Sunday, November 30, 2014

ஆனந்தம் ;பரமானந்தம் ; அவனியில்.

 
        ஆனந்த உலகியல்  வழியில்

        ஆண்டவன் புகழ் பாடி ,

          அவனியில் தர்ம நெறி .

         அவனின்றி ஒரு அணுவும் அசையாதென்று.-- இருப்பினும்

          அவன் ஆண்டவன் ,இறைவன்  என்று

           அவன் நாமம் சொல்லி  வாழ்க்கையில்

             அஞ்சாமல் ஏமாற்றும் எத்தர்கள்.-அவன் பின்

            அனுவிரதம் இருக்கும் பக்தர்கள் .-அறிவு


          அளித்தும் ஆண்டவனையே சரணடையும்

           அவனியின் போக்கு வரும் எப்போது ?-அன்றே

           ஆனந்தம் ;பரமானந்தம் ; அவனியில்.

     


         





          

Sunday, November 23, 2014

இன்னல் இல்லை என்றே தோன்றும்.

இறைவன்  எங்கே?

இருந்தும் பயன் என்ன?

இன்னல் அதிகமே ,

தினமும் வேண்டுதல் ,

தினமும் ஜபம் தவம் 

ஏன் ?என்றால்

  பரிகாரம் என்கின்றனர்.

பார்த்துவிட்டேன் .

செய்துவிட்டேன் 

அவனியில் அல்லல் ஓயவில்லை.

அனுதினமும்  அவனைத் துதித்தாலும் 

அவன்  அளித்த கடமைகள் 

மகிழ்ச்சியுடன்  செய்யவில்லை.

போதுமில்லா மனமில்லை 
போதும் என்ற வார்த்தை இல்லை.
தேவைகள் குறைக்கவில்லை 
ஒழுங்கற்ற தன்மை போகவில்லை 
ஆசைகள் அடங்கவில்லை.
ஆலயம் சென்றாலும் அலைபாயும் 
அகமனம்  அடங்கவில்லை.

அவனை அவனி படைத்தோனை 
குறை சொல்லி பயனில்லை.
தேனீ  தன் கடமை மட்டும் செய்கிறது 
மகிழ்ச்சியாக ,பலன் அதற்கா?
நாமல்லவா ? ஆனால் 

அறிவு கொடுத்த ஆண்டவனை 
அவன் கொடுத்த திறன் அறிந்து  செய்யாமல் 
அவனையே குறை கூறும் 
மானிடக்கு மண்ணில் ஏது அமைதி.
மன்னவனுக்கும் அமைதி இல்லை. அவனை 
கொண்டவளுக்கும்  அமைதி இல்லை.
மானிடப் பிறவிக்கு  அவன் தரும் ஆற்றல் 
திருப்தியடைந்தால் ,

இறைவன் இருக்கின்றான் ,
இன்னல் இல்லை என்றே தோன்றும்.




Thursday, November 20, 2014

அலைகளுக்கு நடுவில் அன்பு.

   மந்திரமும் தெரியவில்லை ,

 எந்திரமும் பதிக்கவில்லை

கண் மூடி தியானமும் செய்யவில்லை

அலைபாயும் மனம் நிலையாகவில்லை.

அலை என்று ஓயும் ,மனம் என்று நிலையாகும்

அலைகளுக்கு நடுவில் குளியல் போல்

அலைபாயும் மனத்தின் நடுவில்,
அன்பே  ஆண்டவரே!
உன் மீது நினைவலைகளும்  சேர்ந்தே பாயும்.
அடியேனின் பிழை அலைகள் பொறுத்து
நினைவலைகள் கண்டு  உன் அருள் அலைகள்

வீச வந்த அலை அன்பே  ஆண்டவன்.

அலைகளுக்கு இடையில் அன்பலையா?
அலைகளிலும் உண்டாம் ஆண் அலை ,பெண்  அலை.
அதனால் அன்பலைக்கும் அங்கே இடம் உண்டு.
பன்பலை யும் உண்டு. என்பிழையும் உண்டு.
அறியாப் பிழையும் உண்டு ,அறிந்த பிழையும் உண்டு.

