Thursday, December 10, 2015

தெய்வங்கள் காப்பாற்றும்

தரணியில் வாழ சரணடைவோம்
தெய்வ நெறி பரப்பி
நேர்மையை வளர்ப்போம்.
நேசத்தை வளர்ப்போம்
பண்பை வளர்ப்போம்
அன்பை வளர்ப்போம்
அவனியில் அமைதியுடன் வாழ
ஆசைகள் குறைப்போம்
ஆனந்தமாக வாழ இறைவனைத்துதிப்போம்.
ஆயுதமில்லா ஆண்டவன்
ஆதியில் அவனியில் ஏன் ?
ஆண்டவனுக்கு அச்சமா ?
ஆண்டவனுக்கும் எதிரிகளா?
எதிலும் அவன் படைப்பு
இருதுருவங்கள்.
அனைத்திலும் அடக்கம் உண்டு.
ஆங்காரம் உண்டு.
முள்ளும் உண்டு.மலரும் உண்டு.
புலியும் உண்டு.புள்ளிமானும்உண்டு.
பழியும் பாவமும் புண்ணியமும் உண்டு.
நத்தையிலும் முத்து உண்டு .நாகத்தில் விஷம் உண்டு.
தேளும் கொட்டும்
தேனீயும் கொட்டும்
தேளை அடிப்போம்.
தேனீவளர்ப்போம்.
தெய்வங்கள் பல அல்ல.
தெய்வம் ஒன்றே.
ஆட்டை வைத்து அன்பு காட்டும் ஏசு
அல்லா நாணயம் ஈ்மான்
ஆயுதமில்லா இறைதூதர்கள்
கல்லடிபட்டார் ஒருவர்
சிலுவையில் அடிக்கப்பட்டார் ஒருவர்.
சிவனிடம் வரம் பெற்று
முனியின் அறிவுரையால்
பஸ்மாசூரன் சிவன் தலையில்
கை வைக்க பயந்த சிவன் ஓடினான்
விஷ்ணுவின் மோஹினி ஆட்டம்
அசுரனை அழித்த தந்திரம்.
அசுரனை அழிக்க மஹிஷாசுரமர்த்தினி
ஹிரண்யகஷ்யப்பை அழிக்க நரஸிம்ம அவதாரம்
சூரனை அழிக்க வேலன்
ராவணனை அழிக்க ராமன்
காலிங்கனை அழிக்க கண்ணன்
அச்சமூட்டும் அவதாரங்கள்
அன்பை வளர்க்கும் இசைக்கருவிகள்
உடுக்கைகுழல் வீணை
இசையும்  வீரமும் ஞானமும்
இயற்கையாகவே நமக்குத்தேவை.
தெய்வநெறி தேவை.
ஹிம் சை அஹிம்சை சேர்ந்த வையகம்
அன்பும் தேவை ஆயுதமும் தேவை
ஆற்றலுடன் புவியில் ஜனிக்க
ஆண்டவனின் அருள் தேவை.


No comments: