Monday, November 7, 2016

விதித்தவன் அவன் . துதிப்பவர்கள் நாம் . பலன் ?நம் கையிலா ?--1

  

இன்று நான் என்னுடன் பணியாற்றியவரும் ,
கலைத்துறையிலும் ஆன்மீகத்திலும்
மிக ஈடுபாடும் ஆழ்ந்த நுண்ணறிவும்
நடிப்பில் சிறந்தவருமான நண்பர் டிகால். என்று பள்ளியில் அறிந்த கல்யாண்ஜி என்று வையகம்
அறிந்த கல்யாண்ஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

அவர் எனக்கு அளித்த தலைப்பு :--
"விதித்தவன் அவன் , துதிப்பவர்கள் நாம் ".

நம் ஜாதகம் எழுதும் போது வடமொழியில்

ஒரு வாசகம் இருக்கும் .

"ஜனனி ஜன்ம சௌக்கியானாம் ,
பதவி பூர்வ புண்யானாம் " ,
லிக்யதே ஜன்ம பத்திரிகா.

என்னதான் தவ வலிமை பெற்றாலும் ,
வரங்கள் பெற்றாலும் ,
புகழ் பெற்றாலும் பல்லாயிரம் கோடிகள்
கருப்புப்பணம் சிலவு செய்தாலும்
பதுக்கி வைத்தாலும்
அறவழி தவறினால் ,
கடமை தவறினால்,
வாய்மை தவறினால்,
நேர்மை தவறினால்,
அதிகார துஷ்ப்ரயோகம் செய்தால்
ஊழலில் ஈடுபட்டால் ,
தேச துரோக செயலில் ஈடுபட்டால்,
கலியுக தண்டனை இப்பிறவியிலேயே .
அடுத்த பிறவி என்பது நாம்
அறியமுடியா ஒரு சூக்ஷமம்.
நீங்கள் சமுதாயத்தை ஆராய்ந்தால்
தெரியும்.
தசரத சக்கரவர்த்தியின் இன்னல்,
ராமரின் துயரம்
இன்றைய தலைவர்கள்,
நடிக நடிகர்கள்
புகழ்பெற்றவர்கள்
உலகின் உயரிய விருது பெற்றவர்கள்
ஏன் தத்துவமேதை கள்,
சாக்ரடிஸ் போன்றவர்கள்,
அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கை
ஜவஹர்லால் நேரு , இந்திரா ,
அனைவரும் வேதனைப் பட்டவர்களே.
புத்திர சோகம் ,
நல்ல கணவன் , மனைவி ,குடும்பம்
அமையாதவர்கள்.
அவர்கள் அடையும் மகிழ்ச்சி பணம் ,புகழ்,
நவீன வசதிகள் போன்றவை .
ஆடம்பரம் வெளித்தோற்றங்கள்.
தனிமையில் அவர்கள் அமர்ந்து தன்னைப்பற்றிய
தன் குடும்பம் பற்றிய சிந்தனை செய்யாதவர்கள்.
ஒரு வார்டு கவுன்சிலர் மனைவியிடம் கேளுங்கள் :
" அது எங்கே வீட்டுல இருக்கு. ஊர்க்கவலையே பெரிசா இருக்கு.
எப்போ போகுது எப்போ வருதுன்னு தெரியாது. "

ஆனால் அவருக்கு அந்த ஊரில்
நல்ல பெயர் இருக்கும்.
சமுதாயம் மதிக்கும்.
அடுத்த தேர்தலில் அவரை மக்கள்
விரும்பினாலும்
விதி பணபலம் தேர்தலில்
டெபாசிட் இழக்கச் செய்யும்
பெருந்தலைவர் காமராசர் எதிரியும் புகழும் உத்தமர் . கக்கன்ஜி போன்றோரின் தோல்வி
விதியின் வலிமையையே மதியைவிட உயர்ந்தது என்பதற்கு சான்றுகள்.
பணபலம் மதி பலத்தை இல்லாமல் செய்யும்
என்ற மக்களின் இன்னல் விதியே
மாயை முன் மதி மாது , மதுவிற்கு விதி விளையாடும்
அதற்கு ராவணன் ஒரு உதாரணம்.
முகலாயர்களின் ஆட்சி ஆங்கிலேயர்களால்
கவிழ்ந்ததும் விதி மதியை செயல்படாமல் செய்ததே.
காந்தி வாங்கிய கன்னத்தில் அறையும் அவமானமும் ,
நமது நாட்டிற்கு விடுதலை.
நாட்டின் ஒற்றுமைக்கு ஆதாராம்.
நேதாஜியின் படை பலம்.
தீவீரவாதிகளின் ஹிம்சை அரசியல்.
அனால் தடி அடிபட்டு இரத்தம் சிந்தி
சத்தியா கிரகம் , அஹிம்சை தான்
உலக அளவில் பேசப்படுகிறது.
இதிலும் விதியார் பக்கமோ அவர்களுக்கே புகழ்.

பதவி. நேருவின் விதி சுபாஸ் சந்திர போசை ஒளித்தது.
நேரு ஒளி பெற்றார்.
ஆங்கிலம் வளர்ந்தது. பாரத மொழிகள்
வாழ்வாதரமில்லை என்ற நிலை வந்தது.
பாரதக் கலைகள் மறைந்தன.
கதாநாயகி முந்தானை தூக்கி போடும்
மாயை மக்களை கவர்ந்தது.
மதியா ? விதியா?
மதி மயங்கி , விதி விளையாடிக்கொண்டிருக்கிறது.
   

No comments: