Sunday, August 30, 2015

குறை ஒன்றுமில்லை

இறைவன்  இருக்கிறானா /
ஆண்டவன்  யாரை ஆதரிக்கிறான் /?
எத்தனையோ பக்தர்கள்  வறுமையிலும் துன்பத்திலும் 
மூழ்கி  அவனையே சரணாகதி என்று இருக்கும்போது 

அசுரர்கள் தீயவர்கள் ஊழல் புரிவோர் என்போர் கோலோச்சும் நிலையில் .

ஏன் ?ஏன் ?ஏன் ? என்ற வினா ?

உலகப்பற்று  இல்லா தவர்களுக்கே  இறைவன் அருள்.
அவர்கள் நல்வழி காட்டுவதே உலகில் உள்ளோருக்கு.

இவ்வழி  நல்வழி ,அவ்வழி  தீய வழி  என்று தான் கூறுவார்கள்  அடியார்கள்.

இங்கு சமுத்திரம் ஆழம் . குளிக்காதீர்கள்; அலையின் வேகம் அதிகம்.

இது ஒரு எச்சரிக்கை. மீறி சென்றால் அதற்கான பலனை அனுபவிக்கவேண்டும். இது அரசாங்கத் தவறல்ல.

குடி  குடி கெடுக்கும் -சிறிய எழுத்து . சாராயக் கடை பெரிய எழுத்து.
 பெரிய எழுத்து கவர்ச்சி; சிறிய எழுத்து எச்சரிக்கை.
இதை கவனித்து செல்பவர்  குடும்பத்தில் மகிழ்ச்சி.
இன்று குடும்பமே குடிப்பது மேல் நாட்டு சூழ்ச்சி.
 இவ்வாறே இறையடிமைகள்  பல எச்சரிக்கை இடுகின்றனர்.

இறைவனால் ஞானம்  பெற்றவர்கள்.
அறம்  செய விரும்பு.
வாய்மை வெல்லும்.
இதை உணரமுடியுமா ?
ஒரு  வருவாய் ஆய்வாளர் ,ஒரு துணைப்பதிவாளர் 
ஒரு காவலர் ஒரு சுகாதார அலுவலர் ஒரு போக்குவரத்து லைசன்ச்தருபவர் 
ஒரு அமைச்சர் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் 
சட்டத்தை மதிப்பதில்லை . தண்டனை பெறுவதில்லை.
நாம்  அவர்களை ஒப்பிடக்கூடாது.

நம் நிலை என்ன /?நாம் நிம்மதியாக மன நிறைவுடன் இருக்கிறோமா /?
இதுதான் முக்கியம்.
இறைவன் ஆட்டுவிக்கிறான். நாம் அவனிடம் சரணாகதி அடைகிறோம்.
இன்ப துன்பங்கள் எல்லாம் அவன் தருபவை.
தசரதர் சக்கரவர்த்தி. ஆனால் அவருக்கென்று குழந்தைகள் இல்லை.
அனைத்தும் இருந்தும் புத்திரசோக மரணம்.
இதுதான் இறை ரகசியம்.
இயேசு இயேசு என்று புகழும் இயேசுவின் மரணம் சிலுவையில் இரத்தம் சிந்தியது தான்.
பல து ன்பங்கள் ,இன்பங்கள் பதவி யாலோ செல்வத்தாலோ கிடைப்பதில்லை.
துன்பம் இல்லாத வீட்டில் கடுகு வாங்கிவா  என்று புத்தர் சொன்னால் 

துன்பமில்லா வீடில்லை. 
அரச குமாரர் சித்தார்த்தருக்கு வாழ்க்கையில் வெறுப்பு.
பிணியில்ல மூப்பில்லா மரணமில்லா மனிதன்  இருக்க  முடியாது 

இது இறைவனின் ஏற்பாடு.

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.
நாம்  நினைப்போம்  அவனுக்கு என்ன குறை ?
குறை ஒன்றுமில்லை  என்று பாடிய எம். எஸ். நிறையாக வாழ்ந்தாரா/?

 இறைவன் நமக்களித்த வாழ்க்கை இனிமை என்பதே 
மன நிறைவு . சாந்தி.

Friday, August 21, 2015

தியாக வாழ்விற்கு வழி காட்டியது.

