Thursday, July 28, 2016

வாழ்க பாரதம்

வடக்கிலிருந்து வந்த முருகன்,
தமிழ் கடவுள் ஆகின்றான்.
இது ஆன்மீக ஒற்றுமை.
வடக்கே முருகன் ஒதுக்கப்பட்டான்.
பொதிகை மலை கடந்துவந்த அகஸ்தியன்
தமிழுக்கு இலக்கணம் வகுத்தான்.
தென்னாடுடையசிவனே போற்றி
கைலாய வாசன் சிவன்
ராமேஸ்வரத்தையும் காசியையும் இணைத்தான்.
வால்மீகி வடமொழி கவி அவன் படைத்த
இராமாயணம் தமிழ் கம்பராமாயணம்.
ஆன்மிகம் இணைக்கும் பாரதம்.
ஆலய வருமானம் மது ஆலயவருமானம்
இரண்டில் ஒரு ஆலயவருமானம் அதிகம்.
ஆலயத்தால் வாழ்வோர்ஆயிரமாயிரம்.
ஆலயம் சுற்றி வணிகவளாகம்.
அறநிலையத்துறை ஊழியர்கள்
அர்ச்சகர்கள் , பண்டாரங்கள்
நாத்திகம் பேசுவோர் கடவுள் இல்லை என்றாலும்
கட்அவுட்பாலாபிசேகம் ஓயவில்லை.
கல்லுக்கு அபிஷேகம் தீர்த்தமாகிறது
நாத்தீகவாதம் எடுபடாது.
வடக்கும்தெற்கும்இணைந்த பாரதம்
ஆண்டவனால் இணைக்கும் பாரதம்.
வடமொழிஎன்மொழிகலப்பில்கொதிக்கும்
திராவிடஇயக்கங்கள்
ஆங்கிலமொழி இணைத்து
தமிழ்மொழிஅழிக்கும்
உண்மை நிலை பாரீர்.
திராவிட ஆட்சி வந்தபின் பட்டிதொட்டி எல்லாம்
ஆங்கிலப்பள்ளி.
அரசுப்பள்ளி ஆயிரமாயிரம் மூடல் காணீர்.
தமிழ் தமிழ்என்றே மேடை முழக்கம்.
படத்தலைப்பு தமிழ், ஆங்கிலம்கலந்த பாடல்,
வடமொழி கலப்புஎதிர்ப்பு.
வடமொழியால் தமிழுக்கு இலக்கிய வளம்.
பாரதிதாசன் தாசன் வடமொழி யன்றோ.
சிந்திப்பீர் இளைஞர்களே!
சுயநல இயக்கம் புரிந்து
தேசீய நீரோட்டத்தில் இணைவீர்.
வாழ்க நற்றமிழர்! வாழ்க பாரதமணித்திரு நாடு.!

Monday, July 25, 2016

தெய்வீக ஞானம்.

செயல் கர்ம வினை ,

ஒரு பெரிய மீன் சிறிய மீனை விழுங்கும்

. சிலந்தி ,பல்லி,தவளை அனைத்துமே பூச்சிகளைப்
பிடித்து தின்னும்.

மிகப்பெரிய யானை சைவம்.
புலி அசைவம்.

இந்த அசைவங்கள்

சைவங்களை நேரடியாக
தாக்காது.

சைவப்பிராணிகள் நேரடியாக தாக்கும்.
தீவீரவாதிகள்

முகமூடி போட்டோ ,

முகத்தை மறைத்தோ

தாக்குவார்கள்.
இப்பொழுது புதிய தாக்குதல் முறைகள் .
அவர்களுக்கு வரும் அறிவு அழிக்கும் அறிவு.
அதை பயன்படுத்துவோருக்கு நிம்மதி இருக்காது.
வெளிப்படையாக சமுதாயத்தில் வந்தால் தான் சாதிக்க முடியும்.
புத்தர் ஞானம் பெற கானகம் சென்றார்.
சமுதாயத்தை திருத்த மீண்டும் வந்தார்.
நமது சித்தர்கள் , முனி ,ரிஷிகள் , அனைவரும் சொல்லும் மெய் ஞானம்,

மாயை ,சைத்தான் ,சாத்தான் ,பெண் ,பொன் ,சந்தானம் என்ற தீயவைகளால்

மறைக்கப்படுகிறது.
இந்த கருமேகங்கள் களைய நன்னீர் மழை பொழிய
ஆட்டிவைக்கும் சக்தி உணர்ந்தோர் திருத்த
ஆண்டவனே விடுவதில்லை.
காரணம் உலகம் இயங்க வேண்டும்.
அதனால் நல்லவர்கள் ஞானிகளாகி
ஞானம் அளிக்க முயற்சி செய்கிறார்கள்.
இதனால் தான் ஞானிகள் உலக ஆசைகள் அறவே கூடாது என்கின்றனர்.
அரசபதவி, நாடாளும் அதிகாரங்கள் பெற்றவர்கள் தங்கள் பாதுகாப்பை
உறுதிபடுத்திக்கொள்கிறார்கள். குந்தி தன தவறை மறைக்க கர்ணனின் அம்மாவாக இல்லாமல் செல்வியாகவே வாழ்ந்தார். கணவன் நோயாளி . அதே சூரியபாகவானிடம் முடியாது என்று மற்ற தேவர்கள். இது ஆட்சி ,அதிகாரம் அந்தஸ்து உள்ளோரின் செல்வி நிலை.
அரச விசுவாசம் . தலைவர் தொண்டர்கள் என்ற அதிகாரவர்க்கம்
தண்டனை பயத்தைக் காட்டுகின்றன.
ஆன்மீகர்கள் சிலர் மக்களை ஏமாற்ற சுவர்க்கம் , நரகம் , பாவம் ,புண்ணியம் ,செய்வினை ,கர்மவினை ,தீய எண்ணம் என்று வழிகாட்டினார்கள். உலகம் மாயை, அழியக்கூடியது, மரணம் நிச்சயம் .
என்றெல்லாம் பயமிருத்தி சிலர் போருளீட்டுவதில் ஈடுபடுவதால் அவர்களும் பாவங்கள் சேர்க்கின்றனர்.
அதனால் மெய்ஞானிகள் மிகவும் ஒதுங்கி
நல்லவர்களை சீடர்களாக்கி
வையகத்திற்கு சில நல்லவர்களை
தெய்வ பலத்தோடு விட்டு செல்கின்றனர்கள்.
அதனால் தான்
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை "என்றனர். பலர் வாழ்க்கை ஒளி பெறுவதே அதிக அறிமுகமில்லா மனிதர்களால்தானே!
ஓம் ! ஓம் ! ஓம் ! என்றே உலகை ஏமாற்றும் ஆன்மீக வாதிகள் தீவீரவாதிகளைவிட மோசமான மாயைகள் / சைத்தான்கள். குரானை மேல் என்பவர்களிடம் இந்த சாத்தானின் ஆதிக்கம் அதிகம். அதனால் தான் முகமூடி தீவீரவாதிகள் பேரஹமி அதாவது இரக்கமற்றவர்கள்.
உண்ண உணவு , உடை , இருக்க வீடு இது எளிதாக இருக்கலாம் . ஆடம்பரங்கள் அவசியம் என்பது மாயை. இந்த மாயை மிக வசதிகளை விரும்புகிறது. குளிர் சாதனம் , மெத்தை , குளிர் -நீர் ,வெந்நீர் சாதனங்கள் இன்னும் பல. வா ஹனங்கள் . தொலைபேசி ,கைபேசி ,
இன்று இவை அத்தியாவசியங்கள்.
இன்று மடிகணினி இடுகை பொருளாதார வசதியால்.
இதைவிட அதிகமாக ஞானிகள் வையகம் முழுவதும் இணைத்து வாழ்ந்துள்ளனர் என்பது தான் தெய்வீக ஞானம்.


பொருளாதாரம் . அது பொருளற்ற ஆதாரம். ஆயிரம் கோடி வைத்திருப்பவனுக்கும் மரணம் தான். அதுவரை அவன் செய்த பாவம் அடுத்த ஜன்ம பெருநோயாளி , ஏழ்மை . அறிவுடன் இருப்பவர்கள் அடையாளம் இல்லாமல் அழிவர். இதுதான் வையகம்.

Sunday, July 24, 2016

देश प्रधान

तन दें  मन दें धन दें 
देश के लिए 
समाज के लिए
जाति धर्म के लिए
मानव की रक्षा के लिए
आजादी  के लिए
पर  आजादी  के बाद
स्वार्थ  सिद्ध के लिए
लोभ  लालच भय
चालाकी से घूस से
कानून  के भय दिखाकर
गैर कानूनी तरीके से
माफिया दादा के बल से।
कुर्सी पकडना हो गया लक्ष्य
कुली सेना का
प्रोत्साहन
आत्म हत्या सेना
वाहन  चालाक द्वारा हत्या
न जाने देश किसी दैविक शक्ति
द्वारा  बचाया जा रहा है़।

Friday, July 8, 2016

அவனியில் உண்டு.

ஆண்டவன்   என்ற  அச்சமில்லை  ,

காசில்லாமல் காசினியில்


காசியும்  இல்லை   திருப்பதியும்  இல்லை.


காசி  விஸ்வநாதனுக்கும்  தெரியும்


காசு வாங்கும்  ஏழுமலையானுக்கும்   தெரியும்.


யாருக்கு   வழங்க  வேண்டும்  என்பதிலே  தான்


ஆண்டவனுக்கு  ஏற்ற  தாழ்வு.


வாரிவழங்கும்   கர்ணன்   ஏழை ,


அவனுக்கு  ராஜ  வாழ்வு.


குசேலனுக்கு      சந்தான  பாக்கியம்.


தசரதனுக்கு   இல்லை.


ஆஸ்தியளிப்பது  அவனருள் .

ஆஸ்தி  பெற்றும்   அளித்து  வாழ்வது  ஏற்றம்.

ஆஸ்தி   அழித்து  மாதவியிடம்  சென்ற  கோவலன்   நாஸ்தி .

பக்த  தியாகராஜர்     பாடலில்  அமரத்துவம்.


அவனருள்  இருந்தால்  ஞானம் .

அவனருளிருந்தால்    செல்வம்.

அவனருளிருந்தால்   வீரம்.

அவனருளிருந்தால்  இஷ்ட்  காம்ய  சித்தி.

அஷ்டமா  சித்திகள்  அவனியில்  உண்டு.