Wednesday, August 21, 2013

அந்த அன்பு ஒருபுதிராகவே உள்ளது. ஒரு ஐயமும் ஏற்படுகிறது.

இந்துமதம்  என்று மாறிய பின் 

சனாதன தர்மம் என்ற காலத்திற்கும் 

இந்துமதம்  என்ற பெயர் 

ஒழுக்கம் இன்மை  சில சுயநல வாதிகளால் ஏற்படுகிறது.

பல போலிகள்  மனிதர்களின்  இறை நம்பிக்கையை 

தான் தான் இறைவனின் அவதாரம் என்றும் 

இறைவனுக்கான அபிஷேகங்கள் ,அலங்காரங்கள் 

மலர் மாலைகள் அணிந்தும்  ஏமாற்று கின்றனர்.

இவர்கள் வேடம் களையும் பொது 

இவர்களிடம் சேர்ந்த பொன்னும் பொருளும் 

தண்டனையிலிருந்து காப்பாற்றுகிறது.

சிலர் தண்டனையும் பெறுகின்றனர்.

பெரம்பூர்  ஜோதிடர் .

ஆனால் இவர்களிடம் எதோ ஒரு சக்தி ,

மயக்கும் வார்த்தைகள் 

ஆரம்பகாலத்தில் மக்களை ஈர்க்கின்றன.

ஆனால் கோடிக்கணக்கில் ரூபாய் நோட்டுகள்,
கிலோ கணக்கில் தங்கம் ,வெள்ளி ,வைரம் இவை எப்படி சேருகின்றன>

ஆடம்பர அரியணைகள்,
ஆஷ்ரமங்கள் 
பக்தர்கள் கூட்டம் 
இது ஒரு அபூர்வம்.

அவர்கள் தவறு செய்தாலும் 
அது பொறாமையால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியால் 

உருவாக்கப்பட்ட  குற்றச்சாட்டு என்று கூறும் ஒரு கூட்டமும்  இருக்கிறது.

இன்று ஆசாராம் பாபு என்ற ஆடம்பர ஆஷ்ரம சாமியார் தனது  அறுபதாவது அகவையில்  சிக்கியுள்ளார்.
ஹிந்தி செய்திதாளில்  அவரை எதிர்த்து கண்டனக்கணைகளை 
வாசகர் அளித்தாலும்  அவரை ஆதரித்து குறைந்த எண்ணிக்கையில் .

சிலர் செய்த்திதாள்கள் ஹிந்து மதத்தை களங்கப்படுத்தவே  இத்தகைய செய்திகள்  என்கின்றனர்.
நான் ஒரு முறை கல்கி ஆஷ்ரமம் சென்றேன்.

அவரது நேரடி தர்சனம் காண கட்டணம் பத்தாயிரம் ரூபாய்.
அவரைது தீக்ஷை பெற்று இறைவனை நேரடியாகக் காண 
ரூபாய் ௬௦௦௦/-
இதற்கு ஏறும் வரிசை.
அவ்வாறே பல ஆஷ்ரமங்கள்.
ஆலயங்கள்.

இதுதான் இந்துமதச் சிறப்பு.

இந்த மாதிரியான மூட பக்தி /குருட்டு பக்தி 
எப்படி மக்களுக்கு ஏற்படு கிறது.
இக்கூட்டத்தில் படித்தவர்கள்,நீதிபதிகள்,அரசியல் தலைவர்கள்,
பின்னணிப் பாடகர்கள் ,மருத்துவர்கள் எழுத்தாளர்கள் 
பணம் படைத்தோர் ,வெளிநாட்டவர் என்று  அனைவரையும் திகைக்க வைக்கிறது.
அந்த திகைப்பு தீர்வதற்குள் பெண்கள் கூட்டம்.
நல்லவரோ ,கெட்டவரோ  சாமிகளை விமரிசனம் செய்தால் 
பாவம் வரும் என்ற பயம்.

சுருக்கமாக  சொன்னால்  ஆஷ்ரமத்தில் ஆஸ்தி உள்ளோர் சங்கமம்.

பிரேமானந்தாவை சிறையில் கூட வந்து பார்த்துச் சென்ற அமைச்சர்களும் அடங்குவர்.

எல்லாமே ஒரு புதிர்.இதற்கு நீதி /அநீதி என்பதை 
ஒரு மூடநம்பிக்கை/குருட்டு நம்பிக்கை மறைக்கிறது.

இறைவனைக்கண்ட ,வால்மீகி,துளசிதாசர்,பக்த  தியாகராஜர்,புரந்தரதாசர் இவ்வாறு ஆடம்பர வாழ்க்கையில் இறைவனைக் காணவில்லை.
அருணகிரிநாதரும்,பாம்பன் சுவாமிகளும் .பழனியில் இன்று அழகான ஆஷ்ரமம் சமாதியில் இருக்கும் ஈஸ்வரபட்டா மேலும் பல பஞ்சப் பரதேசி சித்தர்கள் இறைவனை வழிபட்டு வழிகாட்டி உள்ளனர்.
இருந்தும் ஆஷ்ரமக் கூட்டம் .பணம் கூட்டும் பூமி.
இதைத்தான் கூரையைப் பிய்த்துக் கொட்டும் என்கிறார்களோ.

அந்த அன்பு  ஒருபுதிராகவே உள்ளது.
ஒரு ஐயமும் ஏற்படுகிறது.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வியாபாரம் தான்....