சிறு பிழையும் உண்டு ,பெரும் பிழையும் உண்டு.
மன்னிக்கும் பிழையுண்டு ,மன்னியா பிழையும் உண்டு.
நீ படைத்த பிள்ளை  நான். பிழை பொறுத்துக் காத்தல் உன் குணம்.

அன்பலை  அறிந்து , அருள் அலை அளிக்க  உன் நாமம் ஒலிக்க

உன் அன்புப் பார்வைஎன்மேல் செலுத்துக
அன்பரின் ஆண்டவரே! அருட் கடலே.!




Wednesday, November 19, 2014

பிரார்த்தனை.

மனிதன்  ஆண்டவன் மேல் பற்று ,
தன்னலத்திற்காக
பொதுநலமல்ல.
அஷ்வமேத யாகம் தன் பலம் அரிய.
புத்திர காமேஷ்டியாகம்
தனக்கு புத்திரன் பிறக்க.
ஆயிரம் பேர் மொட்டைகள்
தன் தலைவியைக் காக்க.

நாடு நலமடைய ,
ஊழல் ஒழிய
தீவீரவாதம் ஒழிய
அன்பும் ,மனிதநேயமும் ஒழுக்கமும்
தானமும் தர்மமும் கடமை உணர்வும்,

ஆன்மீகத்தின் பெயரில் அதர்மம் ஒழிந்திட

நேர்மையாளர் நிமிர்ந்துவாழ
சத்தியவான்கள் சக்தி பெற்றிட
பிரார்த்திப்போம்.

Tuesday, November 18, 2014

இறவன் அருள் கிட்டும்.

                                                               இறைவன்   அருள் கிடைக்க                                                                   
                         பலர் கூறும் வழி தியானம்r.

இந்த கண்மூடித்தன தியானத்திற்கா ஆண்டவன்  படைத்தான் .


சற்றே சிந்தித்துப்பாருங்கள்.


நம் பாரத நாடு  ஞானபூமி. 

பக்தி நிறைந்த ஆன்மீக பூமி.

இதற்கும் மேலாக கர்மபூமி.

நமக்கு இறைவன் அழித்த  திறன் 

சும்மா இருக்க அல்ல.

அருணகிரியை சும்மா இரு என்று சொன்னது 

செயலற்று இருக்க அல்ல.

தீய இன்பம் பெறுவதில் இருந்து சும்மா இரு.

இறைவன் அருளால் அவர்க்குத் தந்த ஆற்றல் 

திருப்புகழ்  அமிர்தம்.

இவ்வாறு செயலாற்ற சிலருக்குத்திறன்.

அதைத்தான் நாம் செய்யவேண்டும் .

அதுதான் ஆண்டவன் அருள் கிட்டைக்க பெரும் வழி .

அதை விடுத்து  ராமா,கிருஷ்ணா .முருகா என்று 

மணிக்கணக்கில் அமர்வது  என்ற ஆன்மிகம் 

ஆண்டவன் விரும்புவதில்லை .

உழவன் உழுது பயிரிடவேண்டும்.

ஆசிரியர் பாடம் ஈடுபாடுடன் நடத்தவேண்டும்.

காவலர் கடமையை செய்யவேண்டும்.

இதைத் தான்   பகவத் கீதையில் 

கடமையைச் செய்,வரும் பலனில் நிம்மதியாய் இரு.

ஆண்டவன் அருள்  கிட்டும்.





 

Friday, November 7, 2014

அவன் அனந்தன். ஏகன்.

கடவுள் ஒருவரே ,
கண்டபடி கடவுளின்

நாமங்கள் ஏன்?

சனாதனதர்மம் முப்பத்தேழு  முக்கோடி தேவர்கள்,
மும்மூர்த்திகள்
ஆயிரம்   நாமங்கள்.

இதை பரிகசிக்கும் சுயதர்மம் சார்ந்தோர் ,

அயல் தர்மத்தார் , நாமே நமக்கு எதிரி .

நமக்கு எத்தனை நண்பர்கள்.

காலையில் ஐந்து மணிக்கு
பால்வாங்கச்சென்றால்
பால்கடையில் புதிய நண்பர்,

பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள்,
கல்லூரி நண்பர்கள்,
கான்பெரன்ஸ் நண்பர்கள்,
நேர்காணல் நண்பர்கள்,
வாகனசிக்னல் நண்பர்கள்,
முகநூல் நண்பர்கள்,
பணியாற்றும் இடத்தில் நண்பர்கள்,
நண்பர்களின் உறவின நண்பர்கள்.
ஆயுள் காப்பீட்டு முகவர் நண்பர்கள்,
உதவிகேட்டு வரும் நண்பர்கள்.
அனைவருக்கும் அறிமுகமான பின்
ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவிகள்.
அப்பாவின் நண்பர்கள் மூலம் நண்பர்கள்
துறைகள் பலவற்றிற்கும் நண்பர்கள்
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் புரிந்தவர்கள்

உதவி பெறும்போது  நாம் கூறும் வார்த்தைகள்.

உதவி செய்யும்போது அவர்கள் கூறும் வார்த்தைகள்

தெய்வம் போல் உதவினீர்கள்.
தெய்வமே உங்களை அனுப்பியுள்ளது.

நீங்கள் எங்கள் தெய்வம்.

எத்தனை  பேர் தங்களுக்கு  உதவிகள்
செய்தோரை தெய்வமாக போற்றுகின்றனர்.
எத்தனைதொண்டர்கள் தங்கள் கட்சித்  தலைவர்களை
அவர்களின்படங்களை ,சமாதிகளை ஆராதிக்கின்றனர்.
பெற்றோரை கடவுளாக வழிபடும்  தன்மை.

இயற்கை வழிபாடு,சூரிய  சந்திர நதி வழிபாடு

ஆகவே  பல தெய்வங்கள் வழிபடும்

சனாதன தர்மம் வாழையடி வாழையாக .
ஆலமர விழுதாக
அவனியில்  கோலோச்சும்.
அன்பே ஆண்டவன் ,
ஆண்டவன்  மானிட உருவத்தில்
அவதாரபுருஷன்.
அவன் அனந்தன். ஏகன்.







Thursday, November 6, 2014

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .

ஆனந்தம் எங்கே ?

அது அன்புள்ள இடத்திலே.

பரமானந்தம் .பேரானந்தம் ,

ப்ரஹ்மானந்தம்--

இந்த நிலை அடைந்தவர்கள்


பொருளுள்ள பக்தியில்

பொருளாதாரத்தை  வெறுத்தவர்கள் .

உலகியலில்  உள்ளவர்கள்

மெய்ஞானம்  கண்டதுண்டா?

உலகியல் உள்ளத்து மாயையா?

தாரத்தை  விடுத்தது

சாம்ராஜ்யம் விடுத்து

ஞானம் பெற்று வந்ததே

உலகில்  உண்மை சொல்லவே.

உணவு வேண்டும் என்றால்

உலகத்துடன்  ஒட்டிவாழ வேண்டும்.

ஆசை ஒழி என்றாலும்

இச்சையுடன்  அஹிம்சை வழிநடக்க

ஒரு ஆசை .

அன்பு வழி பரப்பும் ஆசை.

உலகில்  உள்ள  துன்பங்கள்

தீர்க்க ஆசை.

உறவைத் துறந்தாலும் ,

உலகம் மாயை என்றாலும்

உலக நன்மைக்கே  என

உலகோடு ஒட்டிவாழ

உத்தமர்கள்  உபதேசம்.

வனத்தில் ஞானம் -அதன்
பயன் ஜகத்தினில் பரப்ப
ஊரோடு சேர்ந்து வாழ

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு .









Wednesday, November 5, 2014

அவனருள் பலரை வாழ வைக்கும் அதிசயம்.

 உலகியல்  உண்மைகள் நேரடி சாட்சிகள்.

உளவியல்  உண்மைகள்  அரிய  காட்சிகள்.

ஊர் -உலகில்  பித்தன் ,

உளம் உள்ளதை அறியும் சித்தன்.

அருள்வாக்கு அவனருளால்

ஆஸ்திபார்த்து வருவதில்லை.

ஆளின் வெளிஆடம்பரம் பார்த்து வருவதில்லை,

ஆனால் அந்த கிறுக்கன் ,அழுக்காடை அணிந்து

பைத்தியம் போல் சுற்றுகிறான்.

