Tuesday, November 26, 2013

நாமதேவர் இறைவனைக் கண்ட காட்சியை விவரித்து இறைவன் க்ருபை பெற "நாம " ஜெபத்தின் மகத்துவத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.இறைவனின் நாம ஜபம் என்னைப்போன்றவர்களுக்கு ஆதாரம். குருடனுக்கு அவன் தடி உதவுவது போல்,பகவானின் நாம ஸ்மரணை ஒன்றே எனக்கு ஆதாரம்.இறைவனே!நீ தயை நிறைந்தவன்.
நீ தான வீரன்.நீ எனக்கு அக்கம் பக்கத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறாய்.நீ தான் பணக்காரன்.இந்த அவனியில் கொடுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை. நீ ஞாநி,அறிவுள்ளவன்,எதிர்காலத்தை நிர்ணயிப்பவன்.உன் செயலாற்றலையும் ,உன் சாமார்த்தியத்தையும் எப்படி வர்ணிக்க இயலும்?

ஹே சுவாமி! என் பரமேஸ்வரா!ஹே ஸ்ரீ ஹரி! அவனியில் அனைவரையும் நீ மட்டும் தான் க்ஷமிக்க (மன்னிக்க)முடியும்.அஸ்வமேத யாகம்,ஸ்வர்ண துலா தானம்,திரிவேணி ஸ்நானம்,இந்த கிரியைகள் எல்லாம் பகவானின் நாம சங்கீர்த்தனத்திற்கு
சமமாகாது.
ஹே சஞ்சலமான மனமே!நீ ஒரே ஈடுபாட்டுடன் பகவானை மட்டும் பஜனை செய்!
கயையில் சென்று பிண்ட தானம் செய்வது,காசியில் வசிப்பது,நான்கு வேதங்களைப் படிப்பது,மத சடங்குகளைச் செய்வது,இடைவிடாது ஆறுவித கர்மங்களில் மூழ்கி இருப்பது,சிவ -சக்தி சம்பாஷனை கேட்பது
இவை எல்லாம் வெளி வேஷம் .வீணானது.இதனால் ஆத்மா வளர்ச்சி அடையாது.மனதே!இந்த கிரிகைகளில் ஈடுபட பின் தொடராதே.
குரு அருளால் இந்திரியங்களைக் கட்டுப்படுத்து.ஐம்புலன் கட்டுப்பாடுதான்
மிகப்பெரிய கர்மம்.குரு உபதேசத்தாலும் தொடர்பாலும் புலன்களை வெல்வதால் இந்தப் பிறவிப் பயன் கிடைக்கும்.புலனடக்கத்துடன்
எல்லா வேறுபாடுகளையும் மறந்து கோவிந்தனை ஜபிக்கவும்.
இந்த உலகக் கடலில் இருந்து கரை சேர அகண்ட பாராயணமே வழியாகும்.
வெளி ஆடம்பர மற்ற நாம ஸ்மரணை தான் இறைவன் அருளுக்கு அவசியமானது.

Monday, November 25, 2013

கடவுள் நேர்காணல் --நாம்தேவ். 

அபங் புகழ்பெற்றது


.பண்டரிபுரம் விட்டலனின் பக்தர். நாம்தேவ்.


 ஒன்பது வயதில் திருமணம்.


எட்டு குழந்தைகள்


.நான்கு மகன்கள்.


நான்கு மகள்.


நான்கு மருமகள் என்று


 அவர் குடும்பம் பெருகினாலும் 


அவருக்கு விட்டலனின் மீது ,


இறைவன் மீது பக்தி ஜீவநதியாக பெருக்கெடுத்தது. 


இல்லறத்தில் பக்தி என்பதற்கு அவர் வாழ்க்கை எடுத்துக்காட்டு.


துறவறம் இன்றி இறைபக்தி .


அதிலும் பக்தியில் ஆடம்பரத்தை எதிர்த்தவர்.


 இறைவனை நேர்காண நாம ஜபம் போதும் என்ற விட்டல் பக்தர்.


அவர் தன் குடும்பத்தின் முழு பொறுப்பையும் விட்டலிடம் ஒப்படைத்து 


இறைவனின் கீர்த்தனையில் ஈடுபட்டவர்.


இவரின் மனம் ஒன்றுபட்ட கீர்த்தனையின் முன்


 விட்டல் நடன மாடுவார்


.இவரின் பக்தி மகாத்மியம் கேட்ட ஞானதேவர் 


இவருடன் இருக்க பண்டரிபுரம் வந்து சேர்ந்தார்.


இவர் மராட்டி ,ஹிந்தியில் பாடிய கீர்த்தனைகள்,


ஐம்பதுக்கும் பெறப்பட்ட கீர்த்தனைகள்


சீக்கிய மத  கிரந்த சாஹப்


பிலும் காணப்படுகின்றன
Recent



  1. நாமதேவர் இறைவனைக் கண்ட காட்சியை விவரித்து இறைவன் க்ருபை பெற "நாம " ஜெபத்தின் மகத்துவத்தை இவ்வாறு வர்ணிக்கிறார்.இறைவனின் நாம ஜபம் என்னைப்போன்றவர்களுக்கு ஆதாரம். குருடனுக்கு அவன் தடி உதவுவது போல்,பகவானின் நாம ஸ்மரணை ஒன்றே எனக்கு ஆதாரம்.இறைவனே!நீ தயை நிறைந்தவன்.
    நீ தான வீரன்.நீ எனக்கு அக்கம் பக்கத்தில் அனைத்து இடங்களிலும் வியாபித்து இருக்கிறாய்.நீ தான் பணக்காரன்.இந்த அவனியில் கொடுக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை. நீ ஞாநி,அறிவுள்ளவன்,எதிர்காலத்தை நிர்ணயிப்பவன்.உன் செயலாற்றலையும் ,உன் சாமார்த்தியத்தையும் எப்படி வர்ணிக்க இயலும்?

    ஹே சுவாமி! என் பரமேஸ்வரா!ஹே ஸ்ரீ ஹரி! அவனியில் அனைவரையும் நீ மட்டும் தான் க்ஷமிக்க (மன்னிக்க)முடியும்.அஸ்வமேத யாகம்,ஸ்வர்ண துலா தானம்,திரிவேணி ஸ்நானம்,இந்த கிரியைகள் எல்லாம் பகவானின் நாம சங்கீர்த்தனத்திற்கு
    சமமாகாது.
    ஹே சஞ்சலமான மனமே!நீ ஒரே ஈடுபாட்டுடன் பகவானை மட்டும் பஜனை செய்!
    கயையில் சென்று பிண்ட தானம் செய்வது,காசியில் வசிப்பது,நான்கு வேதங்களைப் படிப்பது,மத சடங்குகளைச் செய்வது,இடைவிடாது ஆறுவித கர்மங்களில் மூழ்கி இருப்பது,சிவ -சக்தி சம்பாஷனை கேட்பது
    இவை எல்லாம் வெளி வேஷம் .வீணானது.இதனால் ஆத்மா வளர்ச்சி அடையாது.மனதே!இந்த கிரிகைகளில் ஈடுபட பின் தொடராதே.
    குரு அருளால் இந்திரியங்களைக் கட்டுப்படுத்து.ஐம்புலன் கட்டுப்பாடுதான்
    மிகப்பெரிய கர்மம்.குரு உபதேசத்தாலும் தொடர்பாலும் புலன்களை வெல்வதால் இந்தப் பிறவிப் பயன் கிடைக்கும்.புலனடக்கத்துடன்
    எல்லா வேறுபாடுகளையும் மறந்து கோவிந்தனை ஜபிக்கவும்.
    இந்த உலகக் கடலில் இருந்து கரை சேர அகண்ட பாராயணமே வழியாகும்.
    வெளி ஆடம்பர மற்ற நாம ஸ்மரணை தான் இறைவன் அருளுக்கு அவசியமானது.

கடவுள் பற்றி பல எண்ணங்கள்.

கடவுள்  பற்றி  பல எண்ணங்கள்.

இருக்கிறார்  என்று சொல்பவர்களும்

 சோதனைகள்,தோல்விகள்,மரணங்கள் ஏற்பட்டால் 

 இருக்கிறானா என்று நாத்திகர்களாக மாறும்

 நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இல்லை என்று கூறும் பலர்

 தங்கள் தனிப்பட்ட அனுபவத்தாலும் ,

உலகியல் நடப்பாலும்

 உறுதிவாய்ந்த ஆஸ்திகர்களாக மாறி உள்ளனர்.


தெய்வப்பணி  என்பதில் நம் முன்னோர்கள் உறுதிவாய்ந்த 

கொள்கைகள் கொண்டுள்ளனர்.

பாலங்கள்,அணைகள்,ஆலைகள் ,சாலைகள்  ,நிலாப்பயணம்  என்ற 

இந்த அறிவியல்  உலகில்  உலகம் முழுவதும்  இறை நம்பிக்கைகள் 

நிறைந்துதான்  காணப்படுகின்றன.


ஆலயங்கள்  ஆஸ்திகள் குவியும் இடங்களாக மாறுகின்றன.

அவை வணிகமையங்களாக  மாறி மக்களைக்கவரும் 

ஒரு சந்தையாக மாறிவருகின்றன . அது ஒரு மயக்கும் ஏமாற்றும் 

தொழில் மையங்களாக  மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டுகள் 

அண்மையில் அதிகரித்துவருகின்றன.

காரணம் ஆலயங்கள் அமைக்க பல கோடிகள் செலவாகின்றன.

சிலைகளின் உயரங்கள் இன்று  போட்டிபோடும் நிலையில் அதிகரிக்கின்றன.

வைரக்கிரீடம்,ஆபரணங்கள் ,உண்டியல் என சொத்துக்குவிப்பு மையங்களாக 

மாறி  உலக மாயைகளுக்கு வழிகாட்டுகின்றன.

அமைச்சர்கள் வழங்கும் தங்க கிரீடங்கள்  பாப விமோசனம்   என்றால் 

இறைவனின் திருவிளையாடல்கள் வியக்கவைக்கும்  நிலை.


இந்நிலையில் பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் 

நான்  ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான 
தான் ஆரோ என்றுணர்ந்து  தவம் முடிப்பது எக்காலம்.

எவ்றேவர்கள் எப்படிக்கண்டு எந்தப்படி நினைந்தார் 
அவ்ரவர்க்கப்படி நின்றான்  என்பது எக்காலம்.

உற்றுற்றுப் பார்க்க ஒளிதரும் ஆனந்தமதை
நெற்றிக்கு  நேர்கொண்டு நிலைபதினி எக்காலம்.

பொருளாசை பெண்ணாசை பூ ஆசை என்னும்
மருளாசை யாம்மாசை மாற்றித்-தெருள் ஞான 
வேந்தராய் வாழலாம் மெய்யன்பால் நன்னெஞ்சே 
பூந்தராய் நாதரை நீ போற்று.-------------------------------பட்டினத்தார்.

நல்ல நெஞ்சே ! பொருள் மீது கொள்ளும் பேராசை,
பெண் மீது கொள்ளும் காதல் ,
மண் மீது வைக்கும் அவா  என்ற மயக்கத்தை அளிக்கின்ற ஆசை எனப்படும் 
குற்றங்களை மாறும்படி செய்து தெளிவையுண்டாக்கும் 
ஞானபூமிகள் ஏழிற்கும் மன்னராய் வாழ்வதாகும். உண்மையான அன்பினால் பூந்தராய் என்னும் சீகாழி எழுந்தியிருக்கும் இறைவனை வணங்குவாயாக.











அதுவே நமக்கு பிரம்மானந்தம்.

சனாதனதர்மமும் பாரத மக்களும்.

  நமது  சனாதன தர்மம் அறிவியல்சார்ந்தது.
நடை முறை அறிவியல்.
பாத பூஜை  பாதங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.
பல நோய்கள் வராமல் இருக்க ,பாதங்களை  அழுத்தவேண்டும்.
நகங்களை கடிக்கக்கூடாது.
நக இடுக்கில் இருக்கும் அழுக்கு பல நோய்களுக்குக் காரணம்.

வைகறைத் துயில் எழு  என்பது சனாதன தர்மம்.
சாஷ்டாங்க நமஸ்காரம் ,தோப்புக்கரணம்,நவக்ராஹ்,கோயில் பிரதக்ஷணம்
அனைத்தும் உடற்பயிற்சிகள்.
உணவு விஷயத்தில் செவ்வாய்,வெள்ளி இரண்டு நாட்கள் பருப்பு.
மிளகுக் குழம்பு,மிளகு ரசம் ,பூண்டுக் குழம்பு ,பூண்டு ரசம் அனைத்தும்
உடலுக்கு நலம்.
எண்ணெய் குளியல்,தீர்த்த யாத்திரை,துளசி,வேம்பு,வில்வம்,அருகம்புல்
போறவற்றை வழிபடுதல்,அவைகளை சாப்பிடுதல், இதுவும் அறிவியல் கலந்த ஆன்மிகம்.
விரதங்கள்,உபவாசம் அனைத்தும் உடல் நலத்திற்கு.
எல்லா பண்டிகைகளும்  தீயவை ஒழிய,நல்லவை நிலைக்க.
செல்வம் பெருக.மகிழ்ச்சி ஏற்பட.
இவைகள் தவிர
உடல் வலு,மன நலம்,மன அமைதி,மன நிறைவு முதலியவைகளுக்கு
யோகா,ப்ராணாயாமம்,தவம் போன்ற பயிற்சிகள்.
நாம் நம் பாரத உணவு,நடைமுறைகளை மாற்றி இன்னல் பெறுகிறோம்.
இதை மாற்றி ஆன்மிக அறிவியல்களைப் பின் பற்றினால்
நாம் நலம்பெற ஆண்டவன் அருள் புரிவான்.
அதுவே நமக்கு பிரம்மானந்தம்.

Saturday, November 23, 2013

அதுவே பூலோகத்தில் ஸ்வர்கீய சுகம் தரும் . மன அமைதி,மன நிறைவு தரும்.

அன்பு  என்றால் 

கொடுக்கல் மட்டும் தான்.

 வாங்களுக்காக "வாங்க" என்பது  அன்பாகாது.

தமிழுக்கும் ஹிந்திக்கும் உள்ளவேறுபாடு இந்த கொடுக்கல்-வாங்களில் தான்.

தமிழின் சிறப்பு இதில் தான்.

ஹிந்தியில்  லேன் -தேன் என்பார்கள்.

அதாவது வாங்கல் கொடுக்கல்.

தமிழில் கொடுக்கல் -வாங்கல்.


வாங்கிக்கொடுப்பதும் -கொடுத்து வாங்குவதிலும் 

அது உதவியாக  இருந்தாலும் சரி ,பணமாக இருந்தாலும் சரி ,

பெருந்தன்மை  கொடுப்பதில் தான்.

நான் கொடுத்தேன் என்பதில் பெருமையா?வாங்கினேன் என்பதிலா?

அவன் மிகவும் நல்லவன் .எல்லோருக்கும் கொடுத்து உதவுவான்.

அங்கு ஒரு கம்பீரம்.

அவன் வந்துவிட்டான்.
.அவன் வாங்கியே பிழைக்கிறான் .அதில் ஒரு தயக்க வாழ்க்கை.

கொடுப்பவனுக்கு  யார் கொடுப்பான்? உழைப்பு.

உழைப்பால் ஊதியம்.

கொடுக்கும்  குணம்.
 அது  ஆன்மீகத்தால் வருவதா? அறிவியலாலா ?

கொடுப்பதற்கேற்ற வரவு வர

 பகவான் மீது பக்தி தேவை,

கொடுக்கும் அன்பு தேவை.

கொடுத்து வாங்க வேண்டும்  என்ற 

அன்பு பக்தி    பக்தியா?

இறைவன் மீதுள்ள பக்தி -சிரத்தை ஒருவழிப்பாதையாக 
(one way traffic)
இருக்கவேண்டும்.

அந்த  கொடுக்கும் அன்பே

 வாங்காமல் பெரும் 

கலைமகள்,மலைமகள்,

அலைமகள் கிருபகடாக்ஷம்.

 அந்த அருள் பார்வை

 நமக்கு ஞானம் தரும்.

செல்வம் தரும்.

புகழ் தரும்.

உயர் குணம் தரும்.

.அனைத்தும் தரும்.

அதுவே பூலோகத்தில்

 ஸ்வர்கீய சுகம் தரும் .

மன அமைதி,மன நிறைவு தரும்.


அன்பே ஆண்டவன்.

இறைவன்  அன்புக்கும் பக்திக்கும் சிரந்தைக்கும்   அடிபணிந்து சேவகனாக வருவான் என்பது ஹிந்துக் கதைகள்.
திருவிளையாடல் புராணத்தில் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட கதை.
விறகு சுமந்த கதை 
வேடனாக விருத்தனாக முருகன் வந்த கதை,
கண்ணப்பனுக்கு காட்சி அளித்த கதை,
நந்தனாருக்கு நந்தி விலகிய கதை,
 புரந்தரதாசர் கதை,
 இன்னும் எத்தனையோ கதைகள்.
அன்புக்கு இறைவன் அடிமை 
இறைவன் பணியாளாக இருந்த கதைகள்.
முழு சரணாகதி ,பக்தி இறைவன் அருள்.
அன்பே ஆண்டவன்.





Saturday, November 16, 2013

கார்த்திகை தீபம்.

ஆண்டவன் ;  ஆள்பவன் ;ஆளப்போறவன். 

 ஆண்டவன் என்பது இறந்தகாலம்.

ஆகையால் ஆள்பவனை இறைவனின் பிரதிநிதி என்றனர்.

ஆளப்போறவன் பரம்பரையாக இருந்ததால்

 அவனது தகுதிக்கு முதலிடம்

 தராத  மன்னராட்சியில் எழுச்சியும் வீழ்ச்சியும் .

சிலரின் காலம் பொற்காலமாகவும்

 சிலரின் காலம் கொடுங்கோலன் காலமாகவும்

 இருந்ததை சரித்திரம்  கூறுகிறது.

கொடுங்கோலன் ஆட்சியில் பொன்னும் பொருளும் 

இழந்தோர்   இறுமாப்புடன் வாழ்ந்தோர் 

தங்கள் இன்னல் தீர வழிபட்டது பக்தி இலக்கியம்.

திக்கற்றவனுக்கு  இறைவனே  துணை.

இறைவனே கதி.


பொன்னும் பொருளும் குவிந்திருந்தாலும் 

பொன்னம்பலம் அருளின்றி  இப்பூவுலகில் 

மன நிறைவு இல்லை  என்பதே சத்தியம்.

சொக்கலிங்கம் அருள் பெறவே கார்த்திகை தீபம்.

அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.


அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.


அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 



வந்தருளுவானே.


இன்பம் பெருகிட

 ஆனந்தமே 

வாழ்க்கையாக 

ஆனந்தக் கூத்தாடும் 

தில்லை அம்பல நடராஜனை 

அருணாசலேஸ்வரனை 

நாளும் பணிவோமே.

அன்பே சிவனாக 
,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.







அன்பே சிவனாக , சிவனே அன்பனாக வந்தருளுவானே.

கார்த்திகை  நன்நாளில்

கார்த்திகேயனை கந்தனை

சிவகுமாரனை 

ஆறுதலை உடையோனை
 
ஆறுதலை பாலகனை 

கார்த்திகை நன்னாளில்
 
போற்றி வணங்குவோம்.

முக்கண்ணனை 


முக்தி அளிப்போனை


ஆதி பகவானை 


துரிதவரமளிப்பானை


தும்பிக்கையான் தந்தையை


நம்பிக்கையால் தொழுதால்


துன்பம் வராது காண்.


அன்பே சிவனாக 

,
சிவனே அன்பனாக 


வந்தருளுவானே.


வேண்டியதைப் பெரும் 


வரம் அளிக்கும் 


சிவனை சித்தத்தில் வைத்து


 வணங்குவோமே.


Thursday, November 14, 2013

அதுவே இறைவன் அருளும் நன்னாளாகும் .

அவனியைப் படைத்த     இறைவன்  ,நல்லவைகளைப்

எடுதுத்துச்சொல்ல ,வழிகாட்ட  இறைத் தூதர்கள்

இறைவனடிமைகள் ,இறைப்புலவர்கள்,இறைப்   புரவலர்கள்


கோயில்கள் ,பூஜாரிகள் உருவாக்கினார். ஆனால் ,

உலக மாயையில் பின்வந்தோர்  சிக்குண்டு

  உலகியலில்  உளம் கொண்டு ,ஊழலை வளர்த்து ,

உண்மையை மறைத்து ,அறநெறியில் ஐயம் வளர்த்து

இன்று ஆன்மிகம் .இறைவனருள் என்றாலே பொருள்தான்

அருள் பெற்றோர் என்றால் பொருளு உடையோரே .
ஆலய தரிசனக் கட்டணம் .அர்ச்சனைக்கட்டணம்,
அபிஷேகக் கட்டணம் என்றே ஆலயங்கள்
தனம் படைத்தொருக்கே என்ற மாயை

 பக்தியும் அன்பும் சிரத்தையும் போதும் என்ற நிலை மாறி

ஆன்மீக அருளுக்கு பொன்னும் பொருளும் பிரதானம் என்ற மாயை
உருவாகும் நாள் எந்நாளோ ,அந்நாளே

அறநெறிகள் வளர்ந்து அநியாயங்கள்  ஒழியும் நன்னாளாகும்.

அதுவே இறைவன் அருளும் நன்னாளாகும் .

ஆன்மீகத்தில் தனமே பிரதானமானால்

ஆண்டவனுக்கே பொறுக்காதப்பா .
ஆலயங்கள் சுற்றி வணிகர் கூட்டம்.
அறநெறி வளர்க்கா  ஆடம்பரம் .
பொருள் இல்லாதவன் பாபி என்ற நிலை மாற
அருள்பெற்றோர் கூறும் நாளே ஆண்டவன் மகிழும்  நாளாகும்.


Monday, November 4, 2013

அன்பு பக்தி நேரடித் தொடர்பு. தரகரில்லா பக்தி. அதுவே பிரம்மானந்தம் இறைவனருள் பெற வழி.

இறைவனைத்தேடும் பக்தர்கள்
 ஆஷ்ரமங்களை நாடுவதேன்?
அவர்களுக்கு இறைவன் மேல் நம்பிக்கை இல்லை
 என்றுதானே பொருள்.
ஆஷ்ரமம் நடத்துவோர் தீக்ஷை பெற
தீர்த்தம் தர,
கிரீடம் வைத்துக்கொள்ள.
மலராபிஷேகம் செய்துகொள்ள  என
பணமே ஆதாரம் என பக்தர்களை சுரண்டுவது ஏன்?

பொருள் உள்ளோருக்கு  இவ்வுலகம் இல்லை
அருளுல்லோருக்கு அவ்வுலகம் இல்லை என்போர்
பொருளுக்கே முதலிடம் தரும் ஆஷ்ரமங்கள்.

ரமணா ஷ்ரமம் அவர் வெறும் கோவணம் கட்டி வாழ்ந்தவர்.

இன்றைய ஆஷ்ராமங்களின் கல்விக்கூடங்கள்
பொருளீட்டும் வணிகவளாகங்கள்.
அங்கு அருள் பெற பொருள் வேண்டும்

இறை நம்பிக்கை உண்மையாக இருந்தால்
கபீர் படிக்காத பக்தர்.கவிஞர் கூறுகிறார்

நீ பக்தியில் நம்பிக்கை கொண்டு கடவுள் அருள் பெற்றுவிட்டால்
வையகமே எதிரியானாலும் உன் மயிரைக்கூட பிடுங்க முடியாது. என.

துரௌபதி துயில் உருவும் காட்சி.
இருகரம் தூக்கி கரம் கூப்பி சரணாகதி அடைந்த பின்னே

கண்ணன் காக்கும் காட்சி.
முற்றிலும் சரணாகதி நிலை.
அதுவே அன்பு நிறைந்த சிரத்தை பக்தி.

அதை விடுத்து மனிதனுக்கும் இறைவனுக்கும் நடுவில்

தரகர் ஏன்? என்பதற்கு விடை இல்லை.

ப்ரஹலாதன்  மன்னன் மகான். நேரடி தொடர்பு. இறவன் இரட்சித்தான்.
ஹிரன்யகஷ்யபு நரசிம்ஹானுக்கு பலியானான்.

பக்த துருவன் நேரடித்தொடர்பு துருவவ நக்ஷத்திரமானான்.
முஹம்மது நபி நேரடித்தொடர்பு  பைகம்பரானார்.
ஏசுநாதர் இறைதூதரானார்.
வால்மீகி திருடன் கொள்ளையன் .நேரடித்தொடர்பு ஆதி கவி ஆனான்.
காளியுடன் தொடர்பு கொண்ட மூடன் காளிதாசனானான்.
நேரடி தொடர்பு கொண்டார் மேன்மையை அடைந்தார் கான்.
பக்த தியாகராஜர்,சந்த் ஏக்நாத்,கண்ணப்பர் நந்தனார் என்றே ஓர் நீண்ட
பக்தர்கூட்டம்.
அன்பு பக்தி நேரடித் தொடர்பு. தரகரில்லா பக்தி.
அதுவே பிரம்மானந்தம் இறைவனருள் பெற வழி.