Sunday, March 15, 2015

ஊமை வெள்ளம் சாப்பிட்டதுபோல். அந்த நிலையில் ஆண்டவனைக் காணலாம்.

அன்பு  இருக்கும் இடத்திலே  பண்பு ,

அன்பு இருக்கும் இடத்தில் பணிவு

பணிவு  இருக்கும் இடத்தில் கல்வி

கல்வி இருக்கும் இடத்தில் செல்வம்

இதெல்லாம் இருக்கும் இடத்தில்  இறைவன் ,

அன்பு ,அறம்  இருந்தால் இல்லறம் நல்லறம்.
அன்பு இல்லை என்றால் அறக்கடவுள் சுட்டெரிப்பார் -- வள்ளுவர் .
இந்த  அன்பே  ராகத்திலே அனுராகம் எய்தினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா  --என்றார் கவிஞர்,

காதாலகிக் கசிந்து உருகி கண்ணீர் மல்கி  என்றார் சிவ பக்தர்.

அப்படி என்றால் அன்பிற்கும் ஆண்டவனுக்கும்

ஒரு தொடர்பு  உண்டு .நிச்சயம் உண்டு.

அந்த அன்பில் ஆண்டவன் ஒருவனே மனதில் நிகைக்கவேண்டும்.

மீரா பாடுகிறாள் --எனக்கு கிரிதர கோபாலனைவிட வேறு யாரும் இல்லை.

சத்சங்கத்தில் பாடுகிறேன் அதில் எனக்குந்த நாணமும் இல்லை.
அரண்மனை விட்டு வந்துவிட்டேன் , எனக்குத்தான் அவன் இருக்கிறானே,
எந்த ஆசையும் இல்லை; வெட்கமில்லை; ரோசமில்லை ; மானமில்லை ;

இறைவனே எல்லாம் எனக்கு . இந்த மனப்பக்குவமும்

பக்தியும் பாசமும் அன்பும் ,உலகியலில் பற்றற்ற நிலையும்

ஆண்டவனை அடையும் நிலை. இந்த நிலை உள்ளவருக்கு

பிரம்மானந்தம் கிடைக்கும்.

அந்த பரமானந்தம்  அனுபவிக்க முடியும் ; சொல்ல முடியாது.

அதை  கபீர் "गूंगा गुड खायिकै" என்கிறார்.
ஊமை வெள்ளம் சாப்பிட்டதுபோல்.
 அந்த நிலையில் ஆண்டவனைக் காணலாம்.


No comments: