Friday, October 11, 2013

அதில் தானே பரமானந்தம்.

அன்பு இறைவனை  
ஆஸ்திக்காக வேண்டுவோர்--தன்
இச்சைக்காக வேண்டுவோர் ,
ஈகைக்காக வேண்டுவோர் --தன்
உள்ளத்து ஆசைகள் நிறைவேற வேண்டுவோர் 
ஊக்கம் பெற வேண்டுவோர் 
எண்ணங்கள்  நிறைவேற வேண்டுவோர் 
ஏற்றம்பெற வேண்டுவோர் --உலக 
ஐக்கியத்திற்கு வேண்டுவோர் .
ஒப்பில்லா செல்வம் புகழ் பெற வேண்டுவோர் 
ஓங்காரம் ஜபித்து ,அகங்காரம் வெல்ல வேண்டுவோர் 
ஔடதமாகி இன்னல் தீர வேண்டுவோர்  என 
வேண்டுவோர் பல ரகம்,
இதில் உயர் ரகம் அருள் பெரும் ரகம் 

தனி ரகம்.
கடவுளையே சரணடைந்து 
தவம் கிடந்தாலும் 
அவனருள்  பெற்றோர் 
கடமை யாற்றுவோர்;
அன்பை பரப்புவோர்.
அறநெறி செல்வோர் 
அஹிம்சை வழி செல்வோர் 
அறநெறி  காட்டுவோர்
பிறர்க்கென வாழ்வோர்  
பொதுநலம் காப்போர் 
பிறர் துன்பம் கண்டு 
உடன் உதவு வோர் 
பிறருக்கென வாழ்வோர் 
என்றதொரு பெரும் கூட்டம் 
அதுவே உலகியல் தர்மம்.
அதர்மத்தில் செல்வோரும் 
செல்வம் சேர்ப்போரும்
வருந்தியே உயிர் விடும் 
வாழ்க்கைத் தத்துவம்.
சத்யம் ஞானம் அனந்தம் பிரமம்.
கடமை மறந்து ,கடவுளை மறந்து 
அறம் மறந்து செல்வமே பெரிதென 
வாழ்ந்தோர்  பலர் .
பெயர் சொல்ல ஆளில்லை.
நந்தனை சொல்கிறோம்.
கண்ணப்பனை சொல்கிறோம்.
துருவனை சொல்கிறோம் 
தியாகராஜரை சொல்கிறோம்.
ஏகனாத்தை சொல்கிறோம்,
பாரதியை சொல்கிறோம் 
வள்ளுவரை சொல்கிறோம் 
வள்ளலாரை சொல்கிறோம்.
செல்வச் செழிப்பும் ஆண்டவர்களும் 
வரலாற்றில். அது பரப்பப் படுவதில்லை.

நால்லோழுக்கம் தரும் நல நூல்கள் 
அவ்வைகாட்டிய நீதிநெறி ,மூதுரை 
ஆத்திச்சூடிஎன  தேவீகநூல்கள் 
நபிகளின் குரான் ,இயேசுவின் பைபிள் 
எளியோர் நன்றி வழிகாட்டிகள் 
வாழும் உலகமிது.
இதை அறிந்தே  ஆன்மிகம் வளர்கிறது 
அதிலே தான் ஆனந்தம்.
அனந்தம் ஆத்ம திருப்பதி 
அதிலேதானே இயல்பான  சுகம்.
அதுவே அன்பன் ஆண்டவன் அருள்.
அதில் தானே பரமானந்தம்.





No comments: