Wednesday, September 23, 2015

உணர்வோர் இல்லாமல் இல்லை.

ஆண்டவன் அனுக்ரஹம்    யாருக்குஇருக்கும் ?
என்ற வினாவிற்கு வினா   யாருக்கு இல்லை ?

காரணம் அவன் கொடுத்த ஞானம் .அறிவு .

ஆனால்தெளிவு  எத்தனை பேருக்கு ?

அதில் தான் வேறுபாடு .

ஒருவன் ஆலயம் தினந்தோறும் செல்வதால் 
அவன்  அருள் கிட்டுமா?
அர்ச்சகரும் தினந்தோறும் போகிறார் .
ஆலயவாசலில் யாசகம் செய்வோரும் போகிறார்கள்.
பக்தர்களும் போகிறார்கள்.
இந்த பக்தர்களில் தான் எத்தனை வகை.
ஜோதிடர் சொன்னார் என்று செல்பவர்கள்.
நன்மை கிடைக்குமென்று செல்பவர்கள்.
பிரசாதத்திற்காக செல்பவர்கள் 
ஒவ்வொரு சன்னதியிலும் அந்த அந்த ஆண்டவன் 
ஸ்லோகம் சொல்லி செல்பவர்கள் 
நிதானமாக நடப்பவர்கள் 
துரித கதியில் நடப்பவர்கள் 
நவக்ரஹம் சுற்றுபவர்கள் 
உள்ப்ரகாரம்  வெளிப்பிரகாரம் தூணில் இருக்கும் ஆஞ்சநேயர் ,முருகன் 
என்று ஒன்றுவிடாமல் செல்பவர்கள் 
தோப்புக்கரணம் போட்டு விநாயகர் வழிபாடு செய்பவர்கள் 
நண்பர்களைப்பார்த்து அரட்டை அடிக்கவோ வேறு உதவிகளோ கேட்க வருபவர்கள்  என எத்தனைவித பக்தர்கள்.
இத்தனை பேரையும்   கவரும் ஆலயங்கள் ஆண்டவர்கள்.
ஆலயத்திற்கு  ஆண்டவனால் பெருமையா /ஆலயநிர்வாகிகளால் /அர்ச்சகர்களாலா ?
ஆஸ்தியாலா ?பிரசாதவிநியோகத்தாலா ?

இதெல்லாம் கடந்த கருனையாலா ?
புதிய கோயில்களில் கூட்டம் ,பெரும் கோவில்களில் கூட்டம் 
பழ ம் கோயில்களை  கவனிக்காமல் செல்வது 
இப்படியெல்லாம் வெளிஆடம்பர  லௌகீகங்களுக்கு   அப்பால் 

பக்தி பெருக்கெடுக்கிறது என்றால்  அவன் கருணை அனைவருக்குமே .
நாம் காட்டும் உண்மையான பக்தி நமக்கு முன்னேற்றம் தருகிறது .
முருகன் கோவிலுக்கு ஒரு கூட்டம் திருப்பதி கோவிலுக்கு கூட்டம் 
கருப்பணசாமி .முனீஸ்வரன் என்று செல்லும் கூட்டம் மீண்டும் மீண்டும் செல்கிறது  என்றால் அது அவனின் பெருங் கருணையே .
அன்புக்கு அவனடிமை .இதை உணர்வோர் இல்லாமல் இல்லை.


No comments: