Monday, July 29, 2013

பக்தர் ராதேஷ்யாம்.

பக்தி

  ஹிந்திக் கதையின் சுருக்கம்;

     ஒரு சிற்றூரில் ஒரு குடிசையில் ஒரு முதியவர் வாழ்ந்து வந்தார். குடிசைக்கு அருகில் ஒரு தேநீர் அங்காடி நடத்திவந்தார்.அவர்  எப்பொழுதும்

ராமாயணம் படிப்பார்.ஹனுமான் சாலிசா படிப்பார்.ஆனால் ராதேஷ்யாம் என்று கூறுவார். அவரை  அனைவரும் பக்தர் என்றே  நினைத்தனர்.

   அந்த ஊரில் கிருஷ்ணர் கோயில் திருவிழாக்கள் விமர்சையாக நடக்கும்

இவர் செல்ல மாட்டார்.  சிலர் இவரை ராம பக்தர் ;கிருஷ்ணரைப் பிடிக்காது என்றனர்; சிலர் ராதேஷ்யாம் என்று இவர் கூறுவதால் கிருஷ்ணா பக்தர்  என்றனர்.

இவர் கடையில் தேநீர் அருந்தி பணம் தராமல் செல்பவர்களும் உண்டு.அவர்களை அடிக்க தடி எடுத்துக்கொண்டு துரத்துவார்.ஆனால் அடிக்கமாட்டார். அந்த இளைஞர்கள்  ராதே ஷ்யாம் என்று சொல்லி ஓடுவார்கள்.இது அன்றாடம் நடக்கும் காட்சி.சிறுவர்களும் ராதேஷ்யாம் என்பார்கள்.

எப்பொழுதும் ராமாயணம் சத்தமாக பாராயணம் செய்வார்.

இவ்வாறு ௨௦ ஆண்டுகளாக இவரது குரல் அந்த ஊரில் ஒலித்துக் கொண்டிருந்தது.

திடீர் என்று அவரது குடிலில் இருந்து  பாராயண ஒலி வரவில்லை.இரண்டு மூன்று நாட்களாக வராததால் ஊர்ப் பெரியவர்கள் சென்று பார்த்தனர்.
அவர் உடல்நலம் சரில்லை;ஆனால் ராதேஷ்யாம் என்ற முனகல் மட்டும்.
அனைவரும் அவரை வைத்யரிடம் அழைத்துச் சென்றனர். முதுமையின்
காரணமாக  அவர் வுயிர் பிரிந்தது.
அனைவரும் அவர் பக்தியைப் பாராட்டினர்..செய்திதாளில் அவரைப் புகழ்த்து
செய்திகள் வந்தன. பக்தி மகான் என்று போற்றப்பட்டார்.

அவர் குடில் அவர் நினைவுச் சின்னமாகியது.

சில மாதங்களுக்குப் பின் ஒரு நடுத்தர வாலிபர் அவரைத் தேடி வந்தார்.
அவர் அந்த பெரியவரின் மகன். பெயர் ராதேஷ்யாம்.
அந்த மகனின் பெயரைத்தான் அந்த பெரியவர்  இறுதி  மூச்சுவரை
கூறிவந்தார்  என்பது பின்னர் தெரிந்தது.

பக்தர் ராதேஷ்யாம்.

No comments: