்  இதயம்
இவளை  மறவேன் மண்ணில்
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
__________________________________________________________________________
14 -ஏன்படைத்தான் இறையவனும் ?

हे  ईश्वर! हमारी  सृष्टि क्यों  की ?

 छत  में  हज़ारों  छेद , कठोर  धूप !
जिस  घर में  हम  रहते हैं , उसकी दशा.
वर्षा  ऋतू  में  ,सर्दी के कारण
शरीर  पिघल  जाता .
हमारे  जीवन दुःख भरा हो जाएगा.
चटाई नहीं हमें  लेटने.
भूख  मिटाने  खाना  नहीं ,
रोग रहित  जिन्दगी ,
हमारी  नहीं,
एक  क्षण भी  हमको  सुख  नहीं .
पेट थोडा-सा भराने  कठोर  सघर्ष.
बेरहमी समाज में हम भी एक दल.
गरीबी हालत ही हमारे  सखा.
हमारे  स्थान तो नरक .
भूख लगने गोलियाँ  खाने  के
समाज में भूख से रहते  हैं  हम तड़प.
धनियों के   घर में होते  कुत्ते.
उन कुत्तों के भोजन  भी  हमें नहीं.
बच्चों को जन्म तो  लेते हैं,
उन प्यारे  बच्चों की
स्थायी दौलत शिक्षा देने
हमें  हैं  अत्यंत चाह.
पैसे हमारे शत्रु बन गए,
अतः रहते  हैं दुखी.
हमें ईश्वत! इस दयनीय हालत में
क्यों  सृष्टी  की  है?
हमें  यों दुखी छोड़ ,
क्या वे मीठी  नींद में हैं ?

ईश्वर तो हमें छोड़  सोया  नहीं,

इस भूमी पर हम  सब किसान
जीने  के  मार्ग  तो खोजेंगे जरूर.


.......................................................................
கூரையிலே  ஆயரங்கண்  !கொளுத்தும்  வெயில்
குடியிருக்கும்  உள்  வீட்டில் ! மாரி க் காலம்
வாடையிலே  உடலுறைந்து போகும் !எங்கள்
வாழ்க்கையெலாம்  துன்பமாய்  மாறிப் போகும் !
பாயில்லை  படுப்பதற்கு  எழுந்து  நாங்கள்!
பசியாற  உண்பதற்கு  உணவு  மில்லை !
நோயில்லா  வாழ்மெக்கு   அமைய வில்லை
நொடிப் போதும்  எமையின்பம் தழுவவில்லை!
கால்வயிற்றுக்  கஞ்சிக்கும்  கடும்  போராட்டம்
கருணையிலா  சமூகத்தில்  நாமோர் கூட்டம்
ஏழ்மை  நிலை  தா னெமக்குத்    தோழ ராகும் !
இம்மையிலே   நமது  இடம்  நரகமாகும் !
பசி வரவே  மாத்திரைகள்  உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் !தனவந்  தர்கள்
வசிக்கின்ற  வீட்டினிலே  நாயக  ளுண்ணும்
வகையான  உணவுகளும்  எமக் கில்லை !
பெற்றெடுத்த  செல்வரினைக் கல்வி என்னும்
பெருங்  கடலில்  நீந்தவைத்துக்  கரையில் சேர்க்க
பற்றெமக்கு  மிகவுண்டு !பணத்  துடிப்பு
பகையாகிப்  போனதனால்  வீணில் வாழ்ந்தோம் !
இத்தரையில்  எமைப்போன்ற  மாந்தர் தம்மை
ஏன்படைத்தான்  இறையவனும் ?உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கின்றான்  நம்மை விட்டு ? 
நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறி யில்லா  மாந்தர்கள் புரியும் சதியில்
இத்தரையில்  கிடந்து நாம் உழ வர் எல்லாம்,
இனியுந் தான்  மாறிடவே வழிகள்  காண்போம் !
தமிழில் -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
ஹிந்தி யில் - அனந்தகிரிஷ்ணன் சேதுராமன்
15 -கொடுமை தான்  வறுமைத் துன்பம்
........गरीबों  को  न   सुख .
    जो  है ,वह है  दुःख.
रोटी  देखने  से  सुख.
क्रूरता है  गरीबी  जीवन.
कल मिटेगा दुःख ,
होगा   सबह  जीवन  में
केले  के समान अंत के
इस मनुष्य  को  कहाँ  सुख.
बैल -सा  मेहनत, पर
केवल  बचता  है  गरीबी.
मेहनत  का  फल तो शून्य.
इमारतों को  सीधे  खड़े
मनुष्य  जीते है विश्व में.
..................................................
ஏழைக்கு  இல்லை  இன்பம்
இருப்பது யாவுந்  துன்பம்
கூழையே   கண்டால் இன்பம் !
கொடுமை தான்  வறுமைத் துன்பம்
நாளையோர்  விடிவை எண்ணி
நலமுடன் வாழ எண்ணும்
வாழை  போல்   மடியு மிந்தப்   
மாந்தருக் கென்று இன்பம் .?
மாடென உழைத்தே ஈற்றில்
மனத் துயர் மட்டும் மிஞ்சும் !
பாடுகள் பட்டே பின்னால்
பலனது  பூ (ஜ் )ஜியம் தான் !
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர்க் ளாலே
Post a Comment