Tuesday, March 15, 2016

இறைவன்

   இறைவனை வழிபட்டு அவனையே சரணாகதி அடைபவர்கள் வாழ்க்கையில் உயர்கிறார்கள்.
  சிலர் சுயநல லாபத்திற்காக
ஆடம்பரத்திற்காக ஆன்மீகத்தைப்
பயன் படுத்துகிறார்கள்.
பக்தியில் ஆடம்பரம் குதிரைப்பந்தயம்போல்.
கிரிக்கட் சூதாட்டம்போல்.
பால் அபிஷேகம் .பஞ்சாம்ருத அபிேஷகம்  என்பதெல்லாம்
கஞ்சக்கருமிகளும் ஏழைகளுக்குஉதவட்டும் என்றே.
தேங்காய் உடைப்பதால்
பல பசியானவர்களும் எடுத்து சாப்பிடட்டும் என்றே.
அன்னதானம்.பூ தானம் கோதானம்
என்று பலவித தானங்கள் .
ஆனால் இன்று பல பாவங்கள்
செய்து பொருளீட்டி பரிகாரபூஜைகள்.
பதவிக்காக
தேர்தல் வெற்றிக்காக
மனதில் பக்தி இருந்தால்
சாதிக்க முடியாதது இல்லை.
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
சுய நலத்துடனே பக்தியில் ஈ்டு படுகிறோம்.
கபீர் துளசி பக்த த்யாகராஜர்
ரைதாஸ்  ஏகநாத்  போன்ற பக்தசீலர்கள்போல்  நம்மால் பக்தியில் ஈடுபடமுடயவில்லை.
இறைவனையடைய அவன் க்ருபை பெற பணத்தால் ஆடம்பரம் தேவையில்லை .அவனை முற்றிலும் சரணடைய வேண்டும்.
நமக்கு வேண்டியதெல்லாம் அவன்
அருளால் கிட்டும்

No comments: