Monday, October 24, 2016

ராமசரித மானஸ்--சுந்தரகாண்டம் பக்கம் aaru --இல்

சீதை   ராவணன் கையிலுள்ள

 வாளிடம்  கூறினள்---

கூறிய  வாளே!
 ராமரின்  விரஹதாபத்தால்

 எரியும் இந்த எரிச்சலைப் போக்கிவிடு.

நீ  குளிர்ந்த,தீவிரமான ,
உயர்ந்த  ஒரு வேகத்தைத் தருவாய்.

என்  இன்னலை   போக்கிவிடு.


ராவணன்  சீதையின்  சொற்கள்  கேட்டு

 கோபத்துடன்

வாளுடன்  கொல்ல  ஓடினான்.


அப்பொழுது  மய  அரக்கனின்  மகள் 

 மண்டோதரி  தடுத்தாள்.

அவனுக்கு  அறிவுரை  வழங்கினாள்.

ராவணன்  பொங்கிவரும்

  சினத்தை அடக்கிக்கொண்டு

அரக்கிகளை  அழைத்து

 சீதாவிற்கு அனைத்து விதமான

 அச்சத்தை  ஏற்படுத்துங்கள்.

 ஒருமாதத்தில்  நான்  சொல்வதை  ஏற்காவிட்டால்

வாளால்  இவளை  துண்டாக்கிவிடுவேன்.
ராவணன்  சென்றதும் அரக்கிகள்

பயங்கர  வடிவமாகி  அவரை  அச்சுரித்தினர்.


அந்த  அரக்கிகளில்  ராம  பக்தையான  திரிஜடை,

அறிவும்  ஞானமும் உடையவள்.
அவள் அனைவரயும்  அழைத்து தன் கனவினைக் கூறினாள்--

சீதைக்குப்  பணிவிடை  செய்து  நலமடையுங்கள்.
நான்  மிக  கொடிய  கனவு கண்டேன்.

 ஒரு  குரங்கு
 இலங்கையை  எரித்துவிட்டது.

அரகர்படையை  முற்றிலும்  அழித்துவிட்டது.


ராவணன்  நிர்வாணமாக

ஒரு  கழுதையில்  அமர்ந்துள்ளான்.

அவன்  தலை மொட்டையாக  உள்ளது.
இருபது  கைகளும்  வெட்டப்பட்டுள்ளன.
இந்த  நிலையில் யமபுரி  திக்கில் 
தெற்கு  நோக்கி போய்க்கொண்டிருக்கிறான்.

இலங்கைக்கு  அதிபதியாக  விபீஷணன் உள்ளான்.

அனைவரும்  ராமரை  வாழ்த்துகின்றனர்.

ராமர்  சீதையை  அழைக்கிறார்.

இந்த கனவு  நான்கு  நாட்களில்  பலித்துவிடும் .

இதை  நான்  உறுதியாக  சத்தியமாகக்  கூறுகிறேன்.

திரிசடையின்  கனவினைக்கேட்டு

அரக்கிகள் பயந்தனர்.

ஜானகியின் கால்களில்  விழுந்து  வணங்கினர் .

எல்லோரும்  சென்றபின்  சீதை   ,

ஒருமாதம்  கழிந்தபின்

 நீசனான  அரக்கன்  இராவணன்
என்னை  கொன்றுவிடுவான்

என  நினைத்தாள்.

சீதை  திரிஜடயிடம்  தன்னை

 கொன்றுவிடும்படி  வேண்டினாள்.

என்னால்  இந்த  பிரிவுத்துன்பத்தை
சகிக்க முடியவில்லை.
நீதான்  எனக்கு  இந்த  ஆபத்துக் காலத்   தோழி .

விறகுகள்  கொண்டுவந்து  சிதை  மூட்டு.

நீ  என் அன்பை  சாத்தியமாக்கு.

ராவணனின்  சூலாயுதம் போல்

 குத்தும்  கொடிய
சொற்களை  காதுகளால்  கேட்கமுடியவில்லை.


சீதையின்  சொற்களைக்  கேட்டதும்


திரிசடை  ராமனின் வீர ,தீர , பலம்  பற்றி  கூறி ,

புகழ்ந்து

இரவு  நேரத்தில்  விறகு சி தை  அமைக்க  கிடைக்காது  

என்று  கூறி ச்  சென்றாள்.

சீதை , இயற்கையே  எனக்கு  விரோதி ஆகிவிட்டது.

நெருப்பு  கிடைக்காது.

 இன்னல்  போகாது.
ஆகாயத்தில்  நெருப்பு  தென்படுகிறது.

பூமியில்  ஒரு   நக்ஷத்திரம் கூட இல்லை என  நினைத்தாள்.






No comments: