Saturday, October 31, 2015

அவனைப் புரிதல் மெத்த கடினம்

மனிதனுக்குத் திறமைகள் அதிகம்.

ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமைவதில்லை.
ஒரே கோடீஸ்வரன்.பணம்
மட்டும் நிம்மதி என்று இருக்கமுடியுமா.?

பசி. வயிற்றுப்பசி.
உடல் பசி.
தாகம்.
வாரிசு  பற்று. பாசம். பந்தம்.
மானம் .மரியாதை.பதவி பட்டம்
மூப்பு.பிணி.
கோடீஸ்வரன்.
பணம் மட்டுமே வைத்து வாழமுடியுமா.?
அங்கே தான் ஆண்டவன் இருக்கிறான்.

Friday, October 30, 2015

அங்கே தான்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாஷமாக
இருக்கும் ஆண்டவன்
உள்ளத்தில் இருக்கிறான்
ஆலயத்தில்  இருக்கிறான்
தூணிலும் இருக்கிறான்.
துரும்பிலும் இருக்கிறான்.
இல்லாத இடம் இல்லை.
குருநானக் மெக்கா சென்றபோது
மசூதி நோக்கி கால் நீட்டி படுத்தார்.
அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கால்களை
மசூதி இல்லா பக்கம் வையுங்கள் என்றாராம்  .அப்போது
கால்கள் திருப்பும் பக்கமெல்லாம்
மசூதியும் சுற்றி வந்த நிகழ்ச்சி
கடவுள் எங்கும் இருக்கிறான்
எல்லாதிசைகளிலும் இருக்கிறான்
என்பதற்குச் சான்றாகிறது.
கபீர் சொல்கிறார்
பூவில் மணம் இருப்பது போல்

கஸ்தூரிமானின் நாபியில்
கஸ்தூரி    உள்ளது போல்
இறைவன் உனக்குள்ளே
இருக்கிறான்.
உள்ளத்துத் தூய்மையால்
ஆண்டவனை நாம் இருக்கும்
இடத்தில் காணலாம்.
மக்கா த்வாரகா பூரி ஜகன்னாத்
மதுரா புனித யாத்திரையால்
பயனில்லை.மனத்தூய்மையும் ஆழ்மன த்யானமும் இறைவனை
உள்ளத்தில் குடிபெயரச்செய்யும்
என் கடவுளைத்தேடிச் சென்றால்
எங்கு பார்த்தாலும் என் கடவுள்
கடவுளைத்தேடிச் சென்றால்
நானே கடவுள் ஆனேன் என்கிறார்
ஸ்ரீ சங்கராசாரியார் ஆதி சங்கரர்
அஹம் ப்ரம்மாஸ்மி
நானே கடவுள் என்கிறார்
திருமூலரும் இதையே உறுதிப் படுத்துகிறார்.
எங்கே இறைவன் உள்ளத்தில் இறைவன்  .உடல் ஆலயம்


Wednesday, October 28, 2015

ஆன்மீகம் வளர்த்த தமிழகம்.

ஆலயம்  சென்றால் அங்கே அமைதி வேண்டும்.
ஆனந்தம் வேண்டும்.
மனதில் ஆசைகள் ஒழிந்து தான தர்ம சிந்தனை வளர வேண்டும்.
ஆலயஙகளில் ஆடம்பரஙகள் அதிகரிக்கின்றன.
வணிகவளாகத்தில் நுழைந்துவிட்டோமோ என்றே தோற்றமளிக்கிறது.
சிறப்பு வழிபாடு சிறப்பு தரிசனம் சிறப்புக்கட்டணம்
ஆஸ்திசேர்த்து ஆலயம் செல்லவேண்டும் என்ற
சிந்தனை  வளர்ந்து வரும் நிலை.
சரியா.?

உள்ளம்

க ள்ள மில்லா அரசு கேட்டேன்
கள் விற்கும் அரசு பெற்றேன்
மலை காக்கும்  அரசு கேட்டேன்
மலை தூளாக்கிய அரசு கண்டேன்
சகாயம் போன்ற ஆட்சியாளர்
பகடைக்காயாய் உருளக்கன்றேன்
பதட்டத்துடன் நேர்மையாளர்
பதவி துறந்து ஓடக்கண்டேன்
விரும்பியது கிட்டாது
விரும்பாதது
கிட்டும் என்ற
பழமொழி படித்தது.
ஞாபகம் வந்தது.
ஓ. மக்கள் பிடித்து
தேர்ந்தெடுத்த ஆட்சி.
மதி மயங்க மதுக்கடை.


Sunday, October 25, 2015

எது அது தான்

அருள் வேண்டும் என்பர்
கருணை நிதி வேண்டும் என்பர்
நோயற்ற வாழ்வில் வாழவேண்டும்
மதி வேண்டும் என்பர்.
அவர்களே இறையன்பர்.
அசுரர்  கேட்ட வரம் ஆசைகள் நிறைவேற
ஆணவம் தலைக்கேர
ஆண்டவனையே அடிமையாக்க
அகிலத்தில் அழிந்த பின்னும்
அழியாப்பழி ஏற்று நின்றார்.
புகழ் பாடி அருளும் கருணையும்
வேண்டி எளிமையில் வாழ்ந்த
அடியார் அழியாப் புகழுடன்
என்றென்றும் வாழும அமரர் ஆனார்.
எது நிலைத்த புகழ்  ?
அது அவன் அருளே.

இறைவனைத்தேடி

Wednesday, October 21, 2015

திருமந்திரம் --திருமூலர் -तिरुमंत्र -तिरुमूलर

திருமந்திரம் --திருமூலர்  तिरुमंत्र -तिरुमूलर 

ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற 

பேரறி வாளன் பெருமை குறித்திடில் 

மேருவும் மூவுல காளியில் அங்கு எழும் 

தாரணி நால்வகைச் சைவமும் ஆமே.

   यह काम किसी से भी नहीं हो सकता ,
  कौन -सा  काम ?
 शहर या गांव ,उनमें रहनेवाले जीव राशी   आदि
 सब की सृष्टिकर्ता 
ज्ञान-स्वरूपी परमेश्वर की विशिष्टताओं और विशेषताओं 
का  वर्णन करना.
यह धरती मेरु पर्वत  और तीनों लोकों की सृष्टिकर्ता 
परमेश्वर की कृपा  से  बनी है;
शिव में ऐक्य होने भक्तों से पता चलाये शैव मार्ग ,
उनमें वर्णित  ईश्वर के गुण श्रेष्ठता का परिमाण कोई भी नाप नहीं सकता;
इस को मार्ग दिखाने का मत है शैव मत। ए मार्ग शुद्ध ,अशुद्ध.अति शुद्ध ,शैव मार्ग आदि चार तरह के होते हैं;
शुद्ध शैव  का अर्थ है परमेश्वर में  स्थिर रहने का आशक्त मार्ग। 

அதுவே ஆனந்தம் ==वही आनंद है;

இன்று இறைவன் பற்றி என் மனதில் எழும் சிந்தனைகள்

प्यार ही भगवान है तो उनके दर्शन  के लिए  ज्ञान चाहिए.= அன்பே கடவுள் என்றால் அவரை தரிசிக்க ஞானம் வேண்டும்.

यह ज्ञान तरंगों की तरह उठती रहें  तो मन एकाग्र चित्त से ध्यान में नहीं लगेगा.=
 இந்த ஞானம் அலைகள் போல் எழுந்துகொண்டே இருந்தால்  மனது ஒருமைப்பாடுடன் தியானத்தில் ஈடுபடாது .

पुत्र है ; पुत्री है; माता-पिता है ; पेशा है ; मानसिक। शारीरिक रोग है ;
மகன் இருக்கிறான்; பெற்றோர்கள் இருக்கிறார்கள் ;தொழில் இருக்கிறது;
மன -உடல் நோய்கள் இருக்கின்றன.

आर्थिक कठिनाइयाँ  हैं ; और न जाने जीवन में कितने कष्ट है;
பொருளாதாரக் கஷ்டங்கள் இருக்கின்றன ; வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள்  இருக்கின்றன என்பது   அறியமுடியவில்லை.

क्या  हमने इन कष्टों को खुद बुलाया हैं  ?कभी नहीं ;
நாம் இந்த கஷ்டங்களை நாமாக அழைத்தோமா ? ஒருக்காலும் இல்லை.

जो भी कष्ट हो ,सब  हमारे अनजान में ही आते हैं.

கஷ்டம் எதுவாக இருந்தாலும் எல்லாமே நாம் அறியாமலேயே வருகிறது.

हमारा रूप जन्म से ही अति सुन्दर है  या जन्म से ही   भद्दे   हैं।  तो यह आकार किसने दिया है ;

நம் உருவம் பிறப்பிலிருந்தே அதிகம் அழகானது அல்லது அசிங்கமானது ;
இந்த உருவ அமைப்பைத் தந்தது யார்?

हमें  पता नहीं है; ==நமக்குத் தெரியாது.

माता -पिता सुन्दर या असुंदर
பெற்றோர்கள் அழகாகவோ அசிங்கமாகவோ
அறிவாளியாகவோ  ज्ञानी  या अज्ञानी  हो सकते हैं;
அறிவற்றவர்களாகவோ  இருக்கலாம்.

बच्चे ऐसे नहीं होते .
குழந்தைகள் அவ்வாறே இருப்பதில்லை

जन्म से  धनी है  या  जन्म से ही निर्धनी है ; हमें किसने ऐसा बनाया है ,पता नहीं ;
பிறப்பிலேயே ஏழ்மை அல்லது பிறப்பிலேயே பணக்காரன் .
நம்மை இப்படி படைத்தது யார் ?தெரியாது.

हमारे बच्चा होता है या बच्ची  हमें पता नहीं हैं।

நமக்கு ஆண் குழந்தையா ?பெண்ணா நமக்குத் தெரியாது.

हम डाक्टर बनना चाहते है तो और कुछ बनते हैं ;

நாம் மருத்துவராக விரும்பினால் வேறு ஆகிவிடுகிறோம் .

जीवनारम्भ  में मोदीजी को पता नहीं कि  वे भारत  के प्रधान मंत्री बनेंगे  ?
வாழ்க்கை ஆரம்பத்தில் மோதி அவர்களுக்குப் பிரதமர் ஆவோம் என்பது தெரியாது.

பிரதமர் ஆவோம் என்பவர் ஆகாமல் இருக்கலாம்.
अभिनेत्री जेयाललिता को क्या पता कि  वे मुख्य मंत्री बनेंगे ;
நடிகை ஜெயலளிதவிகு முதல்வர் ஆவோம் என்பது தெரியுமா ?
कलैग्यर को क्या पता कि वे हारेंगे और बेटों में मुटभेड  होगा;
கலைஞருக்கு அவர் தோற்போம்  என்றோ தன மகன்கள் மோதிக்கொள்வார்கள் என்றோ தெரியாது.

अपने ही टी.वि.,  में  पारिवारिक स्थिति पर आँसू   बहायेंगे; தன்னுடைய தொலைக்காட்சியிலேயே  தன குடும்ப நிலைக்கு கண்நீர்விடுவோம் என்பதும் தெரியாது.

कंडक्टर रजनी कान्त को क्या पता था कि  वे सुपर स्टार बनेंगे;

நடத்துனர் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் ஆவோம் என்பது தெரியாது.

रहमान को क्या पता था कि वे आशकार पुरस्कार प्राप्त करेंगे ;
ரஹ்மானுக்கு ஆஸ்கார்  விருது கிடைப்பது என்பதும் தெரியாது.

पदवी  पूर्व पुण्य  का फल है ; धनी -निर्धनी -रोगी का होना भी क्यों ?

பதவி என்பது  பூர்வ புண்ய பலன் ; பணக்காரன் -ஏழை நோயாளி ஆவதும் ஏன்?


अतः  मनुष्य को नचाने वाले एक चमत्कारिक शक्ति ईश्वरीय शक्ति पर

अटल  विश्वास  रखना  ,ध्यान देना यही ज्ञान है; उन पर प्यार और भक्ति रखना ही मुक्ति है;

ஆகையால் மனிதனை ஆட்டிப்படைக்கின்ற அபூர்வ சக்தி ,கடவுளின் சக்தியின் மேல்  நிலைத்த நம்பிக்கை வைப்பதும் தியானம் செலுத்துவதும் தான் ஞானம். அவர்  மேல் அன்பும் பக்தியும் வைப்பதுதான் முக்தி.


அதுவே ஆனந்தம் ==वही आनंद  है;
Tuesday, October 20, 2015

விஜயதசமி பிரார்த்தனை

    விஜய தசமி பிரார்த்தனை.
பட்டம் பெற்றவர்கள் ,

நடுத்தர வர்கத்தினர் 

குறைந்த கட்டணத்தில்

 மழலைகள் பள்ளிகள்
 திறந்து கல்விப்பணி ஆற்றிவந்தனர்.

 இதை ஒரு வரன் முறைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற 

அரசு சில நடைமுறைகளைக் கொண்டுவந்தது.

அதன் பலன் கல்விச்சாலைகள் பணம் கொண்டோர்களால்
 மிக முதலீடுடன் துவக்கப்பட்டு
 
அரசியல்வாதிகளால் முதலீடு செய்யப்பட்டு

 கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டு 

பட்டதாரிகள் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்

 நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக முதலீடு ,வசதிகள் என்றால் 
அதற்குத்தக்க பணம் . 

சில அரசியல்வாதிகளின் பின்னணியில் நடத்தப்படும் 

பள்ளிகளில் பிரிகேஜிக்கே ஐம்பதாயிரம் நன்கொடை.

 கல்வி என்பது தியாகத்தையும் ,

தேசபக்தியையும் 

ஒழுக்கத்தையும் வளர்க்கவேண்டும்.

அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள்

 மாலை நேர தனி வகுப்பு ஊதியமே ஊதியம் என்ற நிலைக்கு

 கல்வித்தரம்  தாழ்ந்துள்ளது.

ஏழைகள் தங்கள் வசதிக்கேற்ற பள்ளிகள் நடத்தமுடியாத நிலை. 

அங்கு குறைந்த கட்டணத்தில் படிக்கமுடியாத நிலை. 

ஒரு தேநீர் கடையில் தேநீர் பத்துரூபாய். 

அங்கு ஏழைகள் செல்கின்றனர். 

அவ்வாறே வசதிக்கேற்ற கட்டணம் செலுத்தி 

கல்வி பயில அரசு அனுமதிக்கவேண்டும்.

அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன என்றால் அரசு ஏன்? என்ற வினா

எழுப்பி காரணங்கள் அறிந்தாலும் மௌனம் . ஏன்?

ஒருபள்ளியில் ஐந்து ஆசிரியர் என்றால் குறைந்த பக்ஷம் 

பதினைந்தாயிரம் என்றால் எழுபத்தைந்தாயிரம் மாதம் சிலவு.

 இரண்டாயிரம் பள்ளிகள் மூடப்பட்டால் அரசுக்கு


2000X75000= 15000000 அரசுக்கு ஒரு மாதத்திற்கு மீதம்.


ஆகவே அரசு பள்ளி அங்கீகர விசயத்தில் சற்று 

பணக்காரர்களே பலகோடி முதலீட்டார்களே பள்ளிகள் நடத்தமுடியும்

 என்ற நிலை தவிர்த்து நடுத்தர மக்களும் 

ஏழைகளுக்கேற்ற குறைந்த கட்டணத்துடன்

 நடத்த அனுமதி அளிக்கவேண்டும்

. ரசீதில்லா நன்கொடைகள் 

வாங்கப்படுவது சத்தியம். 

அர்த்ரத்திரியில் விண்ணப்ப படிவம் வாங்க பெற்றோர்கள் 

வரிசையில் நிற்கும் அநியாயம். 


மன சாட்சியுடன் சிந்தியுங்கள் .

 ஐம்பதாயிரம் எல்கேஜிக்கே நன்கொடை என்றால் 

அதுவும் சில பள்ளிகளில் அதிகம். 

எழு லக்ஷம் ஒருபள்ளியில் நன்கொடை பெற்றதாக செய்திவந்தது. 


கல்வியில் ஒழுக்கம் ஒதுங்கிவருகிறது. 

அரசும் பொதுமக்களும் சிந்திக்கவேண்டும்.

கல்வி மக்களுக்கு எளிதாக கிடைக்காததால்

 தான் விடுதலையாகியும் நாடு முன்னேறாமல் இருக்கிறது. 


ஆண்டவன் சாட்சியாக மனசாட்சியாக

 கல்வி அதிகாரிகள் சிந்திக்க வேண்டும்.

மரணம் நிச்சயம் நாடு இருக்கும்.

 நாம் எதையும் எடுத்துச் செல்வதில்லை என்று 

அரசியல் வாதிகளும் கல்வியின் பெயரால்

 ஏமாற்றி கட்டணம் வாங்குவோரும் சிந்திக்கவேண்டும். 
இதுவே இன்று விஜயதசமி பிரார்த்தனை யாகக் கொள்ளவேண்டும்.   

Monday, October 19, 2015

அதுவே அன்பின் நிலை .

