Wednesday, November 18, 2015

அதுவே நான் கடவுள். பிரம்மாஸ்மி .

ஆண்டவன் மனிதனைப்படைத்தான் 

அறிவினையும் அளித்தான்.

அறிவில் தெளிவில்லா சஞ்சலத்திற்கு 

உள்ளம்  அளித்தான் .

தெளிவுபெற மூளையும் கொடுத்தான்.

தெளிவில் மயங்க மாதுவைப்படை த்தான் .

மதி மயங்க மதுவைப்படைத்தான்.

நல்வழி செல்ல நீதி நூல் படைத்தான்.

நான்  என்ற ஆணவம்  படைத்தான் .
நற்குணம் தீய குணம் 
பாவ புண்ணியம் 
அறிய இயற்கையைப் படைத்தான்.
மனித அறிவிற்கப்பாற்பட்ட இயற்கையின் விந்தை ,
இதை  மறக்க அறிவியல் விந்தைகளையும் ஏற்படுத்தினான்.
எண்ணங்களில் ஏற்றம் வேண்டும்.
மற்றவர்களின் உயர்வால் ஆசைகள் 
மற்றவர்களின் வளர்ச்சியால் பொறாமை 
தனக்கே அனைத்தும் வேண்டும் என்ற பேராசை 
இவையே மனிதனின் அமைதிக்குத்தடைகள்.
பேராசை உள்ளவன் உயிர் போகும் வரை
 இன்னலில்  மூழ்குகிறான்.
உலகில் பேரரசன் ஆசை இல்லாதவனே 
அவனே  ஆண்டவனின் ஆசி பெற்றவன். 
ஞானிகள் கூறும் அறிவுரை 
அன்பும் தியாகமும் சேவையும் சுயநலமின்மையும் 
உள்ளவனே உயர்ந்தவன்.
அவன் ஆத்மா ஆண்டவன் சமம். 
அதுவே   நான் கடவுள். 
பிரம்மாஸ்மி .




No comments: