Monday, August 26, 2013

ஒரே குரல் ஒலிக்காது ;ஒளிராது .காதலால் கசிந்துருகவேண்டும்.

இறைவனைப் பற்றிய   விஷயத்தில்  இந்துமதம் காட்டும் அக்கறை  எப்படி என்றால்  குதிரைப் பந்தயம் போன்றது. கிரிக்கட்டில்  மேட்ச் பிக்ஷிங்க் போன்றது.

என்று இந்த வாணிக நோக்கம்  முடியுமோ அன்றுதான்  சனாதன தர்மம்  ஒற்றுமை அடையும். இறைவனின்  கருணை கிட்டும்.

பரிசுத்தம் ,புனிதம் என்ற ஆஷ்ரமங்கள்  ஒரு வாணிக மையம்.


அந்த ஆஷ்ரமங்கள்   அனைத்துக்கும்  ஒளி - ஒலி  புகைப்படக் கருவி பொருத்தவேண்டும்  என்று சுவாமி நித்யானந்தா கூறி உள்ளார்.

வேலூர் பொற்கோவில் பற்றிய தவறான செய்திகள் உண்மை என்ற பத்திரிகையில்  வெளிவந்தன.


கோயிலுக்கு செல்பவர்கள் பக்தர்கள் அதிகமாக இருப்பதால் இறைவனை வழிபடுதல் 5 நிமிடம். அங்குள்ள ஈசல்  புற்று போல் உள்ள கடைகளில் கழிப்பதோ  பல மணி நேரங்கள்.

அருள் பெறுவது பொருள் உள்ளவர்களுக்கு துரிதம். அவர்கள் ஆர அமர்ந்து பிரார்த்தனை செய்யலாம்..

என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே.நானும் இறைவன் மேல் அதிகம்
பற்றுள்ளவன் தான். ஆனால் இறைவன் என்ற ஒரு அச்சத்தால் மக்களை ஏமாற்றும் ஒரு பெரும் கூட்டம்  இன்று பாரதம் முழுவதும் வியாபித்து இருக்கிறது.

இதனால்  நாட்டில் பல குற்றங்கள் நடைபெறுகிறது.

உத்தர்காண்ட்  நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த நிகழ்வே இவ்வளவு பாத்திப்பும்  சுயநல பாக்திவேஷம் போட்டு பல கட்டிடங்கள் வணிக நோக்கத்திற்காக கட்டப்பட்டதே.

பழனி எப்படிப்பட்ட சித்தர்கள் வாழ்ந்த வாழுகின்ற பூமி.

அங்கு  உண்மையான  சித்தர்கள் கந்தல் துணியுடன்  பைத்தியக்காரர்கள்
போன்று சுற்றுவர். அவர்கள் அந்தர்த்யானம் அடைந்ததும் அவர்களுக்கு ஆடம்பரம். ஆஷ்ரமம். இன்றும் ஒரு சாக்கடை சித்தர்.அவருக்கு ஒரு கூட்டம்.
கணக்கன்பட்டி யில் ஒரு சுருட்டு சாமியார். ஈஸ்வரபட்ட என்பவர். நாங்கள் ஒரு பைத்திக்கரர் போன்று விளக்குத் தூணுக்கு கீழ் உட்கார்ந்து சுற்றிக்கொண்டிருப்பார்.

நான் சிறுவனாக இருக்கும்போது கண்ணுசுவாமி  என்ற குருட்டு சுவாமிகள் திருஆவினன் குடியில் அமர்ந்து இருப்பார். அவரிடம் ஒரு சிறிய விபூதி டப்பா வெள்ளியில் இருக்கும்.ஒரு சிட்டிகை  எடுத்துக்கொடுப்பார். அந்த தெய்வீக
 மணம்   அவர்   இறைவனடி  சேர்ந்த பின்  யாரிடமும் கிடைக்கவில்லை.

இறைவனை தரிசித்த அனைத்து அருட்செல்வர்களும்  இறைவனைமட்டுமே

சரணடைந்து இருப்பர்..பொருளாசை கிடையாது.அருளாசியும் ,அருளாசையும்
மட்டும்தான்.

இன்றோ  ஆஷ்ராமசாமியார்கள்   சிலர் செய்யும்  சில்மிஷங்கள்  ,அவர்களுடைய சொத்துமதிப்பு,சிறை செல்வது,ஜாமீனில் வருவது,அவர்களின்  மீதுள்ள குற்றச்சாட்டுகளின் வழக்கு நடந்துகொண்டே இருப்பது,மக்கள் மறந்துவிடுவது,புதிய சாமியார்கள் குற்றம் புரிந்த செய்திகள் வருவது இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிடுகிறது.

   பழனி எப்படிப்பட்ட புண்ணியஸ்தலம். இன்று பேருந்தில் இறங்கியதும்
பால்   மணக்குது ,பழம்  மணக்குது என்பதுபோய் சிறுநீர்  நாற்றம்.
ஒரு குடம் தண்ணீர் 50 ரூபாய். லக்ஷக் கணக்கில் பக்தர்கள்.கோடிக்கணக்கில் வருமானம். கிரிவீதி முழுவதும் கடைகள்.

இது பொறாமையாலோ பலரின் தொழிலை  கெடுப்பதாகவோ நினைக்கவேண்டாம்.. இது இறைவன் பக்தியை  புனிதமற்றதாக்கிவிடும்.
இது பழனியில் மட்டும் அல்ல. அனைத்து பாரதப்  புண்ணிய   ஸ்தலங்களிலும்   இதே நிலைதான். காசி--- வேண்டாம்.


இறைவனை  அவமானப்படுத்தும் செயல்கள் ,இறைவன் பெயரால் ஏமாற்றும் செயல்கள், பிராயச்சித்தம் ,பரிகாரம் ஜோதிடம்  என்ற பெயரால் நள்ளிரவு பூஜைகள் என்ற பெயரால் நடக்கும் குற்றங்கள். இதை எல்லாம் தடுப்பதில் இந்து முன்னணி ஈடுபடவேண்டும். அதைவிடுத்து ஒரு நடிகை செருப்புப்போட்டு(பாத ரக்ஷை) நடந்தாள்  என்பதற்கான போராட்டம்  பைத்தியத்தன மானது.

இந்து மத ஒற்றுமை ,ஒரே குரலுக்கு  நாம் முயற்சிக்கவேண்டும்.


இதற்கு இறைவன் மேல்  உண்மையான பற்று,பாசம்,சிரத்தை ,அன்பு ,நேசம் ,
அனைத்தும்  ஆத்மார்த்தமாக  இருக்கவேண்டும்.

  பொருளாசையால்  நாம்  நம் தவறுகளை மறைத்தால் நமது  சனாதன தர்மம் என்ற பெரும் இந்து சாம்பராஜ்யம்  சிதைந்துவிடும்.

கிராமீய பக்திப்பாடல்களும் கர்நாடக பாக்திப்படல்களும் இணையும் வரை

இந்துமதத்தில் ஒரே குரல் ஒலிக்காது ;ஒளிராது ; காதலால் கசிந்துருகி
கண்ணீர் மல்கவேண்டும்.


Post a Comment