 • What's on your mind?
  1. News Feed

   அன்புள்ள முகநூல் நண்பர்களே !
   வணக்கம்.
   ஆன்மிகம் என்பது நமக்கு
   அறியா புரியா தெளியாத
   அளவுக்கு வாணிக நோக்கம்
   மேலோங்கி காணப்படுகிறது..
   மேலோட்டமாக மக்கள் இறைவன் அருள் பெற
   பணம் தேவை ,பொருளே ஆதாரம் என்ற பொருளற்ற
   எண்ணங்களில் சிந்தனைகளில் ஆன்மீக வேடதாரிகளை
   நம்பியே இறையன்பு சுழல்கிறது.
   ஆழ்ந்து தியானம் செய்யும் பழக்கம் போய்
   நமக்காக பிரார்த்தனை செய்யும் முகவர்களிடம்
   பணத்தைக்கொடுத்து அவர்களை ஸ்வர்ண சிம்மாசனத்தில் அமர்த்துகிறோம்.
   இறைவனனின் கருணை பெற மனத்தில் அவனை நிலை நாட்டவேண்டும்.
   பணத்தாலும் பரிகாரங்களாலும் அதிகாரத்தாலும்
   வெளி ஆடம்பர பூஜைகளாலும் ,
   விநாயகர் விசர்ஜனத்தாலும்
   கட்டாய துன்புறுத்தி வசூல் செய்து குடித்துவிட்டு
   இறைவன் முன் ஆடுவதாலும் ஒரு மதம் உயராது.
   வெளி ஆடம்பரமற்ற ஆழ்நிலை தியானத்தால் தான் ரமணர் ,சங்கரர் ,ராமானுஜர் ,புத்தர் மகாவீரர் ,
   முஹம்மது நபி போன்ற இறைதூதர்கள் இறைவனைக்
   கண்டு களித்தனர்.
   பிரஹ்லாதன் ,பக்த துருவன் ,நந்தனார் ,கண்ணப்பநாயனார் போன்றோர் இறைவனை நேரடியாக தரிசித்தவர்கள். குஹன்,சபரி போன்றோர் ராமாயணத்தில் இறைவனைக்கண்டனர்.
   எளிய தியானம் ,மனதில் நேர்மை இறைவழிபாடு
   இறைவன் அருள் தரும் . அறம் ,தானம் சிந்தனைகள் வேண்டும்.கடமை செய்யவேண்டும்.
   அதற்காக ஆன்மிகம் ஆடம்பரம் என்று
   பால் அபிஷேகம் செய்து இன்று நடிகர் நடிகை கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் அளவிற்கு மதிகெட்டு மாயையைத் தூண்டுகிறது.
   பகவான் நாராயணன் நாரதரை விட சிறந்த பக்தன்
   ஒருவிவசாயி என்றார்.
   நாரதர் அவன் இல்லம் சென்று சோதித்த போது
   அவன் இறைவன் நாமம் காலை மதியம் இரவு என்று மூன்று முறை சொல்லி கடமை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தான். நாரதருக்குப் புரியவில்லை.
   நேரடியாக இறைவனிடமே விளக்கம் கேட்டார்.
   மனிதனுக்கு எவ்வளவு பிரச்சனைகள். குடும்பம் ,மனைவி,மக்கள் ,நண்பர்கள் என்று
   உலக உறவுகளுக்கிடையில்
   இறைவனை வழிபடுகிறான் என்றால்
   அவனே சிறந்த பக்தன். உனக்கு என் நாம ஸ்மரணையே
   தொழில். அவனுக்குத் தொழிலுக்கிடையில்
   நாம ஸ்மரணை. நீயே சொல். யார் பக்தன் ?
   இது அனைவரும் அறிந்த கதை. ஆனால் அடிக்கடி நினைவு படுத்தவேண்டிய கதை.
   வெளி ஆடம்பரமற்ற தானே இறைவனை வழிபட்டு அவன் கருணை பெறவேண்டும். இறைவனுக்கும் நமக்கும் இடையில் ஒரு முகவர் தேவையா?
   குரு தேவை. அவர் ஞானம் தருபவராக இருக்கவேண்டுமே தவிர ஞானம் தர பொருள் கேட்பவராக இருக்கக்கூடாது.
   எளிய வாழ்க்கை வாழ்பவராக இருக்கவேண்டுமே தவிர
   வைரக்கிரீடம் ஸ்வர்ண சிம்மாசனத்தில் அமரவிரும்புவராக இருக்கக்கூடாது.
   ரமண மகர்ஷி, யோகிராஜ் சரத் குமார் .ராமகிருஷ்ண பரம ஹம்சர் போன்றோர் எளிய பக்தியில் இறைவனை நேரடியாக தரிசனம் செய்தனர்.
   நண்பர்களே !சிந்தியுங்கள்.
   கடமைக்குமுதலிடம் .பக்திக்கு பிரதான இடம் . குறைந்த நேரம் . கடமைக்கு அதிகநேரம். இதுவே ஆனந்த வாழ்க்கை.
   சிந்தியுங்கள். செயல்படுங்கள்.
   இறைவழிபாட்டில் ஆடம்பரம் தேவை இல்லை.
   அதில் இறைவன் ஆனந்தப்படுகிறார் என்பது அஞ்ஞானம்.
   மெய்ஞானம் இல்லை.அதுவே  அன்பின் நிலை .
   இறை அன்பின் எல்லை.


  Tuesday, October 13, 2015

  ஆன்மீக அறிவியல்்

  மனிதன்  தன் எண்ணங்கள் விருப்பங்கள் முதலியவற்றில்
  வெற்றி பெற்றுக்கொண்டே
  இருந்தால்  இறைவனை மறந்து
    இருமாப்புடன்  இருந்து மனம்
  விரும்பியது எல்லாம்
  செய்வான்
  உள்ளத்தில்  ஒரு அடி
  மனதில் ஏதோ ஒரு சிக்கல்
  அப்பொழுது இறைவன் 
  தேவை .
  இதைத் தான் ஆன்மீக சிந்தனையாளர்கள்
  அனைவரும் சொல்லவேண்டிய நிலை  .ஆன்மீகமும்  அறிவியல் தான்.
  காமம்   குரோதம் ஆணவம்  பேராசை   இதைப்பேசாமல்
  ஆன்மீகம்  செயல் படாது
  அனைத்து ஆன்மீக வாதிகளுக்கும்
    கருவாக அமைகிறது.
  தானம் தர்மம்  சத்தியம் பரோபகாரம்  இதுவும்  அடிப்படை
  அறிவியல்
  ஆன்மீகம் அறிவியல் உண்மை போல் மாறாது.
  பிறவி மரணம் மூப்பு நரை தளர்ச்சி
  என ஆன்மீகம் அறிவியல் சாரம்.

  Monday, October 12, 2015

  பிரார்த்தனை


  1. *************************************************************************************************************************************************************************************************


   நவராத்திரி பிரார்த்தனை 
   அகிலத்தை ஆட்டிப்படைக்கும்
   முப்பெருந்தேவிகள் மூவருக்கும்
   நவராத்திரித் திருவிழா.
   லக்ஷிமியின் கருணை
   பார்வதிதேவியின் ஆரோக்கியசக்தி 
   சரஸ்வதி தேவியின் ஞானம் மூன்றும்
   அகிலத்திற்கு அவசியம் தேவை.
   மூன்றிற்கும் மனிதன் முயன்றாலும்
   முப்பெருந்தேவியரின் கருணை இன்றி
   மூன்றும் பெறுவது மூவுலகத்திலும் அரிது.
   முக்கண்ணனின் பாதி உடல் சக்திஸ்வரூபம்.
   விஷ்ணுவின் இருசக்திகள்
   பிரம்மாவின் சக்தி
   படைக்கும் கடவுள் மனிதனை ஞானத்துடன் படிக்கவேண்டும்.
   வையகத்தில் வாழ பொருள் வேண்டும்
   பொருளை கையாண்டு ஆனந்தம் அடைய சக்தி லக்ஷ்மி
   மூவரும் சக்தியுடன் இணைந்தே
   வையகத்தை படைத்தல் காத்தல் அழித்தல்
   என்று வைபவங்கள் நிறைந்ததாக
   காக்கின்றனர் .
   அவர்களை இந்த நாள் முதல்
   பக்தி சிரத்தையுடன் வணங்கி
   க்ருபா கடாக்ஷம் பெற்று
   ஆனந்தமாக வாழ்வோம் .
   அலைமகளே அனுக்ரஹம் வேண்டும் .
   கலைமகளே கல்வி வேண்டும் .
   மலைமகளே சக்திவேண்டும்.
   நவராத்திரிகள் மகிமைமையால்
   நவ நிதிகள் வேண்டும் .
   அஷ்ட லக்ஷிமிகள் அனுக்ரஹம் வேண்டும்.
   அஷ்டமாசித்திவேண்டும்.
   பிரார்த்திப்போம் ;அருள் பெறுவோம்.
   அகிலத்தைக்காக்க வேண்டும் தேவிகளே.

  ஏற்றம் தாருமையா .

  ஷண்முகனே! சக்தி வேலவனே !

  ஞானவேல் !வெற்றிவேல் !

  கந்தவேல் !கடம்பவன வேலவா !
  கலியுக நாயகா! கஷ்டங்கள் போக்கவா !
  தெள்ளிய தமிழ்  அறிவால்
  திருமுரு காற்றுப்படை  எழத வைத்தாய்
  திருப்புகழ்  அம்ர்தம்  அளித்து
  அருணகிரியை ஆட்கொண்டாய்

  அறுபடை வீடுகளில் அற்புதம் படைத்தாய்

  சூரனை  வென்றாய் சேவல் கொடியோனாய்

  சூரனுக்கு அபயம் அளித்தாய்
  மயில் வாகனனாய்  பாம்பன் சுவாமிகளை
  ஷண்முகக் கவசம் பாடவைத்தாய் .

  எனக்கு உன் அருளால் ஏற்றம் தாருமையா .


  Sunday, October 11, 2015

  அதுவே அவனியின் நிலையாமை போக்கும்.

  அமர்ந்து அமர்ந்து நாம ஜபம் செய்தால்
  அகம் குளிர ஆண்டவனின் கருணையாலே 
  ஜகத்தினில் ஜயமுண்டு ;தோல்வி இல்லை.

  இறையின்பம் வேறு ;அவனியின் ஆடம்பரம் வேறு ;

  மன    அ மைதி காண  மகேசன் அருள் வேண்டும் .
  மன ஈடுபாட்டுடன் பக்திவேண்டும். ஆனால் 

  அலைபாயும் மனது,அவனிடத்தில் லயிப்பது கடினம்.

  தியானம் யோகா என்றே அறிவுரை வழங்கினாலும் 

  ஜபம் நாம ஜபம் என்றே ஆர்ப்பரித்தாலும்
  அவனது கருணையே ஆனந்தம் பயக்கும்.
  அதுவே அவனியின் நிலையாமை போக்கும்.


  அதுவே ஆனந்தம் .

  அன்பை வளர்ப்பது பக்தி
  ஆற்றல் தருவதும் பக்தி

  இனியவை தருவது பக்தி

  இன்னல் களைவது பக்தி

  ஈகை வளர்ப்பதும் பக்தி

  உள்ள அமைதிக்கும் பக்தி
  ஊர் உலகம் செழிப்பிற்கும் பக்தி
  எள்ளிநகையாடுவோர்,ஏளனம் செய்வோர்
  ஐங்கரனைத்  தொழுதால்
  ஒழிந்தே போவர் ஓடிப்போவர்
  அஹ்தே  ஆன்றோர் காட்டும் அன்பு வழி
  கணபதியைத்தொழுதே  காரியங்கள் ஆரம்பம்
  சங்கடங்கள் தீர்க்க சங்கடஹர சதுர்த்தி
  ஞானாம்பிகையின் ஞானகுமாரன்
  டமருபிரியனின் கஜமுகத்தொன்
  கணநாயகன் கார்ய சித்திக்கு .
  தான்தோன்றிப் பிள்ளையார்
  நன்மை செய்யும் பிள்ளையார்
  நாடிவந்தோருக்கு  நலம் தரும் பிள்ளையார்
  பக்தியுடன் பணிவோருக்கு முக்தி தரும் பிள்ளையார்
  மனக்கிலேஷம் தீர்க்கும் மணக்குள பிள்ளையார் .

  அன்பிற்கும் பண்பிற்கும் சேவைக்கும் பக்தி
  பக்தியே ஒழுக்கம்,
  ஒழுக்கம் விழுப்பம் தருதலால் ஒழுக்கம்
  உயிரினும் ஓம்பப்படும்.
  அதுவே ஆனந்தம் .
  Monday, October 5, 2015

  அங்கே தான் அமானுஷ்ய சக்தி

  என்ன உலகம் என்று
  அலுத்துக் கொள்பவர்கள்
  உலகை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்


  மற்றவர் மூளை இயக்க ஒருவர்
  பாட ஒருவர் ஆட்டுவித்து புகைப்படம் எடுக்க ஒருவர்
  இத்தனைக்குப்பின் ஒரு ரஜினி

  விஜய் கட் அவுட் பால்
  ஆண்டவன்
  கல் சிற்பி பூ மாலை அலங்காரம்
  அர்ச்சகர் தர்மகர்த்தா
  நன்கொடையாளர்

  ஒப்பிட்டால்
  கட்அவுட் பால்
  ஆட்சி அரசியல்
  புகழ்
  பலரின் உழைப்பால்
  ஒருவருக்கு கிடைப்பது
  அங்கே தான் அமானுஷ்ய சக்தி
  ஓங்கி உலகளந்த உத்தமனைப் பாட
  கூட்டம்
   —
  ஆட்சி ஆளர்கள் ஆன்மீக வாதிகள்
  நாட்டுக்காகவே அனைத்தையும்
  தியாகம் செய்து ஏழ்மை நிலையில்
  உள்ளவர்கள்
  நாட்டையே சுரண்டி ஆடம்பர வாழ்வு
  வாழ்பவர்கள்
  இறைவனே சரணாகதி என்று
  வாழ்ந்தவர்கள் வாழ்பவர்கள்
  சித்தர்கள் யோகிகள்
  முற்றும் துறந்தவர்கள்
  அதேநேரம் ஆடம்பர ஆஷ்ரமவாசிகள்
  அவர்கள் ஏமாற்றுவார்கள் என்று
  தெரிந்தே கூடும் கூட்டம்
  ஓட்டளிக்கும் கூட்டம்
  உண்மை பேசுபவர்கள்
  நிலை
  லஞ்சம் வாங்குவோ் நிலை
  ஆராயந்தால்
  அனைவருக்கும் ஒரே மாதிரி நிலை தான்
  சொந்த நிலை
  நொந்த நிலை
  எதுவுமே கூட வராத நிலை
  அதை உணர்ந்தால்
  வாழ்க்கை இன்பமே
  இருக்கும் வரை சுகமே

  Friday, October 2, 2015

  மக்கள் பாடு !மகேசன் பாடு !

  அங்கிங்கு எனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை 

  ஆகம விதிப்படி அனைவரும் வியக்கத்தக்க அளவில் 

  புண்ணியஸ்தலங்களில்  மிக ஆசார அனுஷ்டானங்களுடன் 

  கல் கொண்டு   பிரமிப்பூட்டும் வகையில் ஆலயம் .

  நுழைந்தவுடன் தெய்வீக அலைகள் உணரலாம்.

  ராஜகோபுரக்காற்று  பழங்காலக் கோயில்களில் ஒரு தெய்வீகம்.

  இன்று எங்கும் ஆலயங்கள் .

  அனைத்திற்கும் தனிதனி நிர்வாகக் குழு.

  ஒரு குழுமம் . வருமானம் பெருக்க திட்டமிடுகிறது.

  ஜனத்துகை பெருக்கம். வேலைப்பளு .

  அருகிலேயே குருவாயூர் ,திருப்பதி ,கேதார்  நாத் ,காசி

  ஆனால்  ஆழ்ந்து சிந்தித்தால் இது ஒரு வாணிகம் போல்
  திட்டமிட்டு பணம் குவியும் மையங்களாக

  ஆலயப்பணி நடக்கும்  போதே வணிகவளாகம்

  ஆலயங்களை மறைத்து மண்டபங்கள்  தெப்பக்குளங்கள் ஆலய நிலபுலன் அனைத்தும்  கொள்ளை போகின்றன.

  அதை கேட்க ஒன்று கூடுவதில்லை.

  ஆலயங்களில்  நுழையும் முன் வணிகர்களால்

  பக்தி  வாணிக மயமாக வியாபார ஸ்தலமாக மாறி இருக்கும் காட்சி.
  ஆலயம் சுற்றி  உள்ள  மரங்களும் வெட்டப்படுகின்றன.
  பிச்சைக்காரர்கள் கூட்டம் ,வியாபாரிகள் வாயில் வந்தவிலை பக்தர்கள் கேட்கும் விலை  கோபதாபங்கள்
  ஆலய கர்பக்ரஹம்  அருகில் சென்றால் வேறுபாடு
  சிலர் நிறுத்தல் சிலர் தள்ளல்

  இவை புனிதஸ்தலங்களா ?!!வாணிக வளாகமா /!!

  இன்னும்  திருப்பதிபோன்று  ஆந்திரா ,குஜராத்  சண்டிகர்

  என்று பெருகும்

  ஆலயங்கள்   புனித ஸ்தலங்களாக மாறுமா ?
  வணிகஸ்தலமாகவா !!?

  புனித யாத்திரை ,தேசீய ஒருமைப்பாடு  ,வாடா தென்னிந்திய ஆன்மீகத் தொடர்பு
  எதிர்காலத்தில் பெருகுமா ?குறுகுமா /?
  இறைவா !பூலோகத்தில்
  உன் லீலைகள் ஸ்வர்கமாக்கவா ?
  பல அநீதிகள் வளர்த்து நரகமாக்கவா /
  நீயே கதி. எழுதத் தூண்டினாய்  எழுதிவிட்டேன்.

  மக்கள் பாடு !மகேசன் பாடு !
  /