அவன் கடைக்கண் பார்வை க்கு

அன்றாடம் மெத்தப் படித்தோர்

உயர்பவியில் உள்ளோர்,

ஆடம்பரக்காரில்  வளம் வருவோர்

என ஒரு கூட்டம்.

அவன் இறுதிவரை  தெரு ஓரத்தில்

அழுக்காடை  ,சாக்கடை ஓரத்தில்

துர்நாற்ற உணவு,அருள்வாக்கு

என்றே  அமரனானான். ஆனால்

அவன் அமரனானதும்  அவனை அடக்கம் செய்ய

ஒரு கூட்டம்.

அவன் பெயரில் ஆஷ்ரமம் அமைக்கும் ஒருகூட்டம்.

பொருள் சேர்க்க ஒருகூட்டம் .

அவன் அருள் பெற ஒரு கூட்டம்.

அவன் சமாதி அருகில் நிற்க

ஆயுள் சந்தா ஐம்பதாயிரம்

அவன் பெயரில் அறங்காவலர் குழு,

அகிலம் முழுவதும் ஆஷ்ரமங்கள்,

அழகு சிலைகள் ,மாயாலங்காரங்கள்.

பொன் ஆபரணங்கள் ,பொக்கிஷங்கள்

உளவியலுக்கு  அப்பால் ஒரு

ஆன்மீக சக்தி  பலரை பணக்காரர்கள் ஆக்குகிறது.

பட வியாபாரி ,டாலர் வியாபரி,பலவித

கவர்ச்சி  பதுமைகள்,சாவிகொத்துகள்,

எழுதுபொருள்கள்,நாட்காட்டிகள்,ஸ்டிக்கர்கள்

அவனருள்  பலரை வாழ வைக்கும் அதிசயம்.

ஆனால் அவன் இறுதிவரை இவ்வுலக வசதிகள் காணாதவன் .

சித்தம் போக்கு சிவன் போக்குன்றே வாழ்ந்தவன்.

இந்த உளவியல் அதிசயம் தான்

அந்த ஆன்மீக ரஹசியம்.

தியாகி  உளவியல்  வணிகத்தன்மை அற்றது

போகி உளவியல் லாப நோக்கே கொண்டது.

அன்பே  ஆண்டவன் என்று   இருப்போர்

ஆலௌகீகம் . ஆண்டிகோலம்.

பழனி ஆண்டி. அவனை அலங்கரித்து வாழ்வோர்

அவன் பக்தர்கள். உலகவியல்.

இந்த உளவியல் தான்  ஆன்மீக வளர்ச்சி.









Tuesday, November 4, 2014

ஆஸ்திகம்

     இயற்கையின் விந்தையால்
                இறைவனை உணர்கிறோம்.


 அறிவியல்  முன்னேற்றம் ,
அகில உலகத்தின் இணைப்பு.

ஆஸ்தி உள்ளோருக்கு

அறிவியல் ஆனந்தம்.--ஆனால்

அறிவியலால்  அனைத்து ஆசையும்

ஆக்கம் ஆவதில்லை.

அறவியல் ஆன்மிகம் இல்லையேல்

அமைதி க்கு  அலையும்

ஆஸ்திகள் கொண்டோருக்கு
ஆஸ்திகம் ஒரு புகலிடம்.





Monday, November 3, 2014

அவனடிபோற்றுவோம்

ஆறுமுகம் யானைமுகன் தம்பி

முக்கண்ணனின்  மகன் ,

ஆற்றலின் அழகின் அருளின்  மேலோன்.

அறுபடைவீட்டில்  அமர்ந்து அருள்பாளிப்பவன்.


வடக்கில் இருந்து  தென் பழனி வந்தவன்.

தமிழ் கடவுள் என்றே ஆனவன்.

குன்றுதோறாடும் குணக்குன்று.

அபிஷேகப்பிரியன். அலங்காரப் பிரியன்.

அருணகிரியைத் தடுத்தாட்கொண்டு,

அழகு திருப்புகழ்  ஆக்குவித்தவன்.

அன்பே வடிவானவன் அருளே  பொருளானவன்

அவனடிபோற்றுவோம். அவனருள் பெறுவோம்.