த்யானம்
த்யாகம்
ப்ரார்த்தனை
வடமொழியில் உயிர்மெய் எழுத்தால்
ஆரம்பிக்கும் சொற்கள்.
மெய் மெய்யாக
உயிராக
உத்தமனின் மீது மட்டும்
மனம் நிலை நிறுத்த
உயிர் மெய் ஒன்றுபட
ப்ராணாயாமம் .
உயிர் பிரிந்த உடல்
ஒருநாள் நிச்சயம்.
பிராணாயாமம் உயிரை
நாம் விரும்பும்  வரை
உடலில் இருந்து பிரியாமல்
உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
ஆணவம் காம க்ரோத மத லோபம்
இதெல்லாம் உடனிருந்தே  கொல்லும்  வியாதி .
இதற்கெல்லாம் மனதை அலையவிடாமல்
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம்
உறவு  வேண்டும் என்ற வள்ளலார் படி
மன ஒருமைப்பாட்டிற்கு
மூச்சை உள்வாங்கி வெளியிடுவதில்
ஒரு கட்டுப்பாடு  அது ஒரு பயிற்சி
நியந்திர பிராணாயாமம் .
ந்யந்திர    என்றால் கட்டுப்பாடு
மூச்சுப்பயிற்சி  அவசியம்.
தவவலிமையால்  நம் முன்னோர்கள் பெற்ற ஞானம்
தியாக வாழ்விற்கு வழி  காட்டியது.
இன்று அறிவியல் வளர்ச்சி
அமைதியில்லா மனத்தைத் தந்துள்ளது.
அதை அதாவது மனதை ஒரு நிலைப்படுத்த
ப்ராணாயாமம்   என்ற உயிர்  மூச்சுப் பயிற்சியில்
ஈடுபடுவது அவசியம்.


Friday, August 7, 2015

prayer and offerings

  This AADi month   is  a month for amman preyar .
every friday  the ladies are praying Grammya deviyaan like maariyamman ,kaaliyamman ,
mundakkanni amman ,droupathi amman ,thiruveethi amman ,maariyamman ,renukadevi ,
ellai amman , and lot of names.
the offerig food items are good for health .
it prevents heat and many stomach disease.
when i am thinking about this kooz i.e made a essense of a raagi ,corn ,etc., 
what a great scientifical guidance to maintain a health.
This is done by hard working section people. to give physical strength.
  today is aadi kirutika important for kaarthikeyan i.e murugan . murga is cock .his flag also cock according to hindi.
this is my own thought.
murugaa means beauity in Tamil. 
today if we pray ,we get his grace ,bliss and he will fullfill our desire.
in every temple different prasadam i.e., offerings in india each gives and cures .
grass ,vilva patra ,tulasi ,cocoanut ,betel leaves banana are  compulsary in temples.
but we are not eating patras i.e., leaves of bilva and grass.
maariamman temples they are giving milk and termeric mixed essense it is also good.
modern days we are not taking this  because of   contaminated water ,pollution etc.,
we can prepare own and we can dring. every thing in our country guided by our ancestors are with divine fear.
that fear leads us to live honestly ,truly  and warns death is sure. certainity of almighty 

Sunday, August 2, 2015

அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.

இன்று திங்கள் கிழமை .

சந்திர பகவான் அருள் புரிய பிரார்த்தனை செய்கிறேன் .
வையகத்தில் தீவீரவாதம் ,ஊழல்,லஞ்சம் ஒழிய 
வெப்பம் தணிந்து குளிர்ச்சி தரட்டும்.

உற்றார் உறவினர்கள் நண்பர்கள் முகநூல் நேரடி அறிமுகம் இல்லா நண்பர்கள் ,நலம் விரும்பிகள் அனைவரும் 
நலமாக வாழ மன நிறைவுடன் வாழ அருள்புரியட்டும்.

      இன்று ஆடிப்பெருக்கு.
ஆடிப்பட்டம் தேடிவிதை என்று கூறப்பட்டுள்ளது.
நிலம் இல்லா அடுக்குமாடி வீட்டில் இருந்தாலும் 
சிறு தொட்டிகளில் விரும்பிய விதை விதைப்போம்.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகள் நகர் வல ம் வரும் போக்கை   போக்கை மாற்றி கிராம ராஜ்ஜியம்  கிராம நகரம் அமைத்து  வளமுடன் வாழ அரசு ,சுயநல ரியல் (சீ பொய் )வீட்டுமனை விஸ்தரிப்பு குறையட்டும்.
விவசாயிகள் நலம் பெருகட்டும்.உழவே தலை .வெறும் முண்டமாக மற்ற தொழில் வளர்ந்தால் தலை போய்விடும். 

 அனைவருக்கும் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்.

அடியார்கள் விரும்பும் தொண்டு.

அனந்த  ஆனந்தம்  பிரம்மானந்தம்
மெய் ஞான உணர்வு ,
மெய் பொய்என்ற  உணர்வு
நிலையாமை  என்ற உணர்வு
நிலைத்துவிட்டால்
மனம் நிலைத்து  அவனிடம் ஐக்கிய மாகிவிட்டால்
உலக ஆசைகள் துறந்துவிட்டால்

பிரம்மானந்த  உணர்வு பிற ஆனந்தங்களை
புறந்தள்ளி  அக ஆனந்தமளிக்கும்

அதுவே பிரம்மானந்தம்.

வையக வாழ்வின்  அமைதி அலை எங்கே ?

ஞானம் பெற்றோர் ஞாலம் உய்ய தொண்டுள்ளம்

படைத்தோரை   தான தர்மம் என்றே தூண்டினர் ;

தனக்கென ஸ்வர்ண பீடம் அமைக்கவில்லை .

உள்ளார்ந்த அன்பர்கள் நேரடி தொண்டே

அடியார்கள் விரும்பும் தொண்டு.