Thursday, September 5, 2013

அதுவே உங்களுக்கு ஆனந்தம்;

இறைவன்  எங்கே?எங்கே?என்று தேடி .
இங்கே!இங்கே!இங்கே!என்று 
அழைத்தே ,ஆஷ்ரமம்.
அங்கே  அன்பான இறை தத்துவம்.
அழகான சூழ் நிலை.
அங்கே அரங்கங்கள் உண்டு.
மயக்கும் பேச்சுக்களும் உண்டு.
மயக்கும் அழகு மங்கைகள் நடமாட்டமும் உண்டு.
பூஜைகள் உண்டு.
பூவைகள் உண்டு.
ஆண்டவன்  தானே என்று தனக்கே அனைத்தும் என்று 
அணைக்கும் பழக்கமும் உண்டு.
பக்திச் சூழலில் தன்  கற்பிழந்து 
சூழ்  கொண்ட பெண்களுமுண்டு.
அர்த்தஜாம பூஜை என்று 
அனர்த்தங்கள் புரியும் ஆசாரியர்கள்.
 இறைவன் உண்டா என்றால் அதுதான் இல்லை.
ஹிந்துமதம்  ஆஷ்ரமங்களுக்குச்  செல்ல சொல்லவில்லை.
இறைவனுக்கு இதுதான் உருவம் என்றும் சொல்லவில்லை.
இயற்கையின் சக்தியே இறைவன் என்கிறது.
நமக்கு உதவிசெய்வோரே இறைவன்.
இன்றைய செய்தி மாண்புமிகு எம்.ஜி.ஆர் ,க்கு கோயில் 
இவ்வாறே இறைவன்  ஹிந்து மதத்திலே.
மனிதனே ராமன்,கிருஷ்ணன் சிவன்,கணேசன் ,முருகன்.
மக்களைக் காப்பாற்றி இறைவன் ஆனார்கள்.

இவ்வழியில் இன்று அங்கும் எங்கும் பொருள்தேடி 
ஏமாற்றும் எத்தர்களாக சாமியார்கள்.
பொருளே பெரிது;போகமே பெரிது.
நாம் இறைவனை மட்டும் சரணடைந்தால் 
அவனே மனித உருவில் உதவிடுவான்.
அரசவையில் நிர்வாண மாக்க முயற்சி.
ஐந்து கணவர்கள்,பெரும் ஆசாரியர்கள் 
சூதாட்டத்தில் தோற்ற திரௌபதி .
யாரும் அவளை காக்காத நிலை.
தன்னிநிலை மறந்து இருகரம் உயர்த்தி,
சரணாகதி நேரடியாக இறைவனிடத்தில்.
இதுதான் அன்பின் எல்லை.சிரத்தை ;பக்தி.
அந்த சரணடைதல்  தான் முக்தி.
சாமியார்கள் சரணடைந்தால்  மாயை.
பொருள் விரயம்.வீண் ஏமாற்றம்.
சிந்தியுங்கள். ஞானம் பெறுங்கள்;
முற்றிலும் நீயே கதி என்று சரணடையுங்கள்.
சாமியிடம்;இறைவனிடம்; ஆண்டவனிடம்.
அதுவே  உங்களுக்கு ஆனந்தம்;
ரக்ஷை;மன ஷாந்தி;மன நிறைவு.
கணேசா சரணம்!கந்தா  சரணம்!சிவா சரணம்!துர்க்கையே சரணம்;
வேண்டிய வரம் அளிக்கும் ஆண்டவன் 
அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து .
தூணிலும் துரும்பிலும் இருக்கும் இறைவன்.
இறைநாமம் ஜெபியுங்கள்!இதுவே இன்பம்.!