Monday, November 4, 2013

அன்பு பக்தி நேரடித் தொடர்பு. தரகரில்லா பக்தி. அதுவே பிரம்மானந்தம் இறைவனருள் பெற வழி.

இறைவனைத்தேடும் பக்தர்கள்
 ஆஷ்ரமங்களை நாடுவதேன்?
அவர்களுக்கு இறைவன் மேல் நம்பிக்கை இல்லை
 என்றுதானே பொருள்.
ஆஷ்ரமம் நடத்துவோர் தீக்ஷை பெற
தீர்த்தம் தர,
கிரீடம் வைத்துக்கொள்ள.
மலராபிஷேகம் செய்துகொள்ள  என
பணமே ஆதாரம் என பக்தர்களை சுரண்டுவது ஏன்?

பொருள் உள்ளோருக்கு  இவ்வுலகம் இல்லை
அருளுல்லோருக்கு அவ்வுலகம் இல்லை என்போர்
பொருளுக்கே முதலிடம் தரும் ஆஷ்ரமங்கள்.

ரமணா ஷ்ரமம் அவர் வெறும் கோவணம் கட்டி வாழ்ந்தவர்.

இன்றைய ஆஷ்ராமங்களின் கல்விக்கூடங்கள்
பொருளீட்டும் வணிகவளாகங்கள்.
அங்கு அருள் பெற பொருள் வேண்டும்

இறை நம்பிக்கை உண்மையாக இருந்தால்
கபீர் படிக்காத பக்தர்.கவிஞர் கூறுகிறார்

நீ பக்தியில் நம்பிக்கை கொண்டு கடவுள் அருள் பெற்றுவிட்டால்
வையகமே எதிரியானாலும் உன் மயிரைக்கூட பிடுங்க முடியாது. என.

துரௌபதி துயில் உருவும் காட்சி.
இருகரம் தூக்கி கரம் கூப்பி சரணாகதி அடைந்த பின்னே

கண்ணன் காக்கும் காட்சி.
முற்றிலும் சரணாகதி நிலை.
அதுவே அன்பு நிறைந்த சிரத்தை பக்தி.

அதை விடுத்து மனிதனுக்கும் இறைவனுக்கும் நடுவில்

தரகர் ஏன்? என்பதற்கு விடை இல்லை.

ப்ரஹலாதன்  மன்னன் மகான். நேரடி தொடர்பு. இறவன் இரட்சித்தான்.
ஹிரன்யகஷ்யபு நரசிம்ஹானுக்கு பலியானான்.

பக்த துருவன் நேரடித்தொடர்பு துருவவ நக்ஷத்திரமானான்.
முஹம்மது நபி நேரடித்தொடர்பு  பைகம்பரானார்.
ஏசுநாதர் இறைதூதரானார்.
வால்மீகி திருடன் கொள்ளையன் .நேரடித்தொடர்பு ஆதி கவி ஆனான்.
காளியுடன் தொடர்பு கொண்ட மூடன் காளிதாசனானான்.
நேரடி தொடர்பு கொண்டார் மேன்மையை அடைந்தார் கான்.
பக்த தியாகராஜர்,சந்த் ஏக்நாத்,கண்ணப்பர் நந்தனார் என்றே ஓர் நீண்ட
பக்தர்கூட்டம்.
அன்பு பக்தி நேரடித் தொடர்பு. தரகரில்லா பக்தி.
அதுவே பிரம்மானந்தம் இறைவனருள் பெற வழி.



No comments: