Tuesday, October 25, 2016

ராமசரிதமானஸ் ---சுந்தரகாண்டம் பக்கம் ஒன்பது

 
  சீதையின் ஆசிகளைக்கேட்டு  ஆஞ்சநேயர்


சீதையை  வணங்கி  கைகூப்பி   சொன்னார் ---

  அன்னையே!உங்களுடைய ஆசிகள்

   என்னை எப்பொழுதும் காக்கும்.

   உங்கள்  ஆசிகள் தவறாது, இது  புகழ்  பெற்றது.

   இங்குள்ள் மரங்களின் பழங்களைப் பார்த்து

பசி  அதிகமாகிவிட்டது.

அப்பொழுது  சீதை --மகனே! பெரிய  பலம் வாய்ந்த  போர் வீரர்கள்

      இந்த  வனத்தைக்  காக்கின்றனர்  என்றார்.

    அன்னையே!  நீங்கள்  மகிழ்ச்சியுடன்  ஆணையிட்டால்

எனக்கு  அச்சமே  இருக்காது.
   ஹனுமானின்  அறிவையும் வலிமையையும் பார்த்து

சீதை ---மகனே!ரகுநாதனின் பாதங்களை  வணங்கி   மனதில் கொண்டு

பழங்களை   சாப்பிடவும்.

   அவர்  சீதையை  வணங்கி   தோட்டத்தில்  நுழைந்தார்.

பழங்களை  சாப்பிடவும் , மரங்களை  உடைக்கவும்  தொடங்கினார்.

அங்குள்ள  வன காவலர்களில்  சிலரைக்  கொன்றார். சிலர்  சென்று ராவணனிடம்   புகார் அளித்தனர்.

 தலைவா! ஒரு  மிகப்  பெரிய  குரங்கு வந்துள்ளது. அது  அசோக  வனத்தை

பாழாக்குகிறது .   பழங்களை  சாப்பிட்டது. காவலர்களை  நசுக்கி  தரையில் போட்டுவிட்டது.

 இதைக்கேட்டு  இராவணன்   அதிக  போர்வீரர்களை  அனுப்பினார்.

அவர்களைப்பார்த்து  ஆஞ்சநேயர்  கர்ஜித்தார்.

அனைத்து  காவலர்களையும்   அடித்தார்.  சிலர் குற்றுயிர் ஆயினர்.

சிலர்  அபயக்குரல்  எழுப்பினர்.

பினனர்  ராவணன் அக்ஷய குமாரனை அனுப்பினார். அவன்  எண்ணிக்கையற்ற  வீரர்களுடன் வந்தான். அவனைப்பார்த்ததும்

ஒரு   பெரிய  மரத்தைப்பிடுங்கி  அவனைக்  கொன்று  பேரிரைச்சல் போட்டார்.

சேனையில்  சிலரை அடித்தார். நசுக்கினார்,கொன்றார், சிலர்  பயந்தோடி

ராவணனிடம்    குரங்கு  மிகவும்  பலசாலி என்றனர்.

  மகனின்  வதம்  பற்றி அறிந்து  ராவணன்  மிகவும்  கோபமுற்றான்.

அவன் மிகவும்  பலசாலியான  தன்  மூத்தகுமாரன்

  மேகநாதனிடம்   அவனைக்  கொன்றுவிடாதே,
 உயிருடன்  பிடித்துவா   என்று  அனுப்பினான்.

அந்த  குரங்கு  எங்கிருந்து  வந்துள்ளது  என்பதை அறியலாம்.

   மேகநாத்  தன்  சகோதரன்  கொல்லப்பட்ட  செய்தி  அறிந்து
  மிகவும் சினமுற்றான்.  அவன்   இந்திரனையே  வென்ற
  ஈடு  இணையற்ற  வீரனாவான்.
  இப்பொழுது  பயங்கர போர்  நடக்கும்  என  அறிந்து  கடுமையாக

கூச்சலிட்டுக் கொண்டே  ஓடினார்.

    ஒரு  மிகப்பெரிய  மரத்தை வேரோடு  பிடுங்கி

 மேகநாதனின்  தேரை பயனற்றதாக்கினார்.

தேரை உடைத்தெரிந்தார்.

 அவனுடன் வந்த மிகப்பெரிய வீரர்களை
 தன்  உடலுடன்  சேர்த்து  நசுக்கினார்.

அவர்கள்  அனைவரையும் கொன்றுவிட்டு

 மேகநாதனுடன்  மோதினார்.

அவனின்  மீது  ஒரு  குத்து போட்டு

அவனை மயக்கமடையச் செய்தார்.

சில  நொடிகள்  மயக்கமடைந்து  எழுந்ததும்

பல மாயைகள் புரிந்து  போரிட்டான்.

ஆனால்  வாயுகுமாரனை   வெல்ல  முடியவில்லை.

 இறுதியில்  அவன்  பரகுமாஸ்திரத்தை  பயன்  படுத்தினான்.


வாயுகுமாரர்    பிரம்மாஸ்த் திறத்தின்  மேன்மை

குறையக்கூடாது என்று  நினைத்துக்  கட்டுப்பட்டார்.

பிரம்மாஸ்த்  திரம்   பட்டதுமே    வாயுகுமாரர்
மரத்தில்  இருந்து  விழுந்தார்.

 கீழே  விழும்போதே  பல  வீரர்களைக்  கொன்றார்.

ஹனுமான்  மூர்ச்சை அடைந்ததைக்  கண்டதும்  நாகபாசத்தால்

அவரைக்  கட்டினான்.

  இந்நிகழ்ச்சியைக்  கண்ட சிவன்  தன்  மனைவி  பார்வதியிடம்

கூறினார்-- ராமநாம  ஜெபத்தால்   பக்தர்கள்

  உலக  பந்த்தத்தை முறித்துக்கொள்வர்.
ஆனால்   ராமச்சந்திர  பிரபுவிற்காக
 ஹனுமான்  கட்டுண்டு  இருக்கிறார்.

 குரங்கு கட்டப்பட்டதை  அறிந்து  
வேடிக்கை பார்க்க  பல  அரக்கர்கள்
 ராஜசபைக்கு  வந்தனர்.

வாயுகுமாரர்  ராவணனின்  அவைகண்டு  வியந்தார்.

அதன்  ஐஸ்வர்த்தை   வர்ணிக்க வார்த்தைகள் கிட்டவில்லை.








No comments: