Thursday, March 31, 2016

இயற்கை அழிவு

இறைவன் இயற்கையான ஆனந்தம்  மன நிறைவு  அருள்பெற்ற ஆசி பெறவேண்டுமென்றால்

நாம் நம் கடமை செய்யவேண்டும் .
மற்றவர்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்டவேண்டும்.
நட்பு என்றோ உறவு என்றோ அதிகாரபலங்கண்டு பயமோ
கூடாது.
நட்பு உறவு வருமானம் பதவி உயர்வு புகழ் தற்புகழ்ச்சி  சலுகை என நாம் தவறுகளை வளரவிடுகிறோம் .அப்படித்தான் ஊழல் லஞ்சம் போன்றவை அதிகரிக்கின்றன.
உண்மை நேர்மை வாழ்வது மிகமிக கடினம் .ராமராலும் முடியவில்லை
க்ருஷ்ணராலும்  முடியவில்லை .
இதுவே வையக நிலை.
அதனால் தான் மூப்பு நோய் மரணம் .
தொன்னூறு வயதுஅப்பா காப்பாற்ற  பத்துலட்சம் .தயங்காமல் கேட்கும்  மருத்துவ மனை. வென்டிலேட்டர் மூச்சு .
இறுதியில் பிணமாக அளிப்பர்
  இது இருப்போருக்கு .
சம்பாதித்த பணம் .
இந்த தற்காலிக உலகில் மக்கள் நேர்மையாக இயற்கையாக வாய்மையுடன் வாழ நினைப்பவர்கள் தனித்ததே வாழவேண்டும் .
இறைவன் சிவன் . ஆனால்
அவனை வழிபட பல ஆதீனங்கள் ஆஷ்ரமங்கள் மடாலயங்கள் .
பல வழிமுறைகள் .
அதனால் மக்கா சிவலிங்கம்
முகமதிய சிவனாக  அல்லாவாக காட்சி.ஹஜ் யாத்திரை  .
இறைவன் பெயரால் தனி
தனித்தனி மனிதக்குழு சண்டை கொலை.
எப்படி வரும் அமைதி .சாந்தி .
இயற்கை மகிழ்ச்சி .

Tuesday, March 29, 2016

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது

எனக்கு காலை நேரம் காலை வணக்கம் .
மாலை நேரம் மாலைவணக்கம்.
   வயைகத்தில் வாழ்வது ஒரு கலை.
    அதில் அனைவரும் அனைவருக்கும் நல்லவர்கள் ஆக முடியாது.
பெரும்பான்மை யானவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால்  அன்பான புன்முறுவலுடன்  கூடிய
நடவடிக்கை.அன்பு பண்பு மரியாதை என்பது பதவியில் இருந்தால் அந்த அதிகார நன்மைக்காக பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும்  கிடைக்கும்.
நண்பர்கள்  நண்பர்களாக இருக்க அதொருகலை.
பணம்  பணம் அதை உதவினால்  ஒருமரியாைதை.
நல்லமனிதன் கேட்கும் பொழுதெல்லாம் உதவுவான் .
நல்ல நேர்மையான சத்தியமான மனிதர்கள்  என்றால்
உதவவேண்டும். உதவும் ஆற்றல் உள்ள பணம் குணம் வேண்டும்.
பணம் சம்பாதிப்பது  என்றால் அதற்கு   ஆண்டவன் அருளா ? திறமையா .? முயற்சியா ?  அறிவா ?தந்திரமா ?
பரம்பரையா ?  சிறந்த வியாபாரி பார்த்து ஒருவன் வாணிகத்தில் முன்னேற முடியவில்லை.
பாடனைப்பார்த்து  பாடகனாக முடியவில்லை
தலைவனைப்பார்த்து தலைவனாக முடியவில்லை.
கலைஞனைப்பார்த்து கலைஞனாக முடியவில்லை.
    காரணம் நம்மை ஆட்டிவைக்கும் இயக்கும்
இயக்குனர் ஆண்டவன். அவன்  விரும்பினால் அவன் அருள் பார்வை கிடத்தாலன்றி நமக்கு ஒருஉயர் அந்தஸ்து வராது. அவர்களைப் பின்பற்ற வேண்டும் .ஒருவரை நாம் சந்தித்தால் அவர் உதவி பெறக்கூட ஆண்டவன் இயக்கவேண்டும் .
எனவே அவன் அருள் பெற அவனை இதயத்தில் வைற்று போற்றுங்கள் .எண்ணங்கள் நிறைவேறும் ஏற்றமடையும் .
வாழ்க! அனைவருக்கும் அவன் அருள் உண்டு.

Saturday, March 26, 2016

சிந்திக்க

அனைவருக்கும் காலை வணக்கம் .

கடவுள் உயர்ந்தவர்
உண்மையில்  அவரை  விரும்புபவர்கள்   எந்த உலகியல் ஆடம்பரத்தை விரும்பமாட்டார்.
நான் கடவுள் என்று சொல்பவன்
எப்படி கடவுளாவான்.
கடவுள் என்று தனக்குத்தானே வைரக்கிரீடம் பாலாபிஷேகம் செய்து ஏமாற்றுபவன் ஊழல் மந்திரிக்கு தண்டனை தராமல் அவன் .வெற்றிக்கு ஆசியும் யாகமும் செய்வது வேடிக்கை விந்தையாகத் தெரியவில்லை.
அனைவரையும் காக்கும் இறைவன்
இந்த ஆஷ்ரம கோடீஸ்வரர்கள் சிறை செல்லும் செய்தியே வருகிறது  பல ஆயிரம் கோடி ஆஸரமச் சொத்துக் கணக்கு தெரிகிறது.
ஆயிரம் வீடு ஏழைகளுக்கு கட்டித்தந்த செய்தி வருகிறதா ?
அன்னதானச் செய்தி அதுவும் மற்றவர் கைங்கர்யம்
நடிகர்  பால் என் கட்டவுட்டுக்குத் தவறு அப்பாலை ஏழை களுக்கு வழங்குங்கள் என்று சொன்னதுண்டா ?
முதலில் எல்லோருக்கும் இலவச கல்வி உண்டா ?
அரசியல் தலைவர்கள் நடிகர்கள் நடத்தும் பள்ளியில் கட்டணம் அதிகம்  அங்கு நிரந்தர ஆசிரியர் உண்டா .? அங்கு ஆசிரியர்கள் கொத்தடிமை. அரசியல் பின்னனி பொறியியல் கல்லூரி  பேராசிரயர் சம்பளம் பத்தாயிரம்
தர்மம்  நியாயம் இல்லை. இதை மக்கள் சிந்திப்பது எப்போது? வாக்களிக்குமுன் இளைஞர்களே !சிந்திப்பீர் !

.

முகநூல் தெய்வப்படங்கள்

முகநூல் அனுப்பிய தெய்வங்கள் .
ஊழல் இல்லா ஆட்சி.
கள்ளப்பணமளித்து ஓட்டுபெறுவோர்
இூத வேடிக்கை பார்க்கும்அதிகாரிகள்
கள்ள ஓட்டுப்போடுவோர்
நேற்றைய ஊழல் இன்றைய யோக்கியன் என கூட்டணி
வைக்கும் தலைவர்கள்
விஜய் மல்லையா போன்றோர்
இத்தனை ஆண்டவர்கள் இருந்தும்
படுகொலைகள் கற்பழிப்பு லஞ்சம்
மதவெறி ஜாதிவெறி
லஞ்சம்
இத்தனை ஆண்டவன் ஒருவருக்கும் இவர்கள்மேல்
கோபம் இல்லை
ஆத்திரம் இல்லை

உண்மை அலறுகிறது.
நேர்மை கதறுகிறது.
வேடிக்கை பார்க்கும்
தெய்வங்களுக்கு  சொத்து உண்டியல் காணிக்கை கூடுகிறது.
ஓட்டுக்காக  குடிசைகள் அதிகரிக்கின்றன.
மாளிகைகள் ஓட்டளிப்பதில்லை.
ஆண்டவன் லீலை என்றே சகிக்கும் மக்கள்
ஆலயங்கள் அதிகரிக்கின்றன.
நீதிபதிக்கு கணக்கு தவறாகிறது.
ஆலயங்களில்  ஆஸ்தி உள்ளவர்களுக்கு முதல் மரியாதை.
வாழ்க ஆன்மீகம் .வாழ்க ஜனநாயகம்.
பக்தர்கள் பரதேசிகள்.
ஊழல்வாதிகள் ஆட்சியாளர்கள்
வாழ்க தெய்வீகம்.
தெய்வங்களே! 
உங்கள் லீலை அபூர்வம்
அத்புதம்
ப்ரார்த்தனைகள்

Saturday, March 19, 2016

ப்ரார்த்தனைகள்

ௐ கணேசாய நம ஹ 

கிரிக்கட்  வெற்றி பெற ப்ரார்த்திக்கும் இளைஞர்கள்
தங்கள்   நடிகன் படம் வெற்றி பெற
மொட்டை அடிக்கும் இளைஞர்கள்
ஊழல் வழக்கில் தலைவர்கள் தப்பிக்க மொட்டை ப்ரார்த்னை செய்வோர்

நல்ல ஊழலற்ற நேர் மையான  திறயைான அரசு அமைய ப்ரார்த்திப்பது இல்லையே ஏன் .?
ஊழலால் வந்த செல்வத்தில் ஹோமம் யாகம் செய்வதால்
இறைவன் அருள் வான் என்றால்
நேர்மையானவர்கள் ப்ரார்த்தனை
கட்டாயம் நிறைவேற்றுவான்
எனவே வரும் தேர்தலில் நேர்மையான ஊழலற்ற அரசு அமைய ப்ராரத்தனை செய்யுங்கள்
நடு நலமாக இருந்தால் தான் மக்கள்மகி்ச்சியாக இருக்க முடியும்
இறைவா ! வரும் தேர்தல் தமிழகத்தில்
ஊழலற்ற ஆட்சியாளர்  அமர
ப்ரார்த்தனைள் செய்யுங்கள் .

ஆன்மீகம் நடைமுறை

ஆன்மீகம்   அமைதி தரும்
தனம்தரும்
கல்விதரும்
ஆரோக்கியம் தரும்
அமைதிதரும் .
ஆஸ்திதரும்
மன சஞ்சலம் தீர்க்கும்.
ஞானோதயம் தரும்
ஆயுள் விருத்திதரும் .ஆனால்

நடைமுறையில்  அனைவரும்
ஆன்மீகவழியில் செல்வதில்லை.

அவனியின் அனைத்து துறைகள் போல் ஆன்மீகமும்  வருமானம்
ஈட்டும் தொழிலாக மாறுகிறது.
உடனடி பலனுக்காக ஊரை ஏமாற்றும் சாமியார்களிடம்
கூட்டம் கூடுகிறது.
இறைவனையே சரணடையும் கூட்டம்  சரணா கதித்துவம் 
குறைந்து வருகிறது.
வருமானம்   வரும்  மானம்
வறுமையில்   மிகவும் கடினம்.
ஆகவே  தான் கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே   என்று
இறைவன் செய்திவருகிறது.
வையக சுக துக்கங்களை ஒரு பொருட்டாக கருதாதவர்கள்
துறவிகளாக  மாறுகின்றனர்.
அவர்கள் பண ஆசை இல்லாதவர்கள் .
பணம் ஆஸ்தி ஆஸ்ரம் என்று இருப்பவர்கள்  நேர்மையான பக்தியில்  இருப்பதரிது.
கடமையைச் செய்வோருக்கு
வசதிகள் பெருகும்
அவர்களால் தான் மகிழ்ச்சியாக இறைவழிபாடு செய்ய இயலும்.

எல்லோருமே துறவிளானால் வையகம் எப்படி இருக்கும்.
தனக்கே தண்ணீருக்குவழி இல்லை என்றால் பால் எப்படி மற்றவர்களுக்கு தானம் செய்ய முடியும் ?
ஆலயம்கட்ட அரசன் உதவவேண்டும்.
அவன் படையெடுப்பான் .
எதிரியை அழிப்பான் .
வருமானம் வீரத்தால் வரும்.
அவன் வாரிசில் வீரம் இல்லை என்றால் அனைத்தையும் இழந்து வாழ்வான் .
அரசனும்ஆடம்பராமில்லா ஆட்சி
நடுநிலைமை தவறா ஆட்சி செய்ய வேண்டும்.
நமது நாட்டில்  ஓட்டுப்போடாத
அறுபது சதவிகிதம் தன் கடமை  முயற்சியால் வளர்கின்றன.
அதற்கு  ஆட்சி பற்றி கவலை இல்லை.
கடமை தவறும் அரசியல் நிலையற்றது .
அந்த அரசியல் அவப்பழியுடனேதான் இயங்கும்.
ஊழல் லஞ்சம் ஆட்சியால்
நாட்டின் வளம் குறையும்.
வீண்ஆடம்பரம் மக்கள் மகிழ்ச்சியை பாதிக்கும்.ஆலயங்களில் ஆஷ்ரமங்களில் ஆஸ்தி
நாட்டிற்கு நலம் இல்லை.
இதுவே இந்திய நிலை.
சிலர் மட்டும்சுகபோக வாழ்க்கை .
பலருக்கு இன்னல்.
இதுவம் இறைவனருள் என்பதே
இந்திய ஆன்மீகம் .

Thursday, March 17, 2016

பகவானின் பக்தன்

   

 பலர் இறைவனை பார்க்க வரம் பெற விரதம் இருக்கின்றனர்.

    பலர் தீரத்தயாத்திரை செல்கின்றனர்.பாதயாத்திரை செல்கின்றனர்.

காவடி எடுக்கின்றனர்.அலகு குத்திக்கொள்கின்றனர்.அன்னதானம்

செய்கின்றனர்.

யாகம் செய்கின்றனர்.ப்ராயச்சித்தம் செய்கின்றனர்.

  உண்மையில் இந்த பக்தி முறைகளில்  ஆனந்தம் ,மனநிறைவு, சாந்தி

கிடைக்கிறது.  ஆனால் உண்மையான  பக்தன் யார்?

  அவனியில் பல வித மான மக்கள் வாழ்கின்றனர். அனைவரும்


கண்களை மூடி இறைவனை வழிபட்டால்  வையகம் எப்படி இருக்கும்?

எதுவும் சரியாக நடக்குமா?   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை.

கடமைக்கேற்ற அறிவு. ஆற்றல். ஒருவர் ஆன்மீக குரு. அவருக்கு


சேவை செய்யும் சிஷயன் அவருடனேய  இருந்தாலும்  அவர்பெற்ற

ஞானம் வருவதில்லை.

 ஒரு இசை மேதை. அவர் போல் அவருக்கு பக்க வாத்தியம்  வாசிப்பவரகள் பாடமுடிவதில்லை.நாதஸ்வர மேதைகள் பின் ஒத்து
ஓதுபவர்கள் அவர்போல் நாதஸ்வர கலையில் புகழ்பெற முடிவதில்லை.இயற்கையில்  ஞானம்  வந்துவிடுகிறது.

பல உதாரணங்கள் மடைதிறந்த வெள்ளம் போல்

வேதங்களில்இருந்தும்  பல கதைகள் இதிஹாச புராணங்களில்

இருநதும் வருகின்றன. அவருடன்  சேவையில் ஈடுபடும் சிஷ்யன் அந்த

ஞானம்  பெறமுயன்றாலும் முடிவதில்லை.

  கீதையில் கடமையைச்செய்  என்கிறார் கிருஷ்ணபரமாத்மா?

கடமையைச்  செய்தால்  பலன் கிட்டும். ஆனால்  எத்தனை பேர்

 உண்மையாக கடமைகள் ஆற்றுகின்றோம்.

 பலனை  மிகவும் எதிர் பார்க்கிறோம்.

     ஒரு விவசாயி காலையில் வயலுக்கு செல்கிறான்.

அப்பொழுது ஒருமுறை இறைவனை வழிபடுகிறான்.

மதியம்  உணவருநதும் போது  ஒரு முறை. மாலையில் ஒருமுறை.

நாரதர்  சதா சர்வ காலமும் இறைவனின் நாமத்தை ஜபித்தாலும்

விஷ்ணு பகவான்  அந்த விவசாயியைத்  தான் மிகச்சிறந்த  பக்தன்  என்கிறார்.காரணம் லௌகீக பந்தங்களுடன் அவருக்கு பக்தியும் உள்ளது. கடமை உணர்வும் உள்ளது.  ஆகையால்கடமையைச் சரியாக ஆற்றுபவனே சிறந்த பக்தன்.Wednesday, March 16, 2016

உண்மையான பக்தன்

ஆன்மீகக் கதைகள்மீண்டும் மீண்டும் பரம்பரை பரம்பரையாக
சொல்லப்பட வேண்டியவை.
    இறைவன்  மனிதர்களை அவன்

நாம ஜபத்தை மட்டும் செய்து வாழபடைக்கவில்லை.

சிலரை  வெகு சிலரை  மட்டுமே

அற வழிக்  கருத்துரைகளை 

அன்பை நிலை நாட்ட , அஹிம்சை நிலைநாட்ட,  பண்பை நிலைநாட்ட

பண்பாட்டை நிலை நாட்ட படைத்துள்ளான்.

   ஐரோப்பிய  நாடுகளுக்கு ஒரு ஏசு நாதர்.
முஸ் லிம்  நாடுகளுக்கு  முகம்மது நபி
பைபிள் .குரான் .

  ஆன்மீக நாடான பாரதத்தில் சனாதன தர்மம். வேதங்கள் . உபநிஷத்துக்கள் .புராணங்கள்.

ஜைன புத்த சீக்கய மதங்கள்
வைஷ்ணவ சிவ சம்ப்ரதாயங்கள்
. சிவ உபாசகர்,விஷ்ணு உபாசகர்,
தேவி உபாசகர்.
நகரக் கோயில்கள், கிராமக்கோயில்கள்
ஜாதி , சம்ப்ரதாயங்கள்.
  பக்தர்களை அடியார்களை வணங்குதல்.
ஹனுமான் வழிபாடு,
  இத்தனை பிரிவுகள்.
இறைவனுக்கு ஆயிரம் நாமங்கள்
தனித்தனி வழிபாட்டு முறைகள்.
  நைவேத்யப் பொருட்களில வேறு பாடுகள்.
.ஸ்தல வ்ருக்ஷ வேறுபாடுகள்
  இவைகளையெல்லாம் கொண்ட
சமத்துவ மதம்.
ஒற்றுமை
பயபக்தி.
கல்விக்கு  கலைமகள்
செல்வத்திற்கு  அலைமகள்
வீரத்திற்கு மலைமகள்
கலைகள் மாறும் .செல்வம் அலைபாயும்
வீரம் உறுதியாகும்
அதற்கேற்ற பெயர்கள்
கலை. அலை.மலை.
அனைத்தும் ஒரே  இடத்தில்  இருந்தால் ஆணவம் தலை தூக்கும்
அடங்காமல் போய் விடும் .
அடக்க முடியாமல் போய் விடும்.
சார்பின்மை போய் விடும்.
ஒருவர் தேவை வேண்டாமல் பேய்விடும்.
ஆகையால் இறைவன் படைப்பில்
ஒன்றிருந்தால் ஒன்று இருக்காது.
மூன்றும் சேர்ந்திருந்தால்
அபூர்வ படைப்பு.
அதிசயப்படைப்பு.
இதை உணர நமக்கு மட்டும்
இத்தனை மடாலயங்கள்
ஆன்மீக அச்சம் காட்டும் ஆலயங்கள்
இருப்பினும்  நாம்  பாபங்கள்  அதிகம் செய்கிறோம்
பொய்வழி செல்கிறோம்
ஆன்மீக வழியல் ஏமாற்றம் செய்கி றோம் .
ஆன்மகெச் சொற்பொழிவுகள் பண்டிகைகள்  திரு விழாக்கள் .
இன்று அனைத்திலும் திரைப்படபாடல்கள்
இவைகளையும் மீறி இறைவன் அருள் பெற்ற  ஆன்மீக நாடு பாரதம்
ஓம் நமச்சிவாய.

Tuesday, March 15, 2016

இறைவன்

   இறைவனை வழிபட்டு அவனையே சரணாகதி அடைபவர்கள் வாழ்க்கையில் உயர்கிறார்கள்.
  சிலர் சுயநல லாபத்திற்காக
ஆடம்பரத்திற்காக ஆன்மீகத்தைப்
பயன் படுத்துகிறார்கள்.
பக்தியில் ஆடம்பரம் குதிரைப்பந்தயம்போல்.
கிரிக்கட் சூதாட்டம்போல்.
பால் அபிஷேகம் .பஞ்சாம்ருத அபிேஷகம்  என்பதெல்லாம்
கஞ்சக்கருமிகளும் ஏழைகளுக்குஉதவட்டும் என்றே.
தேங்காய் உடைப்பதால்
பல பசியானவர்களும் எடுத்து சாப்பிடட்டும் என்றே.
அன்னதானம்.பூ தானம் கோதானம்
என்று பலவித தானங்கள் .
ஆனால் இன்று பல பாவங்கள்
செய்து பொருளீட்டி பரிகாரபூஜைகள்.
பதவிக்காக
தேர்தல் வெற்றிக்காக
மனதில் பக்தி இருந்தால்
சாதிக்க முடியாதது இல்லை.
ஆனால் நாம் என்ன செய்கிறோம் ?
சுய நலத்துடனே பக்தியில் ஈ்டு படுகிறோம்.
கபீர் துளசி பக்த த்யாகராஜர்
ரைதாஸ்  ஏகநாத்  போன்ற பக்தசீலர்கள்போல்  நம்மால் பக்தியில் ஈடுபடமுடயவில்லை.
இறைவனையடைய அவன் க்ருபை பெற பணத்தால் ஆடம்பரம் தேவையில்லை .அவனை முற்றிலும் சரணடைய வேண்டும்.
நமக்கு வேண்டியதெல்லாம் அவன்
அருளால் கிட்டும்

Friday, March 11, 2016

சாயீ மார்க்கம்

சனிக்கிழமை  ....காலைவணக்கம்.
शनिवार---सुप्रभात.
saturday--goodmorning

இன்று சனி.   आज शनिवार.

ஸ்ரீவேங்கடேசப்பெருமான் -- श्रीवेंकटेश्वर

ஹனுமான்-----------------------हनुमान

சனீஸ்வரன்-----------शानीश्वर

சாய்பாபா--- सैबाबा

ஆகிய   தெய்வங்களைவழிபடும்   நாள்.

आदि भगवानको प्रार्थना करने का दिन.

இதில் மிகவும் ஒருவையக  ஒற்றுமைஉள்ளது.

इसमें   सांसारिक  एकता है.

சாய்பாபா யார்?  साई  बाबाकौन है?

பெற்றோர்  யார்?  माता-पिता  कौन है?

எங்கிருந்துஎப்படி  வந்தார் ? कहाँ से आये?

எல்லாமே புரியாதபுதிர். यह  तो बड़ी पहेली है?

இவரின்அருள்பெற்றோர்

जिनको इनकी  कृपा मिली,
அவரவர்கள் தெய்வங்களுடன்
वे अपने ईश्वर के साथ साई जोड़ लेते है,

சாயிசேர்த்துக்கொள்கின்றனர்.

  சாயீகணேஷ்.  साईगणेश;  साई राम

அல்லா சாயி;   अल्लासाई

யேசு  சாயீ,येसुसाई

சாயீராம்,

சாயீகிருஷ்ணா  सीईकृष्णा

சிவ சாயீ.  शिवसाई

இப்படிப்பட்ட   ---ऐसी सांसारिक एकता
வையகஒற்றுமை

உள்ளஒருநடமாடும் केचलते-फिरते

தெய்வமாகஉள்ள  ईश्वर

சாயீ போல், साई जैसे

மனிதநேய  मनुष्यता

ஒற்றுமைவளர்க்கும் एकता बढ़ानेवाला

ஒருமார்க்கம்   एक मार्ग सिवा भारत केसंसार में नहीं है.

பாரதத்தைத்

தவிர வையகத்தில் இல்லை.

அன்பு,சேவை, மக்கள்துயர்தீர்க்கும் प्यार,सेवा, करुणा

அவர் கருணை

வசுதைவகுடும்பகம்.--- வையகம்  ஒருகுடும்பம் என்ற
वासुदेव कुटुम्बकम  के  सनातनधर्म के मार्गपरचलनेवाले साई की प्रार्थना करेंगे.

சனாதன தர்மவழியில்  செல்லும்

சாயியைவணங்குவோம்.

சாயீ வெங்கடேஷ் என்ற பெயரும்உள்ளது.

साईवेंकटेश नाम भी है.

Thursday, March 10, 2016

ஸனாத தர்மமே சாந்தி தரும்

சாமி  யார் ?  நல்வழி செல்வோர் .
அன்பு அஹிம்சை வழி செல்வோர்
அவனி காப்போர்.
முகம்மூடி துப்பாகக்கி ஏந்தி
பச்சிளம் குழந்தைகளை இரக்கமின்றி சுட்ட தீவீரவாத கூட்டமில்லை.
இரக்கமல்லா ஆலயங்களை இடித்த வெறியர்களல்ல.
உருவருமும் அருவமும் உள்ள இறைவனை ஏற்றவர்கள்.
இறைநூல் ஒன்றே இறைவன் ஒன்றே
மற்றவர்களை வெறுத்து
மற்ற நூல்களை எரித்தவர்கள் அல்ல
வேற்று நாட்டில் படை எடுத்து
கொள்ளை அடித்தோர் அல்ல.
வையகம் வாழ்க!
வையகம் ஒரு குடும்பம் என்றார்.
இது தான் ஸனாதன சாமியார்

இறைவா! காட்டு

முருகா ! மக்களைக் காக்கும்
மஹேஸவர குமாரா!
நிறைகுணமுள்ளோர்
நேர்வழி செல்வோர்
சுயநலமற்றோர்
வாய்மை வழி நடப்போர்
நல்லிதயம் உள்ளோர்
நலமே விரும்புவோர்
என்றென்றும் துணை இருப்போர நட்பு வேண்டும்.
நொடி.நிமிடம் நாள் மூன்றெட்டு மணிநேரம்
முருகா உன்அருள் உடனிருந்து வெற்றியே அருளவேண்டும்.
உன் துணைவேண்டும்.
செயல் சொல் அனைத்திலும்
அன்பினைப் பொழியவேண்டும்.
முருகா! முத்துக்குமரா!
முன்னேற்றமே  வேண்டும்.
முருகா! திருமால் மருகா!
கலியுகவரதா!  கந்தா!

Wednesday, March 9, 2016

ஞானம்.

நமது  சனாதன தர்மம்
ஆழ்நிலை த்யானம்
புலனடக்கம் பற்றி
அதிகமாக வலியுறுத்துகிறது.
இளம் வயதில் திருமண பந்தம்
இறுதி யாத்திரை வரை இணைந்த ஜோடிகள்.
ஒவ்வொரு நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கேற்ற  உடை உணவு வாழ்க்கை முறை.
நான்காதல் என்ற சொல்லே அசிங்கம் என்று வளர்ந்தவன்.
அந்நியர் படைஎடுப்பு கலாசாரம் உணவு வாழ்க்கை முறை மாற்றம்
விளைவு  ஜனத்தொகை அதிகரிப்பு.
கருத்தடை மாத்திரை
கருத்தடை சாதனங்கள
தாமதக்கல்யாணம்
நமது பண்பாட்டை சீரழித்து
இன்று ஜனத் தொகை அதிக மாகிறது.
அதே நேரம் குழந்தை யில்லா தவிப்பு அதிகரிக்கிறது.
நாம் இயல்பாக நம் ஸனாதன தர்மம் பின் பற்றினால்
நாடு வளம்பெரும் அமைதி  உண்டாகும்
ௐ சாந்தி.ௐசாந்தி
ௐ நமச்சிவாய

Sunday, March 6, 2016

சிவப்ரார்த்தனை


Image result for shiva bhagavan pictures

महेश्वर ध्यान
ध्यायेन्नित्यं महेशम रजतगिरिनिभं चारू चन्द्रावतंसम्
रत्नाकल्पोज्ज्वलांगम् परशूंृुगवराभीतिहस्तम प्रसन्नम् .
पद्मासीनं समन्तात्स्तुतममरागणैव्याघ्रकृत्तिम वसानं
विश्वाद्यं विश्वबीजं निखिलभय़हरं पंचवक्त्रं त्रिनेत्रम .
शिव की कांति சிவனின்ஒளி
चाँदी के पर्वत के सामान है. வெள்ளிமலைபோன்றுபிரகாசிக்கிறது
वे सुन्दर चन्द्रमा को आभूषण के रूप से धारण करते हैं .
அவர் அழகான நிலவைஅணிகலன் போன்று அணிந்துஇருக்கிறார்.
रत्नमय अलंकारों से शिव का शरीर उज्ज्वल है.
இரத்தினங்களின் அலங்காரத்தினால்சிவனின்உடல்ஜொலிக்கிறது.
शिव के हाथों में परशु ,मृग ,वर और अभय विद्यमान है.
சிவனின் கையில் கோடாலி,மான்,வர அபய முத்திரை உள்ளது.
शिव प्रसन्न हैं ,पद्म के आसन पर विराजमान है .
சிவன் மகிழ்ச்சியானவர். பத்மாசனத்தில்வீற்றிருக்கிறார்.
शिव के चारों ओर देवतागण स्तुति करते रहते है;
சிவனின் நான்கு பக்கங்களிலும் தேவதைகள்போற்றிக்கொண்டிருக்கிரார்கள்.
बाघ की खाल पहने हैं . புலித்தோல் அணிந்திருக்கிறார்.
वे विश्व के आदि भगवान हैं ; அவர் உலகின் முதற்கடவுள்.
जगत उत्पत्ति के बीज है , உலகஉற்பத்தியின்விதை.
समस्त आतंकों को हरनेवाले हैं ;அனைத்து பயன்களையும்போக்குபவர்.
उनके पाँच मुख और त्रिनेत्र है .
அவருக்குஐந்துமுகங்கள்மூன்றுகண்கள்இருக்கின்றன.
उस शिव का ,महेश्वर का विश्वनाथ का
नित्य स्मरण करना है.
அந்த சிவனை ,மகேஸ்வரனைஉலகநாதனை
தினமும் ஜபிக்கவேண்டும்.

Saturday, March 5, 2016

உள்ளம் உயர்வாகட்டும் .

உள்ளம் உள்ளத்தில் நல்ல உள்ளம்,
உலகியல் சூழலில் உரிய வகையில்
உடனடியாக உடன்இருப்பது அவசியம்.
இந்தஅரிய தலைப்பு குழு அமைத்தவர்களுக்கு நன்றி.
உள்ளம் என்பது உள்ளதுவெளிப்படுத்தும்.
உடையது விளம்புதல் கூடாது உடையதுவிளம்பேல் என்றாலும் அகமதுமுகத்தில்தெரிந்துவிடும்.
எதிரில் நிற்போர் பேசுவது இயக்கியா செயற்கையா என்பது
ஒலியில் தெரிந்துவிடும். கண் ஒளியில் பிரதிபலிக்கும்.
நடிப்புஎன்பது இயல்பானபேச்சில் அரிது.
உள்ளத்தால்இணைந்தால் நாம்என்றார்அறிஞர்.
ஆனால் உதடு சேர்ந்தால்நாம்என்றார் அண்ணா.
அவரவர்கள் குணம் தெளிய சொற்கள்.
உதாரணமாக உதட்டில் இருந்து இயல்பாக வரும்.
உயர்ந்தவர்களின் உள்ளத்திலும் உயர்கருத்துக்கள் வரும்.
அவர்களை அனைத்திலும் புரிவதுஅரிது.
ராமரைப்பற்றியஉயர்வான எண்ணங்கள்
கிருஷ்ணரைப்பற்றியஉயர்வானஎண்ணங்கள்
அவர்களின்செயலின்ஆழ்மன ஆழ்ந்தகருத்துக்கள்
அறிந்துதெளிந்துபுரிந்துஏற்பவர்கள்பலர்.
அவர்கள் விளக்கத்தால்ஈர்க்கப்பட்டு
ராமகிருஷ்ணாபக்தர்களானோர் பலர்.
ராமாசாமிஈரோடுபோன்று எதிர்மாறானகருத்துவெளியிடும்நாத்திகர்கள் சிலர்.
மண்டனமிஷ்ரர் ஆஷ்ரமகிளிகள் வேதம் ஓதும்.
திருடன்வீட்டுக்கிளிகள் வசை பாடும்.

இன்றையகாலத்தில் இரண்டாம்வகைகிளிகள் அதிகம்.
கண்டபடிதிரியச்சொள்ளும்.
கள்ளுக்கடைக்குஇட்டுச்செல்லும்.
கல்லாப்பணம்திருடச் சொல்லும்.
கள்ளப்பணம் சேர்க்கச்சொல்லும்.
உள்ளத்தில்நல்லஉள்ளம் திருந்தச்சொள்ளும்.
நாம் உள்ளத்தில்உயர்ந்துவாழ்வோம். வழிகாட்டுவோம்.

Wednesday, March 2, 2016

ईश्वर लीला।

धन प्रधान देश।
धन का स्त्रोत न तो न बंधन ।
न दोस्ती।
मेरे बंधन तो सर्वेश्वर से।

भगवान  लेना चाहता तो
आता बाढ के  रूप| में ।
भूकंप के रूप में़

  उसकी कृपा हो तो छप्पर फाडकर
आराम से धन।
न मेहनत।
न दैड धूप।
ब्रह्मानंद मिलेगा।
सुनामी के रूप में,
दुर्घटना के रूप में।

बोली के रूप में
रोग के रूप में।
बुढापे के रूप में।
शिक्षा संस्थानों के रूप में।
रिशवत के रूप में।
चोरी डकैती के रूप में ।
शादी बंधन के रूप में।
जन्म दिन के रूप में।
इलाज के रूप में
ईश्वर के प्रायश्चित्त के रूप में।
आश्चर्य दैखिए:
देता है धीरे धीरे।
एक साथ ले लेता है।
एक दिन मैं।
बीस साल की कमाई दो दिन की शादी में।
एक -दो साल की कमाई
तेरह दिन के अंतिम संस्कार में।
कलियुग  में देखिए ,
एक महीने की कमाई
शादी की खुशी में
पिघलनेवाले भगवान।
बरफ का भगवान।
मधुशाला बच्चन जी के अनुसार
धार्मिक एकता का प्रतीक।
एक दिन की कमाई गरीबों का
एक ही दिन में।
देता है कठोर
मेहनत और छीना -झपटी  कै बाद।
लेता है एक साथ।
भगवान की लीला अद्भुत।

சிவ சரணம்

சிவ சிவ என்றிட சிக்கல்  சீர்படும்
சிந்தனை மேம்படும்
சித்தம் தெளிந்தடும்
பற்று பரந்திடும்.
பாரினல்  பார்வதிமணாளன்
பார்கும் இடமெல்லாம் ..தன்
ஓங்கார ஔிக்கதிர் வீசுகின்றான்.
ஒப்பில்லா தேவன்
மாதா கோயில் அமைப்பிலும்  மசூதி அமைப்பிலும் உள்ளான்
இயற்கை வனப்பிலும் உள்ளான் .
திருவண்ணாமலையில்
திருமகள் மணாளனும்
கலைமகள் மணாளனும்
அடிமுதல் நுணிவரை தேட
ஜ்யோதியாய் ஔிர்கிறான்..உண்மை
பாரதி சொன்னதுபோல் வெறும் புகழ்ச்சியில்லை
வேற்று நாட்டு அறிவியல் வல்லுனரும் கண்டறிந்த உண்மை.
ரஷ்ய தெய்வப்பற்று இல்லா நாட்டினர்
கண்ட புதுமை.
தென்நாடுடைய சிவனே போற்றி
எந்நாட்வருக்கும் இறைவாபோற்றி.
உமை ஒருபாகா போற்றி
சுவாமிநாதா போற்றி
கணநாதா போற்றி.
காசினி உய்ய காசியில் வாழும் தேவா போற்றி
சுடலை பொடிபூசி வையகம் இதுதான் என்று தெளிவித்த
காசி விஸ்வநாதா போற்றி
சிவனே போற்றி!
சிவ பார்வதியே போற்றி!
தேவார நாயகா போற்றி.
நாளும் உன்னை வேண்டுகிறேன்.
நலம்தருவாய் போற்றி
ஓம் நமச்சிவாய! ௐ!
ௐ சிவாய நமஹ.
ஹர ஹர மஹாதேவா!
சரணம் .! சரணம்!
உலகநாதா சரணம்.!

Tuesday, March 1, 2016

ஆறுமுகா சரணம்

செவ்வாய்க்கிழமை
செந்தில் முருகன்
   பழனி பாலமுருகன்
சுவாமிமலை சுவாமிநாதன்
திருத்தனி  சப்ரமணியன்
பழமுதிர்ச் சோலை
வள்ளிமணாளன்
திருப்பரங்குன்றம்
திருமால் மருகன்
அவனியைக்காக்க
அநியாயங்கள் ஒழிக்க
நல்லாட்சி அமைய
நல்லவர் கள் கூட்டு சேர
நியாய தர்மங்கள் மகிழ
அநியாயங்கள்
அய்யோ ஐய்யோ என்றுகதர
ஆறுமுக வெற்றிவேல்
ஞானவேல்
போலி ப்ரார்த்தனைகள்
பொசுங்கிப்போக
க்ருபாகடாக்ஷம்
நாட்டின்  சுபிக்ஷை
பார்புகழ் பாரத தமிழ்த்திருநாடு
அமைய 
முருகா சரணம்
வெற்றிவேலா சரணம்
ஞானவேலாசரணம்
சக்திவேலாசரணம்
கலியுக வரதா சரணம்
சரணம்சரணம் ஷண்முகாசரணம்